7.என்னவள் நீதானே

0
589

வழக்கம் போல ஜானு காலேஜ்க்கு கிளம்பி கொண்டிருந்தாள்,சிவாவும் ஆபிஸ்க்கு கிளம்பிட்டு இருக்க ஆதவ் அவனை கூப்பிட்டு போக வந்திருந்தான்…அந்த நேரம் பாத்து ஜானு சிவா கிட்ட,”அண்ணா எங்களுக்கு இன்டர் காலேஜ் காம்படிஷன் வர சனிக்கிழமை நடக்குது நான் சிங்கிங்ல நேம் குடுத்துருக்கன் இனியனும் மியூசிக்ல நேம் குடுத்திருக்கான்”னு சொன்னா….

அதை கேட்டுகிட்டே வந்த ஆதவ், சிரிப்புடன் சிவாவை பாத்துகிட்டே ஜானுவை வம்பிழுக்க ஆரம்பிச்சுருந்தான்…

ஆதவ்,”ஏம்மா உனக்கு வேற போட்டியே கிடைக்கலையா நீ பாட ஆரம்பிச்சாலே எல்லாரும் ஓட ஆரம்பிச்சுருவாங்களே”னு சொல்ல,ஜானு அவனை கொலவெறியோட பாத்துகிட்டு இருந்தா….(உண்மையிலேயே அவ பேருக்கு ஏத்த மாதிரி நல்லா தான் பாடுவா…)

சிவா,ஆதவை பாத்து “பேசுனல நல்லா வாங்குனு” சொல்ல…..ஜானுவோ ஆதவின் மண்டையில் நங்கென்று கொட்டிவிட்டு அவனை முறைக்க ஆதவோ,”சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் பேபி இதுக்கு போயி கோவப்படலமா”னு கேக்க….. ஜானுவோ”அந்த பயம் இருக்கனும்னு” இல்லாத காலர தூக்கிவிட்டு பழிப்பு காட்டிவிட்டு சென்றாள்…

சிவாக்கு,ராம் பிரகாஷ் கிட்ட இருந்து கால் வர அதை அட்டெண்ட் பண்ணவனுக்கு அவன் சொன்ன தகவல் சாதகமா இல்லாம போக ஒரே குழப்ப ரேகையில் ஆழ்ந்தான்…அவனை அறிந்த ஆதவ் அவன் தோளை பற்றி என்னாச்சுனு கேக்க….

சிவா,” ராம் ட்ரேஸ் பன்னதுல உபயோகமான தகவல் ஏதுமே கிடைக்கல டா…. இதுவரைக்கும் நம்ம பன்னதுல எங்கயோ எதையோ மிச்சம்
வச்சிருக்கோம் டா…..”

ஆதவ்,” மச்சான் நம்ம இவ்ளோ தேடியும் எதிரியை பத்தி நமக்கு ஒரு துப்பும் கிடைக்கலனா…. அவன் பக்காவா பிளான் பண்ணி கேம் ஆடறான் சோ நம்ம அடுத்த மூவ்வ வேற மாதிரி ஆரம்பிக்கணும்”

சிவா,”சரிடா வா நாம ஆபிஸ் போயி மத்தத பேசிக்கலாம்னு” வந்துட்டு இருந்தாங்க…

சிவா அப்பா, சிவாவை அழைக்க அவன் அவர் முன்னாடி வந்து சொல்லுங்கப்பா என்றான்…

சிவா அப்பா,” கொஞ்ச நாளாவே நீங்க சரியா இல்ல இஸ் எவேரித்திங் அல்ரைட்?”

சிவாவும் ஆதவும் கோரஷாக, அப்டிலாம் ஒன்னுமில்லபா” ஜஸ்ட் பிசினஸ் டென்ஷன்னு சொல்ல” (அவர்களின் முகத்தில் தனக்கு தேவையானதை அறிய முற்பட அதற்க்கு அவர் அனுபவமும் துணையாய் இருக்க தனது மகனின் குழப்பத்தை அறிந்து கொண்டார்…. இன்னிக்கி எல்லாமே மகன் பத்துகிட்டாலும் ஒரு காலத்துல அவர் இந்த மாதிரியான சவால்களை சந்தித்தவராயிற்றே….)

அப்பா புன்னகையுடன் இருவரையும் பாத்து,”நீங்க என்கிட்ட மறைக்கலாம் ஆனா உங்க முகம் நீங்க என்ன நினைகறிங்கன்னு எனக்கு காட்டிடுச்சு,நான் உங்களுக்கு சொல்றது ஒண்ணே ஒன்னு தான் இதுவரைக்கும் எந்த விஷயத்தை ஈஸியா நெனச்சு கேர்லெஸ்ஸா விட்டிங்களோ அங்க தேடுங்க உங்க கேள்விக்கு பதில் கிடைக்கும்னு”சொல்ல இருவர் முகத்திலையும் ஒரு புன்னகை இருக்காத பின்ன இவ்ளோ நாளா குழம்பிக்கிட்டு இருந்த ஒரு விஷயத்துக்கு தெளிவு பிறந்திருக்கே…..
இருவரும் அவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பிட்டங்க…

ஆராவுக்கும் அந்த இன்சிடெண்டுக்கு அப்பறமா சிவாவை பாக்க முடியலனு ஒரு வருத்தம், இருந்தாலும் நம்ம ஏன் அந்த சிடுமூஞ்சிய பத்தி யோசிக்கணும்னு தனக்கு தானே சமாதானம் கூறிக்கொண்டு அவனபத்தி இனிமே நினைக்க கூடாதுனு முடிவுக்கு வந்திருந்தாள்… பேதை அவள் இன்றே அவனை மீண்டும் பார்க்க போவது அறியாமல்…

அவளது இதயக்கூட்டில்
சிம்ம சொப்பணமாய்
அவளவன் வீற்றிருக்க
பேதை அவள்
அறியாமலேயே பிதற்றுகிறாள்
அவனை மறக்கவேண்டுமென்று..

ஏனோ ஆராவுக்கு மனம் சோர்வாய் இருக்க வீட்டில சொல்லிட்டு கோவிலுக்கு சென்றிருந்தாள்…
கோவிலில் தனது இஷ்ட தெய்வமான அனுமனை வழிபட்டுவிட்டு அமர்ந்திருக்க…

ஒரு வயதான பெண்மணி தடுமாறி வருவதை கண்டவள் விரைந்து அவரருக்கு அருகில் சென்றவள்,அவர் மயங்கி சரிய கீழே விழாமல் அவரை தாங்கி அமர வைத்தவள் குடிக்க தண்ணீர் குடுத்து ஆசுவசப்படுத்தினாள்.

சற்றே தெளிந்திருந்த அவரிடம்
ஆரா,”அம்மா என்னாச்சு இப்போ எப்படி இருக்கு உங்க கூட யாரும் வரலையானு கேக்க”

அவங்க,” இல்லமா எனக்கு கொஞ்சம் லோ பிபி அதான் காலைல டென்ஷன்ல மாத்திரை போட மறந்துட்டேன்”னு சொன்னவங்க…
என் பேரு லட்சுமி எங்க வீடு பக்கத்துல தான் இருக்கு அதனாலே நடந்தே கோவிலுக்கு வந்துருவேன் நான் எப்பவும் வர கோவில் தான் மா…. ரொம்ப நன்றிமா…
அவளும் அவரிடம் என் பேரு ஆராதனா நான் மெடிக்கல் காலேஜ்ல தேர்ட் இயர் படிக்கறேன்.. என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்…

லட்சுமிமா,”சரிமா நான் கெளம்பறேன்”

ஆரா,”அம்மா நானே உங்கள கொண்டு போய் விடறேன் வாங்க நீங்க இன்னும் ஏதும் சாப்பிடல சோ மறுபடியும் மயக்கம் வந்தாலும் வரும் அதனால கண்டிப்பா நீங்க வந்தே தான் ஆகணும்னு”அவரை அழைத்துக்கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றாள்.

அங்கோ சிவாவின் வீட்டில் வேலை செய்ய ஆளுங்க இருந்தாலும்,ஆரா அவங்களையெல்லாம் அழைக்காமல் அவளே கிச்சனுக்குள் சென்று சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து லட்சுமி அம்மாவை சாப்பிட வைத்துக்கொண்டிருந்தாள்….வெளியே புதுசா குரல் கேக்க வெளியே வந்தார் சிவாவின் அப்பா…. அவரை பாத்தவுடன் ஆராவுக்கு தான் இருப்பது சிவவோட வீடுனு தெரிஞ்சிருந்தது… சுத்தி முத்தி பாத்தவள் ஹாலில் அவங்களோட குடும்ப போட்டோவை பாத்ததும் கண்பார்ம் செய்து கொண்டாள்.. அந்த நேரத்துல லட்சுமி அம்மா அவங்க கணவரிடம் நடந்ததை கூற அவரோ ஆராவுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு,லட்சுமியை வருத்தமாய் பாக்க….. அதை உணர்ந்த ஆராவோ
அப்பா நீங்க வருத்தப்படாதிங்க இது சாப்பிடாம இருந்ததனால வந்த மயக்கம் தான் …நான் டாக்டர்க்கு தான் படிக்கறேன் சோ தாராளமா நீங்க என்ன நம்பலாம்னு சொல்ல..

வந்த சற்று நேரத்தில் உரிமையாய் பழகிய அவளை மிகவும் பிடித்திருந்தது சிவாவின் பெற்றோருக்கு..அப்போதே சற்று நியாபகம் வந்தவராய் சிவாவின் அப்பா ஆராவை பாத்து,”உன்ன எங்கயோ பாத்த மாதிரி இருக்குனு சொல்ல”
லட்சுமி அம்மாவும்,”ஆமாங்க எனக்கும் அப்டிதாங்க தோணுது”
அப்ப தான் ஆரா அந்த பங்சனை பத்தி சொல்லிட்டு தன் பெற்றோர் பத்தியும் கூறினாள்.
சரிப்பா நான் கெளம்பறேன்னு சொன்னவள தடுத்த லட்சுமி,”இருமா கொஞ்சம் ஜூஸ் குடிச்சுட்டு போ”னு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாங்க….

ஜூஸ் குடிச்சுட்டுட்டே வழக்கம் போல இவ ஜாலியா சிவவோட அப்பா அம்மா கிட்ட பேசிட்டு இருக்க அவங்களும் சந்தோசமா சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க…. அந்த நேரம் வீட்டிற்கு வந்த சிவா யாருக்கிட்ட இவங்க இப்படி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்காங்கனு பாக்க…அவளை பாத்து அவன் திகைக்க… அவனின் அரவத்தை கேட்டு அவள் திரும்பி பாக்க அவனை பாத்தவுடன் திரு திருனு முழிக்க, சிவா அம்மா தான் நடந்ததை சிவா கிட்ட சொல்ல…. சிவா தன் அன்னை அருகில் அமர்ந்து அவரை நலம் விசாரிக்க அவரோ நான் நல்லா தான் இருக்கேன் நீ பயப்படாதே னு அவனுக்கு ஆறுதல் சொன்னாங்க…

அவள் புறம் திரும்பியவன்,”ரொம்ப நன்றி”னு ஒற்றை வார்த்தையில் முடிக்க….அவளோ சரிங்க நான் கெளம்பறேன்னு சொல்ல, சிவாவின் பெற்றோரோ அடுத்த தடவை கண்டிப்பா வந்து சாப்பிடணும்னு சொல்ல அவளும் உரிமையாய் அவர்களிடம் கண்டிப்பா வரேன்னு சொல்லிட்டு லட்சுமி அம்மாவை அணைத்து விடைபெற்று சென்றாள்.

சிவாவின் பெற்றோர் தன் மகனுக்கு ஏத்த பொருத்தமான ஜோடி இவள் தான் என்று நினைத்து கொண்டிருந்தனர்….

அவர்களின் எண்ணம் ஈடேறுமா??

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here