9 உயிரே என் உலகமே

0
828

அத்தியாயம் 9

டேய் முருகேசா என்னடா நெனச்சிட்டு இருக்க .எப்ப பார்த்தாலும் காசு வாங்கிட்டு என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம் பாக்குறியா … ஒழுங்கா வட்டியும் முதலுமா எடுத்து வைக்கல கொன்றுவேன்… என்று போனில் கத்திக்கொண்டு இருந்தான் இனியன்

நான் இன்னைக்கு நைட் வருவேன் அதுக்குள்ள எல்லாத்தையும் எடுத்து வை இல்லைனா உன் கடைய அடிச்சு காலி பண்ணி விடுவேன் ஜாக்கிரதை ….
என்று போன்பேசியபடியே வீட்டுக்குள் நுழைந்தான் இனியன் அவன் வீட்டுக்குள் நுழைய காலை எடுத்து வைக்கும் போது

அந்த வீடே அதிரும்படி கத்தி கொண்டிருந்தால் இசை

டேய் யார் பார்த்த வேலை டா இது

மூவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருக்க

சொல்லுங்கடா யார் பார்த்த வேலை இது என்று கத்த

என்ன சொல்ற அம்மு எங்களுக்கு எதுவுமே புரியல. டேய் நடிக்காதிங்க டா கொன்னுபோட்ருவேன்

வாவ் டார்லி இன்னும் இன்னும் உன்கிட்ட நெறையா எதிர்பார்க்குறேன் …. இன்னும் சௌண்டா கத்து ….அப்போதான் கந்துவட்டி காரன் பொண்டாட்டின்னு இந்த ஊரு நம்பும் கம்மான் ஐ நீட் மோர் எஸ்ப்ரசன் என்று மகி சொல்ல

டேய் பேச்ச மாத்தாதா …….

முத என்னனு சொல்லு டார்லி

யாருடா என்னோட வீடியோவ டிக் டாக் ல போட்டது என்ன கேட்காம ஏன்டா போட்டீங்க இப்ப யாருன்னு சொல்லல உங்களை என்ன பண்ணுவேணு தெரியாது

இதுக்கு போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற டார்லி

ஒழுங்கா சொல்லுங்க என்று தமிழை பார்க்க தமிழ் கண்ணை மூன்று முறை அடித்து சைகை செய்ய.. மகி நீ பார்த்த வேலை தானடா இது என்று அவள் கரெக்டாக கேட்க

இதுக்கு அப்புறம் யாரும் என்கிட்ட பேசவே பேசாதீங்க….என் கிட்ட கேக்காம நீங்க பாட்டுனு உங்க இஷ்டத்துக்கு போடுவீங்களா என்று கத்தி விட்டு தோட்டத்தில் போய் அமர்ந்துகொண்டாள் இசை

இதுக்கு போய் ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறா என்று குழம்பி இனிய னும் பின்தொடர்ந்தான்

என் செல்லம்ல

இல்ல

என் அம்மு குட்டில

இல்ல

என் டார்லிங் ல

இல்ல

என் தங்கம் ல

இல்ல

என் புஜ்ஜிமா ல

இல்ல

[நான் பண்ண வேண்டியது எல்லாம் இவனுங்க பண்றானுங்க..ஒருத்தவன் என்னடான்னா கண்ணாலேயே பேசுறான் இவன் என்னடான்னா புதுசு புதுசா பேர் வச்சி கொஞ்சிட்டுஇருக்கான் …. இதுங்க அட்டகாசம் தாங்கல ]என்று இனியன் மனதுக்குள் தமிழையும் மகியையும் வறுத்து எடுத்து கொண்டுஇருந்தான்

கொஞ்சாத போ.. நா பேசமாட்டேன் போ

சாரி டார்லி உங்ககிட்ட கேட்காமல் போட்டதுக்கு…

நீ ஒன்னும் சாரி சொல்ல தேவையில்லை போ அந்த பக்கம் என்று வேறுபக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள்

ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என்று அவன் கெஞ்ச நா வேணும்னா தோப்புக்கரணம் போடுறேன் டார்லி பேசு

ஆயிரம் தடவ தோப்புக்கரணம் போடு உன்னை மன்னிக்கிறேன்..

இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல மீ பாவம் கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா… உனக்காக வேணும்னா ஒரு பத்து தடவை போட்டுமா..

அதெல்லாம் முடியாது சரி நான் அகி யோட போன்ல தானே எடுத்தேன் உனக்கு எப்படி கிடைச்சது… அப்போ ரெண்டு பேரும் கூட்டு களவாணிங்களா அவன் எங்க அவனையும் கூப்பிடு .. அகி அங்கு வர

ரெண்டு பேரும் ஒழுங்கா நீ அவன் கதைப் புடி அவன் உன் காத புடிச்சி உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட னு 100 தடவை தோப்பு காரணம் போடுங்கடா

அதை தூரத்திலிருந்து கவனித்துக் இனியனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை வாய்விட்டு சிரித்தான் .. அண்ணா தயவு செஞ்சு உன் பொண்டாட்டிகிட்ட இருந்து எங்களை காப்பாத்துங்க
சின்ன தப்புக்கு எவ்வளவு பெரிய தண்டனை கொடுக்குறாங்கனு பாருங்க

யார் தப்பு பண்ணாலும் இந்த தண்டனை தான் டா அது உங்கஅண்ணனாக இருந்தாலும் சரி

ஏன் அண்ணி ஒரு சின்ன வீடியோ அதுக்கு டென்ஷன் ஆகுறீங்க என்று அகி கேட்க …

அதனால நான் அவன்கிட்ட மாட்டிப்பேன்டா என்று சொல்லிவிட்டால் இசை … இதை மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை ஆனால் கவனிக்கவேண்டியவன் கவனித்துவிட்டான்

சரி சரி போதும் வாங்க எல்லாரும் உள்ள போய் கார்ட்ஸ் விளையாடலாம்

கவி ,அகி , மகி , தமிழ், இசை ஐவரும் சேர்ந்து சீட்டுக்கட்டில் ரம்மி விளையாட ஆரம்பித்தனர் இசை தமிழுக்கு ஜோக்கர் கார்டு என்ன என்பதை கண்களாலே சொல்ல

இதை தூரத்தில் இருந்து கவனித்த கவனித்த இனியனுக்கு …. தமிழ் மேல் ஒரு சிறிய பொறாமை கூட எழுந்தது
அவர்கள்இருவரின் பாசத்தை கண்டு நெகிழ்ந்தான்

முதல் ஆட்டம் இசை வெற்றி பெற அடுத்த ஆட்டமும் இசையே வெற்றிபெற.. மகி தன் அண்ணனை துணைக்கு அழைத்தான்

இனியன் நம் இசைக்கு அருகில் அமர்ந்து விளையாடத் தொடங்கினான்

இசை 13 காடுகளை ஒன்றொன்றாக அனைவருக்கும் போட்டாள்.. முதல் சுற்றிலேயே அவளுக்கு 3 கார்டு ஒரிஜினல் ரம்மி சேர்ந்துவிட.. அதை அனைவரிடம் காட்டி சீட்டு கட்டுக்கு கீழே இருந்த ஜோக்கர்ரை யாருக்கும் தெரியாமல் பார்த்தாள்.. அதில் கிங் ஜோக்கர் இருக்க அவள் கண்களிலே செய்கை செய்தால் தமிழுக்கு ..

அவளும் தமிழும் ஏற்கனவே இதைப்பற்றி பேசி வைத்திருந்தனர்..
அதாவது கிங் ஜோக்கர் என்றால் அப்போது இசை இனியனை பார்ப்பாள் குயின் என்றால் தன்னை தானே பார்ப்பாள்.. ஜாக் என்றால் கவியை பார்ப்பாள் அஸ் அகியை பார்ப்பாள். மகியை பார்த்தால் அது நம்பர்களுக்கான அறிகுறிகள்… அவள் மகியை பார்த்து இடது கண்ணை அடித்தாள் ஒன்று இரண்டு மூன்று என்று எண்ண வேண்டும் வலது கண்ணை அடித்தால் ஆறு ஏழு எட்டு என்று எண்ண வேண்டும்…. அதுபோல அவள் கண்ணை ஒருமுறை சுழற்றினால் டைமண்ட் என்று அர்த்தம் இரண்டு முறை சுற்றினால் ஹார்ட்டின் என்று அர்த்தம் மூன்று முறை சுற்றினால் ஸ்ப்பேடு என்று அர்த்தம் நான்கு முறை சுற்றினால் ஃப்ளவர் என்று அர்த்தம்

அடியே பயமா இருக்குடி கொஞ்சம் கண்ணை சுத்தமாக இரு…. என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் இனியன் சொல்ல

டேய் தமிழ் உங்க அண்ணனை என்ன பாக்க வேணாம்னு சொல்லு… சும்மா எப்ப பாத்தாலும் மீசையை முறுக்கிட்டு என்ன முறைக்குறதே உங்க அண்ணனுக்கு வேலையா போச்சு சொல்லிவை..
நீங்க என் அம்முவ மொறைக்குறிங்க

(அடியே என்ன நா பாக்குறது முறைக்கிற மாதிரியா இருக்கு நான் ரொமான்டிக் லுக் விடுறேன் டி ….இது ரெண்டுத்துக்கும் வித்தியாசம் தெரியாதவளா இருக்கியே டி…. இவன் வேற ஆனா ஊன சண்டைக்கு வந்துடுறான் )

டேய் எல்லா ஆட்டமும் அவளே ஜெய்க்குறா அதான் சீட்டிங் ஏதாவது பண்ணுறாலானு பார்த்தேன்…

போன ஆட்டம் உங்க அண்ணன் தாண்டா சீட்டிங் பண்ண ட்ரை பண்ணினாரு.. [ எப்படி கரெக்ட் ஆஹ் சொல்லுறா ] அவர் கிட்ட கேளுங்க

மகி அண்ணி எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க

அதெல்லாம் எல்லார் கண்ண பாத்தாலே நான் எல்லாத்தையும் சொல்லிடுவேன்

அப்படியா அப்ப நான் இப்ப என்ன நினைக்குறேனு சொல்லுங்க பாப்போம்
என்றும் மகி சொல்லும்போது அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்… ஏண்டா உனக்கு பைக் தவிர வேற எதுவுமே தெரியாதா… இப்ப என்ன கேடிஎம் டியூக் ஓட பிரேக்க உன் வண்டில்ல செட் பண்ணனும் அவ்ளோதான் செட் பண்ணிட்டா போச்சு

வாவ் சூப்பர் எப்படி நான் மனசுல நினைச்சதை கரெக்டா கண்டுபிடிச்சீங்க

சரி இவன் என்ன நினைக்கிறான் சொல்லுங்க என்ற அகி கைகாட்டி சொல்ல

அகி அப்போது கிச்சனுக்குள் சென்று கொண்டிருந்த மலரை சைட் அடித்துக் கொண்டே இருந்தான் இவர்கள் பேசும் எதுவும் அவன் காதில் விழவில்லை

என்ன ஆகி சொல்லட்டுமா

என்னன்னு சொல்ல போறீங்க என்று ஒன்றும் புரியாதது போல் கேட்க

நீ இப்ப என்ன மனசுல நெனச்ச சொல்லட்டுமா

ஐயையோ என்று அவன் பதர

மலரே மௌனமா ……….என்று அவள் ராகமாக இழுத்துப் பாட இந்தப் பாட்டு தான நெனச்ச அகி என்று கண்ணடித்து கேட்டால் இசை

ஆமாம் அண்ணி என்று அசடு வழிந்தான்

உங்க அண்ணிய நான் மனசுல என்ன நினைக்கிறேன் கரெக்டா கண்டு பிடிச்சு சொல்ல சொல்லுங்கடா பாப்போம்

மாட்டுன டி இன்னைக்கு
குல்பி மாமாவுக்கு ஒரே ஒரு உம்மா தா என்று அவன் மனதில் நினைக்க

இசை அவள் வாயைப் பொத்திக் கொண்டாள்… இனியன் அவளை ரசித்துக்கொண்டே நான் தரட்டுமா என்று மீண்டும் கேட்க இசை மறுப்பாக தலையசைத்துவிட்டு கிச்சனுக்குள் சென்றாள்

அவள் அங்கு சென்று ஆழ்ந்த பெருமூச்சு இழுத்துவிட்டு தன்னை தானே சமாதனம் செய்து கொண்டால் அப்போது திடீரென்று இனியன் அவள் கண்ணை பொத்த

இசைக்கு பயத்தில் கை எல்லாம் நடுங்க ஆரம்பித்தது உடல் வேர்க்க வலிக்க ஒன்றும் புரியாமல் இனியனின் அறையை நோக்கி ஓடினாள்

அங்க அவளது பையிலிருந்த இன்ஜெக்ஷன்நை எடுத்து தன் கைகளில் போட்டுக்கொண்டாள்..

தன்னைப் பின் தொடர்ந்து வந்த இனியனை அவள் கவனிக்கவில்லை …அந்த நேரம் அவளுக்கு அந்த மருந்து முக்கியமாக தேவைப்பட்டது.. அவள் பிரைன்ஐ பிரீஸ்சாக விடாமல் காக்கும் மருந்து ….அவளையே பார்த்துக்கொண்டு இருந்த இனியனுக்கு ஒன்றும் புரியவில்லை

ஏன் இவள் இப்படி நடந்து கொள்கிறாள் பாம்புக்கு பயப்படாதவள் நான் கண் பொத்திய தற்கு எதற்காக பயப்பட வேண்டும்….. என்ன இன்ஜக்ஷன் இது அப்போதுதான் அவனுக்கு கோயிலில் நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது அன்று கூட அவள் கோவில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் கைப்பையிலிருந்து இதைதான் மறைத்துக் கொண்டு போனாள் ….ஏன் அப்படி என்னதான் இருக்கு அந்த இன்ஜெக்ஷனில்

அவளிடம் கேட்க போனால் அவள் எந்த பதிலும் சொல்லாமல் ஏதோ ஒன்றை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்

சிறிது நேரம் ஓய்வு எடுக்கட்டும் என்று நினைத்து அந்த அறையை விட்டு வெளியே வந்தான் இனியன்

கவி மகி அனைவரும் விளையாடிக்கொண்டிருக்க.. கமலம் அனைவருக்கும் பணியாரம் சுட்டுத் தந்து கொண்டிருந்தார் …

அப்போது அங்கு வந்த மரகதம்

இனியா இங்க பாரு நீதான் எனக்கு ஒரு வழி சொல்லணும் … நான் என் அண்ணனுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை மீறமுடியாது இல்ல… என் பொண்ணு இந்த வீட்டு மருமகளா வரணும் என் அண்ணனோட ஆசை அதனால கவிய கயலுக்கு கட்டி வச்சிடலாம்னு மரகதம் சொல்ல.. இனியன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்

அப்போது சோர்ந்து போய் வெளியே வந்த இசையை அவன் பார்க்க.. அவனின் பார்வையை கண்டு கோபமுற்ற மரகதம் ஏன்டா அவ கிட்ட கேட்டு தான் நீங்க எல்லாரும் முடிவு எடுப்பீர்களா நேத்து வந்தவ உங்களுக்கு அவ்வளவு முக்கியமா போயிட்டாள அப்படி என்ன சொக்கு பொடி மந்திரம் போட்டு என் அண்ணன் பசங்கள மயக்கி வச்சிருக்கானு தெரியல..

அத்தை அவ என் பொண்டாட்டி என் தம்பிகளை ஒரு அம்மா மாதிரி பாத்துக்குறா… அவளை கேட்காம என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது கவி நீ என்ன சொல்ற உனக்கு ஏன் சம்மதம் மட்டும் முக்கியமா இல்ல உன் அண்ணியோட சம்மதம் முக்கியமா.

எனக்கு அண்ணியோட சம்மதமும் முக்கியம் தாண் என்று கவி சொல்ல … இனியனுக்கும் இந்தத் திருமணத்தில் ஈடுபாடில்லை தான் இருந்தாலும் கவி காக இதற்கு ஒத்துக்கொண்டான் ஏனென்றால் அவனுக்கு முன்பே தெரியும் கவி கயலை விரும்புவது

அவளும் சம்மதம் என்று தலையாட்ட தேதியை குறிப்பதற்காக காலண்டரை பார்த்தான் செப்டம்பர் 11 தேதி மட்டும் ஹிண்டு மார்க் போட்டு இருக்க அதிலிருந்து ரிவர்ஸ் ஆக இந்த தேதி வரையும் நம்பர் போட்டு இருந்தது ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனான் இனியன் …. யார் இதை குறித்தது …..

செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை நிச்சயதார்த்த தேதி குறிக்கப்பட்டது …..

அதன்பிறகு இனியேனும் கவியும் வேலைக்கு செல்லும்போது வண்டியை குறுக்கே நிறுத்திய தேவாவை பார்த்து முறைத்தான் இனியம்

டேய் இனியா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்

இங்கே பாரு உனக்கும் எனக்கும் நடுவுல எதுவும் கிடையாது ஏழு வருஷத்துக்கு முன்னாடி எல்லாம் முடிஞ்சிடுச்சி என்கிட்ட பேசாதனு சொல்லிருக்கேன்ல ஒழுங்கா உன் சோலிய பார்த்துப் போ

டேய் நான் சொல்றத கேளுடா மாப்பிள நம்ப இசைய என்று தேவா சொல்ல வருவதற்குள் அந்த இடத்தை விட்டு சென்றான் இனியன் ஒரு வேளை தேவா சொல்வதை கேட்டுஇருந்தால் இசைக்கு வரப்போகும் பெரிய ஆபத்தில் இருந்து அவளை காப்பாத்தியிருக்கலாம் ….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here