5. மாங்கல்யம் தந்துனானே

0
228

தன் மனம் கவர்ந்தவளிடம் நேரத்தை கழித்து விட்டு மகிழ்ச்சியாக வீட்டிற்குள் நுழைய முற்பட்டவனை தடுத்தது சிவநாதனின் குரல்.. “அம்ரீஷ் ஏன் இவ்வளவு நேரம்? எங்க போயிட்டு வர?” என்றார் அதட்டலாக.

மனம் நிறைய சந்தோஷத்துடன் வந்தவன் மங்கிய ஒளியில் நின்றிருந்த தன் தந்தையை கவனிக்க தவறினான்.. திடீரென்று வந்த கேள்வியில் சிறிது தடுமாறினாலும் பயத்தை உள்ளுக்குள் மறைத்து கொண்டு “அ.. அப்பா நான் ஆபீஸ்ல இருந்து.. அது வந்து இன்னைக்கு மீட்டிங்.. அதனால தான் டைம் ஆகி போச்சி” என்றான் தடுமாறியபடி.

அவனை உற்று நோக்கியவர் ” உன் பேச்சுல நிதானம் இல்லையேப்பா பொய் சொல்றீயா?”

“அதெல்லாம் இல்லப்பா” என்று வீட்டிற்குள் செல்ல முற்பட்டவனை ” கல்யாணம் ஆகுற வரை வெளிய சுத்துறத நீங்க இரண்டு பேரும் குறைச்சிக்கணும்.. இன்னைக்கு ஒருத்தன் பார்த்து சொன்னான் அவனுக்கு நான் பதில் சொல்லி அனுப்பி வச்சேன் இதையே தொடர்ந்து செய்ய முடியாது.. அதனால இந்த மாதிரி ரொம்ப நேரம் வெளியே போறத கம்மி பண்ணிக்கோங்க புரியுதா? என்றார் அதிகாரமாய்.

“சரிப்பா” என்று உள்ளே சென்றவனை “ஏன்டா இப்படி பண்றீங்க அவர் மனசு கொஞ்சம் மாறட்டும் அதுவரை கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க” என்ற பார்வதி தன் மகனை சாப்பிட அழைக்க அவன் வெளியே சாப்பிட்டு விட்டதாக சொல்லி விட்டு தனதறையில் புகுந்து கொண்டான்.

உள்ளே நுழைந்ததும் தனது வருங்கால மனைவிக்கு அலைபேசியில் அழைத்தான்.. முதல் ரிங்கில் அழைப்பை ஏற்றவள்” ஹேய் சொல்லு அம்ரீஷ்”

” எங்க இருக்க வீட்டுக்கு போயிட்டியா? என்ன பண்ற? சாப்பிட்டியா?”

“நான் சாப்பிட்டேன்.. நீ வீட்டுக்கு போக இவ்வளவு நேரமா ஆச்சு?”

“அதை ஏன் கேக்குற? நான் வீட்டுக்குள்ள நுழையும் போதே அப்பா என்னை வழிலேயே பிடிச்சிக்கிட்டார்.. நாம ரெஸ்டாரென்ட் போனது அவருக்கு தெரிஞ்சு போச்சி” என்றதும் பதறியவள்” ஐய்யயோ என்ன சொல்ற? உன்னை திட்டினாரா? அவர் அங்க இருந்தாரா என்ன?”என்றாள் அவனின் பதிலை எதிர்பார்த்தவாறு.

” அதெல்லாம் எதுவும் இல்லை.. அவரோட பிரண்ட் ஒருத்தர் பார்த்திட்டு வந்து இவர் கிட்ட சொன்னாராம்.. கல்யாணம் முடியற வரை இந்த மாதிரி எங்கையும் சுத்தாதீங்கனு சொன்னாரு அவ்வளவு தான்”.

” அப்பாடா நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்து போயிட்டேன்” என்று தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவளாய் தன்னவனிடம் சிறிது நேரம் உரையாடி விட்டு உறங்க சென்றாள்.

நிச்சியத்திற்கான நாள் குறிக்கப்பட்டு அதற்கான வேலைகள் துரிதமாக நடந்து கொண்டு இருந்தது..அம்ரீஷின் தந்தையோ எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தார் அதற்கான காரணத்தை ஏற்கனவே அறிந்து இருந்தாலும் அதனைத் தெளிவுபடுத்த எண்ணி தன் தந்தையிடம் பேச சென்றான் அம்ரீஷ்.. அவனைக் கண்டதும் சிந்தனையில் இருந்து மீண்டவராய் குறுநகை சிந்தியவர் ” வாப்பா என்ன விஷயம் ஏதாவது சொல்லனுமா?”

” ஆமாம்பா உங்ககிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும் போல இருக்கு நான் பேசலாமா?”

” இது என்ன கேள்வி நீ என் பையன் என்ன வேணாலும் எப்ப வேணாலும் எந்த நேரத்திலையும் பேச உனக்கு உரிமை இருக்கு தாராளமா சொல்லு என்ன பேசணும்?”

” உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு எனக்கு தெரியும் என்னோட சந்தோஷத்திற்காக மட்டும்தான் நீங்க இதுக்கு சம்மதம் சொன்னிங்கன்னும் எனக்கு தெரியும் ஆனா நீங்க இந்த மாதிரி எதிலுமே ஒட்டாம அமைதியாய் இருக்கிறது எனக்கு சங்கடமா இருக்குப்பா உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இந்த கல்யாணம் நடக்கணும் எந்த அவசரமும் இல்ல.. ஆனா ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லணும் வித்யுதா ரொம்ப நல்ல பொண்ணுப்பா கொஞ்சம் துடுக்குத்தனம் ஆனா அதெல்லாம் சரியாயிடும் வீட்டுக்கு ஒரே பொண்ணு அதனால செல்லம் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து வளர்த்துட்டாங்க ஆனா அவ நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு தான்ப்பா எந்த சூழ்நிலையிலும் குடும்பத்தை சந்தோஷமா பார்த்துப்பா அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ஆனா உங்களுக்கு சந்தேகமா இருந்தா உங்க மனசு மாறுற வர நாங்க காத்து இருக்கிறோம்.. இது எத்தனை வருஷம் ஆனாலும் சரி நீங்க சொல்லுங்க அப்பா இப்ப நான் என்ன செய்யணும்?”

தன் மகன் பேசுவதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவர் அமைதியாகவே இருந்தார். அவரின் அமைதியை கண்டவன்” நான் ஏதாவது தப்பா பேசி விட்டேனா அப்பா?” என்றான் கலக்கத்துடன்.

அவளின் கன்னத்தை வருடிக் கொடுத்தவர்” நீ எதுவும் தப்பாக பேசல நீ சொன்ன மாதிரி எனக்கு இப்ப கொஞ்சம் நெருடலான தான் இருக்கு நான் அந்த காலத்து ஆள் உன்னோட அண்ணன் கல்யாணத்த நிறுத்திட்டு ஓடிப்போனதால நான் எவ்வளவு அவமானப்பட்டேன்னு உனக்கு நான் சொல்லி புரிய வைக்க வேண்டியது இல்லை..என்னால அதிலிருந்து இன்னும் மீண்டு வர முடியல அதுக்குள்ள நீயும் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு வந்து நிற்கவும் என்னோட மனசு அதை ஏத்துக்கிற பக்குவத்துக்கு இன்னும் வரலனாலும் உன்னுடைய சந்தோஷத்திற்கு நான் எப்போதும் தடையாக இருக்க மாட்டேன்.. உன்னோட அண்ணன் கூட இதே மாதிரி முன்னமே சொல்லி இருந்தா நானே அவங்க வீட்டுல போயி பேசி கல்யாணம் செய்து வச்சிருப்பேன் ஆனா அவனால அவமானம் மட்டும்தான் மிஞ்சியது.. சரி இப்ப எதுக்கு பழைய கதையெல்லாம் பேசிக்கிட்டு.. நீ போய் வேலையை பாரு என்றவரை”அப்பா அண்ணன் உங்க கிட்ட பேசணும்னு ஆசைப்படுறான் பேசுறீங்களா?” என்றான் ஆர்வமாக.. சிறிது நொடி யோசித்தவராய் “சரி போன் போட்டு கொடு பேசுறேன்” என்றதும் அவசரமாக தன்னுடைய கைபேசியில் தன் தமையனின் எண்ணிற்கு அழைப்பை விடுத்தான்.

மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது “அண்ணா அப்பா கிட்ட பேசு” அலைபேசியை கையில் வாங்கியவர் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.. மறுமுனையில் ” அப்பா அப்பா நான் விஷ்வா பேசுறேன்.. அப்பா ஏதாவது பேசுங்க அப்பா கோவமா இருக்கீங்கன்னு தெரியும் என்னை திட்டுங்கப்பா, உங்க குரலை கேட்கணும் போல இருக்கு ப்ளீஸ் அப்பா” எனும் போதே அவன் குரல் கம்மியது.. அதற்கு மேலும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவரின் கண்களில் நீர் துளிர்த்தது.. என்ன தான் தாய் தன் குழந்தையை பேணி பாதுகாத்து வளர்த்தாலும் தந்தையின் அன்பு அளப்பரியது, வாய் மொழியாக பாசத்தை காட்ட தெரியாதவர்கள் அவர்கள்.. முதல் குழந்தை என்பது பெற்றவர்களை பொருத்த வரை பெரும் பொக்கிஷம்.. அந்த குழந்தையிடம் இத்தனை வருடங்கள் பேசாமல் அவர் எவ்வளவு துன்பப்பட்டு இருப்பார், அது அத்தனையும் சேர்ந்து இன்று கண்ணீராய் வெளிப்படுகிறது என்று புரிந்து கொண்ட அம்ரீஷ் தந்தைக்கு தனிமை தர விரும்பி அவ்வறையை விட்டு வெளியேறினான்.

” விஷ்வா ஏன்டா இப்படி பண்ண? உன்னோட எண்ணத்தை பற்றி என்கிட்ட முன்னவே சொல்லி இருக்க கூடாதா? நான் உன்கிட்ட பிரண்ட் போல தானே பழகினேன், அப்பறம் ஏன் இப்படி பண்ண? இத்தனை நாள்ல என்கிட்ட பேச மட்டும் முயற்சி பண்ணியே தவிர என்னையும் உன் அம்மாவையும் பார்க்கணும்னு உனக்கு தோன்றவில்லையா? நான் தான் உன் மேல கோபமா இருந்தேன் ஆனா நீ என்னை விட கோபமா இருந்து இருக்க போல இருக்கு..” என்றும் விரத்தி சிரிப்பு ஒன்றை சிந்தினார்..” ஐயோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நாங்க பண்ணியது தப்புதான் எங்கள மன்னிச்சிடுங்க நீங்க இப்ப வான்னு சொன்னா கூட உடனே நான் வந்து உங்க முன்னாடி நிப்பேன்” ” அப்ப கூட என் மருமகளையும் பேரனையும் கூட்டிகிட்டு வர மாட்டியா?”என்றார் ஆதங்கமாய்.

” ஐயோ அப்பா கண்டிப்பா எல்லாரும் வந்துடுறோம் இந்த வார்த்தையை கேட்க தான் இத்தனை வருஷமா காத்துகிட்டு இருந்தேன்.. எங்கள மன்னிச்சிடுங்க அப்பா” நீ என்று அழைப்பை துண்டித்தான்.

இத்தனை நாட்கள் பேசாமல் இருந்த மகனிடம் பேசியதாலோ என்னவோ அவருடைய மனம் மிகவும் தெளிவாக இருந்ததைப் போல உணர்ந்தார்.. வெளியே வந்து தன் மனைவியை சத்தமாக அழைத்தவர் ” பார்வதி பார்வதி இன்னிக்கு நான் யார்கிட்ட பேசினேன் தெரியுமா? நம்ம வீட்டுக்கு இத்தனை நாளா வராத சொந்தம் எல்லாம் வரப்போகுது இப்பவே நாம வெளியே போய் அவங்களுக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கிட்டு வருவோம்” என்ற சிறு குழந்தை போல பேசுபவரை மகிழ்ச்சி பொங்க பார்த்துக்கொண்டிருந்தார் அவரின் மனையாள்.

” யார் வரப்போறாங்க? இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? இத்தனை வருஷமா இந்த இயல்பான முகத்தை எங்கே ஒளிச்சு வச்சி இருந்தீங்க? இப்ப உங்களை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க” என்றார் அவரும் மகிழ்ச்சி பொங்க.

அவர்களின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாய் உணர்ந்தவன்” அம்மா அவருக்கு அவரோட செல்ல பிள்ளை, மருமக, பேரன் வீட்டுக்கு வர போற சந்தோஷம் தான்” என்றதும்” என்னடா சொல்றே நெஜமாவா?” என்றார் ஆர்வ மிகுதியாய்.

” உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னா அப்பாவையே கேட்டு பாருங்க”

அவரும் ஆமாம் என்று தலையாட்டவும் சிறு குழந்தை போல துள்ளிக் குதித்தார் பார்வதி.

” எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இத்தனை வருஷம் கழிச்சு இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன?”

” வித்யுதா தான் காரணம்” என்றதும் இருவரும் அவரை ஆச்சரியமாக பார்த்தனர்.

” என்ன அப்படி ஆச்சரியமா பார்க்கறீங்க? அன்னிக்கு அவளோடு வீட்டுக்கு நமக்கு போகும்போது பேசிக்கிட்டு இருந்தாங்க இல்ல அப்போ அவ என்ன சொன்னானு உனக்கு ஞாபகம் இருக்கா? பெத்த புள்ள தானே மன்னிச்சு இருக்கக் கூடாதா பேரன் முகத்த பார்க்காம கூட இப்படி எப்படி இருக்க முடியுமாதுன்னு கேட்டா இல்லையா?”

அவர் ஆமாம் என்று தலையாட்டவும் ” அந்த விஷயம்தான் நான் யோசித்துப் பார்த்தேன் அவ சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குனு தோணுச்சு நானே அவனுக்கு போன் பண்ணி பேசணும்னு இருந்தேன் அதுக்குள்ள இன்னைக்கு இவனே போன் பண்ணி கொடுக்கவும் பேசிட்டேன் நானும் எத்தனை நாள் தான் என்னோட கஷ்டத்தை மனசுக்குள்ளேயே வச்சி கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறது? பேரப்பிள்ளைகளுடன் ஒண்ணா இருக்கணும்னு ஆசை இருக்காதா? எனக்கு என்ன மனசு பாறை மாதிரியா செஞ்சிருக்கு? சரி விடு வா அவர்களுக்கு தேவையானதை எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து வைப்போம்..இதே மாதிரி நம்மள புரிஞ்சுக்காம பிரிஞ்சு போன வந்து எல்லாரும் இந்த கல்யாணத்துல ஒன்னா சேர்ந்தா நல்லா இருக்கும் இல்லையா!! என்று ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விடுத்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

‘ அதுக்குத்தான் அப்பா நாங்களும் போராடிட்டு இருக்கோம் உங்களோட ஆசையை நிறைவேற்றி வைக்கிறது எங்களோட கடமை’

அவர்களின் தலை மறைந்ததும் தன்னவளுக்கு அழைப்பை விடுத்தவன் ” ஹேய் செல்லம் உன்னோட ஐடியா நல்லா ஒர்க் ஆகுது.. நீ சொன்ன மாதிரி அப்பா கிட்ட பேசனேன் அவரும் அண்ணன் கிட்ட பேசி இங்க வர சொல்லி இருக்காரு..ரொம்ப சந்தோசமா இருக்கு உனக்கும் மூளை இருக்கத்தான் செய்யுது” என்றான் சிரியாமல்.

” ரொம்பத் தான் பேசுற போனா போகுதுன்னு உனக்கு ஐடியா கொடுத்தா நீ என்னையே கலாய்க்கிறீயா நீ இப்படியே பேசிகிட்டு இருந்தா நான் எந்த ஐடியாவும் கொடுக்க மாட்டேன்.. நீயே தனியா மாட்டிக்கிட்டு முழி”

” ஐய்யயோ அப்படி எல்லாம் பண்ணாத இப்ப நான் என்ன செய்யணும் அத மட்டும் சொல்லு”

” அப்படி வா வழிக்கு.. இப்ப நீ என்ன செய்றன்னா உன்னோட சொந்தக்காரங்க லிஸ்ட் மொத்தத்தையும் எடு..அவங்க எல்லார் வீட்டுக்கும் போய் நிலைமையைச் சொல்லி புரிய வச்சு இந்த பங்ஷனுக்கு வர வைக்கிறது உன்னோட பொறுப்பு”

” என்னது புரிஞ்சி தான் பேசுறியா ஐடியா கொடுக்கிறது ரொம்ப ஈசி, அதை செயல்படுத்துவது ரொம்ப கஷ்டம் அவங்க எல்லாம் எங்க மேல ரொம்ப கோபத்தில இருக்காங்க அவங்க கிட்ட என்ன தனியா கோர்த்து விட பாக்குறியா?”

” சண்டைனு ஒன்னு இருந்தா அந்த சமாதானம் ஒன்னு வரும் இல்லையா.. அதுக்கான தூது புறாவா உன்ன போக சொல்ற அவ்வளவுதான்”

” தூது புறாவை வறுத்த எடுக்காம விட மாட்டாங்க”

” அதெல்லாம் பார்த்தா நமக்கு வேண்டியது நடக்குமா.. சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு? போங்க மிஸ்டர் அம்ரீஷ் வெற்றியோடு திரும்பி வா” என்று அழைப்பை துண்டித்தாள்.

அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தன்னை எவ்வாறு தயார் செய்து கொள்வது என்று மனதோடு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான் அம்ரீஷ்.

உறவுகள் ஒன்று சேருமா பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்.!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here