NUNN Tamil Novels 20

0
3646
மாலை வரை சற்று தூங்கி ஓய்வு எடுத்துவிட்டு,குளித்து முடித்து ஆரஞ்சு வண்ண சுடிதாரில் தன்னை நுழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள் மிதுலா.

அடடே! சரியான நேரத்திற்கு வந்து விட்டாயே மிதுலா… நானே இப்பொழுது வந்து உன்னை கூப்பிடலாம் என்று இருந்தேன். நீயே வந்துவிட்டாய். போய் பூஜையறையில் விளக்கேற்றி விட்டு வாம்மா…

பூஜை அறையில் கண் மூடி இறைவனிடமும் மானசீகமாக தந்தையிடமும் வேண்டிக் கொண்டு விளக்கை ஏற்றினாள் மிதுலா.

பூஜை அறையில் இருந்து நேரே கிச்சனுக்கு வந்தவள், “அத்தை நீங்கள் எல்லாரும் பெரும்பாலும் என்ன டிபன் இரவுநேரத்தில் விரும்பி சாப்பிடுவீங்க…

நான் பெரும்பாலும் இரவு நேரங்களில் கேழ்வரகு கஞ்சி மட்டும் தான் குடிப்பேன் மிதுலா… ராஜேஸ்வரி இட்லி,தோசை,சப்பாத்தி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று உண்பாள். வசீகரன் இட்லி அல்லது சப்பாத்தி என்று இரண்டில் ஏதேனும் ஒன்று தான் சாப்பிடுவான்.

சரி அத்தை அப்படியானால் நானே இன்னிக்கு எல்லாருக்கும் நைட் டிபன் ரெடி பண்ணிடறேன்”

வேண்டாம் மிதுலா… உனக்கு ஏன் சிரமம்! இங்கே நம் வீட்டில் தான் சமையலுக்கு ஆள் இருக்கிறதே… உனக்கு என்ன வேண்டுமோ கேள் அவர்களே செய்து தருவார்கள்”

இல்லை அத்தை… உங்கள் பையன் தான் என்னை சமைக்க சொல்லிவிட்டு போய் இருக்கிறார்… அதனால் நானே சமைக்கிறேன். தயங்கி தயங்கி ஒருவாறு அவரிடம் கூறி விட்டாள் மிதுலா.

அவன் சும்மா உன்னிடம் விளையாட்டுக்கு சொல்லி இருப்பான் மிதுலா. நீ போய் ஓய்வு எடுத்துக் கொள்ளம்மா… இல்லை என்றால் டிவி போட்டு பார். இல்லை தோட்டத்தில் ஊஞ்சல் இருக்கிறது அதில் போய் வேண்டுமானால் சற்று நேரம் உட்கார்ந்து வேடிக்கை பாரேன்…மகனின் மனநிலையை உணர்ந்தவர் ஆயிற்றே… மிதுலா வருந்த கூடாது என்று பேச்சை திசை திருப்பஎண்ணினார்.

அத்தை ஒன்று கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே…

என்னிடம் கேட்பதற்கு என்ன தயக்கம் மிதுலா… கேள்”

அவரோட அப்பா அம்மா போட்டோ எங்கேயும் இல்லையே… எனக்கு பார்க்கணும் போல இருக்கு… பழைய ஆல்பம் எதிலாவது இருந்தால் எடுத்துக் காட்டுங்களேன்… ப்ளீஸ்!”

இவ்வளவு தானா… ஸ்டோர் ரூமில் பழைய ஆல்பத்தில் இருக்கும்… வசீகரன் வீட்டில் இல்லாத பொழுது எனக்கு நினைவு படுத்து. நான் எடுத்து கொடுக்கிறேன்…

ஏன் அத்தை ஒரு ஆல்பம் பார்க்க கூட எனக்கு இந்த வீட்டில் உரிமை இல்லையா… அதை கூட அவர் இல்லாத நேரம் தான் செய்ய வேண்டுமா நான்… “ மிதுலாவின் குரலில் லேசான ஏமாற்றமும் வருத்தமும் எட்டிப் பார்த்தது.

என்ன பேச்சு மிதுலா… நீயே உன்னை இப்படி வருந்திக் கொள்ளலாமா… வசீகரனின் தாய் தந்தை இறக்கும் பொழுது அவனுக்கு வயது பதினைந்து தான் மிதுலா. அதுநாள் வரை உயிருக்கு உயிராக வளர்த்து வந்த தன் தாயையும் தந்தையும் மாலை போட்டு போட்டோவிற்குள் பார்ப்பதை வசீகரனால் தாங்க முடியவில்லை. அதனால் வீட்டில் வேறு எங்கேயும் அவர்களது போட்டோ இருக்காது.

அவங்களுக்கு என்ன ஆச்சு அத்தை?”

அதை பற்றி இப்பொழுது வேண்டாம் மிதுலா… இன்று சீக்கிரமே திரும்பி வந்து விடுவதாக சக்தி சொல்லி இருக்கிறான்… “

சக்தி அண்ணா ரொம்ப நல்லவர் அத்தை… என்கிட்ட பிரியமா பேசுறார். அவர் வீடு எங்கே இருக்கு?”

சக்தி வீடு அடுத்த தெரு தான்மா… கூப்பிடும் தூரம் தான். பகல் முழுக்க இங்கே தான் இருப்பான். இரவில் தூங்க மட்டும் தான் அங்கே செல்வான்.

அவர் வீட்டில் அவரை தேட மாட்டார்களா…

சக்தி உடைய பெற்றோர்கள் யாரும் இப்பொழுது உயிருடன் இல்லை மிதுலா… ஐந்து வருடத்திற்கு முன் ஒரு அக்சிடென்டில் இறந்து விட்டார்கள்.

அச்சச்சோ! பாவம் அத்தை சக்தி அண்ணா… அவருக்கு வேறு யாரும் சொந்தங்கள் இல்லையா… தனியாகவா இருக்கிறார்கள்?”

அவனுடைய சொந்தங்கள் நிறைய இருக்கிறார்கள் மிதுலா. ஆனால் அவர்கள் யாரையும் அவன் ஏனோ அருகில் சேர்க்கவில்லை. அவனுக்கு எப்பொழுதும் வசீகரனும் இந்த வீடும் தான் உலகம்… வசீகரனுக்கும் சக்தி என்றால் மிகுந்த பிரியம்… சக்தி ஒருவனிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவான்.

அம்மா… “ கிச்சன் வாசலில் நின்று மிதுலாவை முறைத்தவாறே நின்று கொண்டு காவேரியை அழைத்தாள் வர்ஷினி.

நைட்டுக்கு என்ன டிபன் செய்ய போறீங்க…

என்ன வேணும் ராஜேஸ்வரி…

நேத்து முழுக்க சாப்பாடு கொஞ்சம் ஹெவியா இருந்துச்சும்மா… அதனால இன்னிக்கு வெறும் இட்லி மட்டும் போதும்… தொட்டுக்க கார சட்டினி செய்ய சொல்லிடுங்க… “

இன்னிக்கு நான் தான் சமைக்க போறேன் ராஜேஸ்வரி… என் சமையல் எப்படி இருக்குனு சாப்பிட்டு பார்த்து நீ சொல்லணும் சரியா?”

நீ சமைப்பதாக இருந்தால் எனக்கு சாப்பாடே வேண்டாம்… போ”

ஒரு நொடி முகம் கறுத்தாலும்,சட்டென முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு, “உனக்கு என் சமையலை சாப்பிட கொடுத்து வைக்கலை… சரி பரவாயில்லை போ… என் வீட்டுக்காரருக்கு நான் சமைத்து போடப் போகிறேன்”என்று கூறிவிட்டு மடமடவென சமையல் வேலைகளை தொடங்கினாள் மிதுலா. சற்று நேரம் மிதுலா சமைப்பதை வெறுப்புடன் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள் வர்ஷினி.

கையை சுட்டுக் கொண்டு முகத்தில் ஆங்காங்கு மளிகை சாமான்களை பூசிக் கொண்டும் ஒரு வழியாக சமையலை செய்து முடித்தாள் மிதுலா. புருஷர்ர்ர்ர் வரும் போது இந்த கோலத்திலா நிற்பது என்று எண்ணி வேக வேகமாக அறைக்கு சென்று முகம் கழுவி வேறு உடை மாற்றிக் கொண்டு வசீகரனுக்காக காத்திருந்தாள்.

மணி ஏழு ஆயிற்று… எட்டு ஆயிற்று… வசீகரன் வந்த பாடில்லை. மிதுலா ஹாலில் அமர்ந்து போர் அடித்து போய் மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து விட்டாள். இங்கு இருந்து பார்த்தால் வசீகரனின் கார் வந்தாலும் இங்கு இருந்து பார்த்தால் கூட  தெரிந்து விடும் என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்த பழங்காலத்து ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்து ஆட தொடங்கினாள்.  

 பௌர்ணமிக்கு இன்னும் சில நாட்களே இருந்ததால் நிலவு தன்னுடைய முழு அழகையும் காட்டாது,முக்கால் பகுதி மட்டுமே காட்டி ஒளி வீசிக் கொண்டு இருந்தது. வானில் மேகக் கூட்டங்களுக்கு இடையே கண்ணாமூச்சி விளையாடுவது போல நிலவானது ஒளிந்து மறைந்து வந்து கொண்டு இருந்தது. எப்பொழுதும் நிலவோடு பேசுவது போல் அன்றும் பேச தொடங்கினாள் மிதுலா.

ஹ்ம்ம்… எவ்ளோ அழகா இருக்கிற நீ… ஆனா இப்படி தனியா இருக்குறியே அதுவும் இருட்டின பிறகு… உனக்கு பயமா இல்லையா… கவலை படாதே! உனக்கு துணைக்கு நான் இருக்கிறேன். உனக்கு ஏதும் ஆபத்து வந்தா என்னிடம் சொல் நான் பார்த்துக் கொள்கிறேன்… என்ன புரிந்ததா?”

மிதுலா உன் காலுக்கு கீழே கரப்பான் பூச்சி”

ஐயோ அம்மா… கரப்பான் பூச்சி காப்பத்துங்க… தெய்வா சீக்கிரம் ஓடி வா… கரப்பான் பூச்சி”

இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு தான் நிலவுக்கு நீ தைரியம் சொல்லிக் கொண்டு இருந்தாயா?… வசீகரனின் குரல் அவள் செவியை தீண்டியது.

ரோஷத்துடன் நிமிர்ந்து, “நான் ஒண்ணும் பயப்படவில்லை”

அப்படியா… அப்பறம் எதுக்கு என்னை இப்படி கட்டிபிடிச்சுக்கிட்டு நிற்கிற?”

அப்பொழுது தான் மிதுலா கவனித்தாள் தான் இருக்கும் நிலையை, பயத்தில் வசீகரனின் சட்டை காலரை இரு கைகளாலும் இறுக்கமாக பற்றிக் கொண்டு மிக நெருக்கத்தில் நின்று கொண்டு இருந்தாள். அனிச்சை செயல் போல சடாரென துள்ளி விலகினாள் மிதுலா.

நீங்க வேணும்ன்னு தானே என்னை பயமுறுத்தினீங்க”

இல்லை உன் தைரியத்தின் அளவை உனக்கு தெளிவாக எடுத்துக் காட்டினேன் அவ்வளவு தான்.

இல்லை நீங்க வேணும்னே தான் இப்படி செஞ்சீங்க?”

சரி அப்படியே வைச்சுக்கோ… இப்ப என்ன அதுக்கு… “ வசீகரனின் குரலில் லேசான சிரிப்பு இருந்ததோ என்ற சந்தேகம் மிதுலாவிற்கு. புருஷர்ர்ர்ர் என்னையா கேலி செய்யறீங்க… இருங்க உங்களை ஒரு வழி பண்ணுறேன்

ஆமா உன்னை சமைக்க சொன்னேன்ல,அதை செய்யாம இங்கே வந்து என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க? போ… போய் சமையலை எடுத்து வை எனக்கு பசிக்கிறது”அவன் குரலில் கோபம் வந்து இருந்தது.

என்ன ஆச்சு இவருக்கு இவளோ நேரம் சாதாரணமா தானே இருந்தார். அடிக்கடி அந்நியன் மாதிரி மாறுகின்ற உங்களை ரெமோவாகஆக்கணும். இது தான் என் வாழ்க்கை லட்சியம்என்று மனதுக்குள் சூளுரைத்துக் கொண்டு, “சமையல் எல்லாம் எப்பவோ முடிச்சாச்சு… நீங்க வர லேட் ஆகவும் கொஞ்ச நேரம் இப்படி ரிலாக்ஸ் ஆஹ் வந்து உட்கார்ந்தேன்… அது பொறுக்கவில்லையா உங்களுக்கு?”

சாப்பாடு சமைத்தால் போதுமா… யார் வந்து பரிமாறுவார்கள்? சீக்கிரம் கீழே வந்து சேர்…அதிகாரமாக கூறிவிட்டு கீழே செல்ல திரும்பினான் வசீகரன்.

புருசனுக்கு பரிமாறுவது கூடவா எனக்கு தெரியாது… எல்லாம் தெரியும் நீங்கள் போய் கைகழுவி விட்டு வாருங்கள் சாப்பிடலாம்… என்று கூறிவிட்டு வேகமாக அவனை கடந்து ஓடினாள் மிதுலா.

ஹ்ம்ம் உனக்கு எல்லா விஷயமும் இதை போலவே தெரிந்து இருந்தால் நன்றாக தான் இருக்கும்… என் நிலையும் இத்தனை மோசமாக இருந்து இருக்காது… என்று பெருமூச்சோடு எண்ணிக் கொண்டே கீழே சென்றான் வசீகரன்.

நேரே அறைக்கு சென்று முகம் கழுவிக் கொண்டு சாப்பிட அமர்ந்தான் வசீகரன். மிதுலா கை நிறைய இரண்டு மூன்று பாத்திரங்களை சுமந்து கொண்டு வந்து டைனிங் டேபிளில் பரப்பினாள். உஷ்… அப்பாடா! ரொம்ப கஷ்டப்பட்டு கை எல்லாம் சுட்டுக் கொண்டு சமைத்து இருக்கிறேன். மிச்சம் வைக்காம எல்லாத்தையும் சாப்பிடுங்க என்று கூறியவாறே பரிமாற ஆரம்பித்தாள் மிதுலா.

அம்மாவும் வர்ஷினியும் சாப்பிட்டாச்சா?”

என்னை பற்றி கேட்கிறாரா பார்… புருஷர்ர்ர்ர்‘.”ஹ்ம்ம் அவங்க எல்லாரும் சாப்பிட்டாச்சு… முதல்ல ஸ்வீட்ல இருந்து ஆரம்பிக்கலாம்… இந்தாங்க சாப்பிடுங்க…

ஏய்… நிறுத்து… இது என்னது?”

ஸ்வீட்ங்க… உங்களுக்காக நானே ஆசையா செஞ்சது… சாப்பிடுங்க”

என்ன ஸ்வீட் இது… பச்சையா இருக்கு?”

கீரை அல்வா… நெட்ல பார்த்து நானே முதல் தடவையா செஞ்சேன்… சாப்பிட்டு பாருங்க…

ஏய்! எனக்கு இதெல்லாம் வேண்டாம்… பார்க்கவே நல்லா இல்லை… எனக்கு டிபனை மட்டும் எடுத்து வை”

ஆசையாக செய்தேன் ஒரு வாய் சாப்பிட்டு பார்க்கலாம் இல்லையா… மிதுலாவிடம் இருந்து வார்த்தைகள் கெஞ்சுதலாக வந்தது.

அது தான் வேண்டாம் என்று சொல்கிறேன் இல்லையா… டிபனை எடுத்து வைத்து தொலை” எரிந்து விழுந்தான் வசீகரன்.

சரி இந்தாங்க… இதையாவது சாப்பிடுங்க… பீறிட்டு எழுந்த சிரிப்பை வாயிலேயே அடக்கிக் கொண்டு வசீகரனுக்கு பரிமாறினாள் மிதுலா.

கேழ்வரகு இட்லி… உடம்புக்கு ரொம்ப சத்துன்னு அத்தை சொன்னாங்க… அதனாலே அத்தைகிட்டே பக்குவம் கேட்டு நானே செய்தேன்… “ என்று முகத்தை படு சீரியஸாக வைத்துக் கொண்டு சொன்னாள் மிதுலா.

இன்னும் வேறு என்னவெல்லாம் செய்து வைத்து இருக்கிறாய்… “அடக்கப்பட்ட ஆத்திரம் இருந்தது வசீகரனின் குரலில்.

சப்பாத்தியும் பன்னீர் பட்டர் மசாலாவும் செய்து வைத்திருக்கிறேன்.

அப்பாடா! அதை எடுத்து வை முதலில்” வசீகரனின் குரலிலேயே அவனது பசியின் அளவு தெரிந்தது.

மிதுலாவிற்கு ஒரு நிமிடம் வசீகரனை பார்க்க பாவமாக கூட இருந்தது. ஆனால் இப்பொழுது நீ அவருக்கு பாவம் பார்த்தால் உன் நிலைமை மிகவும் பரிதாபகரமாகி விடும் மிதுலாஎன்று அவள் உள் மனம் எச்சரிக்கவே முயன்று முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.

ஆசை ஆசையாக எடுத்து ஒரு வாயை எடுத்து வாயில் வைத்தவனின் முகம் விளக்கெண்ணெய் குடித்ததை போல மாற உடனே தூஎன்று துப்பி விட்டான். “இந்த கன்றாவிக்கு பெயர் பன்னீர் பட்டர் மசாலாவா? உனக்கு சமைக்க தெரியுமா… தெரியாதா?”

தெரியாது… “யோசிக்காமல் பதில் வந்தது மிதுலாவிடம் இருந்து

சமைக்க தெரியாதா? இதை முன்னாடியே சொல்வதற்கு என்ன?” மிதமிஞ்சிய எரிச்சல் வெளிப்பட்டது வசீகரனின் குரலில்.

வேலைகாரிக்கு சமைக்க தெரியுமா தெரியாதா என்று தெரியாமல் என்ன முதலாளி நீங்கள்! “மிதுலாவின் குரலில் அப்பட்டமான கேலி இருந்தது.

ஏய்!.. என்ன சீண்டிப் பார்க்கிறாயா… இதில் என்ன கலந்து தொலைத்தாய்…

ஒன்றும் இல்லையே… கொஞ்சம் புளியை கரைத்து ஊற்றினேன்… அவ்வளவு தான்…

லூசு! லூசு! யாராவது பனீர் பட்டர் மசாலாவில் புளியை கரைத்து ஊற்றுவர்களா…பசியின் வேகம் தாளாமல் ஆத்திரம் அடையத் தொடங்கினான் வசீகரன்.

ஏன் ஊற்ற மாட்டார்கள்… என் அம்மா கத்தரிக்காய் புளி குழம்பு செய்யும் போது ஊற்றுவார்கள்… நான் பார்த்து இருக்கேன்”

கத்தரிக்காயும் பனீர் பட்டர் மசாலாவும் ஒன்றா… சரியான லூசு… மென்டல்… அரை கிறுக்கு… சை…ஆத்திரமாக திட்டிக் கொண்டே தட்டை தள்ளி விட்டு விட்டுகோபமாகஅங்கிருந்து வெளியேறினான்.

அவன் அறை வாசலை நெருங்கவும் சக்தி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.டேய் மச்சி! அதற்குள் சாப்பிட்டு விட்டாயா?… கரெக்ட் ஆஹ் வந்து உன்கூட சாப்பிட ஜாய்ன்ட்பண்ணிக்கணும்னு நினைச்சேன்… சாரிடா… கிளம்பும் போது ஒருத்தன் வந்து பிளேடு போடஆரம்பித்து விட்டான்.

அவனிடம் இருந்து தப்பி வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது… அடப்பாவி… நான் வருவற்குள் சாப்பிட்டு முடித்து விட்டாயா?… எனக்கு ஏதாவது மிச்சம் மீதி வைத்து இருக்கிறாயா… இல்லை எல்லாவற்றையும் நீயே தின்று தீர்த்து விட்டாயா…

சாப்பாடு தானே உள்ளே நிறைய இருக்கு… எல்லாவற்றையும் நீயும் உன் அருருருருருமைதங்கச்சியுமே சேர்த்து கொட்டிக் கொள்ளுங்கள்”என்று கூறி விட்டு நில்லாமல் வேகவேகமாக மாடி அறைக்கு சென்று விட்டான் வசீகரன்.

என்ன ஆச்சு தங்கச்சி… இவனுக்கு? ஏன் இப்படி கடுப்படிக்கிறான்?”

அது ஒன்னும் இல்லை அண்ணா… சாப்பாட்டில் இன்னும் கொஞ்சம் காரம் போடவேண்டுமாம். அதற்கு தான் இப்படி கத்துகிறார்… நீங்க உட்காருங்கள் அண்ணா… சாப்பிடலாம்”

வேறு வேலை… நீ எடுத்து வை தங்கச்சி நான் போய் கை கழுவி விட்டு வருகிறேன்.

சக்திக்கு பரிமாறிக் கொண்டு இருந்தாலும் வசீகரனின் பசி நிறைந்தமுகமே கண்ணுக்கு முன் நிற்க, “அண்ணா நீங்க சாப்பிட்டு கொண்டு இருங்கள்… நான் அவருக்கு பால் கொடுத்து விட்டு உடனே வந்து விடுகிறேன்…என்று கூறிவிட்டு அவனின் பதிலை எதிர்பார்க்காமல் கிச்சனுக்கு சென்று ஒரு டம்ளரில் பாலை ஊற்றி எடுத்துக் கொண்டு மாடிக்கு விரைந்தாள் மிதுலா.

அங்கே வசீகரன் சோர்வாக கண்களை இறுக மூடிக் கொண்டு படுத்து கொண்டு இருந்தான். மெதுவாக அவன் அருகே சென்று, “பால் கொண்டு வந்துருக்கேன்… குடிச்சுட்டு படுங்க… பழம் கூட கட் செய்து எடுத்து வந்துருக்கேன்… இதையும் கொஞ்சம் சாப்பிடுங்க… பசி குறையும்.

இதில் என்னத்தகலந்து தொலைத்து இருக்கிறாயோ?… எனக்கு ஒன்றும் வேண்டாம்… எடுத்துக் கொண்டு போய் தொலை முதலில்”

வெறும் வயிற்றோடு படுக்க வேண்டாம்… ப்ளீஸ்!”

பேசாமல் போகிறாயா… இல்லையா?”

கொஞ்சம் பழமாவது…

உள்ளே வரலாமா?” என்ற புதிய குரல் கேட்டு இருவரும் வாசல் பக்கம் திரும்பி பார்த்தனர். 

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here