Nunn 23

0
1324
NUNN Tamil Novels 37

காலை எழுந்ததும் குளித்து முடித்து வசீகரன் எழும் முன்னரே எழுந்து தயாராகி தோட்டத்திற்கு வந்து அமர்ந்து விட்டாள் மிதுலா.வசீகரனை எதிர்கொள்ள அவள் விரும்பவில்லை…..அவளுடைய தற்போதைய மன நிலைக்கு அவளுக்கு தனிமை தேவைப்பட்டது….எனவே காவேரியிடம் கூட சென்று பேசாமல் தனிமையை தேடி தோட்டத்திற்கு வந்து அமர்ந்து விட்டாள்.

தோட்டத்தில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருந்தவளின் கவனத்தை கலைத்தது சக்தியின் குரல்.சக்தி தோட்டத்தில் இவள் அமர்ந்து இருந்த இடத்திற்கு நேர் பின்னால் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தான்.ஆனால் பேச்சு ஏதோ ரகசியம் பேசுவது போல மெதுவாக பேசிக் கொண்டு இருந்தான்.சக்திக்கு அருகிலேயே இருந்ததால் மிதுலாவிற்கு அவன் பேசியது அத்தனையும் தெளிவாக கேட்டது.

“நீ செய்வது ஒன்றும் சரி இல்லை வனி”
“நான் அப்படி என்ன செய்து விட்டேனாம்??? காலையில் என்னை இப்படி தோட்டத்தில் உட்கார வைத்து அறிவுரை செய்கிறீர்கள்!!!!”
“மிதுலா பற்றி தான் பேசுகிறேன் வனி”
“அவளை பற்றி என்னிடம் பேசுவதாக இருந்தால் நான் கிளம்புகிறேன்”
“பொறு வனி….எதற்கு இத்தனை கோபம்….மிதுலா நல்ல பெண்ணாக தான் தெரிகிறாள்”

“அவள் நல்லவளாக உங்கள் கண்ணுக்கு தெரிந்தால் நீங்களே அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுங்கள்….எனக்கு என்ன வந்தது????”

“உன் கோபம் அவசியமற்றது வனி”

“உங்களுக்கு அப்படித்தான் தெரியும்….ஏன் என்றால் அவர் உங்களுக்கு வெறும் நண்பன்…..எனக்கு அண்ணன்…. சின்ன வயசுல இருந்து அவரை பார்த்து தான் வளர்ந்தேன்…எனக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்தவர்…அப்பா ஸ்தானத்தில் என்னுடைய தேவைகளை பார்த்து பார்த்து செய்தவர்…. அம்மாவை விட என் மேல் உயிரையே வைத்து இருப்பவர்…..உலகில் உள்ள எல்லா சந்தோஷத்தையும் எனக்கு கொடுக்க வேண்டும் என்று எனக்கான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தவர்….ஆனால் அவர் இப்பொழுது மகிழ்ச்சியாக இல்லையே!!!! அதற்கு எல்லாம் யார் காரணம் அவள் தானே!!!….. அவளிடம் நான் கொஞ்சி குலாவ வேண்டுமா???”

“நீ சொல்வது எல்லாம் நியாயம் தான்….ஆனால் உங்க அம்மா சொன்னதை வைத்து பார்க்கும் பொழுது இது எதுவுமே திட்டமிட்ட நிகழ்வு என்று எனக்கு தோன்றவில்லை வனி”

“எதை வைத்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள்?….அண்ணன் போன்ற ஒரு நல்லவருக்கு அவ பெயரை உண்டாக்கி வலுக்கட்டாயமாக அவரை மணக்க வைத்து இருக்கிறார்கள்… இவர்கள் நல்லவர்களா????”

“நானும் இதை பற்றி தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு டிடெக்ட்டிவ் உதவியை அணுகினேன் வனி….அவர்கள் மிதுலாவை பற்றியும் அவளுடைய அம்மாவை பற்றியும் நல்ல விதமாக தான் சொல்கிறார்கள்.உன் அண்ணன் அளவிற்கு சொத்துக்கள் இல்லாவிட்டாலும் அவர்களும் ஓரளவு வசதியான குடும்பம் தான். மிதுலாவின் அம்மா வீட்டை விட்டு பெரும்பாலும் வெளியே செல்ல மாட்டார்களாம்.

அனாவசிய செலவுகள் என்று எதுவும் இருவரும் செய்தது கிடையாது.மகளையும் பார்ட்டி ,டிஸ்கோ என்று எங்கேயும் செல்ல அனுமதித்தது கிடையாது….. மிதுலா வீட்டுக்கு அருகில் விசாரித்த வரையில் அவர்கள் இருவரையும் பற்றி யாரும் தவறாக ஒரு வார்த்தை சொல்லவில்லை….வசீகரனின் திருமணத்தின் போது நான் இங்கே இல்லாமல் இருந்து இருக்கலாம்…அதற்காக அந்த திருமணத்தை பற்றியும் பெண்ணின் குடும்பத்தை பற்றியும் விசாரிக்காமல் இருப்பேனா…. அவர்கள் குடும்பத்தை பற்றி விசாரித்து தவறு இருக்காது என்று நிச்சயமாக தெரிந்த பின்பு தான் இந்த திருமணம் நடக்க நான் அனுமதித்தேன் வனி….”

“இங்கேயும் தொழில் சம்மந்தப்பட்ட சில முக்கிய வேலைகள் இருந்ததால் தான் என்னாலும் திருமணத்திற்கு வர முடியவில்லை.வசீகரனும் நீ அங்கேயே இருந்து தொழிலை பார்த்துக் கொள் என்று உறுதியாக சொல்லிவிட்டான்.அதனால் தான் நான் வரவில்லை…மற்றபடி வசீகரனின் மீது எனக்கு இருக்கும் அக்கறை குறைந்து போய் விடவில்லை வனி ……எனக்கென்னவோ இவர்களின் குடும்ப நண்பர் அந்த கங்காதரன் மீது தான் சந்தேகமாக இருக்கிறது.”

“இதை எல்லாம் ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டு இருக்குறீர்கள்?”

“நீ மிதுலாவிடம் கொஞ்சமே கொஞ்சம் அன்பாக பேசி பழகலாம் இல்லையா???” எதிர்பார்ப்போடு கேட்டான் சக்தி.

“என் அண்ணா அவளால் தானே நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் அப்படி இருக்கும் போது அவளிடம் நான் கொஞ்சி குலாவ வேண்டுமா??? என்னால் முடியாது….”

“ஒன்றை நன்றாக புரிந்து கொள் வனி, மிதுலாவிற்கும் உன் அண்ணனிற்கும் திருமணம் முடிந்து விட்டது.இப்பொழுது அவர்கள் கணவன் மனைவி அவர்கள் பிரச்சினையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்…. தேவை இல்லாமல் நீ மிதுலாவை எதிரியாக பார்க்காதே…. ஒருவேளை நாளையே அவர்கள் இருவரும் சமாதானம் ஆகி விடலாம்.அதன் பிறகு உனது இந்த கோபம் அனாவசியமானது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்”

“அவ்வளவு தானே உங்கள் அறிவுரை முடிந்துவிட்டது அல்லவா ….நான் கிளம்புகிறேன்”

“இல்லை இன்னும் முக்கியமான விஷயம் நாம் பேச வேண்டி இருக்கிறது” என்றான் உறுதியான குரலில்

“இன்னும் என்ன….உங்கள் அருமை தங்கைக்கு நான் ஏதும் சேவகம் செய்ய வேண்டுமா…”எரிச்சலாக கேட்டாள் வர்ஷினி.

“மறுபடியும் ஊருக்கு போகிறாயா வனி???…”வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று அஞ்சி பேசுவது போல் மென்மையாக ஒலித்தது அவனது குரல்.
“………………”
“பேசு வனி….இத்தனை நேரம் பட்டாசாய் பொரிந்தவள் இப்பொழுது மட்டும் மௌனம் காப்பதேன்????…மிதுலாவிடம் அன்பாக பேச மாட்டாய் …சரி….என்னிடம் ஒரு வார்த்தை ஆசையாக இல்லாவிட்டாலும் அன்பாக பேசலாமே” ஏக்கம் வழிந்தது சக்தியின் குரலில்.

“எனக்கு வேலை இருக்கிறது….நான் போகிறேன்”….உள்ளே செல்ல முயன்றாள் வனி.

அவளது கையை பிடித்து அவளை தடுத்து நிறுத்தினான் சக்தி.”உன்னை பேச வைப்பதற்காக ஒவ்வொரு முறை நான் செய்யும் எந்த முயற்சியையும் நீ கண்டு கொள்வதாகவே எனக்கு தெரியவில்லை…. இன்னும் என்ன செய்து என் நேசத்தை உனக்கு புரிய வைக்க வேண்டும் என்றாவது ஒரு வார்த்தை சொல்…. நீ விடுமுறையில் இங்கே வரும் அந்த சில நாட்களுக்காக தான் நான் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் வனி.”

நீ எதற்காக இப்படி தயங்குகிறாய் என்றெல்லாம் எனக்கு தெரியாது ….உன் பதிலுக்காக மட்டும் தான் நான் காத்திருக்கிறேன் வனி….வாயை திறந்து கூட சொல்ல வேண்டாம்….ஒரே ஒரு பார்வை மட்டும் பார்…. போதும் ….மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்….”

“ப்ளீஸ்!!! கையை விடுங்கள்!!!! நான் போக வேண்டும்” இறைஞ்சுதலாக வெளிவந்தன வார்த்தைகள்.

“ப்ளீஸ் வனி….ஒரே ஒரு வார்த்தை சொல்….ஐந்து வருடத்திற்கு முன்பே ஒருமுறை என்னை உன் மடிமீது சாய்த்து வைத்துக் கொண்டு சொன்னாயே…. இப்பொழுது மட்டும் சொல்ல மறுப்பதேன் வனி???நீயும் நான் அனாதை என்பதால் ஒதுக்குகிறாயா????…சக்தியின் உள்ளத்தில் கூட இத்தனை வலியும் வேதனையும் இருக்கும் என்பதை மிதுலா அப்பொழுது தான் உணர்ந்து கொண்டாள்.

இனி இந்த இடத்தில் இருக்க வேண்டாம்….பேச்சு வேறு ஏதோ திக்கில் செல்கிறது…. என்னை யாரேனும் பார்த்தால் வேண்டுமென்றே ஒட்டுக் கேட்பதாக நினைத்துக் கொள்ளக் கூடும் என்று நினைத்த படியே அங்கிருந்து நழுவினாள் மிதுலா.

‘சக்தி அண்ணா வர்ஷினியை காதலிக்கிறாரா????…. எனக்கு தெரியாமல் போச்சே!!!….’

ஆமாம்டி வந்த இரண்டே நாளில் உனக்கு எல்லாம் தெரிந்து விட வேண்டுமாக்கும்…. போடி போய் ஏதாவது உருப்படியான வேலையை பாரு…. ‘
‘உருப்படியான வேலையா!!!! அப்படின்னா???’

‘அடியேய் !!! கிரகம் பிடிச்சவளே எதையாவது செய் என்னை விட்டு விடு ‘ என்று கூறிவிட்டு சட்டென ஓடி மறைந்தது அவளது மனசாட்சி.

பின்புற தோட்டத்தில் மர ஊஞ்சலில் போய் அமர்ந்தவள் முன்தினம் நடைபெற்ற நிகழ்வுகளை யோசிக்க ஆரம்பித்தாள்.மிதுலாவின் கண்களில் இருந்த கண்ணீர் கீழே விழுந்தது.

தன்னுடைய கேள்விக்கு வசீகரன் என்ன பதில் சொல்ல போகிறானோ என்று துடிக்கும் இதயத்தோடு காத்திருக்க தொடங்கினாள் மிதுலா.வசீகரனின் முகமோ சலனமற்று இருந்தது.இரண்டு கைகளாலும் தலையை மாறி மாறி கோதினான்….. ஆழ்ந்த மூச்சுகளை வெளியேற்றினான்…..தலையை பிடித்த படியே கட்டிலில் அமர்ந்தவன் அப்படியே சில நிமிடம் இருந்தான்.

பின்பு மெதுவாக நிமிர்ந்து மிதுலாவை பார்த்தவன் “எனக்கு நிஜமாவே தெரியலைடி….நீ என்னுடைய மனைவி அப்படின்னு நினைக்கும் போது எனக்கு சந்தோசமா தான் இருக்கு ஆனா அடுத்த நிமிடமே நம்ம கல்யாணம் நடந்த முறை எனக்கு நியாபகம் வந்து விடுகிறது….நான் எப்படி இருந்தவன் தெரியுமா????கல்லு மாதிரி இருக்கேன்னு எல்லாரும் சொல்வாங்க….தொழிலில் அவ்வளவு சாதித்தும் என்ன பயன்???? நீங்க எல்லாரும் சேர்ந்து எவ்வளவு ஈசி ஆஹ் என்னை பணிய வச்சுட்டீங்க…”

“நான் வசீகரன்டி….எத்தனை பெண்கள் என் பின்னால் அலைந்து இருப்பார்கள் தெரியுமா???? அவர்களில் யாரையும் நான் திரும்பி கூட பார்த்ததில்லை…..ஏன்??? எந்த பெண்ணிடமும் சிறிது நேரம் நின்று பேசியது இல்லை…சிரித்தது கூட இல்லை…..”

“என் நினைவு எல்லாம் எனது குடும்ப சொத்துகளை கடனில் இருந்து மீட்க வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது…. ஒரு லட்சியத்தோடு ஓடிக் கொண்டு இருந்தேன்…..ஒரு தேவதையின் அருளால் அதிர்ஷ்ட காற்று என் பக்கம் வீச தொடங்கியது.எல்லாவற்றையும் வெற்றிகரமாக மீட்டு எடுத்தேன்….ஆனால் நம் விஷயத்தில் இந்த ஈகோ என்னை பாடாய் படுத்தி எடுக்கிறது என்று நினைக்கிறேன்.”

வசீகரன் பேச பேச சிலையாகவே மாறி விட்டாள் மிதுலா….விரும்புகிறேன் என்று சொன்னால் பரவாயில்லை….இல்லை நான் உன்னை வெறுக்கிறேன் என்று ஆணித்தரமாக அடித்து சொல்லி விட்டாலும் பரவாயில்லை….அவர் மீது அன்பை பொழிந்து என்னை நேசிக்க வைத்து விடலாம்….எனக்கு ஈகோ பேய் பிடித்து ஆட்டுகிறது என்று சொல்பவரை என்ன செய்வது……சற்று நேரம் அப்படியே இருவரும் நின்று கொண்டே இருந்தவர்களில் முதலில் சுதாரித்தது மிதுலா தான்.மெதுவாக வசீகரனை நெருங்கி ….”ஏதாவது சாப்பிட்டீர்களா” என்று கேட்டாள்.

“ஓ அதுதான் மூச்சு முட்ட குடித்து இருக்கிறேனே…… ஹா ஹா…. “.என்று ஏதோ ஜோக் சொன்னது போல பெரும்குரலில் சிரிக்க ஆரம்பித்தான்.

‘எப்படி தான் குடிச்சா இந்த மாதிரி மொக்கை ஜோக் எல்லாம் வருதோ’ என்று மனதுக்குள் நினைத்தவள் வெளியே ‘ ஈஈஈ’ என்று சிரித்து வைத்தாள்….

“சரி நீங்க இருங்க நான் போய் பால் எடுத்து வருகிறேன்….குடித்துவிட்டு படுங்கள்”.
“எனக்கு பால் எல்லாம் வேண்டாம்….நீ இங்கே வா”

‘புருஷர்ர்ர்ர் நம்மளை எதுக்கு இப்போ கிட்ட கூப்பிடறார்’ என்று நினைத்துக் கொண்டே வசீகரனின் அருகில் போய் நின்றாள் மிதுலா.

“நான் என்ன சின்ன பப்பாவா???? பால் குடித்து விட்டு தூங்க??? கேட்டுக் கொண்டே அவளின் இடையில் கை கொடுத்து அவனை நோக்கி இழுத்தான்.வசீகரன் இழுத்த வேகத்தில் பஞ்சு பொதி போல் அவன் மேல் மோதியவள்,மதுவின் நாற்றத்தினால் முகத்தை சுளித்தாள்.அதை கண்டு வசீகரன் எரிச்சலுற்றான்.

“இப்ப எதுக்குடி முகத்தை இப்படி ஒரு முழ நீளத்திற்கு தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாய்…..கட்டின புருஷனின் கை மேலே பட்டால் உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா???”படபடவென பொரிந்து தள்ளினான் வசீகரன்.

மேலே அவன் பேசும் முன் லஜ்ஜையுடன் அவன் வாயை தன்னுடைய கைகளால் மூடி,” விட்டா பேசிக்கிட்டே போறீங்களே புருஷர்ர்ர்ர்…. என் புருஷன் கிட்டே வந்தால் எனக்கு அவரின் பிரத்யேக வாசனையை தான் என்னுடைய நாசி உணர வேண்டும்……இப்போ எனக்கு உங்ககிட்ட வேறு ஏதோ வாடை தான் வருகிறது….எனக்கு ஒரு மாதிரியா இருக்கு”

“ஒரு மாதிரினா…. “
“குமட்டல் வர மாதிரி இருக்கு….”
“ஓஹோ!!! என்றவன் அவள் எதிர்பார்க்காத நேரம் அவளை இழுத்து பிடித்து அவள் கழுத்தருகில் முகம் புதைத்தான்.”கொஞ்ச நேரம் அப்படியே இரு” என்ற கட்டளையுடன்.மிதுலா அசைவற்று நின்று விட்டாள். கழுத்தில் வசீகரனின் மூச்சுக்காற்றை அவளால் உணர முடிந்தது. காதோரம் அவன் மீசை முடி குறுக்குறுக்க கண் மூடி கிறங்கி போய் நின்றாள் மிதுலா……

Facebook Comments Box
Previous PostNUNN 22
Next PostNunn 24
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here