7.கண்ணாளனின் கண்மணியே!!!

0
440

மகி சென்று அவளின் அம்மாவை அனுப்பிவிட்டு அவளின் தம்பியுடன் இணைந்து கோவிலில் உள்ள மற்றவர்களுக்கு பிரசாதம் குடுக்க சென்று விட்டாள்..

மகியின் அம்மா அன்பரசி தன் கணவன் இருக்கும் இடத்திற்கு வந்தவர் தன் கணவன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது போல் தெரிய தன் கணவன் தோளில் கை வைத்து என்னங்க என்று அழைக்க… முத்து,”வா அன்பு இவங்க தான் சேகரோட அம்மா நான் சொல்லிருக்கேன்ல”

அன்புவும் அதை ஆமோதிப்பவராக ஆமாங்க என்றுரைத்து விட்டு, காமாட்சி அம்மாளும் அன்பரசியும் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.

காமாட்சி அம்மாள் முத்துவிடம் கூறியதை முத்து அன்புவிடம் கூறினார்..

அன்பு ,” என்னங்க திடீர்னு இப்டி சொல்றிங்க.. நம்ம புள்ளைக்கு இப்போ வரைக்கும் நம்ம கல்யாணம் பண்ற எண்ணத்துலயே இல்ல.. அதுவுமில்லாம அவங்க பெரிய இடம்.. அவங்களுக்கு பொண்ணு குடுக்க ‘நான்’ ‘நீ’ னு ஆளுங்க வருவாங்க.. அவங்க தகுதிக்கு நம்ம எல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று ஒரு நடுத்தர வர்க்கத்து தாயாக தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

அவர்கள் இருவருக்குமான சம்பாசனைகனை கவனித்து கொண்டிருந்த காமாட்சி அம்மாள் அவர்களை இடைமறித்து,”நீங்க பேசி முடுச்சிட்டீங்களா இப்போ நான் கொஞ்சம் பேசலாமா” என்று பேச தொடங்கினார்.

காமாட்சி அம்மா,”ஆமா நீங்க சொல்றது வாஸ்தவம் தான்..எங்க கிட்ட பணம் இருக்கு ஆனா குணமான மனுசங்க இல்ல.. எல்லாருமே எதாவது ஒரு தேவைக்காக தான் எங்க கூட பழகுறாங்க எனக்கு இந்த போலியான உறவுகள் வேணாம்.. காசு பணம் இல்லனாலும் உண்மையா இருக்க உறவுகள் தான் வேணும் அதான் உங்கள
பாத்ததும் இப்டி கேக்கணும்னு தோணுச்சு ” என்று தன் மன எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

முத்து,” சரிமா ஆனாலும் எங்க பொண்ண ஏதோ முடிஞ்ச அளவுக்கு தான் படிக்க வச்சிருக்கோம்.. உங்க பேரனோட தகுதிக்கு அது சரியா வரும்னு தோணல..எல்லாத்தையும் மீறி கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிர் நம்ம அவசரப்பட்டா நம்ம புள்ளைங்க தானே பாதிக்கப்படும்” என்று தன் பங்குக்கு அவரும் தன் கவலையை தெரிவித்தார்…

காமாட்சி அம்மாள்,” சரி நான் உங்கள கட்டாயப்படுத்தல ஆனா என் தரப்பு நியாயத்தை சொல்லிடறேன் அதுக்கப்பறம் நீங்க முடிவு எடுங்க.. உங்களுக்கே தெரியும் அவன் அப்பா அம்மா அவன் குழந்தையா இருக்கும் போதே இறந்துட்டாங்க…. சின்ன வயசுல இருந்தே பாசத்துக்காக ஏங்கி கஷ்டப்பட்டு வளந்தவன்.. ஒரு கட்டத்துல சொந்த பந்தமெல்லாம் சொத்தை வித்துட்டு அதை வச்சு பேரனை படிக்க வைங்கன்னு சொன்னப்ப நான் கூட திக்கு தெரியாம நின்னேன்.. ஆனா என் பேரன் தான் ஒரே ஆளா தலையெடுத்து தொழிலை பாத்துகிட்டான்… இன்னிக்கு அதுல சாதிச்சும் இருக்கான்.. என்ன கொஞ்சம் கோபக்காரன் உங்க பொண்ணு வந்தா திருத்திடுவா… எனக்கந்த நம்பிக்கை இருக்கு…. இதுக்கு மேல முடிவு உங்க கையில, உங்க முடிவை இப்போவே நீங்க சொல்ல வேணாம் நாளைக்கு நான் இந்த கோவிலுக்கு வருவேன் அப்போ வந்து சொல்லுங்க.. ” என்றார்…

மகியின் பெற்றோரும் சரிங்கமா நாங்க நாளைக்கு வரோம் என்று விடைபெற்றனர்..

பாட்டி அதிவிரைவாக தன் திட்டத்தை செயல்படுத்த பாலாவை அழைத்தார்..
பாலாவும் பாட்டி காரணமில்லாமல் அழைக்க மாட்டார் என்றுணர்ந்தவன்
பாட்டியின் அழைப்பை அலட்சியப்படுத்தாமல் அவர் அழைப்பு விடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான்..

பாட்டியை பாத்தவுடன்,”என்ன பாட்டி வர சொல்லிருந்திங்க.. என்ன பிரச்சனை உடம்புக்கு ஏதும் முடியலையா??? அபய் ஊருல இல்லாதனால என்ன வர சொன்னிங்களா” என கேள்விகளை அடுக்கினான்..

பாட்டி,”ஆமாப்பா,நேத்து எனக்கு திடீர்னு நெஞ்சு வலி வந்துருச்சு கோவிலுக்கு போயிருக்கும் போது…அப்டியே அங்க இருந்தவங்க தான் என்ன ஹாஸ்பிடல்ல சேத்தாங்க அங்க தான் இது எனக்கு செகண்ட் அட்டாக் இன்னொரு தடவை வந்தா பொழைக்கறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க”என்று தன் நாடகத்தை தொடங்கினார்..

இதை கேட்டு அதிர்ந்தவன்,”என்ன பாட்டி இப்படி சொல்றிங்க.. நம்ம வேணாம் பெரிய டாக்டர்ங்களை வர வச்சு பாக்கலாம் உங்களுக்கு ஒன்னும் ஆகாது”என்றான்..

பாட்டியோ எனக்கு அதபத்தி எல்லாம் கவலை இல்லை… எனக்கு ஏதும் ஆகரத்துக்குள்ள நான் என் பேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் அவன் நல்லா வாழறதை நான் பாத்துட்டு கண்ணை மூடனும் இது தான் என் ஆசை அதுக்கு உன் உதவி வேணும் என்று அவனை நோக்கினார்..

பாட்டியின் பார்வையை அறிந்தவனோ,”சொல்லுங்க பாட்டி என்னால முடிஞ்ச எல்லா உதவியும் நான் பன்றேன்” என்று பாட்டியிடம் உறுதி அளித்தான்..

பாட்டியும் கீர்த்தி வீட்டுக்கு வந்திருந்ததையும்… தான் அபய்க்கு பெண் பார்திருப்பதையும் அந்த பெண் அபயின் தந்தையுடைய நண்பரின் பெண் எனவும் மிடில் கிளாஸ் குடும்பம் என்பதையும் சொல்லி வருகிற முகூர்த்தத்தில் கல்யாணம் அதாவது இன்னும் சரியாக ஏழு நாளில் திருமணம் என்பதையும் உரைத்தார்..

பாலவோ சந்தேகத்துடன் அதெல்லாம் சரி தான் ஆனா அபய் இதுக்கு சம்மதிப்பானா பாட்டி எனக்கு அவனை நினைச்சா தான் பயமா இருக்கு… என்று தன் சந்தேகத்தை வெளிப்படுத்த பாட்டியோ அதெல்லாம் அவனை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு ஆனா அவன் கல்யாணத்துக்கு நீ தான் கூட மாட எனக்கு ஒத்தாசையாக இருக்கணும் என்று கேட்டுக்கொண்டார்..பாலாவும் தன் நண்பனை கீர்த்தியிடம் இருந்து காக்கும் பொருட்டு…சரி பாட்டி என் நண்பனுக்கு ஒரு நல்லது நடக்கும் போது கண்டிப்பா நான் இருப்பேன் என்று தன் சம்மதத்தை வெளிப்படுத்தினான்..

இங்கு மகியின் வீட்டிலோ முத்து எவ்வாறு தன் மகளிடம் பேச்சை தொடங்க என்று யோசித்துக்கொண்டிருக்க அங்க மகியும் அவளது தம்பியும் ரிமோட்டுக்கு சண்டை போட்டு கொன்டிருந்தனர்.. அவளிடம் பேசுமாறு அன்பு தன் கணவருக்கு சைகை காமித்தார்..
குறிப்புணர்ந்த முத்துவோ மகி என்று தன் மகளை அழைக்க அவளோ தன் தம்பியிடம்,”டேய் குட்டி சாத்தான் அப்பா கூப்பிடராங்க நான் போயி என்னனு கேட்டுட்டு வரேன் அதுக்குள்ள நீ அந்த சாங் வைக்கல மகனே நீ காலி” என்று தன் தம்பியுடன் வம்பு வளத்திவிட்டு சென்றாள்..

தன் தந்தையிடம் வந்து அமர்த்தவள்,”சொல்லுங்கப்பா” என்றார்..

முத்து,”ஒன்னுமில்லமா நாம இன்னிக்கு கோவில்ல பாத்தமில்ல ஒருத்தவங்க என்று தொடங்கி தங்களுக்குள்ளான மொத்த கதையும் தன் மகளிடம் கூறினார்.. அவர் தன் பேரனுக்கு மகியை பெண் கேட்டது உட்பட…

அதை கேட்ட மகியோ,”என்னப்பா நான் இப்போ தான் வேலைக்கு போயிருக்கேன் உடனே கல்யாணத்துக்கு என்ன அவசரம்… இன்னும் 2 வருஷம் ஆகட்டும் என்றாள்..

முத்து,”இல்லமா அவங்க நமக்கு ரொம்ப வேண்டபட்டவங்க அவங்களுக்கும் உடம்புக்கு முடியரதில்லை அதனால அவங்க பேரனுக்கு இப்போவே கல்யாணம் பண்ணனும்னு ஆசபட்ராங்க… உனக்கு வேணும்னா நீ கல்யாணத்துக்கு அப்பறம் வேலைக்கு போ இதை பத்தி நான் அவங்க கிட்ட பேசறேன்..”என்றார்.

மகி,”அப்பா நான் உங்களுக்கு பாரமா இருக்கனா.. ஏன் இப்படி என்ன கல்யாணம் பண்ணி அனுப்பணும்னு நினைக்கிறீங்க என்று விசும்ப…

முத்து அவள் தலையை வருடி,”என் புள்ள நான் என்ன சொன்னாலும் கேக்கும்னு நான் அவங்களுக்கு வாக்கு குடுத்துட்டேன்டா.. நீ இந்த அப்பா மரியாதையை காப்பாத்துவியா என்று கை கூப்பி கேக்க.. இதற்கு மேலும் அவள் சம்மதிக்காமல் இருக்க முடியுமா??? மகிக்கும் துளி கண்ணீர் எட்டி பார்க்க அதை துடைத்தவள்,”நீங்க இவ்ளோ சொல்லி நான் கேக்காம இருப்பனா… சரிப்பா எனக்கு சம்மதம் என்றாள்…
அன்புவும் தன் மகளை அனைத்து அவங்க பணக்காரங்க ஆனாலும் கொஞ்சம் கூட பணத்திமிரு இல்லாம அன்பா பழகராங்க… நீ அங்க போனா சந்தோசமா இருப்ப என்று தன் மகளுக்கு நம்பிக்கை அளித்தார்…

மகி,”சரிப்பா.. கொஞ்சம் தலை வலிக்குது நான் ரூம்க்கு போறேன்”என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்ற பின்பு அன்பு தன் கணவனிடம்,”ஏங்க நம்ம இவளை கட்டாயப்படுத்தரமோ?” என்று கேட்க முத்துவோ இல்லமா அவ சின்ன புள்ள அதான் தயங்கரா.. அதுமில்லாம நாம சேகருக்கு கடன்பட்டுருக்கோம் அதை இப்படி தான் தீர்க்க முடியும் இன்னிக்கி அவன் உயிரோட இருந்திருந்தாலும் இது தான் நடக்கும்…நீ கவலைப்படாதே நாளைக்கு நாம கோவிலுக்கு போயி அவங்க கிட்ட சம்மதத்தை சொல்லணும் சரியா என கேட்க.. ஆமாங்க சரிதான் சரி நான் போயி ஆகர வேலையை பாக்கறேன் என்று சென்றுவிட்டார் அன்பு..

அப்டியே சோபாவில் கண்ணை மூடி அமர்ந்திருந்த முத்துவிற்கு கடந்த கால நியாபகங்கள் வந்தது…

சிறுவயதிலிருந்தே பள்ளி காலம் வரை ஒன்னாக இருந்தாலும் வசதியின்மையின் காரணமாக முத்து கல்லூரி செல்லாமல் டிரைவர் ஆகி இருந்தான் இருந்தும் எந்த சூழ்நிலையிலும் நண்பனை விடாமல் நட்பு பாரட்டிக்கொண்டிருந்தார் சேகர்…
இருவரின் திருமணத்திலும் ஒருவர்க்கொருவர் உடன் பிறந்தவர் போல் வேலை செய்து கொண்டிருந்தனர்..

திருமணத்திற்கு பிறகு முதல் வருடத்திலேயே சேகருக்கு அபய் பிறந்தான்.. முத்துவிற்கு குழந்தை பாக்கியம் தள்ளி போனது இதை நினைத்து முத்து கவலையில் இருக்கும் போதெல்லாம் சேகர் தான் துணையாக இருந்தான். முத்து மற்றும் அன்புவின் நீண்ட வேண்டுதலுக்கு பிறகு அன்பு கருத்தரித்தார்…திருமணமான ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே முத்து அன்புவிற்கு புத்திர பாக்கியம் கிட்டியது…

அன்புவிற்கும் டெலிவரிக்கு இன்னும் 20 நாள்கள் இருந்தது…அன்று ஊட்டியில் கனமழை ஊரெங்கும் மண்சரிவு எங்கும் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கைகள்.. கரண்ட்டும் இல்லாமல் ஊரெங்கும் இருள்… சற்றே மேலோட்டமாக இருந்த அன்பு எதிர்பாராத மழை ஈரத்தில் வழுக்கி விழுந்தார்.. விழுந்தவர்க்கு பிரசவ வலி எடுக்க உதவிக்கு ஆள் இல்லாமல் தடுமாறினார் முத்து..

முத்து பதட்டத்துடன் சேகருக்கு போன் பண்ண சேகரோ சூழ்நிலையை பொருட்படுத்தாமல் வந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் சேகர்.. மருத்துவமனையில் சேர்த்த 15 வது நிமிடம் அழகான தேவதையை பெற்றெடுத்தாள் அன்பு…

முத்து தன் நண்பனுக்கு நன்றியுரைக்க சேகரோ எனக்கு நன்றி எல்லாம் ஒன்னும் வேணாம்… என்னைக்கா இருந்தாலும் என் மகனுக்கு உன் பொண்னு தான் உன் மகளை என் வீட்டுக்கு அனுப்புவ தானே என்று கேட்க முத்துவோ உனக்கில்லாமலா என்று தன் சம்மதத்தை அன்றே தெரிவித்தான்… அன்புவை பார்க்க சென்ற சேகர் அவளிடமும் அதையே கேட்க இவ கண்டிப்பா உங்க மருமக தான் அண்ணா என்று அன்பு சொன்னதில் அன்று முழுக்க சேகர் தனக்கே தேவதை பிறந்தது போல் மகிழ்ந்தான்…

அன்றே முத்து உணர்ந்தான் குசேலனுக்கு கண்ணன் போலவே எனக்கு சேகர் என்று…

அதன் பிறகு சேகர் தம்பதியினர் குழந்தையை பார்ப்பதற்காகவே அடிக்கடி முத்துவின் வீட்டிற்கு வந்து சென்றனர்.. பின் மகி பிறந்த 2 வது மாதத்திலேயே அந்த கோர விபத்தில் சேகர் தம்பதி இறந்துவிட சேகரின் இறுதி சடங்குக்கு பின் அவனால் அந்த குடும்பத்தில் அவனால் நட்பு பாராட்ட முடியவில்லை..

இப்போது இந்த கல்யாணம் சேகரே முன் நின்று நடத்துவது போல் இருந்தது முத்துவுக்கு..

இவை ஏதும் அறியாமல் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தான் அபய்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here