
அத்தியாயம் 11
அவளது அறைக்கு உள்ளே செல்லும் வரை இல்லாத தயக்கம்… அறைக்குள் நுழைந்த பின் உண்டானது அக்னிபுத்திரனுக்கு.
‘ஒருவேளை அவ தூங்கி இருந்தா… இப்படி ராத்திரி நேரத்தில் ஒரு பெண்ணோட அறைக்கு போறது தப்பாச்சே’
‘ஆமா … இப்போ நீ உள்ள போய் அப்படியே அவ மேல பாய்ஞ்சு…’
‘பாய்ஞ்சுசுசூ…..’
‘பாய்ஞ்சு … பாய்ஞ்சு காதல் செஞ்சிடப் போறியான்னு கேட்க வந்தேன்…’
‘ஷ்ஷ் ஷ்… அப்பா… ஒரு நிமிஷம் நான் கதி கலங்கி போயிட்டேன்’
‘ஹ… அந்த விஷயத்துக்கு நீ சரிப்பட்டு வர மாட்டனு எனக்கு மட்டும் இல்ல… உன்னைப் பார்க்கிற(படிக்கிற) எல்லாருக்கும் தெரியும்’ என்று வாறிய மனசாட்சியை ஒதுக்கி தள்ளிவிட்டு அறைக்குள் நுழைந்து அவளைத் தேடினான் அக்னி.
தூங்கி இருப்பாளோ என்று அவன் எண்ணியதற்கு மாறாக டைரியில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.
“டைரி எழுதுற பழக்கம் எல்லாம் இருக்கா உனக்கு” என்று அமர்த்தலாக கேட்டபடியே அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டவனைக் கண்டு தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.
“இங்கே என்ன செய்றீங்க?”
“கல்யாண செஞ்சுக்கப் போற பொண்ணோட ரூமுக்கு ஒரு ஆண் ராத்திரியில் திருட்டுத்தனமாக எதுக்கு வருவான்?” என்று கேட்டபடியே அவளை நெருங்க… முதன்முறையாக அருந்ததியின் கண்களில் மருட்சி.
“பரவாயில்லையே… உனக்கு என்னைப் பார்த்து பயமெல்லாம் வருது… தப்பாச்சே கண்ணு… உனக்கு என்னைப் பார்த்ததும் லவ் இல்ல வரணும்… எங்கே மாமாவை ரொமாண்டிக்கா ஒரு லுக்கு விடு பார்க்கலாம்…”
‘ஞே’
“ரொமாண்டிக்கா பார்க்க சொன்னா இப்படி ஆடு திருடினவ மாதிரி பார்க்கிற… மாமாவை ஆசையா பார்க்கணும் கண்ணு” என்றவன் பேசிக்கொண்டே மேலும் நெருங்க… பயத்தில் அவள் கைகளில் இருந்த டைரியை இறுக பற்றிக் கொண்டாள் அருந்ததி.
“இந்த நேரத்தில் எதுக்கு ரூமுக்கு வந்தீங்க… எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம். இப்போ வெளியே போங்க… நா.. நான் தூங்கணும்…”
“ஹ… அதெப்படி… என்னவோ எங்க அப்பா முன்னாடி அந்தப் பேச்சுப் பேசின.. தனியா இருக்கும் பொழுது வந்தா வாய் டைப் ரைட்டர் மாதிரி தடுமாறுது…”
“அது சும்மா… வி.. விளையாட்டுக்கு…”
“நானும் விளையாடத் தான் வந்திருக்கேன்” என்றவன் அவனது முழுக்கை சட்டையை முழங்கை வரை ஏற்றி விட்டுக் கொண்டே அவளை நோக்கி முன்னேறினான்.
“நான் எங்கப்பாவை கூப்பிடுவேன்…”
“நீ தானே எங்கப்பா கிட்டே எப்பவும் விறைப்பாவே இருக்காரு அங்கிள்ன்னு சொன்ன… அதான் கொஞ்சம் ரொமாண்டிக்கா மாறலாம்னு முடிவு பண்ணிட்டேன்…”
“தெரியாம சொல்லிட்டேன்.. நான் வேணா அங்கிள்க்கு போன் செஞ்சு அதெல்லாம் சும்மா சொன்னதுன்னு சொல்லிடட்டுமா?”
“போன் செஞ்சு எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லைன்னு சொல்லாம சொல்லி மறுபடியும் என்னை மாட்டி விடப் பார்க்கறியா?” கண்களை உருட்டி அவன் கேட்ட விதத்தில் அருந்ததிக்கு நிஜமாகவே வேர்த்து வடிந்தது பயத்தில்.
“நிஜமா இல்லை”
“நம்ப மாட்டேன்…”
“இப்போ நான் என்ன தான் செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க?”
“நான் என்ன சொன்னாலும் செஞ்சிடுவியா?” என்று கேட்டவனின் பார்வை அவளை தலை முதல் கால் வரை வருட…
அருந்ததியின் உடல் சிலிர்த்தது…
‘என்ன மாதிரியான பார்வை இது… காமம் இல்லை… ஆனால் அதையும் தாண்டி கண்களால் அவன் தீண்டும் பொழுது மெய் சிலிர்க்கும் உணர்வு வருகிறதே’
முதன்முறையாக அருந்ததியை அவன் பார்த்த ஆழப் பார்வை அவளை தடுமாற செய்தது.
எதிரிகளை எல்லையில் ஓட ஓட விரட்டி அவர்களின் கண்களில் உயிர் பயத்தை பார்த்தவனுக்கு இன்று இவள் கண்களில் தெரிந்த மிரட்சி சுவாரசியத்தை அளித்தது.
அவன் அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து முன்னால் வைக்க… அவள் நடுங்கும் கால்களை சமாளிக்கும் வகை தெரியாமல் பின்னால் நகர்ந்தாள்.
‘இது சரிப்பட்டு வராது’ என்று முடிவு செய்தவள்… ஓட முடிவெடுக்க… கண் இமைக்கும் நேரத்தில் அவளை தடுத்து நிறுத்தி தன்னுடைய கை வளைவுக்குள் கொண்டு வந்திருந்தான் அக்னி.
அக்னியின் சூடான மூச்சுக்காற்று அவளது முகத்தில் பட… என்ன செய்வது என்றே புரியாமல் பேதையவள் படபடப்புடன் கண்களை மூடிக் கொண்டாள்.
“இவ்வளவு தானா உன் தைரியம்?” என்று அக்னி சீண்ட… ரோசத்துடன் கண்களை திறந்து பார்த்தவள் மயங்கித் தான் போனாள்.
முதன்முறையாக அத்தனை நெருக்கத்தில் அவனைப் பார்க்கிறாள். இதுநாள் வரையிலும் பெற்றவரின் விருப்பதிற்க்காகவும், தாத்தாவின் ஆசைக்காகவும் மட்டுமே அவனை மணக்க எண்ணி இருந்தவள் முதன் முறையாக அவனை ரசித்து பார்த்தாள்.
மிலிட்டரி கட் என்று சொல்லப்படுவதைப் போல… ஒட்ட வெட்டிய தலைமுடி… அழகான கம்பீரமான மீசை… நுனியில் திருகி விட்டு இருந்ததால் அவளுக்கு நேர் எதிரே இருந்த அந்த மீசையை பிடித்து இழுக்கும் ஆசை வந்தது அவளுக்கு. சிவந்த உதடுகள்… அவன் புகை பழக்கம் இல்லாதவன் என்று சொன்னது… தினமும் ஷேவ் செய்து வருவதால் கன்னங்கள் பளபளவென்று இருக்க… அந்த ஆறடி ஆண்மகனை கண்களில் நிரப்பிக் கொண்டாள் அருந்ததி.
“ஏய் ! தக்காளி…” என்று அவன் அவள் காதில் கத்த.. சுய உணர்வுக்கு வந்தவள்… அவன் தன்னை அழைத்த விதத்தை எண்ணி கோபம் அடைந்தாள்.
“எதுக்கு என்னை அப்படி கூப்பிடறீங்க…”
“அந்த பேரு தான் உனக்கு பொருத்தமா இருக்கு” என்று சொன்னவனின் பதிலில் கடுப்பானவள் கையில் இருந்த டைரியால் அவனை அடிக்கப் போக… அவன் தடுப்பதற்காக அவளது கையை பிடிக்க… அவர்கள் இருவருக்கும் இடையில் டைரி நழுவி விழுந்தது.
அதன் பக்கங்கள் திறந்து இருவரின் பார்வைக்கும் காட்சிப் பொருளானது. அக்னியின் முகம் விளையாட்டுத்தனத்தை விடுத்து… தீவிரம் அடைந்தது. அவளது கையை விட்டுவிட்டு அந்த டைரியை கைகளில் எடுத்துப் பார்த்தான்.
“இதை தான் செஞ்சுக்கிட்டு இருந்தியா?” என்று கேட்டவனின் பார்வை அவள் வரைந்து இருந்த அந்த படத்தின் மீதே இருந்தது.
“ஆமா.. இப்போ உடனே வரைஞ்சா கொஞ்சம் ஈஸி… நாள் கடந்துட்டா… எனக்கே கூட இது மறந்து போக வாய்ப்பிருக்கு” என்று சொல்ல.. ஆமோதிப்பாக தலை அசைத்தான்.
“நானும் அதுக்காகத் தான் உடனே வரைய சொன்னேன். குட்… முடிஞ்சுதா…”
“ம்ம்ம்… மேக்சிமம்… இப்படித் தான் இருந்த மாதிரி நியாபகம்…”
“வேற எதுவும் இதுல வரையணுமா?”
“இல்ல.. அவ்வளவு தான்…” என்று சொல்ல.. தனது போனை எடுத்து அவள் வரைந்து இருந்த அந்த கிரீடத்தை ஒரு படம் எடுத்துக் கொண்டான்.
“இதைப் பார்த்தா… உங்களுக்கு எதுவும் புரியுதா?” என்றாள் ஆர்வத்துடன்
“ம்ஹும்… இப்போதைக்கு இல்ல… இதைப் பத்தி நிறைய விசாரிக்கணும்… அதுக்கு அப்புறம் தான் ஒரு முடிவுக்கு வர முடியும்…”
“வெறும் டாட்டூ தானே… இதுல அப்படி என்ன இருக்கு ஆராய்ச்சி செய்ற அளவுக்கு…” என்றாள் சற்றே அலட்சியம் கலந்த குரலில்.
“இல்லை.. இது நீ நினைக்கிற மாதிரி சாதாரண டாட்டூவாகவும் இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம்..”
“ரொம்ப தெளிவா குழப்பறீங்க?”
“ஒவ்வொரு டாட்டூவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு… அது மாதிரி இதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு…”
“உங்க பில்டப் பார்த்தா ரொம்ப பயமா இருக்கே” என்று விளையாட்டாய் பேசியவளை பார்வையால் துளைத்தவன் ஆழ்ந்த குரலில் பேசினான்.
“இந்த டாட்டூ ரொம்ப பவர்புல்லான ஒரு விஷயத்தை குறிக்கும். தன்னோட கடவுளா மக்கள் எந்த ராஜாவை நினைக்கறாங்களோ அவங்களுக்காக இதை குத்திக்கிறதா தான் இதோட அர்த்தம்”
“ஸோ… வாட்…” என்றாள் அலட்சியமா…
“விச் மீன்ஸ் இட் மே பீ அ கேங்… யூ இடியட்…”(which means it may be a gang) என்றான் உச்சகட்ட கோபத்துடன்.
“நீ… நீங்க… என்ன சொல்றீங்க?”
“நொன்னை சொல்றாங்க… உன்னையும் இந்த குடும்பத்தையும் குறி வச்சு இருக்கிறது. யாரோ ஒருத்தன் இல்ல… ஒரு பெரிய கும்பலாகவும் இருக்கலாம். அந்த கூட்டத்துக்கு ஒரு தலைவன் இருக்கலாம். அவனை அந்த கூட்டத்தை சேர்ந்த மக்கள் கடவுளா பார்க்கிறாங்கன்னு அர்த்தம்” என்று இடியாய் முழங்க… அருந்ததி அப்படியே தரையில் மடங்கிப் போய் அமர்ந்து விட்டாள்.
அவள் அத்தனை நேரம் விளையாட்டாய் பேசிக் கொண்டிருந்தது எத்தனை பெரிய தவறு என்பதை உணரக் கூட முடியாதவளாய் அப்படியே பிரமை பிடித்தவள் போல இருந்தாள்.
“அருந்ததி… இங்கே என்னைப் பார்” என்று அவளை பிடித்து வேகமாக உலுக்கியவன் அவள் அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல மீண்டதும் சொற்களை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினான்.
“பயப்படாதே… நான் இருக்கிறேன்… நான் சொன்னதெல்லாம் என்னுடைய ஊகத்தின் அடிப்படையில் நான் சொன்னது. அப்படி இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது” என்று அவன் சொன்னதை அவளால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.
“இதெல்லாம் இப்போதைக்கு அப்பா, அம்மா கிட்டே சொல்ல வேண்டாம்… அவங்க கிட்டே இந்த படத்தை மட்டும் காட்டு… அதே ஆளை மறுபடியும் அவங்க பார்த்தா… தப்பிக்க அவங்களுக்கு அது ஒரு வாய்ப்பா இருக்கலாம்”என்று சொல்ல.. புரிந்தும் புரியாமலும் அருந்ததி தலையை ஆட்ட… வேகமாக தன்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டான் அக்னி.
அவனது மொபைலில் இருந்த அந்த படத்தை கையில் வைத்து ஆராய்ச்சி செய்தவன்.. நெட்டில் அது சம்பந்தமான விவரங்களைத் தேடத் தொடங்கினான்.
அதே நேரம் … அதே ஊரில் ஒரு பங்களாவில் தனித்து இருந்த அறைக்குள் ஒரு முரட்டு உருவம் சோம பானத்தை பாட்டிலோடு வாயில் சரித்துக் கொண்டிருந்தது.
அந்த உருவத்தை சுற்றிலும் இறைந்து கிடந்த பாட்டில்கள் … இது பல நாட்களாக தொடர்ந்து நடக்கும் நிகழ்வு என்று சொல்லாமல் சொன்னது.
அறையைத் திறந்து கொண்டு ஒரு ஒரு ஒல்லியான உருவம்… அந்த முரட்டு உருவத்தை நெருங்கியது… தயக்கத்துடன்… பயத்துடன்…
“சார்…”
“….”
“சிபி சார்…”
“சொல்லு…” இடியாய் வெளிவந்தது வார்த்தைகள்…
“அடுத்த முறை கண்டிப்பா…”
“யூ…******… ஒரு வேலையை செய்ய துப்பில்லை உனக்கு?”
“இல்ல சார்… நாங்க நல்லா பக்காவா திட்டம் போட்டுட்டு தான் போனோம்.. ஆனா வீடு முழுக்க போலீசா இருந்தது. எங்களால நெருங்க முடியல…”
“புல் ஷிட்… உன் கிட்டே கொடுத்த வேலையை செய்யாம வந்துட்டு காரணம் சொல்லுறியா? இது தான் உனக்கு கடைசி வாய்ப்பு.. அடுத்த முறையும் இதே போல கோட்டை விட்ட… அந்த தகவலை சொல்லக் கூட நீ உயிரோட இருக்க மாட்டே…”
“ச… சரி சார்…”
“போடா… போ.. என் கண் முன்னாடி நிக்காதே… எனக்கு அவ வேணும்..உயிரோட வேணும்… அதை செய்யாம என் முன்னாடி வந்து நின்னுடாதே… நானே உன்னை கொன்னுடுவேன்” என்றவன் தன்னுடைய கோட் பையில் இருந்து லேட்டஸ்ட் கிளாக் 19 (Glock19) துப்பாக்கியை எடுத்தவன் அந்த அறை முழுக்க.. இலக்கில்லாமல் வெறி வந்தவன் போல சுட்டுத் தள்ள… அந்த மெல்லிய உருவம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியே ஓடியது.
“அருந்ததிதிதிதி…” என்றவனின் அலறல் அந்த பங்களாவின் சுவர் முழுக்க எதிரொலித்தது.
ஷாக்கடிக்கும்….
‘
As usual suspense. Is he a phsyco. Is that something related to the clause Agni should marry arundathi? Waiting for Friday…
யார் பேபி அந்த உருவம் 🤔
நம்ம சிபி அண்ணா பேர் வந்ததும் சிரிச்சுட்டேன்யா🤣🤣🤣