NUNN Tamil novels 13

0
1316
NUNN Tamil Novels 37

கண்கள் போதையில் லேசாக சொருக தள்ளாடி தள்ளாடி தன்னருகே வந்த வசீகரனை வெறித்துப் பார்த்தாள் மிதுலா.

என்னடி!!!! அப்படி பார்க்கிறாய்?

உங்களுக்கு இந்த பழக்கம் எல்லாம் உண்டா?

உண்டா என்றா கேட்கிறாய்? ஏன் உனக்கு தெரியாதா? குடி போதையில் உன் கையை பிடித்து இழுத்தேன் என்று தானே அன்று ஹோட்டலில் உன் ஃபிரண்டு என்னை அசிங்கப்படுத்தினாள். இப்பொழுது வந்து உங்களுக்கு குடிப் பழக்கம் இருக்கிறதா என்றா கேட்கிறாய்?

பின்னே அன்னிக்கு நீங்கள் குடிக்கவில்லையா? மிதுலா குழப்பமாக வினவினாள்.

ஓ!!!! அன்று மூச்சு முட்டக் குடித்து விட்டு உன் மேல் உள்ள ஆசையில் உன் கையை பிடித்து இழுத்து தனி அறைக்கு தள்ளி கொண்டு போனேன் என்று சொல்கிறாயா?

மிதுலா பொறுமையாக பதில் சொன்னாள். தாயின் வார்த்தைகளை நினைவு படுத்திக் கொண்டாள்.

நான் அப்படி சொல்லவில்லை.எனக்கு அன்று நடந்த எதுவும் தெளிவாக நினைவில் இல்லை.தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்டேன்.

அதாவது அன்று என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தினீர்கள் என்று என் வாயாலேயே நான் சொல்ல வேண்டும் அப்படித் தானே?

நான் என்ன சொல்ல வருகிறேன்னு கொஞ்சம் கேளுங்களேன். ப்ளீஸ்!!!!

புயலென நடந்து அவள் அருகில் வந்து நின்று மிதுலாவின் தாடையை இறுக்கி பிடித்தான்,” அன்னிக்கு நான் சொன்னதை நீயோ உன் குடும்பமோ கேட்டீர்களா ?

வலியிலும், மதுவின் வாடையாலும் முகத்தை சுளித்தாள் மிதுலா.

என்ன வலிக்கிறதா??? நன்றாக வலிக்கட்டும்.அன்று என் மானம் மரியாதையை கெடுத்தீர்களே எனக்கு எவ்வளவு வலித்து இருக்கும்!!!!

சட்டென அவளது கையை இறுக்கிப் பிடித்தான்.அன்னிக்கு என்ன சொன்ன, கையை விடுடா பொறுக்கினு சொன்ன இல்ல.எங்கே இப்போ சொல்லு பார்க்கலாம்?

வலிக்குது ப்ளீஸ் கையை விடுங்க. மிதுலா கெஞ்சினாள்.

கண்ணீர் மல்க மிதுலா நின்று இருந்த கோலத்தை கண்டதும் என்ன நினைத்தானோ பிடியை விட்டவன். உண்மையை சொல் இப்படி நடந்து கொள்வதற்கு உனக்கு அந்த கங்காதரன் எவ்வளவு பணம் கொடுத்தார்?
இதோ பாருங்கள் அன்று என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது!!!

என்னால் நம்ப முடியாது.ஏற்கனவே அந்த ஹோட்டலில் எல்லாரையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விட்டு தான் எனக்கு எதிரான சதி வேலைகளை செய்து இருக்குறீர்கள்.வயதான அந்த சர்வர்,ஹோட்டல் மேனேஜர் அப்பறம் மாடியில் என்னோடு சண்டை போட்டானே அந்த குடிகார ராஸ்கல் எல்லாரும் உங்க ஆளுங்க. அன்று கூட்டத்தில் எனக்கு எதிராக சத்தம் போட்டது கூட உன் ஆட்கள் தான்.நான் எல்லாவற்றையும் விசரித்துவிட்டேன்.எல்லாருக்கும் பணம் கொடுத்து செட் செய்து இருக்கீங்க?

ஆமாம். அன்னிக்கு ஹோட்டல்ல மயங்கி விழுந்து இருந்தியே அது முதல் தடவையா இல்ல அடிக்கடி நடக்குறது தானா? எப்ப பாரு கண்ட கண்ட ஹோட்டலுக்கு போறது கண்டதை குடிச்சுட்டு மயங்கி கிடக்குறது!!!!

உங்களுக்கு அது எத்தனையாவது தடவை????
எது?
ஒரு பொண்ணு கையை பிடிச்சு குடி போதையில் இழுப்பது?
ஏய் என்னடி வாய் ரொம்ப நீளுகிறது!!! அது நாடகம்ன்னு எல்லாருக்கும் தெரியும்!!!

அது நாங்க நடத்தின நாடகம்னு எதை வைத்து முடிவு செஞ்சீங்க?

என்னை என்ன முட்டாள்னு நினைச்சியா? நான் வசீகரன்டி ஏற்கனவே என்னுடைய ஆட்கள் மூலம் இதை எல்லாம் விசாரித்து விட்டு தான் உன் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறேன். பணம் கொடுத்து அவர்களை செட் செய்தது அந்த கங்காதரனும் வினோத்தும் தான் .நீயும் உன் அம்மாவும் அதற்கு உடந்தை இல்லாவிட்டால் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாமே!!!ஏன் செய்யலை? காசுக்காக என்ன வேணா செய்வீர்களா?

போதும் நிறுத்துங்க வாய்க்கு வந்தபடி உளராதீங்க!!!! அதெல்லாம் அந்த வினோத் வேலை.

வினோத் !!!! ஓ உன் காதலன் இல்ல?
காதலனா? எனக்கா!!! உங்களுக்கு பைத்தியம் பிடிச்சு இருக்கா?

அப்படி போடு என் அருமை பொண்டாட்டி!!!! எனக்கு பைத்தியக்காரன் பட்டம் கட்டி விட்டுட்டு உன் காதலன் கூட போய் குடும்பம் நடத்தலாம்ன்னு ஏற்கனவே ஐடியா பண்ணி இருக்கீங்களா? நீயும் அந்த வினோத்தும் இணை பிரியா காதல் பறவைகள்ன்னு அன்னிக்கு ஹோட்டல்ல உன் பிரண்ட் அந்த சுஜிதா சொன்னாளே!!!!

ஏங்க இதெல்லாம் அந்த வினோத்தோட வேலை தான் தயவு செஞ்சு நம்புங்க!!!சுஜிக்கு அதை பற்றி எதுவும் தெரியாது.

இதை நான் நம்ப வேண்டுமா??? அந்த கங்காதரன் ஒரு ஃபிராடு ,அவருக்கு துணை செய்த நீ, உன் தோழி அப்புறம் உங்க அம்மா எல்லாருமே பிராடு தான்.

மிதுலாவின் பொறுமை பறந்தது.எவ்வளவு தைரியம் இருந்தால் என் தெய்வாவை இவர் பிராடுன்னு சொல்லுவார். நானும் பொறுமையா பேசறேன்.கொஞ்சமாவது காதில் வாங்குகிறாரா??

என்னை பற்றி மட்டும் பேசுங்கள் அம்மாவை பற்றி ஒரு வார்த்தை பேசாதீர்கள்.குரலை உயர்த்தினாள்

பேசினால் என்ன செய்து விடுவாய்?

கீழே உங்க சொந்தக்காரங்க எல்லாரையும் எழுப்பி இப்போ நீங்க பேசுனதை எல்லாம் சொல்லி நியாயம் கேட்பேன்!!!!

என்ன மிரட்டிப் பார்க்கிறாயா?

இல்லை. இனி உங்களை மிரட்டி எனக்கு ஆக போவது என்ன?காலையில் இருந்து நீங்கள் நடிக்கவில்லை? என்னவோ உருகி உருகி காதலித்ததை போல எல்லாரிடமும் எப்படி பொய் சொல்லி புளுகுநீர்கள். நீங்கள் சொன்னால் மட்டும் பொய் உண்மை ஆகி விடுமா?

வசீகரன் பேச்சிழந்தான்.
பேசுங்க புருஷர்ர்ரெ!!!! இவ்வளவு நேரம் வாய் ஓயாமல் பேசுனீங்க???இப்ப ஏன் வாய் அடைச்சுக்கிச்சா?
நீ ரொம்ப பேசுற?
நீங்க பேச வைக்கறீங்க?
இப்போ வாயை மூட போகிறாயா இல்லையா?
முடியாது.
உன்னை ……
கழுத்தை நெறிப்பது போல வந்தவன் அருகே வந்ததும் சை என்று அவளை தள்ளி விட்டான்.ராட்சஸி , இம்சை……

வசீகரன் தள்ளி விட்டதும் கீழே விழப் போனவள் கடைசி நொடியில் சமாளித்து நின்றவள்,வேக மூச்சுகளை எடுத்து தன்னை சமாதான படுத்தி, முகத்தை நன்றாக அழுந்தத் துடைத்துக் கொண்டு இப்ப என்ன சொல்ல வரீங்க? என்று வசீகரனின் முகத்தை பார்த்து நேருக்கு நேராக கேட்டாள்.

செய்வதெல்லாம் செய்துவிட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திமிராக பேசுவதை பார்!!!!

என்னுடைய வீட்டில் நீ ஒரு வேலைக்காரி தான். மற்றபடி ராணி மாதிரி இருக்கலாம் என்று எல்லாம் நினைக்காதே.அதற்காக ஒன்றும் உன்னை நான் திருமணம் செய்யவில்லை.உன் வாழ்க்கை முழுவதும் நீ கஷ்ட பட வேண்டும்.அதை பார்த்து அந்த கங்காதரன் வருந்த வேண்டும்.காதலனோடு சேர்ந்து வாழ முடியாமல் நீயும் உன்னோடு சேர முடியாமல் அவனும் காலம் முழுக்க அவனும் வருந்தவேண்டும்.அதுதான் உங்களுக்கான தண்டனை அதே நேரம் என்னை விவாகரத்து பண்ணிட்டு உன் காதலனோட மறுபடியும் போய் சேர்ந்து வாழலாம்னு நினைக்காதே.அதுக்கு நான் விட மாட்டேன்.

இப்போ போ போய் தரையில் படு.ஒரு வேலைக்காரி என் பக்கத்தில் படுப்பதை என்னால் அனுமதிக்க முடியாது.

வசீகரன் பேச பேச மிதுலாவின் ரத்த அழுத்தம் எகுறியது.
ஹலோ உங்க வீட்டுல தான் நான் வேலைக்காரி ஆனால் இது என் வீடு இங்கே நான் தான் இளவரசி என்னால் தரையில் எல்லாம் படுக்க முடியாது.நான் கட்டிலில் தான் படுப்பேன்.உங்களுக்கு பிடிக்கலைனா நீங்க இறங்கி கீழே படுங்க.
என்னை பழி வாங்க தானே கல்யாணம் செய்து கொண்டீர்கள்?

உங்களால் என்ன முடியுமோ செய்யுங்கள்!!!
இறைவன் யார் பக்கம் என்பதையும் பார்த்து விடலாம்!
குட் நைட் புருசா!!!! என்று கூறிவிட்டு கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பித்தாள்.

ஹே என்னடி என்ன தூங்க போகிறாயா?இப்படி எல்லாம் வீரமாக பேசினால் நான் ரோஷப்பட்டு உன்னை விட்டு விடுவேன் என்று நினைத்தாயா???? எழுந்துருடி இன்னிக்கி நமக்கு சாந்தி முஹூரத்தம் எழுந்திரு.
முடியாது புருசர்ர்ரெ!!!வேலைக்காரி கூட படுத்தாலே உங்களுக்கு அவமானம் .பின்னே எப்படி குடும்பம் நடத்துவீங்க!!!. நீங்க எப்படியோ எனக்கு தெரியாது.என்னால் என் புருஷர்ர்ர்ர் கூட மட்டும் தான் வாழ முடியும்.உங்க கண்ணுக்கு எப்போ நான் மனைவியா தெரியுறேனோ அப்போ என்கிட்ட வாங்க!!!! அதுக்கு முன்னாடி என்கிட்ட வந்தால்,என் கையை நானே அறுத்துக் கொண்டு நீங்க தான் கையை கிழிச்சு விட்டீங்கன்னு உங்க சொந்தக்காரங்க எல்லாருக்கும் வாட்ஸாப்பில் வீடியோ அனுப்பி வைத்து விடுவேன் ஜாக்கிரதை……

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here