Nilave unthan nizhal nane 27 tamil novels

0
1535
NUNN Tamil Novels 37

மிதுலா அமர்ந்து இருந்த இடத்திலேயே உறைந்து போய் விட்டாள்…. ‘புருஷர்ர்ர்ர்க்குஇத்தனை கோபம் வருமா….. வாய் பேசின இவனுக்கே இந்த நிலை எனில் எனக்கு……இவர் இப்பொழுது இருக்கும் மன நிலையில் எடுத்து சொன்னால் கூட புரிந்து கொள்ள மாட்டார். சே!!!! எவ்வளவு ஆசையாக வெளியில் கிளம்பி வந்தேன்…..

இவர் கூட நல்லா தான் பேசிக் கொண்டு இருந்தார்.எங்கிருந்து வந்தான் இந்த மூர்த்தி லூசு…..தேவை இல்லாமல் வாயை கொடுத்து புருஷர்ர்ர்ர்ரிடம் வாங்கி வேறு கட்டிக் கொண்டாயிற்று.இங்கே இருந்த இத்தனை பேரில் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லையே….அப்பொழுதாவது புரிந்து கொண்டு வாயை மூடிக் கொண்டு இருந்திருக்க வேண்டாமா….. இப்ப கெட்ட நேரம் உனக்கா இல்லை எனக்கான்னு தான் தெரியலை….வீட்டிற்கு போனதுக்கு அப்புறம் தான் தெரியும்.’என்று மிதுலா அவள் போக்கில் சிந்தித்துக் கொண்டு இருந்தாள்.

“மன்னித்துக்கொள்ளுங்கள் வசீகரன்….மூர்த்தி எப்பவும் இப்படி தான் என்று இங்கே உள்ள எல்லாருக்கும் நன்றாகவே தெரியும்……ஆனால் இன்று இப்படி உங்களுக்கான பிரத்யேகமான விருந்தில் இப்படி நடந்து கொள்வார் என்று நாங்கள் யாருமே நினைக்கவில்லை.”

“மன்னிப்பு எல்லாம் தேவையற்றது சுந்தர்….மேலும் அவர் பேசியதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்”.அவரிடம் பேசிக் கொண்டே சட்டையை முழங்கைக்கு கீழே இறக்கிவிட்டு கோட்டை சரி செய்து கொண்டான்.

“இருந்தாலும்…..”

“பார்ட்டியை ஆரம்பிக்கலாமா பிரண்ட்ஸ்”வசீகரன் லேசாக பேச்சை மாற்றினான்.

“ஓ…..எஸ்….என்று கோரசாக பதில் வந்தது.

அதன்பிறகு அங்கே இயல்பான கேலியும் கிண்டலும் மட்டுமே இருந்தது. மெலிதான இசையில் வசீகரனையும் மிதுலாவையும் ஆட சொன்னார்கள்.ஆட மறுத்த மிதுலாவை கை பிடித்து தூக்கி நிறுத்தி அவள் இடையில் கை கொடுத்து மெதுவாக இசைக்கு ஏற்றவாறு ஆட ஆரம்பித்தான்.

ஆடத் தெரியாமல் மிதுலா தடுமாறிய பொழுதுகளில் அவளின் தடுமாற்றத்தை வெளியே தெரியாதவாறு அழகாக சமாளித்தான்.தொடக்கத்தில் ஆட பயந்து உடலை விறைப்பாக வைத்து இருந்த மிதுலா கூட நேரம் ஆக ஆக வசீகரனின் கண் பார்வைக்கு ஏற்றவாறு அவனோடு இணைந்து நடனம் ஆட ஆரம்பித்தாள்.தாளம் தப்பாமல் ஆடுவது தான் தானா என்று மிதுலாவே வியக்கும் வண்ணம் அவர்களின் நடனம் இருந்தது.

அதே ஆச்சரியத்தோடு நிமிர்ந்து வசீகரனை பார்க்க அவனும் பார்வையை அவளது முகத்தை விட்டு எங்கும் திருப்பினான்னில்லை. பார்வைகள் ஒன்றோடு ஒன்று சங்கமிக்க அவர்கள் இருவரும் தனி உலகில் சஞ்சரித்தனர். மிதுலாவால் தன் பார்வையை வேறு எங்கும் திருப்ப முடியவில்லை.

இரும்பை கவர்ந்து இழுக்கும் காந்தம் போல வசீகரனின் பார்வை அவளை காந்தமாய் இழுத்தது. ஒரு வழியாக அவர்களின் நடனம் முடிவுக்கு வரும் போது அடுத்த ஏற்பாடாக எல்லாருக்கும் கிளாசில் விஸ்கி போன்ற வகையறாக்கள் எடுத்து வரப் பட்டன. ‘அய்யயோ…..இது வேறு உண்டா …. இன்று இவர் குடிக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமே…..’ என்று எண்ணி கலக்கத்தோடு வசீகரனை ஒரு பார்வை பார்த்தாள்.

அவளது பார்வையில் ஒரு நிமிடம் முகம் கடுத்தவன் அவளின் காதருகில் இயல்பாக பேசுவது போல் குனிந்து,”நான் ஒன்றும் குடிகாரன் இல்லை….மொடாகுடிகாரனை பார்ப்பது போல் என்னை பார்த்து வைக்காதே….. புரிந்ததா” சீற்றத்தோடு கூறிவிட்டு நிமிரும் போது முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டான்.

‘என் புருஷர்ர்ர்ர் தான் எவ்வளவு புத்திசாலி …. மனதில் நினைப்பதை எவ்ளோ கரெக்ட் ஆஹ் சொல்லிடறார்’ என்று அவள் பெருமையாக நினைத்துக் கொண்டு இருக்கும் போதே அவளது மனசாட்சி அவளை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே பதில் உரைத்தது.’இது நீ சந்தோச பட வேண்டிய விஷயம் இல்லை மிதுலாக்கண்ணு…இது உனக்கு ஆப்பு…. இனி உன் புருஷர்ர்ர்ர்ரை அவர் எதிரில் நீ மனதுக்குள் கூட திட்ட முடியாது….. திட்டினால் அவரிடம் மாட்டிக் கொள்வாய்…..எனவே உஷார்ர்ர்!!!!!’என்று அவளது மனசாட்சி அபாய எச்சரிக்கை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டது.

முகத்தை நல்ல பிள்ளை போல வைத்துக் கொண்டு சுற்றி உள்ளோரை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.வசீகரனின் அருகில் கோப்பை எடுத்து வரப்பட்ட போது நாசுக்காக மறுத்து விட்டான்.

“என்ன வசீகரன் பார்ட்டியே உங்களுக்காக தான்…. நீங்கள் இப்படி கிளாஸை ஒதுக்கலாமா…..”

“என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது….அதனால் தான் வேறு ஒன்றுமில்லை….நீங்கள் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க” . மேலும் இரண்டு முறை வற்புறுத்தி பார்த்துவிட்டு வசீகரன் மசியாததால் பிறகு விட்டு விட்டனர்.

“எனக்காகவா”….இமை சிமிட்டாமல் மெதுவாக விசாரித்தாள் மிதுலா.

“உனக்காக என்று யார் சொன்னது…பார்ட்டி முடிய வெகுநேரம் ஆகும்…..அதுவரை தெளிவாக இருக்க வேண்டாமா….அதற்கு தான்….. மற்றபடி உனக்காக எல்லாம் ஒன்றும் இல்லை….” அசட்டையாக சொல்வது போல் சொன்னாலும் அவனது இதழோர கள்ள சிரிப்பு அவனை காட்டிக் கொடுத்து விட்டது.

“ஹே!!! எனக்காக தான் இல்லையா…. ” சந்தோஷத்தில் முகம் எங்கும் பூரிக்க கேட்டாள் மிதுலா.

மற்றவரின் கருத்தை கவராவண்ணம் கணவனும் மனைவியும் பேசி மகிழ்ந்தனர்.மனம் விட்டு பேசி இருந்தால் பிரச்சினை தீர்ந்து இருக்குமோ என்னவோ…..

இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் ஆவலில் ஏதேதோ பேசினர்.ஒருவழியாக தள்ளாடிய படியே வந்த மற்றவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு மிதுலாவும் வசீகரனும் மட்டும் அந்த ஹாலில் தனித்து அமர்ந்தனர். அதுவரை இல்லாத தடுமாற்றம் இப்பொழுது வந்தது மிதுலாவிற்கு.

வசீகரனின் இன்றைய பார்வையும் அது உணர்த்திய செய்தியும் அவளை சிறகில்லாமல் பறக்க வைத்தது. வசீகரனுடன் தனித்து இருந்த நொடிகளை ஆழ்ந்து அனுபவிக்க எண்ணினாள்.எதிரெதிரில் அமர்ந்து இருந்தாலும் வசீகரனை நிமிர்ந்து பார்க்க தயங்கினாள். அவளின் கன்ன சிவப்பில் தன்னை தொலைத்துக் கொண்டு இருந்தான் வசீகரன்.

எழுந்து மெதுவாக அவளருகில் நெருங்கி நின்று,”காரில் வரும் போது என்னிடம் என்னவோ கேட்டாயே….. அதை இப்பொழுது கேள்”…கிசுகிசுப்பாக வெளி வந்தது வசீகரனின் குரல்.

‘காரில் வரும் போது என்ன கேட்டேன்!!!!.. ஒன்னும் நியாபகத்திற்கு வரவில்லையே…..எப்படி வரும்…..இவர் கொஞ்சம் தள்ளி நின்னா வேணும்னா மூளை கொஞ்சம் ஒர்க் ஆகும்….இவ்வளவு பக்கத்தில் நின்று கேட்டால்….’

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வசீகரனின் முகம் பார்க்காமல் பேசினாள்.”நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க”

“ஏன்????”

“எனக்கு வசதியா இல்ல”

“பட் எனக்கு இது தான் வசதியா இருக்கு” பேசிக்கொண்டே மேலும் ஒரு அடி முன்னேறினான்.

“எனக்கு நியாபகம் இல்லை….என்ன சொன்னேன்னு”….தவிப்புடன் பின் வாங்கினாள்.

“நான் சொல்லட்டுமா”காதோரத்தில் மீசை முடி உராய கேட்டான்.

“ம்…..”மெல்லியதொரு முனகல் மட்டுமே பதிலாய் வந்தது.

“இந்த ஜிமிக்கி எப்படி இருக்குன்னு கேட்டியே !!!!! சொல்லட்டுமா”…ஒற்றை விரலால் ஜிமிக்கியை லேசாக ஒரு சுண்டு சுண்டினான்.

அவனின் சிறு தீண்டலில் உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்துப்போய் நின்றாள் மிதுலா.

அவளின் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டு இன்னும் முன்னேறி அவளை உராய்வது போல் நின்றான். மிதுலா இது தான் பூலோகமா என்பது போல் ஒரு பார்வையை பார்க்க,அவளின் முகவாயை லேசாக ஆள் காட்டி விரலால் நிமிர்த்தி அவள் கண்ணோடு அவன் பார்வையை கலக்கவிட்டவாறு பேசினான்.

“இந்த ஜிமிக்கியை விட அதை தாங்கிக் இந்த காதுகள் அழகா இருக்கு…….. “பேசிக் கொண்டே காதுகளை நுனி விரலால் தீண்டினான்.

“நீ போட்டு இருக்கியே நெக்லஸ் அதை விட உன் கழுத்து அழகா இருக்கு….அவள் கழுத்தில் வாசம் பிடித்தான்.

வசீகரனின் வார்த்தையிலும் செயலிலும் ஒவ்வொரு நிமிடமும் அனலில் பட்ட மெழுகாக கரைந்து கொண்டு இருந்தாள் மிதுலா.

“அப்புறம் இந்த புடவை……இது தான் பிடிச்சு இருக்கா இல்லையான்னு சரியாய் தெரியலை…..இந்த புடவை உனக்கு அழகா தான் இருக்கு……ஆனா….. இத்தனை நாள் என்கிட்ட இருந்து நீ மறைச்சு வச்சதை எல்லாம் காட்டி கொடுத்துடுச்சு…… அதனால் இது பிடிச்சு இருக்கு…..அதே நேரம் அது என் கண்ணை தடுக்குது….என்னால அதை தாண்டி பார்க்க…..”

மேற்கொண்டு என்ன பேசி இருப்பானோ வசீகரன் பேச பேச இன்ப அவஸ்தையில் கிளர்ந்த மிதுலா மேற்கொண்டு அவன் பேசும் முன் தன் தளிர் கரங்களால் அவன் வாயை மூடினாள்.

“ப்ளீஸ்…போதும்….நிறுத்துங்க”

“ஏன் நீ தானே கேட்டாய்….இன்னும் சொல்கிறேன் கேள்”

“ஐயோ ….வே … வேண்டாம்”

“நீதானே கேட்டாய்…. இன்று நான் சொல்லித்தான் தீருவேன்” குழந்தையென பிடிவாதம் பிடித்தான் வசீகரன்.

“ஐயோ ….ப்ளீஸ்….வேண்டாம்”

“ஏன்” பார்வையை கூர்மையாக்கி கேட்டான் வசீகரன்.

வெட்கம் தாளாமல் கண்கள் கலங்க நிமிர்ந்து அவனை பார்த்து,”என்னால் முடியவில்லை”

“அது தான்….ஏன் என்று கேட்கிறேன்….”அவளின் கண்கள் கலங்கவும் அவளுக்கு பிடிக்கவில்லையோ என்று அவனுக்கு கோபம் துளிர் விட தொடங்கியது.

“இ…. இங்….இங்கே….யாரும்…”அதற்கு மேல் சொல்ல முடியாமல் தலையை திருப்பி சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள்.

அவளின் பார்வையையும், வார்த்தையின் பொருளையும் உணர்ந்து கடகடவென சிரிக்க ஆரம்பித்தான் வசீகரன். சுற்றிலும் பயத்தோடு பார்வையை ஓட்டிக் கொண்டு இருந்தவள் வசீகரனின் சிரிப்பொலியில் திரும்பி வசீகரனை பார்த்தாள். தன்னை கேலி செய்து சிரிக்கிறாரோ என்ற யோசனையுடன் வசீகரனின் முகம் பார்க்க வசீகரன் மேலும் சிரிக்க தொடங்கினான்.

“அப்போ யாரும் வரலைன்னா… உனக்கு ஓகே வா” கண்கள் சிரிக்க கேட்டான்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருத்திருவென முழித்தாள் மிதுலா.பக்கத்தில் இருந்த மிதுலாவை கை கொடுத்து எழுப்பி விட்டான் வசீகரன்.”இந்த ஹால் இன்று இரவு முழுக்க நமக்காக தான் புக் ஆகி இருக்கிறது. நிவியின் பார்ட்டி ஆரம்பமாக இன்னும் ஒரு அரை மணி நேரம் இருக்கிறது.அதுவரை சும்மா இருப்பானேன்…. வா”

எதற்கு கூப்பிடுகிறான் என்று தெரியாமல் நீட்டிய அவன் கையை பற்றியபடியே எழுந்து நின்றாள் மிதுலா.பின்னணியில் ஓடிக் கொண்டு இருந்த மேற்கத்திய இசையை நிறுத்தி விட்டு இளையராஜாவின் இன்னிசை பாடல்களை தேர்வு செய்து ஒலிக்க செய்தான். அந்த ஹாலை இளையராஜாவின் இசை ஆக்கிரமித்தது.இன்ஸ்ட்ருமென்டல் மியூசிக்காக இன்னிசை கருவிகளின் ஒலி மட்டும் பாடலாக வெளி வந்து கொண்டு இருந்தது.

“சுந்தரி கண்ணால் ஒரு சேதி….

சொல்லடி இந்நாள் நல்ல சேதி”

வார்த்தைகளுக்கு வேலையின்றி அந்த இடமே இசையால் கட்டுண்டு இருக்க,”வா” என்று ஒற்றை சொல்லில் கை நீட்டி அழைத்தான் மிதுலாவை .

“எனக்கு ஆட த் தெரியாதே!!!!”

“இத்தனை நேரம் உனக்கு தெரிந்து தான் ஆடினாயா….ம்ம்ம்ம். அத்தனை பேர் முன்னிலையில் ஆட முடிந்தது…… தனியே என்னோடு ஆட மாட்டாயா” பேசிக் கொண்டே ஒற்றை கையால் அவளை இழுத்து தன்னருகே நிறுத்திக் கொண்டு ஆட தொடங்கினான்.

இடையில் ஒரு கையை கொடுத்து தன்னருகே மிதுலாவை இழுத்துக் கொண்டு ஆட தொடங்கினான்.அத்தனை பேர் முன்னிலையில் வராத வெட்கம் தனித்து ஆடும் பொது வந்து மிதுலாவை ஆட்டுவித்தது.

குனிந்த தலை நிமிராமல் ஆடிக் கொண்டு இருந்தவளின் நெற்றியில் லேசாக ஒரு முட்டு முட்டி ‘என்ன ‘என்று கண்களாலேயே விசாரித்தான்.’ஒன்றுமில்லை’ என தலையை இடமும் புறமும் ஆட்டிவிட்டு மீண்டும் குனிந்து கொண்டாள் மிதுலா.ஒற்றை விரலால் அவள் நாசியை பிடித்து தூக்கி தன் பார்வையோடு அவள் பார்வையை கலக்க துடித்தான் வசீகரன்.அவளது கைகளை எடுத்து தன் தோளின் மீது போட்டுக் கொண்டு தொடர்ந்து அவளை ஆட வைத்தான்.

தோள்களை விட்டு இறங்க துடித்த மிதுலாவின் கைகளை மீண்டும் மீண்டும் எடுத்து தோளின் மீது எடுத்து வைத்து ஆடினான்.யாரேனும் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்து தயங்கி தயங்கி ஆடிக் கொண்டிருந்தாள்.அவளின் பயம் புரிந்து, “இப்போதைக்கு நம்மிடையே யாரும் குறுக்கே வர மாட்டார்கள்….நீ இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வா” கிறக்கமாக பேசினான்.

‘இதற்கு மேல் எப்படி கிட்டே வருவது என்று மிதுலா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளை இழுத்து அணைத்தான் வசீகரன். கரங்களால் தன்னவளின் மென்மையை சோதித்து மிதுலாவின் பெண்மையை உயிர் கொள்ள வைத்தான்.மிதுலாவின் நெற்றி வசீகரனின் மார்பில் புதைந்து இருக்க கணவனிடம் முதல் அணைப்பில் கட்டுண்டு இருந்தாள் மிதுலா.

ஒரு அளவிற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் வசீகரனின் கரங்கள் அத்துமீற,அவனின் அத்துமீறல்களுக்கு அனுமதி அளிக்க முடியாமல் மிதுலாவின் பெண்மை தடுமாறி வசீகரனின் கரங்களை சிறைபிடிக்க முயன்றாள். காற்றுக்கு அணை போடுவது போல அவள் தடுக்க தடுக்க வசீகரனின் வேகம் அதிகரிக்க பொறுக்க மாட்டாமல் அவள் முகத்தை நிமிர்த்தி இதழோடு இதழ் பொருத்தி முதல் முத்திரையை அழுத்தமாக பதித்தான்.அவளை உணரும் வேகத்தில் வசீகரனின் உணர்வுகள் கொந்தளிக்க தான் இருக்கும் இடமும் நிலையும் நினைவுக்கு வர வசீகரனுடன் முழுதாக ஒன்றவும் முடியாமல் அவனை தடுக்கவும் முடியாமல் தவித்து போனாள் மிதுலா.

விலக எத்தனித்தவளை விட மறுத்து வசீகரன் ஒரு மௌன போரை நடத்திக் கொண்டு இருந்தான்.மிதுலாவின் மென்மையில் தன்னை தொலைத்து அவளை கண்டு கொள்ள அவன் துடிக்க, மிதுலா மறுக்க அங்கே ஒரு அழகான காதல் போர் நடந்து கொண்டு இருந்தது.

Facebook Comments Box
Previous PostNunn 26
Next PostMMK teaser 8
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here