NUNN 15

0
1314

கீழே வந்த மிதுலா நேராக கிச்சனுக்கு சென்று ஒரு கப் காபியை வாங்கி கொண்டு அங்கே வசீகரனின் எதிரில் அமர்ந்து காப்பியை குடிப்பதற்கு தயாராக காத்து இருந்தாள். வசீகரன் இவள் வந்து அருகில் அமர்ந்ததை பார்த்தாலும் அவளை கண்டும் காணாமல் இருந்தான்.லேப்டாப்பை எடுத்து ஏதோ வேலை செய்ய தொடங்கினான்.

மிதுலா காபியை எடுத்து முதலில் அதன் நறுமணத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.ஆஹா!!!! “தெய்வா உன் காபி எவளோ சூப்பரா இருக்கும்ன்னு அதோட வாசனையை வச்சே சொல்லிடலாம்..அப்பப்பா!!!!! என்ன வாசனை.!!!”
“மிதுலா காபியை கீழே வை “அதட்டினார் தெய்வானை.
“தெய்வா ,இப்ப தானே உன் காபியை அருமையாய் இருக்குன்னு பொய் சொன்னேன்ல.கடைசில பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு நீ சொல்ற பழமொழி பலிச்சுடுச்சு. பார்த்தியா!!!!”
“ஏய் வாயாடி!!! முதல்ல மாப்பிள்ளைக்கு காபி குடு,அப்பறம் நீ குடி”
“தெய்வா ….. நான் எனக்கு பசிக்குதுன்னு சொல்றேன்ல ப்ளீஸ்!!!!”
“எல்லாம் குடிக்கலாம் …. முதலில் மாப்பிள்ளைக்கு கொடு”
“தெய்வா…. அதெல்லாம் அவர் இந்நேரத்துக்கு பத்து கப் காபி குடித்து இருப்பார்”
“நீ பார்த்தாயா???? இல்லை நீ உன் கையால் கலந்து கொடுத்தாயா???? இனி எப்பொழுதும் முதலில் மாப்பிள்ளையை கவனித்துவிட்டுத் தான் நீ சாப்பிட வேண்டும் புரிந்ததா!!!!”
“தெய்வா நான் பசி தாங்க மாட்டேன்!!!!”
“இனி பழகிக் கொள், இப்பொழுது போய் மாப்பிள்ளையை முதலில் கவனி”
“தெய்வா இது அநியாயம்!!!!!”
“ஏண்டி!!!! கட்டின புருஷனுக்கு ஒரு வாய் காபி கொடுக்க சொன்னால் , அது அநியாயமா உனக்கு ….. போ…..”
“தெய்வா இதற்கு எல்லாம் உன்னை பழி வாங்காமல் விடமாட்டேன்”
“போடி …..”
“வே வே வே…..” என்று தாயிற்கு பழிப்பு காட்டிவிட்டு கணவனிடம் சென்றாள்.
இவர்களுடைய பேச்சு வார்த்தை அத்தனையும் கேட்டும் கேளாமலும் இருந்த வசீகரன்,மிதுலா தன்னை நோக்கி காபியுடன் வரவும்,மும்மரமாக வேலை பார்ப்பது போல் பாசாங்கு செய்ய தொடங்கினான்.
“காபி குடிக்கறீங்களா…. “என்று அருகில் வந்ததும் கேட்டாள் மிதுலா.
“ஏன் கேட்டா தான் கொடுப்பியா”
“சரி இந்தாங்க காபி”
“எனக்கு இப்போ காபி குடிக்கிற மூடு இல்லை,போய் டீ போட்டு எடுத்துக் கொண்டு வா”
“அவள் திரும்பி தெய்வானையை பார்க்க போ… போய் எடுத்து வா …. என்று அவளை விரட்டினான் வசீகரன்.”
“சை!!! ஒரு வாய் காபி குடிக்க முடியலையே இந்த வீட்டில் என்று முனகிக் கொண்டே சமையல் அறைக்கு சென்றாள் மிதுலா”
மறுபடி சற்று நேரம் பொறுத்து அவள் எடுத்து வர டீயை கையில் வாங்காமலே ,” போய் வேற போட்டு எடுத்துட்டு வா, எனக்கு இது பிடிக்கலை”
“குடிக்காமலே ஏன் வேணாம்னு சொல்றீங்க”
“டீயில் இஞ்சி தட்டி போட்டியா” என்றான் நிதானமாக.
“இல்லையே !!! “
“எனக்கு இஞ்சி தட்டி போட்டு குடிக்கத் தான் பிடிக்கும்,அதனால இஞ்சி போட்டு வேற டீ எடுத்துட்டு வா”
“ஒரு நாள் இதை அட்ஜஸ்ட் பண்ணிக்க கூடாதா??”
“நீ கொடுப்பதை எல்லாம் நான் குடிக்க முடியாது ,நான் கேட்பதை நீ கொடுத்து பழகு”என்றான் கூர்மையான பார்வையுடன்.
“மறுப்பை தெரிவிக்கும் விதமாக அவள் சற்று நேரம் அப்படியே இருக்கவும், வசீகரன் திரும்பி தெய்வானையை ஒரு பார்வையை பார்த்து வைத்தான்.
அடுத்த நிமிடம்,”மிதுலா மாப்பிள்ளை சொல்வதை கேளு”என்று அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் தெய்வானை.
“அம்மா ,நான் எப்போ காபி குடிக்கிறது?”
“முதலில் மாப்பிள்ளை குடிக்கட்டும் அப்புறம் நீ குடி.”
மறுபடி உள்ளே சென்று வேறு ஒரு கப்புடன் வந்தாள் மிதுலா
“இந்தாங்க”
“இப்படித்தான் கொதிக்க கொதிக்க தருவாயா??? நன்றாக ஆற்றிக் கொடு”
‘புருஷர்ர்ர்ர்’ பல்லை நறநறவென கடித்துக் கொண்டே,வேணும்னு தானே இப்படி எல்லாம் செய்யுறீங்க புருஷர்ர்ர்ர் உங்களை என்ன செய்ய போறேன்னு பாருங்க!!! என்று மனதினில் திட்டிக் கொண்டே டீயை ஆற்றிக் கொடுத்தாள்.
அதை கையில் வாங்கி பார்த்து விட்டு, “என்ன பச்சை தண்ணி மாதிரி இருக்கு,ரொம்ப ஆறிப் போயிடுச்சு.போய் சூடு செய்து எடுத்து வா, மறுபடியும் விரட்டினான்”
‘வசீகரன் வேண்டுமென்றே தன்னை அலைகழிக்கிறான் என்பதை புரிந்து கொண்ட மிதுலா டீயை லேசாக வசீகரனின் மேல் ஊற்றினாள்.அதன் சூடு தாங்காமல் வசீகரன் கத்துவான் அதை வைத்து அவனை கையும் களவுமாக பிடித்து விடலாம் என எண்ணினாள்.ஆனால் வசீகரன் அவளது முகத்தில் இருந்தே அவளது எண்ணத்தை ஊகித்தவன் போல் சரேலென கடைசி நொடியில் விலகினான்.’

‘அடச்சே!!!! தப்பிவிட்டாரே இந்த புருஷர்ர்ர்ர் என்று கொதித்துக் கொண்டே மீண்டும் ஒரு முறை அவன் மீது ஊற்ற முயன்றாள் மிதுலா.இம்முறை அவள் எண்ணத்தை செயலாக்கும் முன் ,வசீகரனின் கரம் நீண்டு மிதுலாவின் கையை பற்றியது.

“இன்னுமா தூக்கம் கலையாமல் இருக்க!!! டீயை மேலே ஊத்தினது போதும்,போய் சூடா வேற கொண்டு வா”

“டேய் வசீகரா என்னடா எப்ப பாரு அவளை விரட்டிக் கொண்டே இருக்கிறாய்??? மாப்பிள்ளை முருக்கா!!!! …. நீ போய் இதையே கொஞ்சம் சூடு செய்து எடுத்து வா மிதுலா…… என்னடா ….நேற்று தான் உன் பொண்டாட்டியிடம் அத்தனை காதல் வசனங்கள் பேசினாய், இப்பொழுது இப்படி விரட்டுகிறாய்…. எனக்கு தெரியும் உன் மனைவியிடம் நீ விளையாடுகிறாய் என்று தெரியும் வீட்டில் வந்து குமிந்து இருக்கும் சொந்தங்களுக்கு தெரியுமா?…. என்று கூறிவிட்டுக் கண்களால் சுற்றி அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தோரை கண்களால் சுட்டிக் காட்டினார் காவேரி”

“வசீகரனும் புரிந்து கொண்டு,அது சும்மா அவளை சீண்டிப் பார்த்தேன் பெரியம்மா,என் பொண்டாட்டியை கிண்டல் கூட செய்யக் கூடாதா நான்…. உடனே அவளுக்கு சப்போர்ட் பண்ண வந்து விடுகிறீர்களே!!!! …. வேண்டாம் பெரியம்மா ,அவளுக்கு செல்லம் கொடுத்தீர்கள் என்றால் உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவாள்.அவளுக்கு மாமியார் என்றால் யார் என்று காட்டுங்கள்!!!”

“எல்லாம் எனக்கு தெரியும் போடா!!!… இதோ மிதுலா வந்து விட்டாள். நீ டீயை குடி”

“மிதுலாவின் கையில் இருந்து டீயை வாங்கியவன், அதை குடிக்க மனமே இல்லாமல் குடித்தான்.”

“என்ன அண்ணா!!! …. அண்ணி போட்டு தந்த டீயில் உப்பு பத்தவில்லையா!! முகமே சரி இல்லை என்று வம்பிழுக்க ஆரம்பித்தது ஒரு பட்டாம்பூச்சி பருவக் கூட்டம்”

“அதெல்லாம் ஒன்றும் இல்லையே!!! என் பொண்டாட்டி கையால் கொடுத்தது இல்லையா!!! அருமையாக இருக்கிறது…..கற்கண்டு மாதிரி இனிக்கிறது போதுமா”

“அதுவரை அவர்கள் பேசுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மிதுலா ‘க்ளுக்’ என்று வாயை மூடி ஒரு நிமிடம் சிரித்து விட்டு டக்கென தவறு செய்த குழந்தை போல திருதிருத்து விட்டு வாயை மூடிக் கொண்டாள்”

‘இவள் எதுக்கு சிரிச்சா!!!… உடனே முகத்தை மாத்திக்கிட்டா… என்னவா இருக்கும் என்று யோசித்தவன், மிதுலா மாடியில் என் மொபைலை வச்சுட்டேன் போய் எடுத்துட்டு வரியா…என்றதும் உடனே எப்பொழுது தப்பித்து ஓடலாம் என்று காத்து இருந்தது போல ஓட்டமாய் ஓடி விட்டாள்.

“இவ எதுக்கு இப்படி ஓடுறா!!! ஏதோ விஷயம் இருக்கு….. என்னான்னு தெரிஞ்சுக்கணும்’ என்று நினைத்தவன் மெதுவாக ஓசையின்றி நழுவி மாடிக்கு சென்றான்.அங்கே…. கட்டிலில் குப்புறப் படுத்து வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க முடியாமல் சிரித்துக் கொண்டு இருந்தாள் மிதுலா.
“இவ எதுக்கு இப்ப இப்படி சிரிக்குறா!!!…. இவளுக்கு என்ன ஆச்சு!!!!…. என்று எண்ணியபடியே அவள் அருகில் சென்றான்.

“ஏய் !!! இப்ப எதுக்கு இங்கே வந்து லூசு மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்க???
திடீரென வசீகரனின் குரல் கேட்கவும் தூக்கிவாரி போட எழுந்து அமர்ந்தவள்,அவனது கேள்வியில் மறுபடி சிரிக்க ஆரம்பித்தாள்.

“ஏய் !!! லூசு எதுக்கு இப்படி சிரிச்சுகிட்டே இருக்க… சொல்லித் தொலை”எரிச்சல் அடைந்தான் வசீகரன்.
“அது வந்து….. சொன்னா நீங்க கோபப் படக் கூடாது. சரியா?”
“நீ முதலில் சொல்லு…. கோபப்படுவதா வேண்டாமா என்பதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்றான் அமர்த்தலான குரலில்….
“இல்லை எனக்கு ஏற்கனவே ரொம்ப பசிச்சுதா….

நீங்களும் வேணும்னே அலை கழிச்சிங்களா…. எப்படியும் இந்த தடவையும் டீயை குடிக்க மாட்டீங்கன்னு …. ஏற்கனவே பாதி கப் டீயை குடிச்சுட்டு மிச்சத்தை உங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தேன்…..அதை நீங்கள் குடித்துவிட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னீங்களா …. அதான் என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை…. என்று விட்டு மறுபடியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.”

“அவள் சொன்னதை கேட்டதும் வசீகரனின் முகம் தான் அஷ்ட கோணலாக மாறியது.”
அவனின் முக மாற்றத்தை கண்டு மேலும் சிரிக்கத் தொடங்கினாள் மிதுலா
“உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் நீ குடித்த எச்சிலை எனக்குக் கொடுத்து இருப்பாய்!!!!”
“ஹலோ புருஷர்ர்ர்ர் இது என்ன வம்பா இருக்கு!!! ஏற்கனவே வேண்டாம்ன்னு சொன்ன மாதிரி இப்பொழுதும் சொல்வீங்கன்னு நான் நினைச்சேன்…. உங்களை யாரு குடிக்க சொன்னது???”

“நான் குடிக்கலைனா இப்படித்தான் எச்சில் செய்து எனக்கு தருவாயா???
“நான் என்ன செய்ய எனக்கு பசி தாங்கலை!!!!…. நல்ல வேளை நான் முதலில் எல்லா டீயையும் நானே குடித்து விட்டு வெறும் டீ டிகாஷனை தண்ணி கலந்து எடுத்து வரலாம் என்று நினைத்தேன்.கலர் மேட்ச் ஆகாதேன்னு தான் அந்த முடிவை மாற்றிக் கொண்டேன் என்று கூறி அவனை அதிர வைத்தாள் மிதுலா.

Facebook Comments Box
Previous PostNUNN tamil novel 14
Next PostNUNN 17
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here