ஆமாம் சிவா கணித்தது போலவே இந்த விபத்தில் பின்னணியில் ருத்ரா இருக்க அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தான்… இதனிடையில் அவனுடைய அலைபேசி அடிக்க தொடுதிரையில் வந்த பேரை பாத்தவுடன் கடும் கோபத்தினூடே அழைப்பை ஏற்க…
எதிர்முனையில் ருத்ரா,”என்ன சிவா உன் ஓர்க்கர்க்கு ஒண்ணுன உடனே துடிச்சு போயிட்டாயா இப்போ தெரிஞ்சுருக்குமே எங்களை பகச்சிக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு” நக்கலாக சொல்ல
சிவா,”ஆமா உன்ன மாதிரி பரம்பரை சொத்துல பணக்காரியா வாழற யாருக்கும் உழைப்பாளிங்களோட அருமை தெரியாது”னு பதிலுறைத்தான்
ருத்ரா,”ஹே உனக்கெல்லாம் பட்டும் புத்தி வரலல என்ன ஒரு திமிரு”னு மேலும் சீண்ட
சிவா,”ஆமா தன் உழைப்புல முன்னேறுன எல்லாருக்கும் இருக்குற தன்னம்பிக்கை திமிருனா எனக்கு திமிரு தான்…. “
சிவா ருத்ராவிடம் நீ எப்படி வேணாம் என் கூட மோதி இருக்கலாம், ஆனா நீ தப்பான வழியை தேர்ந்தெடுத்துட்ட… நீ பின்விளைவை யோசிக்காம பண்ண விஷயத்தோட விளைவை கூடிய சீக்கிரம் பாப்ப” என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்…
மறுமுனையில் ருத்ரா ஒரு நிமிடம் ஸ்தம்பித்துதான் போனாள்..
அவளிடம் பேசிவிட்டு கோபமாக வந்த சிவா ஆதவிடம் நான் சொன்னதெல்லாம் ரெடியானு கேக்க..
ஆதவ்,”ரெடிடா, நீ ஒரு தடவை எல்லாத்தையும் பாத்துட்டினா நம்ம ஸ்டார்ட் பண்ணிறலாம்”
சிவா சரி நம்ம ஆபிஸ் போயி மத்தத பாத்துக்கலாம்னு சொல்லிட்டு ஆதவ்வை அழைத்துக்கொண்டு ஆபிஸிற்கு சென்று விட்டான்.
ஆபீஸிற்கு வந்து தங்களது மீட்டிங் அறைக்குள் நுழைந்தவன்… தனது மடிக்கணினியில் ஆதவ் அனுப்பிருந்த தகவல்களை பார்த்து கொண்டிருந்தான்..
ஆதவ்வும் சற்று நேரத்தில் உள்ளே நுழைய அவனிடம் எல்லாமே கரெக்ட்டா இருக்குடா… நம்ம வேலையை சீக்கிரம் தொடங்கிறலாம்..
ஆதவ்,”சரிடா…அவங்க இந்த அளவுக்கு கீழ்த்தரமா யோசிப்பங்கன்னு நினைக்கலடா..”
நம்ம சைட்ல ஆக்சிடெண்ட் நடக்க வச்சு இங்க ஓர்க்கர்க்கு பாதுகாப்பில்லனு
சொல்லி ஸ்டே ஆர்டர் வாங்கி நம்மலாள கரெக்ட் டைம்க்கு முடிக்க முடியாம போகணும்னு தான்டா இவ்ளோ பண்ணிருக்கா…
இதை ஒரு சென்சேஷனல் நியூசா மாத்தணும்னு நினைச்சிருக்கா…” என்று ஆதவ் சிவாட்ட சொல்ல
சிவா,”ஆமடா எனக்கும் அதே சந்தேகம் தான் ஆனா அவ போட்ட பிளான்க்கு வெறும் அடியோட முடிஞ்சுருக்காதேடா..” என்று தன் சந்தேகத்தை கேட்டான்….
ஆதவ்,” ஆமாடா அந்த மாடசாமி அண்ணா நம்ம கிட்ட ரொம்ப நாளா வேலை பாக்கறாருடா.. அதனால நான் என்ஜினீயர் கிட்ட போயி என்ன நடந்ததுன்னு விவரமா கேட்டேன்டா ….
என்ஜினீயர் தான் சொன்னான்.. அவர் தவறி விழும் போது எதையோ புடிச்சுட்டு இருந்து அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பேலன்ஸ் பண்ண முடியாம விழுந்துருக்காரு… அவர் மட்டும் அந்த மாதிரி பண்ணாம ஸ்ட்ரயிட்டா விழுந்திருந்தார்னா அவர் உயிரே போயிருக்கும்டா”னு சொன்னான்
நடந்ததை ஓரளவுக்கு ஊகித்த சிவா,”அவர் எப்படா கண்ணை முழிப்பாரு,அவரை பாத்து பேசுனா கொஞ்சம் தெளிவாகும்”னு சொன்னான். அதை ஆமோதித்த ஆதவ்வும் நாளைக்கு கண் முழிச்சுருவாறுனு டாக்டர் சொன்னார் என்று பதில் மொழிந்தான்.
காலை தொடங்கியதிலிருந்தே பிரச்சனையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தவனுக்கு மணி 11 ஆனதே தெரியவில்லை பசி உணர்வு அவனை தூண்டிய போது தான் மணியை பாத்தான், வீட்ல யாரு கிட்டயும் சொல்லாமல் வந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது…
இருந்தும் அவசரமாக கிளம்பும் போது அப்பா பாத்துகிட்டு தான் இருந்தாரு அதனால அவரே அம்மாவை சமாளிச்சுறுப்பாரு…
சரி இருந்தாலும் இப்போ போகலனா அம்மாவை சமாளிக்க முடியாது என்று எண்ணியவன் இந்த அவசரத்துல கொஞ்சம் பைலையும் வீட்லயே விட்டு வந்தது நினைவு வர வீட்டிற்கு விரைந்தான்…
வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவன் முதலில் எதிர்கொண்டது அம்மாவை தான்..
லட்சுமி அம்மா,”என்னப்பா அவசரம் சாப்பிடாம கூட கெளம்பிட்ட.. நீ இவ்ளோ கஷ்டபட்டு ஒரு வாய் கூட நிம்மதியா சாப்பிட முடியலனா எப்படினு குறைபட”
சிவா அப்பா,”லச்சு அவன் அவசரம்னு என் கிட்ட சொல்லிட்டு தான் போனான்னு சொன்னேன்ல…
அவன் பசியோட இருக்கான் பாரு சாப்பாடு எடுத்து வை..”னு சொல்ல
மகன் பசியுடன் இருக்கும் ஒரு வார்த்தை அன்னைக்கு போதாதா…
பேசியதை நிறுத்தி விட்டு, மகனை அழைத்து சென்று அவனை சாப்பிட வைத்த பின்பு தான் அவருக்கு நிம்மதியே வந்தது…
சிவா சாப்பிட்டுகிட்டு இருக்க அவன் தலையை வாஞ்சையுடன் தடவியர்,என்ன அவசரமா இருந்தாலும் சாப்பிட்டுட்டு போப்பா என்றார்…
என்ன இருந்தாலும் அன்னை ஆயிற்றே அவரின் கவலை உணர்ந்தவன் சரிமா என்று சாப்பிட்டு விட்டு எழுந்தவன் தந்தையை நோக்கி சென்றான்.
அவரும் அவன் வருகைக்காக தான் காத்திருந்தார்.. அவனை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தவர்… சொல்லுப்பா என்ன ஆச்சு என்றார்…
சிவா தன் தந்தையிடம் நடந்ததை விவரித்தவன், அடுத்து அவன் செய்ய போகும் செயல்களையும் விளக்கி அவருடைய சில அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டான்…
சிவா,” அப்பா நம்ம டெக்ஸ்டைல்ல புதுசா கொஞ்சம் டிசைன் பண்ணலாம்னு இருக்கன்”பா…
அப்பா,”டெக்ஸ்டைல் நல்லா தானே போயிக்கிட்டு இருக்கு சுமாரான லாபம் வந்துகிட்டு தானே இருக்கு”
சிவா,”கன்ஸ்ட்ரக்சன்க்கு நம்ம குடுக்கற முக்கியத்துவம் இதுக்கு குடுக்க முடியரதில்லை பா…அதான் இதையும் டெவலப் பண்ணலாம்னு இருக்கேன்னு”சொல்ல
அப்பா,”சரிப்பா பாத்து பண்ணுனு”சொன்னார்
இருவரும் பேசிவிட்டு ஒரு சேர உள்ளே வர அண்ணா என குரல் கேக்க திரும்ப அங்கே ஜானு நின்னுட்டு இருந்தாள்..
ஜானு அருகில் வந்தவன்,”என்னடா இன்னிக்கு காலேஜ் போகலையா”
ஜானு,”இல்லனா இன்னிக்கி இன்டர் காலேஜ்க்கான ஸ்போர்ட்ஸ் ஈவேன்ட் தான் நடக்குது நான் கல்ச்சுரல்ல தான் கலந்துக்க போறேன்…அதனால இன்னிக்கு போகல”
சிவா,”சரிடா எப்போ கல்ச்சுரல் ஈவேன்ட்”
ஜானு,”நாளைக்குனா நீ கண்டிப்பா வர”னு அழுத்தமா சொல்ல….
அப்போது தான் அவனுக்கு புரிந்தது இந்த கொஞ்ச நாள் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாதனால அவ ஏக்கமா இருக்கானு…..
அவனும், அவனுடைய செல்ல தங்கைக்காக சரியென்றான்.
அங்கோ ஆரா அவளுடைய நட்பு வட்டத்துடன் டேன்ஸ் ப்ராக்டிஸ் முடிச்சு கேன்டீன்க்கு வந்தார்கள்
ஆரா,”எப்படா நாளைக்கு நம்ம போகணும்னு அஜயை பாத்து கேட்டாள்”
அஜய்,”நாளைக்கு 4 மணிக்கு பங்சன் ஸ்டார்ட் ஆகுது… நம்ம ஒரு 2 மணிக்கு அங்க போயிட்டா சரியா இருக்கும்னு” சொன்னான்….
ஆரா,”சரிடா.. எல்லாரும் நல்லா ப்ராக்டிஸ் பண்ணிட்டிங்கள்ள நம்ம ஏதாவது ஒரு ப்ரைஸ்
ஆவது கண்டிப்பா வாங்கனும்னு” சீரியஸா பேச
அஸ்வத்,”என்னமா என்ன திடிர்னு போலீஸ் மாதிரி சீரியஸா பேசரனு கலாய்க்க”கடுப்பானவள் அவன் முதுகிலே மொத்தினாள்…
அவளுக்கு துணையாக அக்ஸாவும் வர… டேய் மச்சான் காப்பாத்துடானு அஸ்வத் கத்த அஜய் அவனுக்கு துணைக்கு வர கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு தெரு சண்டையே நடந்து முடிந்தது…..
ஆராவோ அங்கு சந்தோசமாக சிரித்து விளையாடி கொண்டிருக்க…. அங்கு கண்ணனோ நாளைக்கு அவளை பழிவாங்க சதி திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்…. என்ன இருந்தாலும் அவனுக்குள்ளும் அரசியல் சாக்கடையின் ரத்தம் ஒடுகிறதல்லவா… அவனுடைய அப்பா அரசியலில் ஒரு முக்கிய புள்ளி தான்…
ஆரா வீட்டிற்கு வந்து அப்பா அம்மாவிடம் நாளைக்கு நடக்கும் பங்சனை பத்தி சொல்லிவிட்டு டின்னர் முடிச்சுட்டு ரூம்க்கு வந்து படுத்தாள்…..
ஆரா தனிமையில் இருக்கும் போது பெரும்பாலும் சிவாவின் நினைவுகளே அவளை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன இந்த சில நாட்களாக…. அவனைப்பற்றியே நினைவிலேயே உறங்கி போனாள்…
மறுநாள்,இனியன் ஆதவ்வை அழைக்க சிவாவும் இதை பற்றி முன்பே சொல்லியிருந்ததால் அவனும் ரெடி ஆகி வர….
நால்வரும் பங்சன் நடக்கும் இடத்திற்கு வந்திருந்தனர்…
ஜானுவும் இனியனும் நேம் ரெஜிஸ்டர் பண்ணிட்டு வரோம்னு போய்ட்டாங்க..
ஆதவ்வும் சிவாவும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்…
சிவா சுத்தி முத்தி பாக்க அப்போது தான் அவனுக்கு அந்த தேவதையின் தரிசனம் கிட்டியது… ஆமாம் ஆரா அவளது காலேஜ்க்கான போர்ட் வைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தாள்….
அதைப்பார்த்தவன் ஓஓ மேடம் டாக்டருக்கு படிக்கறாங்க போலயே என்று நினைத்து கொண்டே அவளை பாத்துக்கொண்டிருந்தான்….
ஆரா வாசலை நோக்கி பாத்துக்கொண்டிருந்தாள் அவளது நட்புக்களுக்காக… அவளை தவிர வேற யாரும் அங்க இன்னும் வரல…
வாசலை பாத்து கொண்டிருந்தவள் சட்டென்று திரும்ப சிவா தான் அவள் கண்ணில் முதலில் தெரிந்தான்…
கனவில் வரும் கள்வன் இன்று நேரில் வந்திருக்கவும், ஆதவ்வும் உடனிருப்பதை கண்டு கொண்டு.. அவர்களை நோக்கி சென்றாள்…
சிவாவை பாத்துக்கொண்டே ஆதவிடம் வந்தவள் ஆதவிடம்,”ஹாய் அண்ணா எப்படி இருக்கிங்கன்னு”கேக்க…
ஆதவ்,”நல்லா இருக்கேன் மா, நீ எப்படி இருக்க”..
ஆரா,”சூப்பரா இருக்கேன்னு சிவாவை ஓரக்கண்ணால் பாத்தபடியே கூற…
ஆதவ்வும் ஆரா அங்கிருந்து வரும்போது இருந்து இப்போ வரை சிவாவை பாத்துக்கொண்டிருப்பதை அவனும் கவனித்திருந்தான்.
ஆதவ்,”அப்பறம் என்னமா இந்த பக்கம்னு”கேக்க
ஆரா,”ஹலோ அதை நான் கேக்கணும்… இது காலேஜ் பங்சன் சோ நான் இருக்கலாம்.. இங்க பிசினஸ் மேன்க்கு ஏதாவது கம்பேட்டிஷன் நடக்குதா என்ன நீங்க எல்லாம் வந்துருக்கிங்களேன்னு அவள் சேட்டையை ஆரம்பிக்க…
சிவா குனிந்து மொபைலை நோண்டியவாறே எல்லாத்தயும் கேட்டுகிட்டு சிரித்து கொண்டிருந்தான் அவளை கவனிக்காதது போலவே…
சிவாவின் மனம் அவனை அறியாமலேயே அவள் புறம் சாய தொடங்கியது…….