NUNN Tamil Novels 29

0
5571

விலக நினைத்த மிதுலாவை வசீகரனின் கரங்கள் விலக அனுமதிக்கவில்லை. கள்ளுறும் வண்டென அவன் மீண்டும் மீண்டும் மிதுலாவின் இதழ்களை நாடினான். மூச்சுக் காற்றுக்கு அவள் தவிக்கும் வரை அவளைத் துடிக்க விட்டு பின்பு மெதுவாக விடுத்தான். ஆனாலும் அவளைத் தள்ளி நிறுத்தாமல் கை வளைவிலேயே நிறுத்தி வைத்தான்.

“உன்னிடம் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி…” ஏதோ பேச ஆரம்பித்தவன், பேச்சை நிறுத்தினான் கதவு தட்டும் ஒலியில்.

“உள்ளே வரலாமா?”

அவசரமாக விலகி வசீகரனுக்கு முதுகு காட்டி நின்று கலைந்திருந்த உடையைச் சரி செய்தாள் மிதுலா.

“உள்ளே வா நிவி… கதவு திறந்து தான் இருக்கிறது… எதற்காக அனுமதி எல்லாம் கேட்கிறாய்?”

ஆடையைத் திருத்திக் கொண்டு மிதுலாவும் நிவியை வரவேற்க தயாரானாள். மின்னல் கீற்றென பளீரென்ற புன்னகையுடன் அங்கே நின்று கொண்டு இருந்தாள் நிவேதிதா.

“என்னை வெறுப்பேற்ற வேண்டும் என்று தானே உங்கள் பழைய காதலி நான் வரும் நேரத்தில் இருவரும் இப்படி நிற்கிறீர்கள்? எல்லாவற்றையும் பிளான் செய்து பண்ணிவிட்டு ‘ஏன் அனுமதி கேட்கிறாய்’ என்று கேள்வி வேறு! எனக்குப் பொறாமை எல்லாம் இல்லப்பா… சொல்லப் போனால் உங்கள் இருவரையும் இப்படிப் பார்க்க சந்தோசமாகத் தான் இருக்கிறது”

அதிர்ந்து போய் வசீகரனின் முகம் பார்த்தாள் மிதுலா.

‘அப்படியென்றால்… இத்தனை நேரம் நடந்த அத்தனையும் பொய்யா? நிவி இவரின் முன்னாள் காதலியா? இவளை வெறுப்பேற்றுவதற்காகவா என்னிடம் இப்படி எல்லாம் நடந்து கொண்டார்?’

“என்ன கரன் உங்கள் மனைவி முழிப்பதை பார்த்தால், நம் காதல் கதையை இன்னும் நீங்கள் அவரிடம் சொல்லவில்லை போல” என்று கூறிவிட்டுக் கிண்கிணியெனச் சிரித்தாள் நிவி.

அந்த இடமே அழகிழந்தது போல தோன்றியது மிதுலாவிற்கு. ‘என்ன நடக்குது இங்கே… நிவி ஏதேதோ சொல்கிறாளே… சே! சே! அப்படி எல்லாம் இல்லை… சும்மா கிண்டல் செய்கிறார்கள்’ என்று நினைத்து அவள் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு இருக்கும் போது அவளுடைய எண்ணத்தைப் பொடி பொடியாகச் சிதைத்தது வசீகரனின் வார்த்தைகள்.“நம்ம காதல் கதையை இன்னும் சொல்லவில்லை நிவி… பிறகு ஒருநாள் பொறுமையாகச் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்”

‘ஒருவேளை விளையாடுகிறார்களோ’ என்று இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள் மிதுலா. இருவர் முகத்திலும் மருந்துக்குக் கூடச் சிரிப்பு இல்லை.

இத்தனை நேரம் இருந்த மனநிலை முற்றிலும் மாறி போகப் பேயறைந்தது போன்ற முகத்துடன் அமர்ந்து விட்டாள் மிதுலா. வசீகரனும், நிவியும் ஏதேதோ பேசினார்கள்… சிரித்தார்கள்… அது எதையுமே மிதுலா கவனிக்கவே இல்லை. மனம் முழுக்கக் குழம்பி தவித்தது.

‘ஒருவேளை அன்று வீட்டில் அவர் பேசும் போது தேவதை என்று குறிப்பிட்டது நிவியைத் தானோ… அன்றே அவரிடம் அதைப் பற்றிப் பேசி இருக்கலாம்… ஏதோ குடி போதையில் உளறுகிறார் என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறாகி விட்டது…

அதனால் தான் என்னை இத்தனை நாள் ஒதுக்கி வைத்து விட்டாரோ? இல்லையே… அப்படி முழுதாக என்னை ஒதுக்கி வைத்து விட்டதாக எப்படி சொல்ல முடியும். சற்று நேரத்திற்கு முன்பு வரை என்னோடு… எப்படி இருந்தார்… அது… அத்த… அத்தனையும் பொய்யா? வெறுமனே இவளை வெறுப்பேற்றுவதற்காக அவ்வளவு தூரம் இறங்குவானேன்?’ குழம்பி தவித்தாள் மிதுலா.

அவளுடைய முக மாற்றத்தையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்த வசீகரனின் முகத்தில் திருப்தியான முகபாவனை வந்து போனது.

மிதுலா என்ற ஒருத்தி அங்கு இருப்பதையே கண்டு கொள்ளாது வசீகரனும், நிவியும் அவர்கள் பாட்டிற்குப் பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர். பரிமாற வந்த சர்வரை மறுத்து வெளியே அனுப்பிவிட்டு தாங்களே உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தனர். மிதுலாவின் தட்டில் உணவு வகையறாக்களை வசீகரனே பரிமாறினான்.

தன் நினைவுகளிலேயே மூழ்கி இருந்த மிதுலாவை கலைத்தது நிவியின் சிரிப்பொலி. கலக்கத்தோடு நிமிர்ந்து இருவரையும் பார்த்தாள். இவளை பற்றிய நினைவே துளியும் இல்லாது சிரித்துப் பேசி கொண்டு இருந்தனர்; மெதுவாகப் பார்வையை வசீகரனின் புறம் திருப்பினாள்.

‘சற்று நேரம் முன்பு வரை தன்னிடம் எப்படி நடந்து கொண்டார் இந்தப் புருஷர்ர்ர்ர்… ஆனால் இப்பொழுது நிவி வந்த பிறகு தன் பக்கம் கூடத் திரும்ப மாட்டேன் என்கிறார்’.

மனதில் பொங்கிய காதல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. உணர்வுகள் மரத்த நிலையில் இருந்தாள் மிதுலா. அவர்கள் என்ன பேசினார்கள் என்றோ என்ன உணவு கொண்டு வரப்பட்டது என்றோ எதையும் மிதுலா உணரவில்லை. அமர்ந்த இடத்திலேயே குனிந்த தலை நிமிராமல் அப்படியே அசையாமல் இருந்தாள்.

அவள் சாப்பிட்டாளா? இல்லையா? என்பதைக் கூடக் கவனிக்காமல் இருவரும் பேசிக் கொண்டே இருந்தனர். சட்டென்று நினைவு வந்தார் போல், “என்ன மிதுலா… ரொம்ப அமைதியா இருக்கீங்க? பேச்சையே காணோம்.

சாப்பாடு பிடிக்கலியா? வேற ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா? என்ன கரன் உன் மனைவி எப்பவும் இப்படித் தான் அமைதியா இருப்பாங்களோ?”

“அப்படி எல்லாம் நினைத்து ஏமாந்து விடாதே… நிவி. இவள் பேச ஆரம்பித்தால் பிறகு வாயை மூடவே மாட்டாள்… என்ன சாப்பிடாமல் அப்படியே வைத்துக் கொண்டு இருக்கிறாய்… ம்… சாப்பிடு”

பேச்சுக்கு சொல்வது போல் சொல்லிவிட்டு மீண்டும் நிவியுடன் பேச ஆரம்பித்து விட்டான் வசீகரன். மிதுலா அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை, ஒரு வாய் சாப்பிடவுமில்லை. இருந்த நிலையில் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருந்தாள்.

“வசீகரன்… ரெண்டு பேரும் சின்னதா ஒரு டான்ஸ் ஆடலாம். ” என்று வசியை நோக்கி கைகளை நீட்டினாள் நிவி. ‘அவளோடு ஆட போகிறாரா?’ துடித்துப் போய் நிமிர்ந்தாள் மிதுலா. கண்களில் இருந்து கண்ணீர் அருவியென வழிய நின்றவளை பார்த்து வசீகரன் பேச்சிழந்தான்.

இனி ஒரு நிமிடம் தாமதித்தால் கூட இங்கேயே அழுது விடுவோம் என்று தோன்றவே, சட்டென எழுந்து நின்றாள்.

மிதுலா எழுந்ததும் உடனே தானும் எழுந்தவன், “இன்னொரு நாள் ஆடலாம் நிவி… இப்பொழுது நேரம் ஆகிவிட்டது. நாங்கள் கிளம்புகிறோம். நீயும் வாயேன்… ஒன்றாக ஒரே காரிலேயே செல்வோம்” மிதுலாவை பார்த்தபடியே கூறினான்.

மிதுலா தலை நிமிரவே இல்லை. கைகளை உதற துடித்த மிதுலாவால் கைகளை விடுவிக்க முடியவில்லை. இரும்பென அவள் கையைப் பற்றி இருந்தான் வசீகரன்.

“என்ன கரன் அதுக்குள்ள கிளம்பியாச்சா? இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் இல்லையா?”

“இல்லை நிவி… நாளைக்குக் கொஞ்சம் வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது. ஒரு புது ஒப்பந்தம்… காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும். நமக்கென்ன… இன்னொரு நாள் கூட நம் பார்ட்டியை வைத்துக் கொள்ளலாம். நம் ஆடல், பாடலுடன்… சரிதானா? இப்பொழுது நீ வருகிறாயா? இல்லையா? அதை மட்டும் சொல்”“இல்லை கரன்! எனக்கு இன்று நைட் டூட்டி ஹாஸ்பிடல் போயாக வேண்டும். நாளை மதியம் அமெரிக்காவிற்கு கிளம்புகிறேன். திரும்பிவர எப்படியும் ஒரு மாதம் ஆகிவிடும்… ஸோ நாம மறுபடி பார்க்க ஒரு மாசம் ஆகிடும். வரேன்… டிரைவர் கூடத்தான் வந்திருக்கிறேன். அதனால் ஒன்றும் பயமில்லை. பை மிதுலா… பிறகு பார்ப்போம் என்ன!” என்று கூறி கையாட்டி விடைபெற்று சென்று விட்டாள்.

“அது தான் உங்கள் காதலி போய் விட்டாளே? இன்னும் எதற்கு என் கையைப் பிடித்துக் கொண்டு நிற்கறீங்க… கையை விடுங்க” சீறினாள் மிதுலா.

“ஏன், இவ்வளவு நேரம் உன் கையை மட்டுமா பிடித்து இருந்தேன்? இன்னும் என்னென்னவோ செய்தேன்… அப்பொழுது இல்லாதது, இப்பொழுது மட்டும் என்ன வந்தது?” பிடியை தளர்த்தாமல் பேசினான் வசீகரன்.

“எனக்கு இப்பொழுது நீங்கள் தொடுவது பிடிக்கவில்லை… கையை எடுக்கப் போறீங்களா… இல்லை கத்தி கூச்சல் போடட்டுமா?” கோபம் அடங்காது பேசிக் கொண்டிருந்தாள் மிதுலா.

பிடித்த அவளின் கைகளை விடாமல்… யார் கவனத்தையும் கவராமல்… கார் பார்க்கிங் வரை தரதரவென இழுத்துக் கொண்டு போனான் வசீகரன்.

காரின் கதவை திறந்து உள்ளே அவளைப் பிடித்துத் தள்ளாத குறையாக உட்கார வைத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்து புயல் வேகத்தில் ஓட்டினான்.

வசீகரனின் வேகம் கண்டு பயந்து போய், “ஏன் இப்படி வேகமா போறீங்க? எனக்குப் பயமா இருக்கு… ப்ளீஸ்! கொஞ்சம் மெதுவா போங்க” என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

அவள் கெஞ்சலை கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அதே வேகத்தில் ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் வசீகரன்.

இவர்கள் வீட்டிற்கு வந்து சேரும் நேரம் நள்ளிரவை தாண்டி விட்டதால் எல்லாரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, வண்டியை பார்க் செய்யுமாறு வாட்சமேனிடம் சொல்லிவிட்டு மீண்டும் மிதுலாவின் கைகளைப் பற்றி விடாமல் இழுத்துக் கொண்டே போனான்.

வீட்டிற்கு வந்ததும் ஓரளவிற்கு மிதுலாவின் பயம் குறைந்தது. “கையை விடுங்க…” என்று சீற்றத்துடன் கூறினாள். ஆனால் வசீகரனின் முகத்தில் எந்தவொரு சலனமும் இல்லை. மாடியில் தங்களின் அறைக்குச் சென்று கதவை திறந்து மிதுலாவை கட்டிலில் தள்ளிவிட்டு கதவை சாத்திவிட்டு நிதானமாகத் திரும்பி மிதுலாவை பார்த்தான்.

“இப்போ கத்துடி… பார்க்கலாம்” பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு கால்களை அகட்டி நின்று அலட்சியமாக நின்று சொன்னான்.

‘இப்போ எதுக்குக் கத்தணும்… என்ன சொல்றார்’ மிதுலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஏதோ அவளுக்கு இருந்த கோபத்திலும், மன வருத்தத்திலும் பேசியது… அது அவளின் நினைவுக்கு வரவே இல்லை. திருதிருவென முழித்தாள்.

“என்னடி, பேசுறது எல்லாம் பேசிட்டு உடனே முகத்தை ஒண்ணும் தெரியாத மாதிரி வச்சுக்கிற. நான் தொட்டால் உனக்குப் பிடிக்கவில்லையா? தொட்டால் கத்தி சத்தம் போடுவேன் என்று சொன்னாயே… இப்பொழுது கத்துடி பார்க்கலாம்” கோபம் குறையாமல் பேசினான் வசீகரன்.

“ஓ! கத்தினா நீங்க செய்தது எல்லாம் சரி என்று ஆகிவிடுமா? உங்க காதலிக்காகத் தானே இத்தனை நடிப்பும்… எத்தனை அழகாக என்னை ஏமாற்றி விட்டீர்கள்”

“நான் என்னடி ஏமாற்றினேன் உன்னை?”

“நீங்களும், நிவியும் ஏற்கனவே காதலித்து இருக்கீங்க… இதை என்னிடம் சொல்லாமல் ஏமாற்றி விட்டீர்கள்”

“ஆமாண்டி… உன் வீட்டுக்கு தேடி வந்து பெண் கேட்டு உன்னை ஏமாற்றிவிட்டேன் இல்லையா? பேசுகிறாள் பார்… கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாயா?” எரிந்து விழுந்தான் வசீகரன்.

‘ஒருவேளை உன் வீட்டார் செய்த இந்தத் திருமண ஏற்பட்டால் தான் எனது காதல் கை கூடாமல் போனது என்ற ஆத்திரத்தில் பேசுகிறாரோ?’ என்று எண்ணினாள் மிதுலா

“திருமணம் நடந்து முடிந்த முறை வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் நம் திருமணத்திற்குப் பிறகு நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்லி இருக்க வேண்டும்… ஆனால் நீங்கள் என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டீர்கள். ஒரு ஏமாற்று பேர்வழி என்னைத் தொடுவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதனால் இனி என்னைத் தொடாதீர்கள்”

அவள் பேச பேச வசீகரனின் முகம் மாறிய விதத்தை அவள் கவனிக்க வில்லை. கதவை விட்டு ஓரடி முன்னோக்கி நகர்ந்து, “என்ன சொன்னாய்? மீண்டும் ஒரு முறை சொல்” என்றான் சலனமற்ற குரலில்

இருந்த எரிச்சலில் அவனது மாற்றத்தை கவனியாது, “என்னை விட்டு தள்ளி இருக்கச் சொன்னேன்… போதுமா?” என்றாள்.

“சரியாகக் காதில் விழவில்லை… மீண்டும் ஒருமுறை சொல்” அதே சலனமற்ற குரல் தன்னுடைய சட்டையின் கை பகுதியில் உள்ள பட்டன்களைக் கழற்றி விட்டுக் கொண்டே கேட்டான் வசீகரன்.

‘இது என்ன… மறுபடி மறுபடி அதையே கேட்கிறார்’ என்ற யோசனையோடு திரும்பியவள், அப்பொழுது தான் வசீகரனின் முகப் பாவனையும் குரல் பேதத்தையும் உணர்ந்து திடுக்கிட்டாள்.

‘இது… இந்தக் குரல் மூர்த்தியிடம் பேசும் போதும் இதே மாதிரி தான் சலனமின்றி வந்தது’ என்று எண்ணியபடியே அச்சத்துடன் அவள் திரும்பி வசீகரனை பார்க்கும் போதே வசீகரன் அவளுக்கு அருகில் வந்து விட்டு இருந்தான்.

கட்டிலில் அமர்ந்து இருந்தவளை அழுத்தமாக பார்த்து, “கேட்டது காதில் விழவில்லையா? சொல்” குரலில் எந்த மாற்றமும் இன்றிக் கேட்டான் வசீகரன்.

மிதுலா பயந்து அவன் முகம் நோக்க, நேராக நிமிர்ந்து நின்று அவளைப் பார்த்து, “ உன்னைப் பாவம் பார்த்து இத்தனை நாள் விட்டு வைத்தது என் தவறு தான்” பேசிக் கொண்டே சட்டையைக் கழற்றி விசிறி அடித்தான்.

“அதனால் தானே, இன்று என்னிடமே வந்து என்னைத் தொடாதே என்று சொல்கிறாய்” பேசிக் கொண்டே மிதுலாவை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். வயிற்றில் பயபந்து உருள அச்சத்தோடு வசீகரனை பார்த்தாள் மிதுலா.

“இனி என்னிடம் இப்படிப் பேச உனக்கு எப்படித் தைரியம் வருகிறது என்று பார்க்கிறேன்” பேசிக் கொண்டே அவள் கையைப் பிடித்து எழுப்பி அவளின் இதழில் தனது கோபத்தைக் காட்டினான்.

“நான் தொடாமல் வேறு யாரடி உன்னைத் தொடுவான்?” பேசிக் கொண்டே அவன் கைகள் மிதுலாவின் சேலைப் பற்றியது… மிரண்டு போய் பின்வாங்கிய மிதுலாவால் விலகத் தான் முடியவில்லை.

அந்த நிமிடம் மட்டும் அல்ல… அன்று இரவு முழுவதுமே… மீண்டும் மீண்டும் அவளை நாடினான். “என்னையா தொடாதே என்று சொன்னாய்?” என்று கேட்டுக் கொண்டே அவளை விடியும் வரை துளி கூட உறங்க விடாமல் ஆக்கிரமித்த வண்ணம் இருந்தான் வசீகரன்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here