NUNN tamil novel 14

0
1286
NUNN Tamil Novels 37

கணவனிடம் விறைப்பாக பேசி படுத்துவிட்டாலும் மிதுலாவால் இயல்பாக இருக்க முடியவில்லை. தான் பேசியது தவறோ என்று சிந்திக்க தொடங்கினாள்.மெதுவாக திரும்பி வசீகரனை பார்த்தாள். பால்கனியில் குறுக்கும் நெறுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.சே!!!! கொஞ்சம் ஜாஸ்தியா பேசிட்டோம் போலவே ( கொஞ்சம் இல்லம்மா ரொம்ப ஜாஸ்தியா பேசிட்டே)

‘பேசாம போய் மன்னிப்பு கேட்டுடுவோமா?(அடப்பாவி இவ்ளோ பேசிட்டு தெரியாம பேசிட்டேன்னு சொல்லி மன்னிப்பு கேட்கப் போறியா.துரத்தி துரத்தி மிதிப்பார் உன் புருஷர்ர்ர்ர்)

‘நான் ஒன்னும் அப்படி சொல்லி மன்னிப்பு கேட்க மாட்டேன்.அவர் பேசியதும் தப்பு தானே.தெய்வாவை குறை சொல்லி பேசவும் தான் எனக்கு கோபம் வந்தது.அதனால் இனிமேல் அப்படி பேசக்கூடாதுன்னு சொல்ல போறேன்.
ஏண்டி உனக்கு மூளைன்னு ஒண்ணை ஆண்டவன் கால் கிராம் அளவுக்காவது வச்சு இருக்கானா இல்லையா!

“ஏண்டி!! எனக்கென்ன குறைச்சல் இல்ல என் புத்திசாலித்தனத்துக்கு தான் இப்ப என்ன குறைச்சல்.நான் எப்பவும் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணுவேணாக்கும்.”

இப்பொழுது மிதுலாவின் மனசாட்சி நேரிடையாகவே தலையில் அடித்துக் கொண்டது.

“சுத்தம்!!!! அம்மாடி மிதுலா ,கல்லூரிப்பாடம் வேற வாழ்க்கை பாடம் வேற”

“இப்ப என்ன தான் சொல்ல வர நீ”

“இப்போ நீ போய் பேசினால் உனக்கு உதை கண்டிப்பாக கிடைக்கும்னு சொல்றேன்.அதனால கொஞ்சம் அடக்கி வாசி. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பேசுறியே, நாளைக்கு நீ அவர் வீட்டுக்கு தான் போகப் போற.அதை மறந்துட்டியா!!!

“அய்யயோ!! ஆமாம்ல.அதை எப்படி மறந்தேன்.அங்கே போனதும் தரையில் தூங்க சொன்னா என்ன பண்ணுறது?”

“அடி கிரகம் புடிச்சிவளே!!!! உன்னை யோசிக்க சொன்னா ஒண்ணு சாப்பாட்டை பத்தி யோசிக்கிற இல்லை தூக்கத்தை பத்தி யோசிக்கிற!!!”

“என்னை என்ன செய்ய சொல்லுற?எனக்கு சந்தேகம் வந்தா கேக்குறது தப்பா?”
“பாவம்”
ஆமா,”நான் ரொம்ப பாவம் தான் இல்ல”
“நான் உன் புருசரரர்ர்ர சொன்னேன்”
நீ என் மனசாட்சி தானே. எப்ப பாரு என் புருஷர்ர்ர்ர்க்கு எதுக்கு சப்போர்ட் பண்ணுற?”

“நியாயம் தான். உனக்கு தான் நான் சப்போர்ட் பண்ணனும்.எனக்கும் அது தான் ஆசை .எங்கே நீ செய்வதை பார்த்தா உனக்கு சப்போர்ட் பண்ணனும்னு தோணலியே”

“தெய்வா உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி அனுப்பினாங்க.கொஞ்சமாவது காதில் வாங்கினியா?

“நான் எவ்ளோ தான் பொறுமையாக இருப்பது.நான் அவ்ளோ தூரம் இறங்கி பேசுறேன்.ஆனால் அவர் கோவமா தான் இருக்கார்.அவருக்கு விளக்கம் கொடுத்தா புருஷர்ர்ர்ர் அதுக்கும் தையா தக்கான்னு குதிக்கிறார். நான் என்ன செய்ய?”
“இப்ப வந்து கேளு”

“ரூமுக்குள்ள போகும் போது என்னை எப்படி எல்லாம் துரத்தின. நம்ம மனசாட்சி ஆச்சேன்னு கொஞ்சமாவது மதிச்சியா?”
“ஹி ஹி ஹி…. அது ….”
” என்ன ராகம் போடுற?”
“அது சும்மா செல்லம்.உன்னை போய் அப்படி சொல்லுவேனா?”
“நீ சொல்லுவ”
“ஹி ஹி….
“தயவு செஞ்சு இப்படி சிரிச்சு வைக்காதே.எனக்கு பயமா இருக்கு.”
“ஏன் !!! என் சிரிப்புக்கு என்ன குறை?”
“ஆஹா!!! பார்க்க அப்படியே …..
“பாப்பா மாதிரி இருக்கேனா?”
“இல்லை பத்ரகாளி மாதிரி இருக்க!!!”
“என்ன சொன்ன?”
“உண்மையை சொன்னேன்!!!”
“ஆமா நீ அப்படியே பெரிய உண்மை விளம்பி பாரு!!!”
“ஏய் நான் உன் மனசாட்சிடி!!!!”
“இருந்துட்டு போ!!!”
“என்னை வம்புக்கு இழுக்காதே!!!!”
“அப்படித்தான் இழுப்பேன்.என்ன செய்வாய்!!!”
“அந்த பனைமரத்தான் கிட்ட இருந்து நீ தப்பிக்க ஐடியா தர மாட்டேன்.”

“அய்யயோ!!! அலறினாள் மிதுலா.அப்படி எல்லாம் செய்ய கூடாது தங்கம்.”

“அப்படி வா வழிக்கு. சரி இவ்வளவு நேரம் என்னை அசிங்க படுத்தினாயே அதற்கு முதலில் மன்னிப்பு கேள்.”

“ஹி ஹி …. நீ வேறு நான் வேறா!! நமக்குள் எதற்கு இந்த மன்னிப்பு எல்லாம்.”
“பிழைத்துப் போ!!!…..இப்போதைக்கு நீ உன் புருசரரர்ர்ரகிட்ட பேச வேணாம்.அமைதியா படுத்து தூங்கு!!!!.காலையில் பார்த்துக் கொள்ளலாம்.”

“அட!!! அருமையான யோசனை நல்லா தூங்கி ரெண்டு நாளாச்சு.சாப்பாடு வேற சூப்பரா இருந்துச்சா, ஒரு வெட்டு வெட்டிட்டேன்.செமையா தூக்கம் வருது.நான் தூங்குறேன். நீ போய்ட்டு அப்பறம் நான் கூப்பிடும் போது வா!!!! குட் நைட் என்றவள்,உடனே உறங்கியும் விட்டாள்.

நெடுநேரம் பால்கனியில் நடை பயின்ற வசீகரன்,கால்கள் வலி எடுத்ததும் சோர்ந்து போய் உள்ளே வந்தான்.வந்தவன் எங்கே தூங்குவது என்று அறையை சுற்றி நோட்டம் இட்டான்.உறங்கிக் கொண்டு இருந்த மிதுலாவின் மீது அவன் பார்வை சென்றது.விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவளை பார்த்தான்.

வளர்ந்த குழந்தை போல உறங்கிக் கொண்டு இருக்கும் இவளா ,கொஞ்ச நேரம் முன்னர் அப்படி எல்லாம் பேசினாள் என்று அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.அன்று மாலையில் என்னுடைய சிறு பார்வையை கூட தாங்க முடியாமல் தவித்தவளா இவள்!!!கொஞ்சம் கூட பயமே இல்லாமல் என்ன பேச்சு பேசுகிறாள்.சாந்தி முஹூர்த்தத்தை பற்றி பேசினால் கொஞ்சம் பயந்து வாயை மூடுவாள் என்று பார்த்தாள் அதையும் காணோம்.சில்லுவண்டு என்னையே மிரட்டுகிறாள். இவளை வெறுப்பேற்றுவதற்காவது இவளை கட்டிப் பிடித்து ஒரு முத்தம் கொடுத்து இருக்க வேண்டும்.அப்படி செய்து இருந்தால் என்ன செய்து இருப்பாள், என்று யோசித்தவனின் இதழோரம் சிரிப்பில் லேசாக நெளியத் தொடங்கியது. சட்டென்று முகம் இறுக நாளை எப்படி என்கிட்ட இருந்து தப்பிக்க போகிறாய்ன்னு பார்க்கிறேன்..

திருமணமான நாளின் இரவை உலகிலுள்ள ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு விதமாக கழிக்க,இவர்கள் இருவரும் வேறு விதமாக கழித்தனர். மனைவி கணவனிடம் அதிகமாக பேசிவிட்டோமோ என்ற குற்ற உணர்வுடனும் கணவன் நாளையில் இருந்து இவளை எப்படி பழி வாங்குவது என்றும் யோசித்த நிலையில் உறங்கினர்.

வசீகரன் எப்பொழுதும் அதிகாலையில் எழுபவன் எப்பொழுதும் போல சீக்கிரமே முழிப்பு வந்து விட , எழுந்து குளித்து முடித்து அறையை விட்டு வெளியேறினான்.

வசீகரனை பார்த்ததும்,அவனுக்கு காபி கலந்து கொடுத்து விட்டு மிதுலா விற்கு கையில் காபி எடுத்துக் கொண்டு மாடி அறைக்கு சென்றார் தெய்வானை.அங்கே மிதுலா கட்டிலை மொத்த உடலாலும் அளந்தபடி தூங்கிக் கொண்டு இருக்க வசீகரன் இரவில் கீழே விரித்து இருந்த போர்வையும் தலையணையும் நேற்று என்ன நடந்து இருக்க கூடும் என்பதை அவருக்கு அறிவித்தது.

என்ன தான் எதிர்பார்த்த விஷயம் என்றாலும் மனதில் லேசான வலி ஏற்படுவதை தெய்வானையால் தடுக்க முடியவில்லை .

மிதுலா !!! ஏய் எழுந்திருடி!!!! எப்படி தூங்குகிறாள் பார்!!! அங்கே மாப்பிள்ளை எழுந்து குளித்து முடித்து கீழே போய் விட்டார்.இங்கே இவள் இன்னமும் தூங்குவதை பார். அடியேய் மிதுலா எழுந்து தொலையேண்டி!!!! தெய்வானை உலுக்கி எழுப்ப முயன்றார்.மெதுவாக கண் முழித்த மிதுலா,” தெய்வா நல்லா ஸ்ட்ரோங் ஆஹ் ஒரு காபி” என்று கூறிவிட்டு மறுபடியும் தூக்கத்தை தொடர பார்த்தாள்.

“ஏண்டி!!! எருமை ஏற்கனவே லேட் ஆகிடுச்சு மறுபடியும் தூங்கவா போற??எழுந்திருடி!!!

“இன்னும் கொஞ்ச நேரம் தெய்வா, ப்ளீஸ்!!!
“ஏய் மாப்பிள்ளை ஏற்கனவே கிளம்பி கீழே போய்விட்டார்.நீ இன்னும் எழுந்திரிக்கவே இல்லை.மரியாதையாக எழுந்து குளித்து கிளம்பு போ”

அதுவரை தூக்க கலக்கத்தில் பேசிக் கொண்டு இருந்த மிதுலா.வசீகரன் கிளம்பி விட்டான்.என்று தெரிந்தததும்,ஐயோ அந்த பனைமரத்தான் முன்னாடியே கிளம்பி போய்ட்டானா!!! கீழே போகும் போது என்னையும் எழுப்பி விட்டு இருக்கலாம்ல!!! திமிரு !!!! திமிரு!!!(அடிப்பாவி)
“சரி சரி சும்மா முழிச்சுகிட்டே நிற்காம போய் குளிச்சுட்டு வா மிதுலா”
“தெய்வா காபி கேட்டேனே!!!!
“எல்லாம் கீழே வந்து குடிச்சுக்கோ , ம் சீக்கிரம் போ மிதுலா”
மிதுலா குளித்து முடித்து வரும் வரை அங்கேயே காத்துக் கொண்டு இருந்த தெய்வானையின் மனதில் பற்பல சிந்தனைகள் ஓடிக் கொண்டு இருந்தது.மிதுலா சிறுவயது முதலே விளையாட்டுத் தனமாகவே இருந்துவிட்டாள். ஒரே நாளில் அவளை மாற்ற முடியாது.அதற்காக இப்படியே விடுவதும் சாத்தியம் இல்லை.

ஒருவேளை இந்த திருமணம் நல்ல முறையில் நடந்து இருந்தால் மாப்பிள்ளையிடம் எடுத்து சொல்லி கேட்டுக் கொண்டு இருக்கலாம்.அதற்கும் வழி இல்லை.மாப்பிள்ளை என் மனம் வருந்தும் அளவுக்கு பேசாவிட்டாலும் என்னிடமும் முகம் கொடுத்து பேச மறுக்கிறார். இப்படி இருக்க நான் அவருக்கு எப்படி பேசி புரிய வைப்பேன்!!!! ஆழ்ந்து சிந்தித்தவர் தெளிவான ஒரு முடிவு எடுத்தார்.பிறகு மனதுக்குள் கணவனிடம் பேசியபடி மிதுலாவிற்காக காத்திருக்க தொடங்கினார்.

குளித்து முடித்து வெளியே வந்த மிதுலா,”தெய்வா குளிச்சுட்டேன் வா வா போய் காபி குடிச்சுட்டு வந்துடலாம்.லேட்டா போனா தீர்ந்து போய்டும்.”
“போகலாம் மிதுலா இங்கே உட்கார் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.”
“என்னம்மா என்று கேட்டுக் கொண்டே கட்டிலில் அமர்ந்தாள் மிதுலா”
“கீழே போர்வை விரிச்சு இருக்கே அதுல யாருக்கு????”
“உங்க மாப்பிள்ளை தான் படுத்து இருந்தார்மா”
“அவர் ஏன் கீழே படுத்தார்!!! நீ தரையில் படுத்துக் கொள்வது தானே”
“அதுவந்து அம்மா….”
“மிதுலா உன்னிடம் ஏற்கனவே சொன்னது தான் மறுபடியும் சொல்கிறேன்,தப்பு நம் பக்கமும் கொஞ்சம் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.”
“இல்லைமா அவர் என்னை திட்டினால் பரவாயில்லை ,உங்களை ஒரு வார்த்தை சொன்னால் என்னால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்!!!”
“மிதுலா இனி உனக்கு எல்லாமும் அவர் தான். என்னை விட அவர் தான் உனக்கு முக்கியம் இதை எப்பொழுதும் நினைவில் வை”

“எனக்கு கோபம் வருதே அம்மா, நான் என்ன செய்ய”
“ஒரு குழந்தை உன் மீது கல் எறிந்தால் என்ன செய்வாய் அந்த குழந்தையை திட்டி அடித்து கண்டிப்பாயா மிதுலா”
“அம்மா குழந்தைக்கு என்ன தெரியும்,அதை போய் அப்படி எல்லாம் செய்ய முடியுமா?”
“அது போல தான் மாப்பிள்ளையும் இனி அவரை குழந்தை என்று நினைத்துக் கொள்.அவர் தாயில்லா பிள்ளை மிதுலா…. இனி நீதான் அவருக்கு எல்லாமும் நீ தான்.அதை புரிந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்…. அதே சமயம் அவர் உனக்கு கணவரும் கூட அதை மறந்து விடாதே…. அவரையும் மறக்க விட்டு விடாதே”
“அம்மா….”
“அது மட்டும் இல்லை மிதுலா ,கணவனும் மனைவியும் எந்நேரமும் ஒருவர் நினைவில் ஒருவர் வாழ வேண்டும்.இனி மாப்பிள்ளையின் எல்லா தேவைகளையும் நீ தான் பார்த்து பார்த்து செய்ய வேண்டும்.புரிந்து நடந்து கொள். இது உன் வாழ்க்கை இனி இதை காப்பாற்றிக் கொள்வது உன் பொறுப்பு.இனி இந்த வீட்டிற்குள் மாப்பிள்ளையோடு தான் நீ வர வேண்டும்.தனித்து வரக் கூடாது.சரி கீழே போகலாம் வா அப்பறம் உனக்கு காபி இருக்காது”
“ஐயோ ஆமாம்மா …. வா போகலாம் என்று ஓடினாள் மிதுலா”
‘இவ்வளவு நேரம் சொன்ன அறிவுரை எல்லாம் இவள் புத்திக்குள் ஏறியதா .. இல்லையா!!! என்ற சிந்தனையோடு மகளை அழைத்து தலை சீவி பூ முடித்து கீழே அழைத்துக் கொண்டு சென்றார் தெய்வானை’

‘அதே நேரம் மிதுலா வும் இனி அம்மா சொன்ன மாதிரி புருஷர்ர்ர்ர் ஆஹ் குழந்தை (!!!!!) மாதிரி பார்த்துக்கணும் என்ற நினைவோடு கீழே சென்றாள்.
(அம்மாடி மிதுலா வசீகரன் உனக்கு குழந்தையா!!! செத்தாண்டா சேகரு!!!!”)

Facebook Comments Box
Previous PostNUNN Tamil novels 13
Next PostNUNN 15
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here