Tuesday, July 23, 2019
Home Blog Page 2
விழா முடிந்ததும் நிறைவான மனதுடன் வீட்டிற்கு வந்தாள் வானதி. அவள் மனம் முழுக்க அன்றைய நாளில் அவளை அன்போடு எதிர்கொண்ட தொழிலாளர்களின் முகமே நிறைந்து இருந்தது. அனாதையாக ஆசிரமத்தில் வளர்ந்து வந்தவள் வானதி. தன் மீது நேசம் வைக்கவும், அன்பு காட்டவும் இந்த உலகத்தில் யாருமே இல்லை என்ற எண்ணம் அவளது ஆழ்மனதில் அழுத்தமாக பதிந்து இருந்தது. அப்படிபட்டவளின்...
அத்தியாயம் 39 ஈஸ்வரின் கேள்வியில் தன்னுடைய செவித்திறனைக் குறித்த சந்தேகம் எழுந்தது வானதிக்கு. பின்னே அந்த நேரத்தில் நடந்து கொண்டு இருந்த விவாதத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் பேசியவனை எப்படி கையாள்வது என்று திணறினாள் என்று தான் சொல்ல வேண்டும். “ஹே! நான் சொன்னது காதில் விழுந்துச்சா இல்லையா?” என்று கூறி அவள் கண்ணுக்கு நேரே...
விடிந்ததும் அவளுக்கு முன்னதாகவே அவன் கிளம்பி இருக்க, இப்படி தூங்கி விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் அரக்கபரக்க கிளம்பி வந்தாள் வானதி. சாப்பாட்டு மேசையில் அவளுக்கு முன்னரே அமர்ந்து இருந்த ஈஸ்வரைப் பார்த்ததும் முதல் நாள் இரவின் தாக்கம் எதுவும் இழையோடுகிறதா என்று கவனித்தபடியே வந்தவள் அவனுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.
அத்தியாயம் 38 ‘ஈஸ்வரால் தானே இத்தனையும்.... இப்படி முன்பின் அறியாதவர் கூட என்னை திட்டுகிறார் என்றால் அதற்குக் காரணமும் அவன் தானே? அவன் வரட்டும்... இன்னைக்கு என்னோட கேள்விக்கு அவன் பதில் சொல்லியே தீரணும்... எனக்கு நியாயம் கிடைச்சே ஆகணும்’ என்று வானதி உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருக்க, ஈஸ்வரின் கெட்ட நேரம் தானாகவே அவளைத் தேடி வந்தான்.
Madhumathi Bharath Tamil Novels
அத்தியாயம் 37 போனில் மூர்த்தியின் குரலைக் கேட்டதும் பதட்டத்துடன் திரும்பி ஈஸ்வரைப் பார்த்தாள். ஈஸ்வர் மும்மரமாக பால்கனியில் நின்று கொண்டு தொழில் தொடர்பாக யாரிடமோ பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்க, கொஞ்சம் ஆசுவாசமாமானாள். ‘இவனுக்கு எப்படி இந்த நம்பர் கிடைத்தது? இவனிடம் கண்டிப்பாக பேசி விட வேண்டும். இல்லைனா மறுபடியும் இதே மாதிரி...
“என்னை உனக்கு தெரியலையா வானதி? அதுக்குள்ளே என்னை மறந்துட்டியா? உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்? உன்னை காதலிச்சு, முறைப்படி உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டு எல்லா ஏற்பாடும் செஞ்சேனே... அந்த பாவி உன்னை கடத்திட்டு போன பிறகும் கூட உன்னை எப்படி எல்லாம் தேடித் திரிஞ்சேன் தெரியுமா? அடிபட்டு,ஜெயிலுக்கு போய், கடைசியில் அந்த ஈஸ்வர் எனக்கு கரண்ட் ஷாக் வச்சு கொல்ல வேற முயற்சி...
அத்தியாயம் 36 “இதை சாப்பிட்டு பார் வானதி... ரொம்ப நல்லா இருக்கும்” என்று அவன் பார்த்து பார்த்து பரிமாற... வானதிக்கோ உணவு தொண்டைக் குழியை தாண்டி இறங்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்து கொண்டு இருந்தது. உணவை சாதாரணமாக சாப்பிடக் கூட முடியாமல் வெளிப்படையாகவே அவள் கைகள் நடுங்கிக் கொண்டு இருக்க... அவளின் அருகில் அமர்ந்து இருந்தவனோ எந்த கவலையும் இல்லாமல்...
யாருக்குமே சொல்லாம அவசரகதியில் நம்ம கல்யாணம் நடந்துடுச்சு... ஊரில் பெரிய குடும்பம். என்னோட கல்யாணத்தை எப்படி எல்லாமோ நடத்தி கண் குளிர பார்க்க முடியலைன்னு அவங்களுக்கு வருத்தம். அது தப்பு இல்லையே?” “தப்பு இல்லை தான். ஆனா அவரோட வருத்தம் உங்க கல்யாணத்தை பார்க்க முடியலை அப்படிங்கிறது மட்டும் இல்லை...மருமகளாக ஒரு அனாதை வந்ததும் கூடத் தான்” என்று அவள்...

MEV Final

அவளை கைகளில் ஏந்திக் கொண்டு தன்னிடம் கொடுக்க மறுத்து தானாக அவளை சுமந்து கொண்ட விதமும்,அவளைத் தரக் குறைவாக பேசிய ஒருவரை அடிக்கப் பாய்ந்த அவனது ரௌத்திரமும் கண்டு அவனுக்கு திருப்தியாகத் இருந்தது. தங்கை வாழ்க்கையை நன்றாக வாழுவாள் என்று நம்பத் தொடங்கியதுமே அவன் முகத்தில் ஒரு நிறைவு வந்து இருந்தது. இத்தனை...