7. உனக்காக நான் இருப்பேன்

0
326

கேன்டினில் அமர்ந்திருந்த ராகவியின் முன் வந்த மேக்னா,
“ ராகவி, விஷயம் தெரியுமா??”

“ என்ன?”

“ வசந்த்க்கும் மாலினிக்கும்….”

அவள் கையில் இருந்த கோக் டப்பா நசுங்கியது.
“தெரியும்” என்று அவளை கையமர்த்தியவள்,

“ எல்லாமே அவளுக்கு தான் கிடைக்கனுமா???
மாட்டேன்.. விட மாட்டேன்… ரெண்டு பேரும் எப்டி ஒன்னு சேருராங்கன்னு நானும் பாக்குறேன்”
கோவத்தில் கருவினாள்.

“ என்ன பண்ண போற ராகவி?”

“ வெயிட் அண்ட் வாட்ச்” என்று தோரணையாக எழுந்து சென்றாள்.

அவர்கள் மாலினி பாடல் ரெகார்ட் பண்ணி கொண்டிருக்கும் அந்த அறையை கடக்க நேரிட அவர்கள் காதில் கேட்ட பாடலால் ராகவிக்கு இன்னும் பீபி ஏறியது எனலாம்.

“ ரெடியா மாலினி பாடலாமா?”

“ ம்ம், ரெடி”

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

நண்பர்களோடு அரட்டை அடித்து கொண்டிருந்த வசந்த் ஷாக் அடித்தவன் போல நிமிர்ந்து பார்த்தான்.

ஆம் அவனின் அன்றைய கேள்விக்கு விடை கூறாமல் நழுவி வந்தவள்,
இன்று பாட்டிலே தன் மனதை கூறிக்கொண்டிருந்தாள்.

அவளின் உதட்டில் அழகிய வெட்க புன்னகை.

வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற

வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை

கண்ணில் காதலை தேக்கி
அவள் அவனுக்கு பதில் கூறி கொண்டிருந்தாள்.
அவன் பார்வையின் வீச்சு தாளாமல் வெட்கி கண் மூடியவள் கனவில் மிதந்தாள்.

நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
கறை மேல் நானும் காற்று வாங்கி

விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

அறையின் வெளியில் நின்று கொண்டிருந்த ராகவி கோவத்தில் சுவற்றை குத்தி கையை காய படுத்தி கொண்டாள்.

இங்கு வசந்தின் பார்வை அவளிடமே…
சுற்றி உள்ளவர்கள் அவர்களை கேலி பேசினர்.

“ சூப்பர் மச்சி, அதென்ன ரெண்டு பேரும் பாட்டுலயே லவ் பண்றிங்க” விஷ்ணு தான் கலாய்க்க
ஆடவன் அவன் முகத்திலும் வெட்கம்….
அதன் பின் நண்பர்கள் அவர்களுக்கு தனிமையை கொடுத்து நகர
இருவரும் ஏதும் பேசா மௌன நிமிடங்களை நகர்த்தினர்.

கல்லூரி மணி அடிக்கவே…
“நான் வரேன்” என்று ஓட்டம் பிடித்தாள்.

இரவின் தனிமையில் நளினியிடம்…

“ ஆமா அக்கா… நான் என் காதலை சொல்லிட்டேன்…
எனக்கு எப்டி இருந்துது தெரியுமா?”என்று அவளை பாடு படுத்த….

வந்த கொட்டாவியை வெளியிட்ட படி….
“போதும்டி… இதோட நாப்பது தடவை சொல்லிட்டே” என்று கெஞ்சினாள்.

“ என் செல்ல அக்காளோ… அப்டிலாம் சொல்ல கூடாது…
இன்னைக்கு நைட் பூரா நான் என்ன சொன்னாலும் நீ கேட்டுட்டே இருக்கணும்” என்று அவளின் நாடி பிடித்து கொஞ்சினாள்.

“ ஆள விடுமா… நான் அம்மா ரூம்ல போய் படுக்கிறேன்… எனக்கு தூக்கம் வருது” என்று அவள் ஓடிவிட்டாள்.

இங்கு ராகவி தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடமாடிய படி இருந்தாள்.

“ என்ன செய்யலாம்???” என்று வாய் விட்டு கூறியவள்
சிறிது நேரத்தில் சொடுக்கு போட்டவளாய் ஒரு தீர்மானத்தோடு தூங்க சென்றாள்.

மறுநாள்:
அவளின் முதல் முயற்சியாய்…
அங்கு அந்த கோவிலில்,.
என்றுமே இல்லாத அதிசயமாக புடவை கட்டி வந்து நின்றவளை பார்த்த மேக்னா அதிசயப்பட்டாள்.

“ ராகவி என்ன புடவை எல்லாம்!! ஏதும் விஷேசமா???”

“ ச்சு.. அதுலாம் இல்ல” என்று கூறியவள் கண்ணில் அந்த பெண்மணி பட அவரை நோக்கி நகர்ந்தாள்.

அவர்…
வசந்தின் அம்மா வாணி.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here