MMK teaser 5

1
917

அக்னிபுத்திரன் இரண்டு நாட்களாகவே கொஞ்சம் மனம் சரியில்லாமல் கலங்கிப் போய் இருந்தான். அருந்ததியை ஓட வைத்தது, அவளை துரத்திக் கொண்டே ஓடும் படி நீமோவை ஏவியது. எல்லாமே அவன் மனக்கண்ணில் மாறி மாறி வந்து போனது. தன்னுடைய சுய லாபத்திற்காக ஒரு பெண்ணை இப்படி செய்து விட்டோமே என்ற தவிப்பு அவனை தூங்கவிடாமல் செய்தது. அவளை அப்படி நடத்தியதற்காக மகிழ்ந்து போவதற்கு அவன் ஒன்றும் மனசாட்சியே இல்லாத அரக்கன் இல்லையே…

அதே நேரம் அவன் மனசாட்சி அவனுக்காக வக்காலத்து வாங்கவும் தவறவில்லை.

‘அதுல உன்னோட தப்பு எதுவும் இல்லையே… இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி நேரடியா எதுவும் பேச முடியாத சூழ்நிலை… அப்படி இருக்கும் பொழுது கொஞ்சம் கடுமை காட்டித் தானே ஆகணும். அப்படி நடந்து கொண்டதால் தானே நினைச்ச மாதிரியே அந்த வீட்டு ஆட்களின் வெறுப்பையும் சம்பாதிக்க முடிந்தது.

பிடிக்காத திருமணத்தை செய்து கொண்டு.. தானும் வருந்தி அந்த பெண்ணையும் வருத்துவதற்கு பதிலாக… இப்படி முளையிலேயே கிள்ளி விடுவது தான் அந்த பெண்ணின் எதிர்காலத்துக்கு நல்லது என்று சொல்லி மனதை தேத்திக் கொண்டவன் மெல்ல அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடத் தொடங்கினான். மனதும் ஓரளவுக்கு சமனபடத் தொடங்கியது. அந்த நேரத்தில் தான் அருந்ததி அவனுக்கு பேசினாள்.

அவள் பேசிய பேச்சில் அவனது மனதில் அவளுக்காக தோன்றி இருந்த இரக்கம்… இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் இருந்தது.

‘என்ன பேச்சு பேசுகிறாள்? அந்த அளவுக்கு செய்தே இவள் இந்த பேச்சு பேசுகிறாளே… அப்படின்னா அன்னைக்கு நான் நடந்துகிட்டது இவளுக்கு கம்மி போலவே…’ என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது.

‘என்கிட்டேயே இவ்வளவு திமிரா பேசுறியே… இனி உனக்காக கொஞ்சமும் இரக்கம் பார்க்கப் போறதில்லை நான்… உனக்காக நான் பாவம் பார்த்தா நீ என்னையே சீண்டிப் பார்க்க துணிஞ்சுட்டே இல்லே…உன்னை…

ஹ… எவ்வளவு தைரியம் இருந்தா.. நீ அப்படி பேசி இருப்ப… அந்த மைதானத்தை நாலு முறை கூட ஓட முடியாத உனக்கு இத்தனை ஆணவமா? நான் கொடுக்கிற டார்ச்சரில் ஐயோ! எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு நீ கதறிக்கிட்டு ஓடுற மாதிரி நான் செய்யல… என் பேரு அக்னிபுத்திரன் இல்லைடி…

அவள் தன்னுடைய பேரையும் அவளது பேரையும் இணைத்து நக்கலடித்தது நினைவுக்கு வரவும் அவனது ரத்தத்தின் வேகம் இன்னும் அதிகரித்தது.

‘பேரில் மட்டும் நெருப்பு இருந்தா போதாதுடி…. உள்ளுக்குள்ளே இருக்கணும்… நீ பேசாமலே இருந்து இருந்தா கூட பரவாயில்லை.. இந்த அளவுக்கு பேசின பிறகு உன்னை சும்மா விட்டா நான் எல்லாம் என்னடி ஆண்பிள்ளை…’ என்று கறுவிக் கொண்டவனுக்கு அவள் மேல் இருந்த ஆத்திரம் அணுவளவு கூட குறையவில்லை.

அவன் பார்வை அவனது காலின் கீழ் அமர்ந்து இருந்த நீமோவின் புறம் பாய்ந்தது.

‘நான் நாய் பிடிக்கிறவனா? ஆர்மியில் இருந்தப்போ…எதிரிகள் அத்தனை பேரையும் ஓட வச்சேன்டி…தனியா நின்னு சமாளிச்சு இருக்கேன் சிங்கம் மாதிரி…என்னைப் பார்த்தா உனக்கு கார்ப்பரேஷன்காரன் மாதிரி இருக்கா?’ ஆத்திரம் கட்டுக்குள் அடங்க மறுத்தது அவனுக்கு.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here