NUNN 19

0
1283
NUNN Tamil Novels 37

“தங்கச்சி !!! வாம்மா, என்குலதெய்வமேநீதான்தாயி” உன்னால தான் தாயி என் வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலம் வரப் போகுது. என்னை காப்பாத்து தங்கச்சி”

‘வந்ததில் இருந்து வாய் ஓயாமல் பேசிக் கொண்டு நொடிக்கொரு முறை தங்கச்சி என்று அழைக்கும் இந்த புதியவன் யார் என்று புதிராக பார்த்துக் கொண்டு இருந்தாள் மிதுலா’.

“எப்படா வந்த எருமை”என்று பாசமாக (!!!)தோளில் ஒரு தட்டு தட்டினான் வசீகரன்.

“அம்மா!!! “அலறினான் புதியவன்.

“டேய் துரோகி உனக்கும் எனக்கும் பேச்சு இல்லை.நான் என் தங்கச்சியை பார்க்க தான் வந்தேன்.தயவு செய்து கையை வைத்துக் கொண்டு சும்மா இரு.நீ லேசாக தட்டினாலே நான் புத்தூர் கட்டு போட வேண்டி இருக்கும் போல!!! கையா இது!!!”என்று போலியாகசலித்துக் கொண்டான்.

பேச்சு பேச்சாக இருக்க,புதியவனின் கண் அசைவில் வீட்டில் இருந்து ஒரு பெண்மணி வெளியே வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து சென்று விட இவர்கள் அனைவரும் வீட்டினுள் நுழைந்தனர்.

வலதுகாலை எடுத்து வைத்து மிதுலா உள்ளே நுழையவும் அவர்கள் மேல் பூக்கள் குவியலாக கொட்டவும் சரியாக இருந்தது.

‘மிதுலா அதை ரசித்து அனுபவிக்கையில்,”ஏன்டா !!! ஆரம்பிச்சுட்டியா??? பாரு வீடு எல்லாம் குப்பை ஆகிடுச்சு “என்று பொறிந்தான் வசீகரன்.

“கருமம் !!! கருமம் !!! போடா டேய்….. போயும் போயும் உனக்கு போய் இவ்ளோ ரொமண்டிக்கா செட்டப் பண்ணினேன் பாரு என் புத்தியை….”

“செருப்பால் அடித்துக் கொள்ள போகிறாயா!!! அச்சச்சோ!!! என் ஷூவை வாசலிலேயே மறந்து வைத்து விட்டேனே!!! நான் வேண்டுமானால் போய் எடுத்து வந்து தரட்டுமா??? என்று சீரியஸாக வினவினான் வசீகரன்.

வசீகரனை ஆச்சரியமாக பார்த்தாள் மிதுலா.நேற்று அவர்கள் வீட்டில் இருந்த போது கூட வசீகரன் சொந்தங்கள் முன்னிலையில் சிரித்த முகமாகவே இருந்தான்,ஆனால் அந்த சிரிப்பை விட இப்பொழுது வசீகரனின் சிரிப்பு இயல்பாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது.இமைக்க மறந்து கணவனின் சிரிப்பை பார்த்துக் கொண்டே இருந்தாள் மிதுலா.

“நீ பேசாதே !!! நான் ஒன்றும் உன்னை பார்க்க வரவில்லை. உனக்கும் எனக்கும் எந்த பேச்சும் கிடையாது. என் தங்கச்சியை பார்த்து ஒரு சில முக்கியமான விஷயங்களை சொல்ல வந்தேன்.சொல்லிவிட்டு கிளம்ப வேண்டும்.என் நேரத்தை வீணாக்காதே!!!”. இதோ பார் தங்கச்சி முதலில் உனக்கு எனது வாழ்த்துக்கள்!!! யாராலும் கவிழ்க்க முடியாத இந்த விசுவாமித்திரனை கை பிடித்ததற்கு,அடுத்தது இவனை நீ திருமணம் செய்து கொண்டு விட்டதால் என்னுடைய ரூட் கிளியர்!!! சோ இனி எங்கு போனாலும் எல்லா பெண்களும் என்னை தான் சைட் அடிப்பார்கள்.”

“உனக்கு தெரியுமா தங்கச்சி இந்த பாவியுடன் எங்கும் வெளியில் சென்றாலும் நிம்மதியாகவே இருந்து தொலைக்க முடியாது.எங்கே வெளியே போனாலும் எல்லா பெண்களும் இவனைத்தான் பார்வையாலேயே கடித்து தின்பதை போல பார்த்து வைக்கிறார்கள்.இவன் பக்கத்திலேயே ஒருவன் ஹண்டசமாகஇருப்பேன்,நான் நாள் முழுக்க கண்ணாடி முன் நின்றுஅவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் பண்ணி கொண்டு வருவேன்.என்னை ஒருத்தியும் பார்க்க மாட்டாள்.இனி அப்படி இல்லை….

கலகலவென பேசும் அந்த புதியவனை மிதுலாவிற்கு மிகவும் பிடித்து போனது.என்ன தான் காவேரி அன்பாக நடந்து கொண்டாலும் தன் இயல்புக்கு வெகுவாக பொருந்தும் ஒரு ஆள் அதே வீட்டில் இருப்பதே அவளுக்கு பெரும் மகிழ்வை அளித்தது.

“என்னை பற்றி ஏதேனும் உன்னிடம் சொல்லி இருக்கிறானா தங்கச்சி!!! ” ஆவலுடன் விசாரித்தான்.

‘என்ன சொல்வது !!! புருஷர்ர்ர்ர் ஒண்ணும் சொல்லலியே என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே,”என்ன தங்கச்சி இந்த பாவி என்னை பற்றி ஒன்றும் சொல்லவில்லையா!!! இப்படி ஆடு திருடுன திருடன் போல முழிக்குற….”

“அம்மாடி மிதுலா இது நம்ம வசீகரனோட நெருங்கிய ஸ்நேகிதன் பேரு சக்தி.சின்ன வயசில் இருந்தே ரெண்டு பேரும் ரொம்பவும் நெருக்கம்.வசீகரனும் சக்தியும் சேர்ந்து தான் ஒன்றாக பிசினஸ் செய்யறாங்க!!!! நம்ம வீட்டில் ஒருத்தன் போல”என்று மிதுலாவுக்கு அறிமுக படுத்தினார் காவேரி.

“அம்மா…. அவ்வளவு தானா என்னை பற்றி இன்னும் ரொம்ப முக்கியமான விஷயம் ரெண்டு இருக்கே !!! அதை மறந்துட்டிங்களே!!!

“உங்கள் திருவாயால் நீங்களே சொல்லணும்னு அத்தைக்கு ஆசை அண்ணா… அதனால் நீங்களே சொல்லிடுங்க!!!!எடுத்துக் கொடுத்தாள் மிதுலா.

“என்னை பற்றி நானே சொல்லிக் கொள்வதா!!என்று சற்று யோசிப்பது போல் செய்துவிட்டு ,”சரி நீங்க எல்லாரும் இவ்வளவு கெஞ்சுறத்தால நானே சொல்றேன்.என்னை பற்றி சொல்லாமல் விட்டது ரெண்டு விஷயம் ஒண்ணு நான் ரொம்மம்ப நல்லவன்,ரெண்டாவது எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை….”

“டேய்!!! அரட்டை, இது இப்போ ரொம்ப முக்கியமா??? போய் பைலை எடுத்துக் கொண்டு வா, ஆபிசுக்கு போகணும்”தோளில் கையை வைத்து அவனை தள்ளினான் வசீகரன்.

“எனக்கு இது முக்கியம் தான்டா!!! உனக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு,ஆனா எனக்கு அப்படியா!!! இன்னும் ஒரு தடவை கூட ஆகலை….. சிஸ்டர் கிட்ட சொன்னா அவங்க பிரின்ட்ஸ் கிட்ட என்னை பற்றி பெருமையா நாலு வார்த்தை சொல்லுவாங்க!!! இந்த விஷயத்தில் உன்னை நம்புறது வேஸ்ட்….. நீ குட்டையை குழப்பி வேணும்னா விடுவாய்…. அதுதான் நேரே மேலிடத்தில் சிபாரிசுக்கு வந்து விட்டேன்.நீ சொல்லு தங்கச்சி உனக்கு எத்தனை பிரின்ட்ஸ்???? அதுல பார்க்க அட்லீஸ்ட் சுமாரா ஒரு பொண்ணாவது இருக்கா???”

“எனக்கு நிறைய பிரண்ட்ஸ் எல்லாம் இல்லை அண்ணா!!! ஒரே ஒருத்தி தான் ரொம்ப குளோஸ்!!! ஆனா அவ உங்களுக்கு செட் ஆக மாட்டா!!! அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை ரெடி”

“என்ன தங்கச்சி …. அண்ணனை இப்படி கவுத்துட்டியே!!!!

“அட ஊரில் அவளை விட்டா வேற பொண்ணா இல்லை …. அவ சரியான ரவுடி …. அவளை மாதிரி இல்லாம உங்களுக்கு அடக்க ஒடுக்கமா, அமைதியான பொண்ணா பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்குறேன் அண்ணா… மிதுலா வந்துட்டேன்ல . இனி எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்….”

“சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இனி எல்லாவற்றையும் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” வசீகரனின் குரலில் மர்மம் இருந்தது.

‘புருஷர்ர்ர்ர் எதுக்கோ பிளான் செய்கிறார் … மிதுலா உஷார்!!!’

“அடப்பாவி !!!! கல்யாணம் ஆன ஒரே நாளில் உங்க அம்மாகிட்ட இருந்து கொத்துசாவியை பிடுங்கி உன் பொண்டாட்டியிடம் கொடுக்க பார்க்கிறாயா???? இதை நான் ஒருக்காலும் ஒத்துக் கொள்ள மாட்டேன்… ” வரிந்து கட்டிக் கொண்டு காவேரியின் சப்போர்ட்க்கு வந்தான் சக்தி.

“அடேய்!!! கொஞ்சம் அடங்கி இரு…. எனக்கு தெரியும் எதை எப்படி செய்ய வேண்டும் என்று…. சும்மா வால் அறுத்த பல்லி மாதிரி துள்ளாதே…. கிளம்பு இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு…நினைவு இருக்கா!!!! …. அப்புறமா மீட்டிங்கை முடிச்சுட்டு வந்து உன் பாச மலரோட கொஞ்சி குலாவு. இப்ப கிளம்புரியா…. இல்லையா?”

‘பல்லியா…. டேய் என்னடா இன்னிக்கு எக்ஸ்ட்ரா அரைமணி எடுத்து மேக்கப் பண்ணிக்கொண்டு வந்துருக்கேன்… நீ என்னடா இப்படி சொல்ற….”விட்டால் அழுது விடுபவன் போலமுகத்தைவைத்துக் கொண்டவனை பார்க்க மிதுலாவிற்கு சிரிப்பு பீறிட்டதுகஷ்டப்பட்டு முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டாள்.
“கிளம்புறேன் இரு….வந்தவனுக்கு ஒரு வாய் காபி கொடுடா…. உனக்கு புண்ணியமா போகும்.பேசிப்பேசி தொண்டை வத்தி போயிடுச்சு….”

“அடேய்!!! சாப்பாட்டு ராமா!!!! நான் கோடிக் கணக்கில் லாபம் வர பிசினஸ் பத்தி பேசிக்கிட்டு இருக்கேன்.நீ என்னன்னா!!!!….”

“சரிடா புது மாப்பிள்ளை… கல்யாணம் ஆன மறுநாளே தொழிலை பார்க்க வந்து விட்டாயே….. உன்னை போல அநியாயத்திற்கு நல்லவனா எல்லாம் என்னால் இருக்க முடியாது.எனக்கு எல்லாம் கல்யாணம் ஆச்சுன்னா ஒரு மாசம் ஆபீஸ் பக்கம் வர மாட்டேன் தெரியுமா….”

“அதனால தான்டா உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை”

“கிராதகா!!! உனக்கு எல்லாம் கல்யாணம் ஆகுது…. எனக்கு இன்னும் ஒரு தடவை கூட ஆகலையே!!!! இந்த அநியாயத்தை கேட்பாரே இல்லையா…. கடவுளே உனக்கு கண் இல்லையா…..”

“கடவுளுக்கு வேறு வேலை இல்லையா!!! இதெல்லாம் ஒரு வேண்டுதல் என்று கடவுளிடம் போய் முறை இடறீங்க!!! என்ற படி உள்ளே நுழைந்தாள் வர்ஷினி.

“ஹப்பா!!! வந்துவிட்டாயா… எங்கே உண்ட மயக்கத்தில் அங்கேயே தங்கி விட்டாயோ என்று நினைத்தேன்”

“நான் ஒன்றும் அத்தனை ரோஷம் கெட்டு போனவள் இல்லை இவள் வீட்டில் அமர்ந்து சாப்பிட…”

அத்தனை நேரம் முகம் மலர நின்று கொண்டு இருந்தவள் வர்ஷினியின் பேச்சில் சட்டென முகம் வாடலானாள் மிதுலா.

“ராஜேஸ்வரி!!! என்ன பேச்சு இது!!! வாயை அடக்கி பேசு … எத்தனை முறை தான் சொல்வது உனக்கு….” அதட்டியபடியே வந்தார் காவேரி.

சக்தியும் மறுப்பாக ஏதோ பேச வந்தவன் மிதுலாவை பார்த்து அந்த எண்ணத்தை கை விட்டான்.

“என்ன தங்கச்சி !!! ஊருக்கு நல்ல படியாக வந்து சேர்ந்துவிட்டதை அம்மாவுக்கு சொல்லிவிட்டாயா!!!!”மிதுலாவின் கவனத்தை திசை திருப்பினான்.

“அச்சச்சோ!!!! இல்லைண்ணா…. இதோ அம்மாவுக்கு உடனேபோன் பண்ணி பேசிடறேன் என்றபடியே தெய்வானைக்கு போன் பேச ஆரம்பித்தாள்.

முதல் இரண்டு முறை ரிங் போய் யாரும் எடுக்கவே இல்லை.மிதுலாவின் மனதில் லேசான பதற்றம் தொற்றிக் கொண்டது.

“அண்ணா …. அம்மா போனை எடுக்க மாட்டேங்குறாங்க… எனக்கு பயமா இருக்கு… “

“எங்கேயாவது பக்கத்தில் போய் இருப்பாங்க இல்லைன்னா தூங்கிட்டு கூட இருப்பாங்க…. இதுக்காக எல்லாம் வருத்த படுவாயா…. கொஞ்ச நேரம் பொறு … அவர்களே மறுபடி கூப்பிடுவாங்க”என்று கூறி அவளை தேற்றினான் சக்தி.

இவர்கள் இருவரின் பாச பிணைப்பை கண்டு உள்ளுக்குள் கனன்றாலும் ஒன்றும் சொல்லாமல் குளித்து விட்டு மீட்டிங் போவதற்கு தயாராகவசீகரன் கீழே வரவும், மிதுலாவின் கை பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்த வசீகரன் அப்படியே நின்று விட்டான்.
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான்…..

வசீகரனை பார்த்ததும் திடுக்கிட்டு போனை எடுப்பதற்கு பதிலாக கட் செய்துவிட்டாள்.

“தங்கச்சி !!! என்னையே மிஞ்சிடுவ போல இருக்கேரொமான்ஸ்ல…ரிங்க்டோன் அள்ளுது…இப்ப தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.நீ இந்த விசுவாமித்திரனை வழிக்கு கொண்டு வந்துடுவ…”

‘ஐயையோ புருஷர்ர்ர்ர் பார்க்கிறாரே!!! நல்லா மாட்டினேன்’என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே மிதுலாவின் போன் மறுபடியும் அலறியது.அவசர அவசரமாக போனை எடுத்து பேசினாள்.எதிர்முனையில் தெய்வானை ,”அம்மாடி மிதுலா!!!உன் வீட்டுக்கு போய் சேர்ந்துவிட்டாயா …. எப்படி ராஜாத்தி இருக்க”

தாயின் குரல் ஞயனநமனபோடுவதில் இருந்து தாய் அழுது கொண்டு இருந்ததை உணர்ந்தவள்,”என்னம்மா … ஏதோ பார்த்து பலவருடம் ஆனது மாதிரி விசாரிக்குறீங்க!!! காலையில் தானே பார்த்தீங்க…”கேலி பேசி தாயை இயல்பாக்க முயன்றாள்.

மகளின் எண்ணம் புரிந்து தெய்வானையும் முடிந்த அளவுக்கு குரலை இயல்பாக்கி சாதாரணமாக உரையாடினார்.

“தங்கச்சி நீயே பேசினா எப்படி போனை குடு… அம்மா கிட்ட நானும் ஒரு ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்”என்று கேட்டு வாங்கி தெய்வானையிடம் பேச ஆரம்பித்தான் சக்தி.

எந்த பந்தாவும் இல்லாமல்தெய்வானையிடம் இயல்பாக பேசினான்சக்தி.ஏற்கனவே மகளை எண்ணி கவலையில் கரைந்து கொண்டு இருந்த தெய்வானைக்கு சக்தியின் பேச்சு பெரும் பலமாக இருந்தது.சக்தியும் அவரது மனநிலையை உணர்ந்தே பொறுப்பாக பேசினான்.”நீங்ககவலைப்படாதீங்க அம்மா!!! நான் தங்கச்சியை பத்திரமா பார்த்துக்கிறேன் என்றுஆறுதல் கூறினான்

மிதுலா மெதுவாக திரும்பி வசீகரனை பார்த்தாள். அவன் லேப்டாப்பில் எதையோ தேடிக் கொண்டு இருந்தான்.’ஆறுதல்மொழி கூற வேண்டியவன் யாரோ போல இருக்க, யார் என்றே தெரியாதவன் எங்கோ இருக்கும் தன் அன்னையின் மனசிணுங்கலை போக்க முயற்சிக்கிறான்.பெருமூச்சு ஒன்றை உதிர்த்துவிட்டு சக்தியிடம் பார்வையை திருப்பினாள் மிதுலா.

“நீ பேசு மிதுலா”என்று போனை கொடுத்து விட்டு நாகரிகமாக விலகிப்போய் அமர்ந்து கொண்டான் சக்தி.

“மிதுலா … இப்ப தான் மனசுக்கு நல்லாதெம்பா இருக்கு… சக்தி ரொம்ப நல்ல பையனா தெரிகிறார்.அவரும் உனக்கு துணையாக இருப்பார்.நான்சொன்னது எதையும் மறந்து விடாதே…. பொறுப்பா நடந்துக்கோ… எப்போ என்னஉதவிதேவைப்பட்டாலும் எனக்கு சொல்லு… சரிதானா???”

இன்னும் சற்றுநேரம் பேசிவீட்டில் உள்ள சந்துரு,சந்திரா எதிர்வீட்டில் இருக்கும் எண்பது வயது ருக்குமணி பாட்டி வரை அனைவரையும்விசாரித்துவிட்டு போனை வைத்தாள்.

வசீகரனும் சக்தியும் ஒருபுறம் எதையோ விவாதித்துக் கொண்டிருக்க காவேரி கிச்சனில் சமையல்காரிக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டு இருந்தார்.வர்ஷினி ஆளையே காணவில்லை.நடு ஹாலில் இருந்து அந்த வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்.

“எவ்வளவு நேரம் தான் இப்படி பராக்கு பார்த்துக் கொண்டே இருப்பாய்!!! போ ..போய் இரவு உணவுக்கான டிபனை தயார் செய்….”அதிகாரமாக வெளிவந்தது வசீகரனின் குரல்.

“டேய்!!! ஆரம்பிச்சுட்டியா….தங்கச்சி இப்ப தானே வந்து இருக்கு… அதற்குள் என்ன அவசரம்??? நீ போய் ரெஸ்ட் எடுமா…”ஆதரவாக ஒலித்தது சக்தியின் குரல்.

“சக்தி நீ இதில் எல்லாம் தலை இடாதே…. வா நமக்கு மீட்டிங்கிற்கு நேரம் ஆகி விட்டதுஎன்று சக்தியிடம் கூறிவிட்டு,வேலைகாரிக்கு என்ன வேடிக்கை வேண்டி கிடக்கு…. போ போய் வேலையை பார்… “அதிகாரமாக மிதுலாவிற்கு மட்டும் கேட்கும் படி சன்ன குரலில் முணுமுணுத்துவிட்டு சென்றான்வசீகரன்.

‘மிதுலா !!!! உஷார்… புருஷர்ர்ர்ர் போற ரூட் சரி இல்லை…. இப்படியே விடாதே….. ஏதாவது செய் மிதுலா’என்று அவளது மனசாட்சி அவளுக்கு கட்டளையிட என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தாள் மிதுலா.

Facebook Comments Box
Previous PostNUNN 17
Next PostNUNN 21
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here