NUNN 22

0
1650
NUNN Tamil Novels 37

வீட்டைவிட்டுவெளியேறியவசீகரன் ,காரை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் ஓட்டிச்சென்றான். மனம் முழுக்க ஆத்திரம் நிரம்பி வழிந்தது.யார் மீது காட்டுவது என்று புரியாமல் கண்மண் தெரியாமல் காரை ஓட்டலானான்.’எத்தனை எளிதாக என் பெயருக்கு அவப் பெயரை ஏற்படுத்தி விட்டனர்.

இத்தனை நாட்களில் தொழிலில் ஏற்பட்ட வெற்றியினால் இப்பொழுது தானே கொஞ்சம் மகிழ்ச்சியை அனுபவிக்க ஆரம்பித்தேன்.தொழிலில் இத்தனை வெற்றிகள் குவித்தும் என்ன பயன்‘ . நினைக்க நினைக்க வசீகரனின் நெஞ்சு ஆறவில்லை.

வண்டியை நேரே அவன் எப்பொழுதாவது செல்லும் உயர்தர பாருக்கு செலுத்தினான்.போதும் போதும் என்று தோன்றும் அளவுக்கு குடித்துக் கொண்டே இருந்தான்.நேரம் நடுஇரவை நெருங்கவே சர்வர் வந்து பாரை மூடும் நேரம் ஆயிற்று என்று சொன்னதும் வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு கிளம்பலானான்.

அங்கே வீட்டில் மிதுலாவின் நிலையோ வேறு மாதிரி இருந்தது.கோபமாக கிளம்பி சென்ற வசீகரன் வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை என்றானதும் கவலை அடைய தொடங்கினாள் மிதுலா.மொபைலில் அழைத்து பேசலாம் என்றால் வசீகரனின் மொபைல் எண்ணும் அவளுக்கு தெரிந்து இருக்கவில்லை.வேறு யாரிடம் கேட்பது என்றும் அவளுக்கு புரியவில்லை.

காவேரியிடம் கேட்டால் தருவார் தான் ஆனால் இந்த நடு இரவில் அவரை தொந்தரவு செய்ய அவளுக்கு மனம் இல்லை.வர்ஷினி கீழே காவேரியின் அறைக்கு பக்கத்துக்கு அறையில் தான் இருப்பாள்.இந்நேரத்தில் அவளை எழுப்பிக் கேட்கலாம்.ஆனால் அவள் கண்டிப்பாக தரமாட்டாள்.

தாலி கட்டிய கணவனின் மொபைல் எண் கூட இல்லையா???… எப்படி இருக்கும்முறைப்படி நடந்து இருந்தால் அதெல்லாம் தெரிந்து இருக்கும்உனக்கு தெரிந்து இருக்காது தான்என்பன போன்ற குத்தல் மொழிகளை கூறிவிட்டு மறுபடி தூங்க போய்விடுவாள்.

மற்றபடி கண்டிப்பாக அவளிடம் இருந்து வசீகரனின் எண்ணை வாங்க முடியாது.வேறு யாரிடம் கேட்டு பார்க்கலாம் என்றால் அடுத்து அவளின் நினைவிற்கு வந்தது சக்தி தான். ஆனால் சக்தி அண்ணாவின் நம்பரும் தன்னிடம் இல்லாதது நினைவுக்கு வரவும் தன் நிலையை எண்ணி தானே நொந்து தான் போனாள் மிதுலா.

என்ன செய்வது என ஒன்றும் புரியாமல் சற்று நேரம் அறைக்குள் உலாத்தியவள் பிறகு ரோட்டில் வேறு ஏதேதோ கார்களின் சத்தம் கேட்கும் பொழுதெல்லாம் வசீகரன் தான் வந்து விட்டானோ என்று எண்ணி கீழே இறங்கி பார்ப்பதும் மறுபடி மாடிக்கு செல்வதாகவும் ஏறியேறி இறங்கிக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாக நடுநிசியை தாண்டி வசீகரன் வந்து சேர்ந்தான்.காரை போர்டிகோவில் அவன் நிறுத்திய வேகத்தில் அவனது கோபத்தின் அளவு தெரிந்தது மிதுலாவிற்கு.சற்று நேரம் வரை கணவனை காணாமல் தவித்தவள் இப்பொழுது அவனின் கோபத்தை எப்படி சமாளிக்க போகிறோமோ என்று பயம் கொள்ள ஆரம்பித்தாள்.செடிகளின் மறைவில் தோட்டத்தில் அவனுக்காகதவிப்போடுகாத்திருந்த மிதுலாவைவசீகரன் கவனிக்கவே இல்லை.

கால்கள் தள்ளாட தட்டு தடுமாறி நடந்து வந்தான் வசீகரன்.வாசலில் நுழையும் போதே அவனின் நடையில் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டாள் மிதுலா.ஏற்கனவே அவர் சாப்பிடவில்லை இப்படி குடித்து விட்டு வேறு போகிறாரே….ஏதேனும் சாப்பிட்டாரோ இல்லையோ!!!! பாவம் எல்லாம் என்னால் தான்கொஞ்சமாவது சாப்பிட வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டே மெதுவாக மாடி ஏறினாள் மிதுலா.

புருஷர்ர்ர்ர் சும்மாவே சாமியாடுவார் இப்பொழுது எப்படி இவரை சமாளிப்பேன்!!!! குடித்து வேறு இருக்கிறாரே!!!! மெதுவாக  மாடி அறைக்குள் நுழைந்தாள் மிதுலா.

குடி போதையில் தள்ளாடி தள்ளாடி உள்ளே நுழைந்த வசீகரன் மிதுலாவை கொல்லும் அளவுக்கு ஆத்திரத்துடன் அவளை தேடிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.அறைக்குள் அவளை காணாமல் தேடியவனுக்கு அப்பொழுது தான் நினைவில் வந்தது அவள் மயக்கமாகும் வரை அவள் கழுத்தை நெறித்தது. பதட்டத்துடன் அவளை தேட தொடங்கினான்.

ஒருவேளை அவளுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்று எண்ணி அவன் உள்ளம் அதிர்ந்தது முன்னிலும் அதிக பதட்டத்தோடு அவளை தேட தொடங்கினான் வசீகரன்.அறையின் உள்ளே நுழைந்த மிதுலாவை வசீகரன் கவனிக்கவில்லை.கட்டிலில் இருந்து தவறி ஏதும் விழுந்து இருப்பாளோ என்று குனிந்து அவளை தேடிக் கொண்டு இருந்தான்.

வசீகரன் எதையோ தேடுவதை பார்த்த மிதுலா தானும் அவனுடன் சேர்ந்து தேட தொடங்கினாள்.ஒவ்வொரு இடமாக தேடி அவள் இல்லை என்றானதும் வசீகரனின் இதய துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது.அதுநேரம் வரை அவள் மேல் இருந்த வெறுப்பு காணாமல் போய்  ஊண் உருக உயிர் பதற அவளை  தேட ஆரம்பித்தான் வசீகரன்.

அவனுக்கு பின்னாலே நின்று கொண்டு அவன் செல்லும் இடம் எல்லாம் பின்னாலே சென்ற மிதுலா விற்கு அவன் எதையோ தேடுவது நன்கு புரிய இப்படி இந்த நேரத்தில் எதை தேடுகிறார் புருஷர்ர்ர்ர் என்ற எண்ணத்தோடு வசீகரனின் பின்னாலேயே அலைந்தாள் மிதுலா.அறை முழுவதும் தேடி ஓய்ந்து போன வசீகரன் ஒருவேளை மொட்டை மாடியில் இருப்பாளோ என்ற நினைவு வரவும் சட்டென மாடிக்கு செல்ல திரும்பியவன் அங்கே அவனுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த மிதுலாவை பார்த்து விட்டான்.

அவளை பார்த்ததும் அவன் முகத்தில் எதற்காக இத்தனை மகிழ்ச்சி என்று மிதுலாவால் இனம் காண முடியவில்லை. தள்ளாடிக்கொண்டே மிதுலாவை நெருங்கினான் வசீகரன்.ஏற்கனவே பயத்தில் இருந்த மிதுலா வசீகரன் நெருங்கவும் பயந்து பின்னாலே செல்ல ஆரம்பித்தாள் மிதுலா.

மிதுலா பயத்தில்  பின்னோக்கி செல்வதை வசீகரன் உணரவேயில்லை. அவன் கண்கள் முழுதும் மிதுலாவின் மீதே பதிந்து இருக்க , தொலைந்து போன தன் பொருளை கண்டு கொண்ட நினைவுடன் நெருங்கினான்.சட்டென ஒரே எட்டில் தாவி மிதுலாவை அணைத்தான் வசீகரன்.அவனுடைய அந்த அணைப்பு எதற்காக என்று மிதுலாவிற்கு நிச்சயம் தெரிந்து இருக்கவில்லை.வந்ததும் தன்னைமேலும்அடிப்பான் அல்லது சண்டை போடுவான் என்றபயத்தோடு மேலே வந்தமிதுலாவிற்குவசீகரன் அணைக்கவும் தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவியில்லை.

 கணவனின் முதல் அணைப்பு…. எதிர்பாராத நேரத்தில் ,அசாதாரணமான ஒரு சூழ்நிலையில்.வசீகரனின் கைகள் அத்துமீறவில்லை தான். இடையோடு கை கொடுத்து அவளை அணைத்த வண்ணம் நின்று கொண்டு இருந்தான்.ஆனால் மிதுலாவிற்கோ கணவனின் அணைப்பு ஒரு பக்கம் அவளது முக சிவப்பை அதிகரித்தது.அதே நேரம் வசீகரனிடம் இருந்து வசீகரனுக்குரிய பிரத்யேக வாசனையை உணர்வதற்கு பதிலாக மதுவின் வாசனையை தான் அவளால் உணர முடிந்தது.

கூச்சத்தினாலோ அல்லது மதுவின் மேல் இருந்த வெறுப்பினாலோ மிதுலா மெதுவாக நெளியத் தொடங்கினாள்.இப்போ எதுக்கு இவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்று கோபம் அடைந்த வசீகரன் பிடியை மேலும் இறுக்கினான்.மேலும் அவளை நகர முடியாதபடி இறுக்கி அணைத்துக் கொண்டான்.

ஒரு அளவிற்கு மேல் வசீகரனின் வேகத்தை தாங்க முடியாமல் மிதுலா இன்னும் அவளது எதிர்ப்பைக் காட்ட தொடங்கினாள்.

 வசீகரனுக்கு சினம் மிக அவளை தள்ளி நிறுத்திவிட்டு ,  “எங்கேயடி போய் தொலைந்தாய்??” என்று ஆத்திரம் மிக கேள்வி கேட்டான்.இதே கேள்வியை வசீகரன் அவளை பார்த்தவுடன் கேட்டு இருந்தால் அதற்கு மிதுலாவிடம் இருந்து வேறுவிதமான பதில் வந்து இருக்கலாம்.ஆனால் அப்பொழுது மிதுலா இருந்த மனநிலையில் ,”எல்லாம் உங்கள் கண் எதிரில் தான் இருந்தேன். குடி போதையில் உங்கள் கண்களுக்கு தான் என்னை அடையாளம் தெரியவில்லைஎன்று சற்று கோபமாகவே சொன்னாள்.

ஆமாண்டி….. நான் குடித்து தான் இருக்கிறேன்…..அதற்கு என்ன இப்பொழுதுஅதை கேட்க நீ யார்????”

நான் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்??? நான் உங்க பொண்டாட்டி…. நியாபகம் இருக்கட்டும்!!!!”

அப்படியா!!! என்றான் போலியான. ஆச்சரியத்துடன்

கிண்டலா சார்…..” கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை வெளியே எடுத்து காட்டி, ” இதோ இதற்கு பெயர் தான் தாலிஇதை நீங்கள் தான் அக்கினி சாட்சியாக என் கழுத்தில் கட்டினீர்கள் நியாபகம் இருக்கிறதா???”

அப்படியா??? ” அதற்கும் ஆச்சரியமாகவே கேள்வி கேட்டான் வசீகரன்.

நான் எத்தனை சீரியசாக பேசிக் கொண்டு இருக்கிறேன்….நீங்கள் என்னடாவென்றால் கேலி செய்து கொண்டு இருக்குறீர்கள்……”

!!! அப்படியானால் நானும் சீரியஸாக பேசட்டுமா….”

உங்களை அப்படி பேச வேண்டாம் என்று நான் சொன்னது போல் இல்ல நீங்க பேசறீங்க

வாயை குவித்தான் வசீகரன்.நிதானமாக அழுத்தமான நடையுடன் மிதுலாவை நெருங்கினான் வசீகரன்.வசீகரனின் பார்வையில் இருந்த செய்தியை புரிந்து கொள்ள முடியாமல் பார்வை தடுமாறி வேறு பக்கம் பார்வையை செலுத்தி விட்டு ஒரு கள்ளப் பார்வையை வசீகரன் மீது செலுத்தி விட்டு தனது பார்வையை தழைத்துக் கொண்டு கீழே பார்க்க ஆரம்பித்து விட்டாள் மிதுலா.

வசீகரன் அவனது பார்வையை திருப்பவும் இல்லை நடையை நிறுத்தவுமில்லை.வசீகரன் மிதுலாவை நெருங்கி நின்றான்.லேசாக விழி உயர்த்தி நிமிர்ந்து பார்த்தாள் மிதுலா.

வசீகரன் அவளுக்கு மிக அருகில் நெருங்கி நின்றான்.”ஒரு பெண்டாட்டிக்கு கணவனை கேள்வி கேட்கும் உரிமை மட்டும் தான் இருக்கிறதா????…. அவளுடைய கணவனின் தேவைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் தான் இருக்கிறது தெரியுமா???”

மிதுலா வாயை திறக்கவே இல்லை.மூச்சுக்காற்றை  உணரும் தூரத்தில் வசீகரன் நெருங்கி நிற்க அவள் மயங்கி தான் போனாள். குனிந்தே இருந்த மிதுலாவை பார்த்ததும் வசீகரனின் பார்வையில் கனிவு வந்தது.

கேட்கிறேன் ….பதிலையே காணோம்….கொஞ்சம் முன்னர் அப்படி வாய் பேசினாய்….இப்பொழுது என்ன ஆயிற்று அந்த வாய்க்கும்ம்ம்ம்மிதுலாவின் தாடையை மென்மையாக பற்றி அவள் முகத்தை நிமிர்த்தினான். ஒரு நிமிடம் வசீகரனை நிமிர்ந்து பார்த்தவள் அவனுடைய கண்ணோடு கண் கலக்க முடியாமல் வெட்கம் மேலிட தவித்துப் போய் மீண்டும் பார்வையை தழைத்துக் கொண்டாள்.

வெட்கத்தில் அவள் தடுமாறதன்னை  பிடிக்காமல் தான் அவள் அப்படி செய்வதாக நினைத்து,”ஏன் என் முகத்தை பார்க்க பிடிக்கவில்லையா???? உன் காதலன் அந்த வினோத் என்றால் இந்நேரம் இப்படி முகம் திருப்பி இருப்பாயா??? ” சாட்டையென வந்து விழுந்தது வார்த்தைகள்.

அதுநேரம் வரை இருந்த மோனநிலையில் இருந்து யாரோ தன்னை பிடித்துதள்ளி விட்டது போல் உணர்ந்தாள்.இருப்பினும் கணவனுக்கு எடுத்து சொன்னால் புரிந்து கொள்வானோ என்றஎண்ணம் தோன்றவும் புருஷர்ர்ர்ர் சொன்னால் புரிந்து கொளவார் என்று எண்ணி வசீகரனுக்கு விளக்க ஆரம்பித்தாள்.

வினோத்தை நான் எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாடி பார்த்து பேசி இருக்கிறேன்.அதன்பிறகு அவரின் குணம் சரி இல்லை என்று கங்காதரன் அங்கிள்அவரை வீட்டில் சேர்க்க வேண்டாம்னு சொன்னதால் அம்மா அவரை வீட்டிற்குள் அனுமதித்தது இல்லை.”

….அதனால் தான் இரண்டு பேரும் உங்கள் காதலை பரிமாறிக் கொள்ள அன்று ஹோட்டலுக்கு வந்து இருந்தீர்களா?”

தயவுசெஞ்சு இப்படி எல்லாம் பேசாதீங்க….”வருத்தத்துடன் வந்தன வார்த்தைகள் மிதுலாவிடம் இருந்து.

அவள் முகத்தையும் அதில் இருந்த வருத்தத்தையும் உணர்ந்தவன் ,”பின்னே ஏனடி விலகுகிறாய்???”அவன் குரலில் இருந்தது என்னவென்று மிதுலாவிற்கு புரியவில்லை.அது கோபமா இல்லை ஆற்றாமையா இல்லை வருத்தமா????….. மிதுலா உணர்ந்தாளில்லை.

இதற்கு என்ன பதில் சொல்லதிருத்திருவென முழித்தாள் மிதுலா.’அப்படி எல்லாம் ஒன்றும் இல்லைஎன்று சொன்னால் அவனது அணைப்பிற்காக அலைவது போல் இருக்கும்,இல்லை புருஷர்ர்ர்ர்ரிடம் சொல்ல என்ன தயக்கம் என்று அவரிடம் வெட்கத்தை விட்டு சொல்லி விட்டால் தன் வாழ்நாளில் முக்கியமான இந்த நாளை எண்ணி அவள் மட்டும் அல்ல வசீகரனும் சேர்ந்து கூடபின்னாளில்வருந்தலாம். தங்களுடைய இந்த இனிமையான பொழுது மதுவின் தாக்கத்தால் ஏற்பட்டஒரு நிகழ்வாக இருந்து விட்டால் பிறகு காலம் முழுமைக்கும் அதை எண்ணி வருந்துமாறு நேர்ந்து விடக் கூடும்.விடிந்ததும் வசீகரனே கூட குடி போதையில் நடந்த தவறு என்று கூறலாம்,அதற்கு மட்டும் இடம் கொடுக்கவே கூடாது என்று எண்ணியவள் உறுதியான மனதோடு நிமிர்ந்து வசீகரனை பார்த்தாள்.

இத்தனை நேரம் மிதுலாவையும் அவள் முகத்தில் தெரிந்த மாற்றங்களையும் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்த வசீகரன்,அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவளை பார்த்தான்.

நேற்று இரவு என்னிடம் ஒரு வார்த்தை சொன்னீர்கள் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரியவில்லை….. எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறதுகண்களை ஒரு நொடி அழுந்தமூடி திறந்து வசீகரனை பார்த்து அவன் கண்களை நேராக பார்த்து பேசினாள்.”

நேற்று என்னை நீ இனி என் வீட்டு வேலைக்காரி என்று சொன்னீர்கள்இப்பொழுதும் அதே எண்ணத்தோடு தான் இருக்குறீர்களா??? இல்லை உங்கள் மனமார என்னை உங்கள் மனைவியாக ஏற்று கொண்டு விட்டீர்களா???”வசீகரன் என்ன பதில் சொல்ல போகிறானோ என்று கண்களில் உயிரை தேக்கிய படி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் மிதுலா……..

Facebook Comments Box
Previous PostNUNN 21
Next PostNunn 23
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here