Kadhal karuvarai 4

0
642

Hi all konjam work adhan late came with next epi padichitu sollunga

கரு :4

அன்று இரவு இருவரும் தோட்டத்தில் இருந்த சிமெண்ட் பென்ச்சில் மௌனமாக அமர்ந்திருந்தனர் பலமுறை கேட்ட அதே கேள்வியை தாருண்யாவை பார்த்து மறுபடியும் குணா கேட்க ஆரம்பித்தாள்

“ என்னக்கா இப்படி நான் கேக்கற எந்த கேள்விக்கும் பதிலே சொல்லாம சும்மா இருந்தா எப்படி? அவ கையில் குழந்தையோட இருந்தப்ப அங்கேயே அவள பிடிச்சு விசாரிக்கலாம்னு நான் சொன்னதை நீங்க கேட்கவே இல்லை, அவ கிளம்பினதுக்கப்புறம் அங்க இருந்த ஆசிரம தலைவி கிட்ட பேசலாம்னா அவங்கள பார்த்து பேசவே நேரம் ஆச்சு அவங்களும் அந்தக் குழந்தையை ஒரு அம்மா குப்பைல கெடந்ததுன்னு இங்க கொண்டு வந்து சேர்த்ததாகவும் அதுக்கப்புறம் அவங்க இங்க வரவே இல்லன்னு சொன்னாங்க, இவளும் இந்த குழந்தை இங்க வந்து ஒரு பத்து நாள் கழிச்சு சும்மா டொனேஷன் கொடுக்க வந்தப்போ இந்தக் குழந்தையைப் பார்த்துவிட்டு இரக்கப்பட்டு அடிக்கடி இங்கு வந்து இத தூக்கி வைத்திருப்பாள் என்று சொல்றாங்க”

“ குணா இதையே எத்தனை தடவை கேட்ப எனக்கும் ஒண்ணும் புரியலை, ஒருவேளை குழந்தையை கொடுத்த அந்த அம்மா யாருன்னு ஏதாவது தெரிஞ்சா பரவால்ல,பார்ப்போம் ஏதாவது வழி இருக்கும் ஆனா நீ தயவு செஞ்சு இதை பெரியம்மகிட்ட சொல்லாத “

“ஆமா, அடிச்சி கூட கேப்பாங்க சொல்லிராதிங்கன்னு காமெடி வருமே அந்த மாதிரி தான் ஒண்ணுமே தெரியாம இத போய் என்னன்னு அவங்ககிட்ட சொல்றது, ஆனா என்னவோ ஒரு குழந்தைய அவ கைல வெச்சிட்டு இருந்ததுக்காக நம்ப ரொம்ப யோசிக்கறோமோன்னு எனக்கு தோணுது”

“இல்ல கண்டிப்பா ஏதோ இருக்கு குணா, அவ அந்த குழந்தையை சாதாரணமா இரக்கப்பட்டு பார்க்க வர மாதிரி எனக்கு தெரில இதுல வேற என்னமோ இருக்கு, சரி பார்க்கலாம் இதுக்கு வேற வழி பார்ப்போம் வா கிளம்புவோம்”

என்றபடி குணா கிளம்பியதும், தன் ரூமை நோக்கி நடக்க அரம்பித்தவளின் மனம் முழுவதும் சந்தோஷி தான நிறைந்திருந்தாள், நிறைந்தவள் எதிரில் வரவும் செய்தாள்.

முதல் நாள் தப்பாக தெரிந்தவள் இப்பொழுது ஏதோவொரு சூழ்நிலை கைப்பாவையாக தெரிந்தாள், அவளை தப்பாக பார்த்தபொழுது கவனிக்காத விஷயங்களை இப்பொழுது கவனித்தாள், முதலில் அவள் முகபாவங்கள், அவள் உள்ளே நுழைந்து வலது கை பக்கம் உள்ள நடை பாதையில் நேராக நடக்கும் பொழுது எதிரில் வருபவர்கள் திரும்பி வருவதை காண முடியும் அப்படித்தான் சந்தோஷியை தாருண்யா கண்டாள், முகத்தில் எந்த வெறுப்போ கோபமோ இல்லாமல் நிர்மலமாக இருந்தது, ஆனால் அவளை பார்த்ததும் வெறுப்பை பூசிக்கொண்டது நன்றாகவே தெரிந்தது.

அவளை கடக்கும் பொழுது தாருண்யாவை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று பேச ஆரமித்தாள் ”என்னடி, பெரியம்மா சப்போர்ட் பண்ணதும் நீ நிம்மதியா இருக்கலாம்னு நெனச்சியோ?, நான் இங்கே இருக்கற வரைக்கும் அது நடக்காது , ஊர்ல இருந்து மாமா வரட்டும் உன்ன நாய் அடிக்கரா மாதிரி அடிக்க சொல்றேன்”

நாமளே இவ மேல இரக்கப்படனும்னு நெனச்சா கூட விடமாட்டா போல “எப்படி நான் உன்னை அடிச்சேனே அந்த மாதிரியா?”

முகம் முழுவதும் தெறித்து விடும் போல முறைத்தவள் “ஏய் என்னடி திமிரா, வேலை செய்ய வந்த நா…” என்று ஆரமித்தவள் அவள் கை பாதி உயர்ந்தது போல் இருப்பதை பார்த்தவள் அன்றைக்கு நடந்தது நினைவில் வர சட்டென்று நிறுத்திவிட்டு “என் மாமா இங்க வர்ற நாள் தான் உனக்கு இங்க கடைசி நாள், ஞாபகம் வெச்சிக்கோ” என்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள்
யார் வந்தாலும் சரி நிச்சயம் உன்னை மாத்தாமல் இங்க இருந்து போகவே மாட்டேன் என்று நினைத்து கொண்டு நகர்ந்துவிட்டாள்,

நினைப்பதை தெய்வம் அப்படியே நடத்துமா என்ன யார் தடுத்தாலும் தான் இங்கிருந்து போயே ஆகவேண்டும் என்ற நினைப்பு சிறிது நாளில் வரப்போவதை அறியாமல் இருந்தவளை, விதி பார்த்து சிரித்தது.

மறுநாள் தீவிரமாக சில வேலைகள் செய்தவள் எங்கேயோ நடுவில் சென்று விட்டு வந்தாள், இரண்டு நாள் கழிந்த பிறகு மூன்றாம் நாள் காலை தன் ரூமிற்குள் நடந்து கொண்டிருந்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு “வா, குணா” என்றாள்

“என்ன அக்கா, ரெண்டு நாளா ஆளே காணும் என்னை சேர்த்துக்காம என்னமோ பண்ணிட்டு இருந்தீங்க, இப்ப எதுக்கு வர சொன்னிங்க திரும்பி அந்த ஆசிரமம் போறோமா” என்று கேட்டவளின் கோபத்தை ரசித்து கொண்டே

“இல்ல இங்க பக்கத்துல ஒரு இடத்துக்கு போறோம் வா” என்று கூப்பிட்டு கொண்டு வழக்கம் போல வாடகை காரை வரவழைத்து ஒரு முகவரி சொல்லி அமர்ந்தனர்.

“என்னக்கா, ஒரே சஸ்பென்ஸா இருக்கு என்னனு சொல்லுங்க” என்று நச்சரித்தவளிடம் “எனக்கும் சரியா தெரில ஆனா போற இடத்துல விவரம் கிடைக்கும்னு நெனைக்கறேன் நீ அது வரைக்கும் வாய் மூடிட்டு வா”

கார் ஒரு குறுகலான சந்தில் நின்றது ”இதுக்கு மேல நடந்து தான் மா போகணும்”என்றவரிடம் நன்றி சொல்லி பணத்தை கொடுத்தவள் அந்த சந்தில் சிறிது தூரம் நடந்தாள் அங்கு ஒன்றாக கட்டப்பட்டிருந்த பல குடியிருப்புகள் இருந்த இடத்தில் விசாரித்து ஒரு குடியிருப்பில் நின்றவள் கதவை தட்டினாள்

“கோன் ஹே” என்று ஒரு பெண் குரல் ஹிந்தியில் கேட்க சிறிது யோசித்தவள் “சந்தோஷி கா பெஹன்” என்றதும் கதவு உடனே திறக்க அங்கு ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் இருந்தாள்

“உங்களுக்கு தமிழ் தெரியும்னு எனக்கு தெரியும் உள்ள போய் பேசலாம் வாங்க”

என்று குணாவையும் அழைத்து கொண்டு உள்ளே சென்று அமர்ந்தவள் அதிர்ச்சியில் உறைந்திருந்த அந்த பெண்ணிடம்
“குழந்தையை ஆசிரமத்தில் சேர்த்தது நீங்கதான்னு எனக்கு தெரியும் மிச்ச விவரம் நீங்க தான் சொல்லணும்” என்று இன்னொரு குண்டை தூக்கி போட்டாள்

“குழந்தையா என்ன குழந்தைங்க எனக்கு ஒண்ணும் தெரியாது” என்றவரிடம் தன் பேக்கில் இருந்து ஒரு கவரை கொடுத்து உங்களை பத்தி மொத்த டீடெயில்ஸ் இதோ இருக்கு நீங்க சந்தோஷி வீட்டுல வேலை செஞ்சவங்கன்னு எனக்கு தெரியும் நீங்க விவரம் சொல்லலன்னா நான் இதை எடுத்துட்டு போலீசுக்கு போயிடுவேன்” என்றாள்

“ஆ” வென்று வாயை பிளந்து கொண்டு பார்த்த குணாவிடம் “என் பிரெண்ட் கணேஷ் , டிடெக்ட்டிவா இருக்கான் இதை ஐம்பது சதவீதம் நம்பிக்கையில் எண்ணிதான் அவனிடம் சொல்லி உதவி கேட்டேன், இரண்டு நாள் தீவிர வேலை செய்தவன் ஆசிரமத்தில் இருக்கும் ஆயாவை பிடித்து விவரம் கேட்டறிந்து எனக்கு சொன்னான், இவங்க. அந்த ஆசிரமத்திலதான் வேலை செய்றாங்க, இவங்கதான் மும்பைல அவங்க வீட்டில் வேலைக்கு இருந்ததாக சொன்னதும் கண்டிப்பா ஏதோ இருக்குன்னு தான் இங்க உன்னையும் கூட்டிகிட்டு வந்தேன்”

என்றவள் அந்த பெண்ணிடம் திரும்பி “நான் உங்களை மிரட்ட வரலை சந்தோஷி வாழ்க்கைல ஏதாவது நல்ல மாற்றம் வரணும்னு ஒரு குடும்பமே காதிக்கிட்டு இருக்காங்க உங்களுக்கும் அது நடக்கணும்னு தோணிச்சுன்னா சொல்லுங்கம்மா” என்றவளிடம்

“என் உயிர் போற வரைக்கும் இதை யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு நான் பாப்பாவுக்கு சத்யம் பண்ணி கொடுத்திருந்தேன் மா ஆனா பாப்பா வாழ்க்கை நல்லா இருக்கணும்னா நான் சத்தியத்தை மட்டும் இல்ல என் உயிரையே கொடுப்பேன் என் பொண்ணு இன்னைக்கு கலியாணம் கட்டி நல்லா இருக்குனா அதுக்க்கு பாப்பாவோட குடும்பம் தான் மா காரணம் அது வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நான் கும்பிடாத சாமி இல்ல “ என்றவர் சிறிது நேரம் கழித்து ஆரமித்தார்

“அந்த குழந்தை பாப்பாவோட குழந்த மா, அது பத்து மாசம் சுமந்து பெத்தது” என்ற பேரதிர்ச்சியை இறக்கினாள்.

அதிர்ச்சியை மூளை ஏற்க சிறிது இடைவெளி விட்டார் அந்த பெண் அவர்கள் இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் ,

தாருண்யாவிற்கு இது மாதிரி ஏதோ ஓன்று இருக்கும் என்று எதிர்பார்த்த அதிர்ச்சிதான் என்றாலும் உண்மையை ஏற்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, குணாவின் நிலைமையோ மிகவும் மோசம், கண்கள் இருட்டி கொண்டு வந்தது, நிச்சயமாக அவள் எதிர்பார்க்காத விஷயம் என்று அவள் கண்ணில் வழிந்த கண்ணீர் சொன்னது.

அந்த அம்மாள் தொடர்ந்தார், “நான் அவங்க வீட்ல வேலைக்காரி மாதிரி இருந்ததே இல்ல எப்பவும் என்னயும் அவங்க வீட்டில ஒருதராதான் பார்ப்பாங்க என் பொண்ணுக்கு சந்தோஷிதான் எல்லாமே, அப்படி இருந்த குடும்பத்து மேல யார் கண்ணு பட்டுச்சோ அம்மாவும் ஐயாவும் கொஞ்ச நாளா முடங்க ஆரமிச்சாங்க, திடீர்னு ஒரு நாள் அம்மா என்கிட்ட

“உன்கிட்ட என் தங்கையா நெனச்சு ஒரு பொறுப்பு தரேன் செய்வியான்னு கேட்டாங்க இவ்ளோ நாள் சரியா பேசாம அழுதிட்டே இருந்தவங்க என்கிட்ட பேசினதே எனக்கு சந்தோசம்னு நானும் சரினேன் அப்பதான் நான் சொல்ல போறத யார்கிட்டயும் சொல்லாம ஏன் என்னனு கேக்காம செய்னு சொல்லி பாப்பா கர்பமா இருக்கரதாகவும் என்னையே முழுசா கவனிச்சிக சொன்னாங்க , அதிர்ச்சின்னாலும் அவங்க சொன்னாமாதிரி நானே பார்த்துகிட்டேன் அவங்க பாப்பா கிட்ட பேசலன்னாலும் என்கிட்ட அப்பப்ப விவரம் சொல்லி எல்லாம் செய்ய சொல்லுவாங்க”

“பிரசவத்தை நானே கூட இருந்தது அவங்க சொன்ன ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி பார்த்துகிட்டேன், அவங்க நாங்க தங்க வீடு எடுத்து கொடுத்திருந்தாங்க பாப்பாவோடயும் குழந்தையோடயும் மூணாவது நாள் அங்க போய்ட்டேன் நான்தான் மா குழந்தைய பார்த்துப்பேன் பாப்பா அதை முகம் கொடுத்து கூட பாக்காது சில சமயம் அதை தூக்கி வெச்சிக்கிட்டு அழுவும் அதுக்கப்புறம் ஐந்து நாள் கழித்து ரெண்டு பேரும் தூக்கு மாட்டிக்கிட்ட செய்தி கேட்டு இடிஞ்சி போய்ட்டேன் பாப்பாக்கும் பயங்கர அதிர்ச்சி ஆனா பாப்பா என்கிட்ட குழந்தைய எடுத்திக்கிட்டு இந்த ஊருக்கு வரசொல்லிடுச்சு அங்க இருந்து வீட்டுக்கு போய்டிச்சு நானும் அவங்கள கடைசியா பார்க்கக்கூடமுடியாம அங்க எல்லாத்தையும் கழிச்சு கொடுத்துட்டு குழந்தையோட எனக்கு தெரிஞ்சவங்க வீட்டுல இருந்தேன் அப்புறம் பாப்பா தான் என்ன இங்க சேர சொல்லிச்சு, நானும் குழந்தைய எனக்கு தெரிஞ்சவங்க மூலமா ஆசிரமத்துல சேர்த்துவிட்டு இங்கேயே இருந்திட்டேன், நானே முழுசா பார்த்துக்கறேன்னு சொன்னதுக்கு பாப்பா வேணாம்னு சொல்லிடிச்சு, எனக்கு இவ்ளோ தான் மா விவரம் தெரியும் முழு விவரமும் பாப்பாக்கு தான் தெரியும் “ என்று அழுதார்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here