8. கிணற்று தவளை

0
68

மாப்பிள்ளை தோரணையில் மிடுக்காய் கிளம்பி கீழே வந்தவனைப் பார்த்து கொண்டே இருந்தார் நித்யனின் தந்தை.

நித்யன்,” என்னப்பா புதுசா பார்க்கறா மாதிரி பாத்துகிட்டே இருக்கீங்க?

அவனின் தந்தை,”ஆமாடா உனக்கு இப்பவே கல்யாணம் கலை வந்துருச்சு. நீ இன்னிக்கி புதுசா தான் தெரியற. மனசுக்கு புடிச்ச பெண்ணே கல்யாணம் பண்ணிக்கறது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அதுவும் அவளை சம்மதிக்க வைக்கறதுக்கு பேசி, கெஞ்சி ,கூத்தாடி அவளை கை பிடிக்கிறது அலாதியான இன்பம்.

நித்யன்,” என்னப்பா பழைய நினைவுகள் எல்லாம் வருதா?

அவனின் தந்தை,” ஆமாண்டா இப்ப உன்னோட அம்மா உயிரோட இருந்திருந்தா எவ்வளவு சந்தோஷப் பட்டு இருப்பானு தெரியுமா? நமக்குதான் அவ கூட வாழ கொடுத்து வைக்கல என்று கண் கலங்கினார்.

நித்யன், “அப்பா அம்மா நம்மள விட்டு எங்கையும் போகல. இன்பேக்ட் இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கறத கூட பாத்துட்டு தான் இருப்பாங்க. நீ இந்த மாதிரி இருக்கறது அம்மாக்கு பிடிக்குமான்னு சொல்லு?

அவனின் தந்தை,” ஆமாடா நான் கஷ்டப்பட்டாலோ, இல்ல மனசு சங்கடப்பட்டாலோ உன்னோட அம்மாக்கு பிடிக்காது. எப்பவுமே தைரியமா இருக்க சொல்லுவா. அவ கூடவே நீ பாதி நாள் இருந்ததுனால அவளோட தைரியம், எதையும் தெளிவாக யோசிச்சி முடிவு எடுக்கும் குணம் எல்லாம் அப்படியே உனக்கு இருக்கு. அவளோட நினைவுகள் உன்ன பார்க்கும் போது எல்லாம் எனக்கு வருது.

நித்யன்,” இந்த மாதிரி இங்கேயே நின்று பேசிக்கிட்டு இருந்தா நிர்பயா வீட்டுக்கு வந்துடுவா? அப்புறம் நாம நெனச்சது எதுவுமே நடக்காது.

அவனின் தந்தை,” நீ சொல்றதும் சரிதான். சும்மா வெட்டி கதை பேசாமல் கிளம்பு.

நித்யன்,” என்னது? நான் வெட்டியா பேசினேனா? எல்லாம் என் நேரம். வாங்க.

இவ்வாறு சந்தோஷமாக பேசிக்கொண்டு அரைமணி நேரத்தில் நிர்பயாவின் வீட்டை அடைந்தனர்.

வாசலில் உயர்ரக கார் ஒன்றை பார்த்ததும் என்னவென்று பார்க்க கர்ணன் வந்தார். அவருக்கு காரில் இருந்து இறங்கிய நித்யனை மட்டும் அடையாளம் கண்டு கொண்டார்.

கர்ணன்,” வாங்க தம்பி நிர்பயா வீட்டில் இல்லை. வெளியே போயிருக்கா.

நித்யன்,” சர் இவர் என்னோட அப்பா. நாங்க ரெண்டு பேரும் உங்களைப் பார்க்க தான் வந்தோம். உள்ள போயி பேசலாமா?

கர்ணன் அவர்களை வரவேற்று வீட்டிற்குள் அமரச் செய்தார். சம்பிரதாய உபசரிப்புகளுக்கு பிறகு,

கர்ணன்,” சொல்லுங்க தம்பி என்ன விஷயமா என்ன பார்க்க வந்தீங்க?

நித்யன்,” சர், இவர் என்னுடைய அப்பான்னு சொல்லிட்டேன். இவர் பெரிய பிசினஸ்மேன். இவரப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் என்று அவரின் விவரங்களை சொன்னான்.

கர்ணன் மிக சந்தோஷமாக அது நீங்க தானா சர்?இத்தனை நாளா உங்களை பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனா எங்க வீட்டு பிள்ளை உங்க மேல கோபமா இருந்தா அதனால தான் வர முடியல.

அவனின் தந்தை,” பரவாயில்லை நாம எப்ப சந்திக்கணும்னு விதியிருக்கோ அப்பதான் சந்திக்க முடியும். இப்ப நாங்க எதுக்கு வந்து இருக்கோன்னு சொல்றேன்.

கர்ணன்,” சொல்லுங்க சார்.எத பத்தி பேசணும்?

அவனின் தந்தை,” அதுக்கு நீங்க வீட்டுல இருக்க எல்லாரையும் கூப்பிடனும்.நாங்க பேச வந்தது நிர்பயா பத்தி தான்.அதனால அவளோட அப்பா அம்மாவும் இருந்தா இன்னும் நல்லா இருக்கும் என்றதும் அவர்களையும் அழைத்தார்.

கர்ணன், ” இப்போ சொல்லுங்க சார்.

அவனின் தந்தை,” நாங்க இங்க வந்தது ஒரு நல்ல விஷயத்தை பற்றி பேச தான். என்னுடைய பையன பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

கர்ணன், ” அவருக்கு என்ன ரொம்ப நல்லவரு. நிறைய நல்ல விஷயம் செஞ்சி இருக்கறதா என் பொண்ணு சொல்லி இருக்கா. இந்த சின்ன வயசுல நிறைய சாதித்திருக்கிறார். இது எல்லாராலையும் முடியாது. மொத்தத்துல இவரின் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

அவனின் தந்தை,”அப்ப நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். என் பையன் உங்க பொண்ணு நிர்பயாவை காதலிக்கிறான், கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுகிறான். நீங்க உங்க பொண்ணு என் பையனுக்கு தர சம்மதமா?

கர்ணன்,” இந்த மாதிரி திடீரென கேட்டா எங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல எதுவாயிருந்தாலும் என் பொண்ணு கிட்ட கேட்டுட்டு தான் முடிவு பண்ணனும்.

அவனின் தந்தை,” தாராளமாக கேட்கலாம். ஏன் சொல்றேன்னா உங்க பொண்ணும் என் பையனும் விரும்புகிறார்கள். அதனால்தான் நானும் தைரியமா பெண் பேச வந்தேன்.

கர்ணன்,” அப்ப ஒரு நிமிஷம் இருங்க என்னோட பொண்ணு கிட்ட போன் பண்ணி கேட்கிறேன். அவ முடிவுதான் எங்க முடிவும் என்று சொல்லிவிட்டு நிர்பயாவிற்கு கால் செய்தனர்.

நிர்பயா,” சொல்லுங்க அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்து விடுவேன். ஏதாவது முக்கியமான விஷயமா எதுக்காக இப்ப கால் பண்ணீங்க?

கர்ணன்,” அம்மாடி இந்த பெரியப்பா உனக்கு நல்லது மட்டும் தான் நினைப்பேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா?

நிர்பயா,” என்ன பெரியப்பா நீங்க இப்படி எல்லாம் கேட்கிறீங்க? நம்ம வீட்டில இருக்க எல்லாருமே என்னுடைய நல்லதுக்கு மட்டும்தான் யோசிப்பீங்க,எதுவா இருந்தாலும் செய்வீங்க இது என்ன புதுசா கேள்வி கேட்குறீங்க.? என்ன விஷயம்னு சொல்லுங்க.

கர்ணன்,” உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கும். நான் போட்டோ அனுப்புறேன் பாத்துட்டு சம்மதமான்னு சொல்லு. நீ சொன்னா நாங்க மேற்கொண்டு பேசுவோம்.

நிர்பயா,” அதை சிறிது அதிர்ச்சி அடைந்தவள் பின் சுதாரித்து பேச ஆரம்பித்தாள். “அப்பா எனக்கு இப்ப கல்யாணம் எல்லாம் வேண்டாம். எனக்கு யாரையும் இப்ப கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை. அதுவும் இல்லாம எனக்குனு சில எதிர்பார்ப்புகள் இருக்கு அதெல்லாம் யார் கிட்ட இருக்கோ அவங்கள தான் கல்யாணம் பண்ணிப்பேன். இப்ப வந்து இருக்க மாப்பிள எனக்கு வேண்டாம் என்றாள் சற்று காட்டமாக.

கர்ணன்,” குட்டிமா நீ சொல்றதை நான் கேக்கறோம். ஆனா எங்களுக்காக மாப்பிள்ளை போட்டோவ ஒரு தடவை பார்த்துவிட்டு சொல்லு.

நிர்பயா,” சரி அனுப்பி வையுங்க. பார்த்து தொலையுறேன் என்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அதன் பின்னர் கர்ணன் நித்யனை புகைப்படம் எடுத்து அவளுடைய வாட்ஸப் நம்பருக்கு அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய அடுத்த நிமிடம் அவளை கால் செய்தாள்.

நிர்பயா,” அப்பா நீங்க நித்யன் போட்டோவை அனுப்பி வைத்து இருக்கீங்க. மாத்தி ஏதாவது அனுப்பிச்சு விட்டுட்டீங்களா?

கர்ணன்,” ஏன்மா உனக்கு ஏதாவது பிரச்சனையா? இவரை பிடிக்கலையா? வேற மாப்பிள்ளை வேணும்னா பார்க்கவா?

நிர்பயா,” அட கடவுளே இவர் தான் மாப்பிள்ளையா? நிர்பயா சமாளி என்று தனக்குள் பேசி தயார்படுத்திக் கொண்டு, “ஐயோ அப்பா, அப்படி எல்லாம் இல்லை. உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா எனக்கு ஓகே தான்.

கர்ணன்,” அவளை சீண்ட எண்ணி இல்ல பாப்பா உனக்கு பிடிக்கலைன்னா சொல்லிடு நாங்க இவங்ககிட்ட பேசிகிறோம்.

நிர்பயா,” அப்படி எல்லாம் இல்ல பா எனக்கு நித்தியன ரொம்ப பிடிக்கும் இந்த கேஸ் முடிந்த பிறகு நானே உங்ககிட்ட சொல்லனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள உங்களுக்கு எப்படிப்பா தெரிஞ்சது?

கர்ணன்,” பாப்பா தம்பி இங்க தான் இருக்காரு. நீங்க ரெண்டு பேரும் விரும்புகிறதா சொன்னாரு கல்யாணம் பண்ணிக்க சம்பந்தம் பேச வந்திருக்காரு.அவங்க அப்பா கூட வந்து இருக்காரு. நாங்க உன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கோம். இப்போ உனக்கு இதெல்லாம் முழு சம்மதம் தானே அம்மா?

நிரஞ்சனா,” ஐயோ அப்பா நீங்க இப்பவே கல்யாணம் பண்ணிக்க சொன்னாகூட அவ ஓகேனு சொல்லிடுவா. அப்படிதான் இருக்கா அவர் போட்டோ பார்த்த உடனே மேடம் டோட்டல் பிளட். நீங்க பேசி முடிங்க அப்பா என்று நிர்பயாவை சிண்டியவாறே சொன்னாள்.

அவள் பேசிய விதத்திலே அவள் நித்யன் மேல் கொண்ட அன்பு தெரிந்தது. அதனால் பெரியவர்கள் அனைவரும் ஒருமனதாக அடுத்த பத்து நாட்களில் நிச்சயம் வைத்துக் கொள்வதாக முடிவெடுத்தனர்.

இதற்கு நடுவே கேஸ் பற்றிய விவரங்களை சேகரிக்க போராடிக்கொண்டிருந்தாள் நிர்பயா. ஒவ்வொரு முறையும் கேஸ் வாய்தா வாங்கிக்கொண்டே இருந்தது. தசரதனின் வக்கீலோ இந்த கம்பெனி அவருடைய மகன் சக்கரவர்த்தி பெயரில் உள்ளது அவருக்கு வேலை பளு அதிகம். அதனால் இன்னும் பத்து நாட்களில் அவர் வந்துவிடுவார் அதன் பிறகு தங்களுக்கு என்ன விவரம் வேண்டுமோ கேட்டுக்கொள்ளலாம். அதனால் தங்கள் இந்த விசாரணையை தள்ளி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் ஏமாற்றிக் கொண்டு இருந்தார்.

நிர்பயாவுக்கு வந்த கோபத்தில் அங்கிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினாள் அதில் அவள் மென்மையான விரல்களில் ரத்தம் கசிவதை பார்த்ததும் நித்தியனுக்கு பதட்டம் உண்டானது.

நித்யன்,” ஏய் நிர்பயா என்ன ஆச்சு உனக்கு ?எதுக்கு இவ்வளவு கோபம் உன்னை நீயே காயப்படுத்திக்கிறதுனால என்ன லாபம் இருக்கு? உனக்கு வந்து இந்த இரத்தத்தினாலே கேஸ் உடனே இயரிங் வரப்போகுதா? இல்லையே தசரதன் ஓட பையன் வந்து இதற்கான விளக்கம் கொடுத்தால் மட்டுமே இந்த கேஸ் சரியான பாதையில் பயணிக்கும். அவனால எவ்வளவு நாள் தான் ஒளிஞ்சு விளையாட முடியும் வருவான் இன்னும் 10 நாட்களில் கண்டிப்பா வருவான் நீ வேணும்னா பாரு.

நிர்பயா,” நீங்க எப்படி இவ்வளவு ஆணித்தரமா சொல்றீங்க? உங்களுக்கு அவனை ஏற்கனவே தெரியுமா? நீங்க பேசி இருக்கீங்களா?

நித்யன்,” இல்ல அவனோட பி.ஏ கிட்ட பேச முடிந்தது அவர் சொன்ன பதில் தான் இது.

நிர்பயா,” அவன் மட்டும் என் கைல கிடைச்சான் என்ன அலைய விட்டதுக்கு எல்லாம் சேர்த்து பழி வாங்கி விடுவேன்.

நித்யன்,” சரி சரி அவனை பழி வாங்குறதுலாம் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல வா ஹாஸ்பிட்டல் போய் ட்ரீட்மென்ட் எடுக்கலாம். இவ்வளவு கோபம் இருக்க உனக்கு உன்னை நான் எப்படி தான் சமாளிக்க போறேன்னு தெரியல!!

நிர்பயா,” அவ்வளவு கஷ்டமா இருந்தா வேற யாராவது கல்யாணம் பண்ணிக்கங்க நான் என்ன உங்களை வேண்டிக்கிட்டா இருக்கேன்?

நித்யன்,” அம்மா தாயே நீ என்னை தூக்கி போட்டு மிதிச்சாலும் நீதான் என் செல்ல ராட்சசி. வரிங்களா என்று சிரித்தான். அவளும் அவன் சொன்ன விதத்தில் கோபம் குறைந்தவளாய் தன்னுடைய மனம் கவர்ந்தவனுடன் கை கோர்த்து நடக்கலானாள்.

ஒரு வாரம் கழித்து,

நிச்சயதார்த்த வேலைகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்க, நித்யன் மட்டும் அவன் நண்பன் கிரிஷ் மற்றும் மற்ற சொந்தங்களுடன் மண்டபத்தை அடைந்தான். இவர்கள் வருவதை பார்த்ததும் அனைவரும் வெளியே வந்து சியாமளா ஆலம் சுற்ற மாப்பிள்ளையான நித்யன் உள்ளே நுழைந்தான். அவர்களுடன் அவன் தந்தை வராமல் போகவே கர்ணனுக்கு வீட்டில் உள்ள மற்றவர்களும் சங்கடமாய் உணர்ந்தார்கள்.

கர்ணன், “தம்பி, அப்பா வரலையா? ஏதாவது பிரச்சினையா?

நித்யன்,” அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா, அவருக்கு தீடீரென்று வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம். அது தான் வர முடியல. அவருக்கு இங்க இருந்து போக கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஆனால் வேற வழி இல்லாம போச்சி. முடிஞ்ச அளவு சீக்கிரம் வர பார்க்கறதா சொன்னாரு. நீங்க கவலை படாம இருங்க.

நித்யன் சொன்னத்திற்கு அரை மனதாக தலையாட்டி விட்டு நின்றார். இவரின் கலக்கத்தை புரிந்து கொண்டவன் தான் இருப்பதாக அவரின் கைகளுக்குள் தன் கையை வைத்து சமாதானம் சொன்னான். அதில் சிறிது தெளிவு பெற்று மற்ற வேலைகளை கவனிக்க சென்று விட்டார்.

நிச்சியத்திற்கான நேரம் நெருங்கவே மாப்பிள்ளையும், பெண்னையும் அழைத்தார்கள். சந்தன நிறத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட நவநாகரீகமாய் தன்னவன் எடுத்து கொடுத்த நீள கவுனில் அதற்கேற்றார் போல் சிறியதாய் வைர நகைகள் மின்ன ஒயிலாய் வந்தவளை அனைவரும் கண்கொட்டாமல் பார்த்தனர். அங்கே நித்யனோ அதே சந்தன நிறத்தில் கோட் அணிந்து ராஜ தோரணயாக வருபவனை கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தாள் நிர்பயா. அவளை பார்த்தவாறே இவன் வந்து கொண்டிருந்ததாள் இவளுக்கு இத்தனை நாள் வராத வெட்கம் வந்து அவளை இம்சித்தது.

நித்யன், “பேபி, யூ லுக் வொண்டர்ஃபூல், அப்படியே ஆள மயக்குற. ஐ லவ் யூ என்றான் அவள் காதோரமாய். அதில் அவளின் சிவந்த கண்ணம் மேலும் சிவந்தது.

இப்படியே சீண்டும், காதலுமாய் நிச்சயம் முடிந்தது.

அதற்கு அடுத்த நாள் கோர்ட்ல் நித்யனின் வரவுக்காக காத்திருந்தாள் நிர்பயா.

நிர்பயா, “இன்னைக்கு அந்த சக்ரவர்த்தி வரட்டும். அவனுக்கு இருக்கு என்று கறுவி கொண்டிருந்தாள். அந்த நேரம் அங்கு வந்த ஜட்ஜ்,” நிர்பயா வாட் ஆர் யூ டூயிங் ஹியர்?

நிர்பயா, “சர், அது வந்து டுடே தி கேஸ் இஸ் கம்மிங் ப்பார் இயரீங். தட்ஸ் ஒய் வெயிட்டிங்.

ஜட்ஜ்,” யூ சில்லி, டோண்ட் யூ நோ? யூவர் கேஸ் இஸ் டிஸ்மிஸ்டு.. சக்கரவர்த்தி இத பத்தின டிடைல்ஸ் குடுத்துட்டாரு. நீங்க பைல் பண்ண ப்ரூஃப் எல்லாம் பொய்ன்னு நிருப்பிச்சி இருக்காரு. இன்பேக்ட் இது உனக்கு தெரிஞ்சி இருக்கனுமே? அவங்க தான் உனக்கு குளோஸ் ரீலேட்வ் ஆச்சே? கோ கோ பேக் டு அதர் வெர்க்ஸ் என்று நகர்ந்து விட்டார்.

இவளுக்குத் தான் தலையில் இடி விழுந்தது போல் ஆனது. இது எப்படி சாத்தியம்? நித்யன் எங்கே? அவனின் கைபேசிக்கு அழைக்கவும், அவன் கோர்ட் வளாகத்திற்குள் தசரதனோடு காரில் இருந்து இறங்கவும் சரியாக இருந்தது.

நித்யன் ஏன் அவரோட வந்தான்? இனி கேஸ் என்ன ஆகும் என்று பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்.

தொடரும்..

photo_collage11562782415556|500x500
Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here