” உன் விழிகள் என்ன காந்தமோ

இரும்பு போல் உள்ள

என் மனதையும் ஈர்க்கிறதே!!!”

சாப்பிடும் போது அவள் செய்யும் குழந்தைத்தனமான சேட்டையை கவனித்திருந்தான் நம்ம ஹீரோ சிவா.

சாப்பிட்டு முடித்தவுடன்,சிவாவும் ஆதவ்வும் தங்களது காரில் குடும்பங்களுடன் கிளம்பினர். சிவா அவனது காரில் முன் இருக்கையில் அமர மற்றவர்கள் பின்னால் அமர்ந்து கொண்டனர்.

சிவா ஓட மொபைல் ரிங் ஆச்சு, புது நம்பர்னு யோசிச்சுட்டே கால் அட்டெண்ட் பண்ணான்.
ஹலோ என்றவுடன் சிவா,”யெஸ் மே ஐ நோ ஹு ஸ் திஸ்?” என்றான்.
எதிர் முனையில்,”ஹா ஹா ஹா உனக்கு ரொம்பவே வேண்டபட்டவன், என்ன புரியலயா சீக்கிரமாவே உனக்கு புரிய வைக்கிறேன் அப்பறம் உன்னோட பலம் என்னங்கிறது எனக்கு தெரியும் அதை அழிச்சு உன்ன ஒன்னுமில்லாம ஆகிட்டு வந்து உன்ன பாக்றேன்” என்று விடாமல் கூறிய பின்பு கால் கட் ஆயிடுச்சு.

சிவாவோ யோசனையாய் இருக்க ஜானு, “என்னாச்சு னா” என்றாள்.
சிவா,”ஒன்னுமில்ல டா ஜஸ்ட் கஷ்டமர் கால் அவ்ளோ தான்”என்றவன் யோசனையுடன் இருக்கையில் சாய்ந்தான்.

சிவா,நம்மள மாதிரி தொழிலதிபர்களுக்கு இந்த மாதிரி மிரட்டல் வரது சகஜம்னாலும் இது கொஞ்சம் புதுசா இருக்கே? நமக்கு இதுக்கு முன்னாடி எல்லாம் கூட இது மாதிரி வந்துருக்கே ஆனா இதுல என்ன குறி வைக்காம எனக்கு வேண்டபட்டவங்களுக்கு வச்ச மாதிரி இருக்கே, ஒரு வேலை இது ருத்ரா வேலையா இல்ல புதுசா யாரோவா என யோசிச்சவன் சரி எதுவா இருந்தாலும் கொஞ்சம் கவனமா இருக்கணும் என்று மனசுக்குள் நினைத்து கொண்டான்.

கொஞ்ச நேரத்தில் சிவா குடும்பத்தினர்கள் வீடு வந்து சேர்ந்திருக்க,ஜானு”குட் நைட்”னா என்றாள்
சிவா,”குட் நைட்” டா னு சொல்லிட்டு
அவங்க அவங்க ரூம்க்கு போய்ட்டாங்க.

சிவாவும் அவனோட ரூம்க்கு வந்தவுடன் பிரஷ் ஆயிட்டு வந்து படுத்து கண்ணை மூடியவனுக்கு தூக்கம் தொலைந்திருக்க புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரல, நினைவில் அந்த அழகு பதுமையின் முகம் நினைவு வர தன்னை அறியாமலே புன்னைகைத்தவன் மனதில் அவளை வர்ணிக்க ஆரம்பித்திருந்தான்”நல்ல அழகான முகம்,குழந்தைத்தனம்,கொஞ்சம் அதிகமான வாய்னு அவள பாத்தாலே தெரியுது”என நினைத்தவன் நெடு நேரம் ஆகியும் தூக்கம் வராமல் இருக்க ஆதவ்க்கு கால் செய்தான்.

ஆதவ் தூக்க கலக்கத்தில்,”ஹலோ” என்றான்.

சிவா,”மச்சி வீட்டுக்கு போயிட்டயாடா என்னடா பண்ணிட்டு இருக்க?”

ஆதவ் கண்ணை திறக்காமலேயே,”யாரு டா சிவா வாய்ஸ்ல கால் பண்ணி பேசறது”

சிவா,”டேய் நான் தாண்டா மச்சான் சும்மா தூக்கம் வரல அதான் கால் பண்ணேன்”

ஆதவ் இப்போது முழித்திருந்தான்,”ஏன்டா நல்லவனே தூங்காரவன எழுப்பி என்ன பண்ணிட்டு இருக்கரனு கேக்கற உனக்கே இதெல்லாம் நியாயமா படுதா?”

சிவா,”தெரியல மச்சி தூக்கம் வரல அதான் உனக்கு கால் பண்ணேன்”

ஆதவ்,தூக்கம் வரலையா தப்பாச்சே இவனெல்லாம் படுத்த உடனே தூங்கற ஆளாச்சே சம்திங் ராங்னு கண்டுபுடிக்கறேன்னு மனசுக்குள்ள நினைச்சவன்,”டேய் நான் என்ன உன் ஆளா நைட் எல்லாம் கால் பண்ணி மொக்க போட்டுட்டு இருக்க எனக்கு தூக்கம் வருது போய் தூங்குடா” னு கால் கட் பண்ணிட்டு தூக்கத்தை தொடர்ந்தான்.

சிவாவும் போன் வைத்து விட்டு தூங்க சென்றான் நெடு நேரத்திற்கு பிறகே உறக்கம் அவனை தழுவியது.

அங்கோ ஆராவுக்கும் அதே நிலமை தான் அவளும் அவனை பத்தி தான் நினைச்சிட்டு இருந்தா,”நல்லா தான் இருக்கறான் என்ன கொஞ்சம் அதிகமா கோவம் வருது ஆனா ஒன்னு அவன் கண்ணுல ஏதோ ஒன்னு இருக்கு ஆரா அது என்னனு கண்டுபிடிக்கறேன்”னு புலம்பிக்கிட்டே தூங்கிட்டா.

லேட்டா தூங்கி இருந்தாலும் காலையில வழக்கம் போலவே எழுந்துட்டான் சிவா, எப்பவும் போல ஜானுவை ட்ராப் பண்றதுக்காக போய்க்கிட்டு இருந்தான். ஜானுவை காலேஜ்ல ட்ராப் பண்ணும் போது ,”ஜானு இந்த வீக் எண்ட் நம்ம அவுட்டிங்
போலாம் நீ இனியன் கிட்ட சொல்லிடு நான் ஆதவ் கிட்ட பேசிக்கிறேன் பை”னு சொல்லிட்டு கிளம்பி ஆபிஸ்க்கு வந்துட்டான் ஆனா ஆதவ் இன்னும் வரல.

ஆதவ் கொஞ்சம் லேட்டா தான் வந்தான்,
சிவா,” மச்சி ஏன்டா லேட்?”
ஆதவ்,”ஒருத்தன் என்ன நைட் தூங்க விடல மச்சி அதான்”
சிவா,”டேய் நானே வந்துட்டேன் உனக்கென்ன டா”
ஆதவ்,”அப்போ இனிமே என்ன தொந்தரவு பண்ணாம இரு நான் கரெக்ட்டா ஆபிஸ் வரேன்”

சிவா,”த்து…. போயி வேலைய பாருடா அப்பறம் இன்னொரு விஷயம்டா நம்ம இந்த வீக் எண்ட் வெளிய போறோம் ஜானு அண்ட் இனியன் கிட்ட சொல்லிட்டேன் டா நீயும் ரெடியா இரு நான் வந்து பிக் பண்ணிக்கிறேன்”

ஆதவ்,”சரிடா..”

ஆதவ் சென்ற பின் சிவா அந்த போனே மிரட்டலை பத்தி இவன் கிட்ட சொல்லலாமா வேணமானு யோசிச்சுட்டு இருந்தான்? வேணாம் ஏன் தேவை இல்லாம அவனை டென்ஷன் பண்ணனும் மறுபடியும் கால் வந்தா பாத்துக்கலாம்னு விட்டுட்டான்.

வீக் எண்ட் அவுட்டிங்க்கு சிவாவும்,ஜானுவும் ரெடி ஆயிட்டு ஆதவ் வீட்டுக்கு போயிருந்தாங்க அவங்கள பிக் பண்றதுக்கு

ஜானுவும், சிவாவும் உள்ள போன உடனே ஆதவ் அம்மா தான் வந்து உபசரிச்சு, “ஜானு,சிவா வாங்க சாப்பிடலாம் னு சொன்னாங்க”
ஜானு,”இல்ல அத்தை நாங்க இப்போ தான் சாப்பிட்டு வந்தோம்”(ரெண்டு குடும்பமும் ஆரம்பத்துல இருந்தே பேமிலி பிரண்ட்ஸ்ங்கிறதுனால ஜானு ஆதவ் அப்பா அம்மாவை மாமா அத்தை னு தான் கூப்பிடுவா அதே மாதிரி இனியனும் ஜானு அப்பா அம்மாவை மாமா அத்தை னு தான் கூப்பிடுவான்)

ஆதவ் அம்மா,”சரி அப்போ கண்டிப்பா காபியாச்சும் குடிக்கணும் னு காபி கொண்டு வர போனாங்க”

சிவா ஆதவ்வை பாக்க அவன் ரூம்க்கு போனான் அங்க அவன் ரெடி ஆயிட்டு இருந்தான்.

ஆதவ் சிவாவை பாத்தவுடன் “மச்சான் எப்படா வந்த”

சிவா,”நான் இப்போ தான் வந்த,இன்னும் ரெடி ஆகாம என்னடா பண்ணிட்டு இருக்க”

ஆதவ்,”10 மினிட்ஸ் டா சாப்பிட்டு கிளம்பிறலாம்”

போலாம்டானு ரெண்டு பேரும் கீழ இறங்க கூடவே இனியனும் சேர்ந்து எல்லாரும் டைனிங்க்கு வந்தாங்க அங்க ஜானு ஆதவ் அம்மாக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருந்தா

ஆதவ் அம்மா,”ஜானு நீ உட்காரு நான் பாத்துகிறேன்”
ஜானு,”சரிங்க அத்தை”ன்னு காபி எடுத்துட்டு வந்து சிவாட்ட குடுத்துட்டு அவளும் குடிச்சுட்டு இருந்தா, எல்லாரும் சாப்பிட்டு ஒரே கார்ல கெளம்பிட்டாங்க.

அங்க நம்ம ஆரா அவங்களோட பிளான்படி
மூவி பாக்க அவளோட பிரண்ட்ஸ்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தா,தியேட்டர்ல ஆராவும் அஜய்யும் ,அக்ஸா அஸ்வத்க்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க.

சிவா கார்ல வரும் போதே நம்ம நேரா மூவிக்கு போய்ட்டு லன்ச் முடிச்சுட்டு ஈவினிங் பீச்க்கு போகலாம் இது தான் நம்மளோட பிளான்னு சொல்லிட்டே தியேட்டர்க்கு வந்தவன்
எல்லாரையும் இறங்க சொல்லிட்டு பார்கிங்க்கு போயிட்டான்,இறங்கியவுடன் ஆதவ் போன் ரிங்காக அவன் மத்தவங்களை அங்கேயே வெய்ட் பண்ண சொல்லிட்டு வெளிய வந்து போன் பேசிட்டு இருந்தான்.

ஆராவும் அந்த நேரம் வெளிய வந்தா அவ பிரண்ட்ஸ் வராங்களானு பாக்கறதுக்கு, சிவா பார்க்கிங் பண்ணிட்டு வந்தவன் ஜானு இனியன் கிட்ட “ஆதவ் எங்கடா”னு கேட்டான்.

ஜானுதான் அவங்களுக்கு போன் வந்துச்சு வெளிய போய் பேசிட்டு இருக்காங்கனானு சொன்னா, சிவா வாங்க நம்ம போயி டிக்கெட் எடுப்போம் அவன் வரட்டும்னு சொல்லிட்டு, டிக்கெட்லாம் எடுத்துட்டு பாத்தான் அப்பயும் அவன் வரல சரினு சொல்லிட்டு அவங்க ரெண்டு பேரையும் (ஜானு,இனியன்)நீங்க வெய்ட் பண்ணுங்க நான் அவனை கூப்பிட்டு வரேன்னு சொன்னவன் ஆதவ்வை தேடி வெளியே வந்தான்.

வெளிய ஆரா அவ பிரண்ட்ஸ்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தா, அந்த நேரத்துல ஆதவ்வை நோக்கி ஒரு சுமோ வேகமாக வந்துட்டு இருந்துச்சு ஆரா அந்த சுமோவை பாத்துட்டு இங்க பாத்தா அது ஆதவ்வை குறி வச்சிருந்ததது சுமோ அவனை நெருங்கி இருக்கையில் ஆரா, “அண்ணானு கத்திக்கிட்டே ஆதவ்வை புடிச்சு இழுத்தா” வந்த வேகத்தில் சுமோ ஸ்லிப் ஆகி வந்த ஸ்பீட்லயே வேகமா போயிடுச்சு அவங்க அந்த கார் நம்பர் பாக்கறத்துக்குள்ளேயே.

சிவாவும் சுமோ வரத கவனிச்சுட்டு வேகமா வந்தவன்,”ஆதவ்னு கத்திட்டே அவன் கிட்ட வந்தான்” நல்ல வேலையாய் ஆதவ்க்கு ஏதும் ஆகல,கிட்ட வந்த சிவா ஆதவ்வை கட்டி புடிச்சு “டேய் உனக்கு ஒன்னும் ஆகலைலனு கேட்டான்” ஆதவ்,”இல்ல மச்சான் ஒரு பொண்ணு தான் என்ன புடிச்சு இழுத்துச்சு”ன்னு சொன்னான்.

ரெண்டு பேரும் அது யாருன்னு ஒண்ணா திரும்ப அங்க ஆரா நின்னுட்டு இருந்தா,

ஆரா சிவாவை பாத்து வழக்கம் போல சிலையாக நிக்க, ஆதவ் “ஹலோ சிஸ்டர் னு சொடக்கு போட்டு கூப்பிட்டான்” பின் நினைவுக்கு வந்தவள் சொல்லுங்க அண்ணா என்றாள்
ஆதவ்,”தேங்கஸ் மா என்ன காப்பதுனத்துக்கு”

சிவாவும் அவளை கவனிக்காதது போல் தேங்க்ஸ்ங்க என் நண்பனை காப்பதுனத்துக்கு என்றான்.

ஆரா,”இட்ஸ் ஓ கே பரவால்ல ஆனா அவங்க யாரு உங்களை ஏன் இடிக்க வந்தாங்கனு கேட்டா”

சிவாவும்,ஆதவ்வும் பலத்த யோசனையில் ஆழ்த்திருந்தார்கள்……….

நீங்களும் யோசிங்க பிரண்ட்ஸ் அடுத்து வர எபிசோட்ல அது யாருன்னு பாப்போம்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago