7 உயிரே என் உலகமே

0
969

அத்தியாயம் 7

பளார் பளார் என்று சத்தம் கேட்க இனியன் தான் இசையை அடித்துக் கொண்டிருந்தான்

அவன் அடுத்த அடி அடிக்க கையை ஓங்க குறுக்கே வந்து அந்த அடியை பெற்றுக்கொண்டான் தமிழ்

இனியன் பதறிப்போய் டேய் தமிழ் நீ ஏன்டா குறுக்க வந்த

நீங்க ஏன் அம்முவ அடிக்கிறீங்க

அவ யார்கிட்டயும் சொல்லாம எங்க போனான்னு கேளு ஃபர்ஸ்ட் அது தெரியாம நீ பாட்டு பேசிட்டு இருக்க

அதுக்காக நீங்க என்னோட அம்முவ அடிக்கலாமா

இவர்களின் உரையாடல் எதுவுமே கவனிக்கவில்லை இசை.. ஏன் இனியன் அடித்தது கூட அவளுக்கு வலிக்கவில்லை ஆனால் அம்மு என்ற சொல் அவளை தாக்கியது.
தமிழ் இப்ப நீ என்ன என்னன்னு கூப்பிட்ட
மறுபடியும் அப்படி கூப்பிட என்ற இசை சொல்ல

அப்போதுதான் அங்கு இருக்கும் அனைவரும் தமிழ் இசையை அம்மு என்று அழைத்தது ஞாபகம் வர அனைவருக்கும் இன்பமான அதிர்ச்சி

ஏன் அண்ணி நான் உங்கள அம்மு னு கூப்பிட கூடாதா என்று கேட்பதற்குள் அவனை கட்டி அணைத்துக் கொண்டால் இசை .. அந்த அணைப்பில் ஒரு அன்னையின் பாசத்தை உணர்ந்தான் தமிழ்..

அண்ணி போதும் போதும் உங்க பாசமலர் படத்தை அப்புறமா ஓட்டுங்க… மகி

என் டா உனக்கு இந்த பொறாமை …. தமிழ்

நா ஏன்டா பொறாமை படப்போறேன் … நீ அம்முன்னு கூப்பிட்டா நான் என் செல்ல அண்ணிய டார்லிங் னு கூப்பிட போறேன்.. மகி

என்ன டார்லி ஓ கே வா….

அப்போ நா எப்படி கூப்பிட என்று அகி கேட்க .. எதுனாலும் என்ன காப்பி அடிக்காம சுயமா யோசி தம்பி என்று மகி சொல்ல

டேய் நா ஒன்னும் உனக்கு தம்பி இல்ல .. நீ தான் எனக்கு தம்பி … சண்டைக்கு ரெடி ஆக

ஹலோ போதும் யாருக்கு எப்படி தோணுதோ அப்படி கூப்பிடுங்க.. என்று இசை சொல்ல

இதைப்பார்த்த இனியேனும் மிகவும் சந்தோஷப்பட்டான்.. எப்படி பட்ட பெண்ணிவள் … இவள் கண்களில் பொய் இல்லையே இவள் என் தம்பிகளின் மேல் காட்டும் பாசம் அனைத்தும் உண்மையே ஆனால் ஏன் அன்று அவள் அப்படி கூறினால் என்று ஐந்து வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவத்தை யோசித்தான் இனியன்

தன் அம்மாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக மனோகரை தேடி சென்னைக்கு வந்தான் இனியன். தன் சிறுவயது நண்பன் அருணுடன் சேர்ந்து மனோகரை தேடினான். அருண் சென்னையில் ஒரு பெரிய மளிகை கடை நடத்தி வந்தான். அவன் வந்து ஒரு மாதமாகியும் அவன் தேடுதலுக்கான பலன் பூஜ்யமே

அன்று ஓரு நாள் சென்னையில் வழக்கமாக ஞாயிறு இரவு நடைபெறும் பைக் ரேஸில் நம் இசையும் கலந்து கொண்டாள் அவள் தன்னுடைய யமஹா ஆர்15 ல் ஆண்கள் போல வெள்ளை டீ ஷர்ட்டும் அதன்மேல் பிளாக் கலர் லெதர் ஜர்க்கினும் தலையில் ஹெல்மெட்டும் கைகளில் க்ளோவ்ஸ் அணிந்து அந்த ரேஸ்இல் மூன்றாவதாக வந்துகொண்டிருந்தாள்.

திடீரென்று ஒரு வண்டி தவறாக அந்த ரோட்டில் வர அதன்மேல் மோதினாள்.. அது வேறு யாருமில்லை நம் இனியன் தான். இனியனுக்கு சென்னையில் வண்டி ஓட்டுவது புதுசு. ஒன் வே என்பது தெரியாமல் அந்த ரூட்டில் அவன் வர திடீரென்று நான்கைந்து பைக்குகள் மின்னல் வேகத்தில் கிராஸ்அக அது என்ன என்று அருணிடம் கேட்கும் முன் இசையின் வண்டி மீது மோதினான் .இசை இவர்களை திரும்பிப்பார்த்து சாரிங்க என்று சொல்லி மறுபடியும் ரேசில் தன் வேகத்தை கூட்டி வண்டியை ஓட்டினால்

டேய் மாப்ள என்னடா இது . இதுவா இது சென்னையில் நடக்கிற பணக்காரங்க மட்டும் கலந்துகொள்ளும்விளையாட்டு

அது இல்லடா இப்ப என்ன இடிச்சிட்டு போனது ஒரு பொண்ணு டா… இங்க இது எல்லாம் சகஜம்டா யார் வேணா எதுல வேணாலும் கலந்துகொள்ளலாம்

என்ன ஊர் டா இது நட்ட நடு ராத்திரியில் ஒரு பொண்ணு தனியா வரலாமா…. அவுங்க அப்பா ஆத்தா இதை கண்டிக்க மாட்டாங்களா அதுவும் ஒரு பொண்ணு வண்டி ஒட்டுறத இப்பதாண்டா நா முத தடவை பார்க்கிறேன் எல்லாம் கலிகாலம்.

அடுத்த நாள் காலையில் அவன் ஊருக்கு செல்லும்போது எதர்ச்சியாக எதிரில் உள்ள கோயிலில் ஒரு பெண்ணைப் பார்த்தான் அவளை எங்கோ பார்த்தது போல் அவனுக்கு தோன்ற…. அவள் அந்தக் கோயிலின் வெளியே உள்ள அரச மரத்தை 10 முறை சுற்றி அதன்முன் ஐந்து தடவை கையை தட்டிவிட்டு கோயிலுக்கு சென்றாள். இந்த செயலை அந்தக் கோயிலுக்கு வெளியே இருக்கும் அனைவரும் விசித்திரமாக பார்த்தனர் ஆனால் இனியனுக்கு ஆச்சரியமாக இருந்தது

ஹேய் நீ இன்னும் இத மறக்கலையா .என்று சந்தோசத்தில் துள்ளி குதித்தான். அவளைப் பின் தொடர்ந்து கோயிலுக்குள் சென்றான் 15 வயது பெண்ணாக இருக்கும்போதே அவள் மீது காதல் கொண்டவன் இப்போது 23 பெண்ணாக தன் முன் நிற்கும் இசையை விழுங்கும் பார்வையோடு பார்த்துக்கொண்டிருந்தான் ..பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு. பால்வண்ண கலரில் சுடிதார் அணிந்திருந்தாள் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் தேவதை போல அவன் கண்ணுக்கு தெரிந்தால்

அவனால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை அவள் அருகில் சென்று நின்று கொண்டான் அதாவது சாமி கும்பிடுவது போல அவரருகில் நின்று அவளை சைட் அடித்தான்.. சாமி கும்பிட்டு முடித்தபின் இசை முதலில் சென்று பிரசாதத்தை வாங்கி வெளியே வந்து அங்குள்ள பிச்சைக்காரர்களிடம் கொடுத்தாள் மறுபடியும் வந்து பிரசாதம் வாங்கி வெளியே சென்று இன்னொரு பிச்சைக்காரிடம் கொடுத்தாள் அவள் இவ்வாறு செய்வதை பார்த்து ஒரு பெரியவர் அவளிடம் ஏன்மா நீ அதுக்கு அவங்களுக்கு ஏதாவது சாப்பாடு வாங்கி கொடுக்க வேண்டியதுதானே.. தாத்தா சாப்பாடு யாரு வேணாலும் கொடுக்கலாம் ஆனால் சாமி பிரசாதம் இதுவரைக்கு யாராவது அவுங்களுக்கு கொடுத்திருப்பார்களா.
அவங்களும் நம்மள மாதிரி மனுஷங்கதானே தாத்தா… என்று சொல்ல அந்தப் பெரியவர் அவளை ஆசீர்வதித்து அவர் தன் கையில் உள்ள பிரசாதத்தையும் வெளியே இருந்த பிச்சைக்காரர் இடம் கொடுத்தார்

இவள் இன்னும் மாறவே இல்லையே என்று நினைத்தான் இனியன்

அவளைப் பின் தொடர்ந்தான் ..அவள் கார் ஒரு சிறிய பங்களாவின் முன் நின்றது.. அங்குள்ள வாட்ச்மேனிடம் தன்னைப் பற்றி விவரம் தெரிவித்து உள்ளே சென்றான்..

அங்கு ஹாலில் அமர்ந்திருந்த மனோகரனுக்கு முதலில் இவன் யார் என்று தெரியவில்லை

நீங்க யார் என்று கேட்க…

நான் அன்பினியன் என்று சொல்ல
வாப்பா எப்படி இருக்க இப்பதான் இந்த மாமாவை பார்க்க வரணும்னு தோணுச்சா

இங்கே பாருங்க உங்க கூட கொஞ்சி உறவாட நான் ஒன்னு இங்கே வரல

என் அம்மா கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக தான் வந்தேன் மத்தபடி உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை

இனியா நான் சொல்றதை கேளு உங்கம்மா சாவுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எங்க அம்மா நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும் சொல்லி சத்தியம் வாங்கிடாங்க அதனாலதான் உங்க வீட்டு வாசப்படிய மிதிச்சேன். உங்கனால உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்க முடியுமா இல்லையா சொல்லுங்க. முடியாதுன்னு சொன்ன அவளை எப்படி தூக்கிட்டு போயி தாலி காட்டணும்னு எனக்கு தெரியும்

ஒரு நிமிடம் யோசனைக்கு பிறகு எனக்கு முழு சம்மதம் இனியா ஆனால் நான் என் பொண்ணு கிட்ட கேட்கணும்

அவ மேல தான் இருக்கா கீழேயே வெயிட் பண்ணு நான் போய் கேட்டுட்டு வரேன்

அவர் மேலே சென்று ஒரு சில நிமிடங்களில் அந்த வீடு அதிரும்படி கத்திக் கொண்டு இருந்தாள் மனோகரனின் செல்லமகள்

பாப்பா நான் சொல்றதை மெதுவா கேளுடா அவர் ரொம்ப நல்லவர் உன்ன ரொம்ப நல்லா வச்சு பத்துப்பான்

அப்பா கொஞ்சம் நிறுத்துங்க .
என்னால அந்த கந்துவட்டிக்காரன கல்யாணம் பண்ணிக்க முடியாது நான் யாரு என் லெவல் என்னன்னு தெரியாம அவன் வந்து பொண்ணு கேட்டா நீங்க உடனே என்னை தூக்கி கொடுத்துடுவிங்க அப்படித்தானே..

அம்மாடி கொஞ்சம் கத்தாம பேசுடா கீழ அவன் காதுல கேட்க போது

இங்க பாருங்க மிஸ்டர் மனோகர் அவன்வீட்ல அவன் நாலு தம்பிகளுக்கு ஆக்கிப் போட்டு அந்த ரிமோட் வில்லேஜில் என்னால ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது… அவன வேணா வீட்டோட மாப்பிள்ளை இங்கே வர சொல்லுங்க

அவங்க அம்மா சத்தியமும் நிறைவேறுன மாதிரி ஆச்சு எனக்கு ஒரு அடிமை புருஷன் கிடச்ச மாதிரி ஆச்சு

ஏய் நீ பேசுறது ரொம்ப தப்பு டி என்று அவளின் பெரியம்மா பெண் சொல்ல.. நீ வாய மூடு நீ வேணும்னா அந்த காட்டுமிராண்டியா கல்யாணம் பண்ணிக்கோ யாரு வேணா சொன்னது

இதை அனைத்தும் கேட்ட இனியனுக்கு. அவமானம் தாங்க முடியவில்லை இவர்களை பழிவாங்க திட்டமிட்டுக் கொண்டிருந்தான். ஊர் பெரியவர்களை அனுப்பிமனோகரை அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வர வைத்தான் அவன் திட்டப்படியே அங்கு அவரும் இசையும் வந்தனர்… ஆனால் இனியனுக்கு தெரியவில்லை அவர்கள் ஒரு பிரச்சனையில் தப்பிக்க தான் ஊருக்கு வந்தனர்.. இசையின் சம்மதம் இல்லாமல் அவளுக்கு தாலி கட்டினான்.. அவளை அவமானப் படுத்த வே அவன் அப்படி செய்தான் கண்டிப்பாக அவள் அந்த தாலிக்கு மதிப்பு கொடுக்காமல் அதை கழட்டி எறிந்து விடுவாள் என்று நினைத்தான்.ஆனால் நடந்ததோ வேறு என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனை மகியின் குரல் கலைத்தது

அண்ணா……

அண்ணா அண்ணி என்கிட்டே சொல்லிட்டுதான் போனாங்க. அவங்களுக்கு ஏதோ திங்ஸ் வாங்கணும் என்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன்அதனால மறந்துட்டேனே இனிமே அவ்வுங்கள தனியா எங்கேயும் அனுப்ப மாட்டேன் ப்ளீஸ் அண்ணா என்ன மன்னிச்சிடுங்க

இங்க பாரு உனக்கு எது வேணும்னாலும் என்கிட்ட சொல்லு நான் வாங்கிட்டு வரேன் இப்படி என்கிட்ட சொல்லாம இனிமே நீ எங்கேயாவது போன ரெண்டு காலையும் ஒடச்சிடுவேன் ஜாக்கிரதை என்று மீசையை முறுக்கிக்கொண்டு அவன் பேச என்ன நான் பாட்டு பேசிட்டே இருக்கேன் பதில் சொல்லு என்று மேலும் மிரட்ட

அவள் சம்மதமாக தலையை ஆட்டினாள்

அவன் அங்கிருந்து சென்றவுடன் இசை வயிற்றைப் பிடித்துக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தாள்… ஏன் இப்ப சிரிக்கிறீங்க என்று மகி கேட்க

அது ஒன்னும் இல்லடா உங்க அண்ணன் பேசும்போது மீசை தடவிட்டே பேசுறரா அதான் அவரு மீசை இல்லாம இருந்தா எப்படி இருக்கும் யோசிச்சு பார்த்தேன் சிரிப்பு சிரிப்பா வருது என்னால அடக்கவே முடியல..

இது உங்களுக்கு கே டூ மச்சா தெரியல

உனக்கு அண்ணா அடிச்சது வலிக்கவே இல்லையா அம்மு

வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா …. என்று இழுத்து சொல்ல .. ஆனா இன்னொரு தடவ உன் அண்ணா அடிச்சா நா எங்கயாவது போய்டுவேன்

அம்மு என்னவிட்டுட்டு போய்டுவியா என்று பாவம் போல் முகத்தை வைத்து கேட்க

உனக்கு மட்டும் அட்ட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக்கோ..

ஹான் சொல்லு அம்மு

நம்பர் 44 நாக்பூர் ரோடு நாக்பூர் குறுக்கு சந்து நாக்பூர்…. என்று அவள் சொல்ல

தமிழ் ஆர்வமாக அதை எழுதிக்கொண்டு இருந்தான்

டேய் உண்ண அண்ணி கிண்டல் பண்றங்க டா…மகி

அண்ணி மறுபடியும் சொல்லுங்க் 44 நாக்பூர் ரோடு என்று சொல்ல ஆரம்பிக்கும் போது

அனைவரும் சிரிக்க ….. டேய் சிரிகாதிங்க..
இது உங்களுக்கு நா காணாம போய்ட்டா யூஸ் ஆகும்…. ஓ ஓ ஓ … நீங்க காணாம போய்ட்டா நடக்கிறத பேசுங் அண்ணி …

கவி
அண்ணி நீங்க என்ன திங்ஸ் வாங்க போய் இருந்தீங்க… (ஐயோ ஆரம்பிச்சுட்டான் கேள்விக்கு பொறந்தவன் இனிமே கேள்வியா கேட்டு நம்மள கொன்னுடுவனே எப்படியாவது சமாளிக்கணும்)

ஐஸ்க்ரீம் சாப்பிடனும் போல
ஆசையா இருந்தது கவி அதான் ஐஸ்கிரீம் பார்லர் தேடிப்போன

ஐஸ்கிரீம் சாப்பிட எதுக்கண்ணி மெடிக்கலுக்கு போனீங்க

ஐயோ பார்த்துட்டான் போல

அப்பதவுக்கு மூட்டு வலினு சொன்னாங்க அதான் தைலம் வாங்க போறேன்

டேய் அடுத்த கேள்வி கேட்பதற்குள் யாராவது என்ன காப்பாத்துங்க டா.

கவி அண்ணா உன்ன அத்தை போன் பண்ண சொன்னாங்க என்று மகி இசையை காப்பாத்த…

மகி அண்ணி அப்ப நீங்க தேவா அண்ணாவை பாக்க போலையா இப்ப இவன் வேற
கேள்வியா கேட்கிறானே

நாளைக்கு உங்க அண்ணனுக்கு பிறந்தநாள் இல்ல அதுக்கு கிப்ட் வாங்க போனேன்.. என்று தனக்கு தெரிந்த பொய்யை சொன்னாள்

ஓ அப்படியா. அப்படிதான்

அவள் மெடிக்கல் இருந்து தனக்கான பொருளை வாங்கிக் கொண்டு வரும் போது… மலரை வழியில் பார்த்தால் அவள் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரிய என்னவென்று கேட்கும் முன்அவள் வீட்டை நோக்கி ஓடினாள் .. இப்போதுதான் அந்த சம்பவம் ஞாபகம் வர மலரை தேடினாள்.. மலர் தோட்டத்தில் ஒரு மரத்தினடியில் முகம்புதைத்து அழுதுகொண்டிருந்தாள் அதைப் பார்த்த இசை

ஏய் மலர் என்ன ஆச்சு எதுக்கு அழுவுற.

இசை அக்கா என்று இவளை கட்டி அனைத்த மீண்டும் அழ தொடங்கினாள்

இங்கே பாரு மலர் என்னன்னு சொல்லு

அக்கா நான் வரும் வழியில் ஒருத்தன் என்னை கிண்டல் பண்றான் அக்கா கைய புடிச்சு இழுத்து தப்பு தப்பா பேசறான் அக்கா ரொம்ப பயமா இருக்கு…

இதுக்குலாம் பயந்தா எப்படி நீதான் தைரியமா இருக்கணும்..

. இதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த அகிலன் மலரிடம் வந்து..

யாருன்னு சொல்லு மலர். அவன இன்னைக்கு கொன்னு போட்ட தான் என் ஆத்திரம் அடங்கும்.. எவ்வளவு தைரியம் இருந்தா உன்கிட்ட அப்படி நடந்து பான்

யாருனு சொல்லு

இது என்னடா புது கதையா இருக்கு என்று அகியை நோக்கினால் இசை… இதுவரை யாரிடமும் கண்ணை பார்த்து கூட பேசாத அகியா இது.. திடீரென்று தன் ரூமுக்கு சென்று ஒரு பேண்டை எடுத்துட்டு வந்து அவள் கையில் போட்டுவிட்டான் இந்த பேண்ட் எப்போதும் நீ கழட்ட கூடாது … இந்த பேண்ட் புடிச்சு இழுத்தா அதுல இருந்து ஒரு ரோப் வரும் அதை இரண்டு தடவை இழுத்தா உடனே எனக்கு சிக்னல் கிடைத்து விடும் நீ எங்க இருந்தாலும உன்னை என்னால ஈஸியா கண்டுபிடிக்க முடியும் இனி யாராவது உன்கிட்ட வம்பு பண்ணாங்கன இதைப் புடிச்சு இழுத்துடு நான் உடனே அங்கு வந்து நிற்பேன்..

அகி சூப்பர் டா… இது எப்போ செஞ்ச எனக்கு ஒன்னு தாடா

அண்ணி உங்களுக்கு இது தேவைப்படாது.. நீங்க யாரு சூப்பர் வுமன் ஆச்சே

டேய் ஒழுங்கா எனக்கு இது மாதிரி செஞ்சு கொடு…

சரி ஓகே ஓகே அண்ணி உங்களுக்கு இதைவிட ஸ்பெஷலா ஒன்னு செஞ்சு தரேன்…
இங்கு நடந்த அனைத்தையும் இரு கண்கள் கண்காணித்துக் கொண்டிருந்தது.

யாரது பார்ப்போம்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here