இஸ்ரேலில் காசா என்ற பகுதியில் சுகாதார சேவை பிரிவில் பணிபுரிந்த ஒரு முக்கிய மருத்துவர் எலி லாஷ் அவரது துறையில் பெயர் பெற்று விளங்கினார். அவரிடம் ஒரு விசித்திரமான வழக்கு வந்தது. அது ஒரு மூன்று வயது சிறுவனின் வழக்கு.அந்த சிறுவனின் தலையில் யாரோ கோடரியால் தாக்கியது போல ஒரு அடையாளம் அவனது பிறப்பின் பொழுதில் இருந்தே காணப்பட்டு இருக்கிறது.
அந்தப் பையனின் வழக்கு ரொம்பவே சுவாரசியமான ஒன்றாக இருந்தது.அதில் இருக்கும் உண்மைகளை அறிய அந்தப் பையன் சொன்ன ஊருக்கு நேரில் சென்று அவன் சொன்ன விவரங்களை சரிபார்க்க ஆரம்பித்தார்.அந்தப் பையனின் தற்போதைய பெயர்,விலாசம் முதலியவற்றை மிக ரகசியமாக வைத்து இருந்தார் அவர்.
ஏனெனில் அவன் தன்னுடைய முந்தைய ஜென்மத்தில் தன்னை கொன்றது யார் என்று ஊராருக்கு அடையாளப்படுத்த விரும்புவதாக கூறி இருந்ததை வெளியே சொன்னால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எண்ணியே அவர் அவ்வாறு செய்தார்.
அந்த பையன் சொன்ன தகவல்களை வைத்து பூர்வ ஜென்மத்தில் அவனுடைய தாய்,தந்தை,உற்றார்,உறவினர் என அனைவரையும் சந்தித்து விவரங்களை சேகரிக்க முடிவு செய்தார்.
அவருடைய உறவினர்களிடம் அந்த நபரை(அதாவது போன ஜென்மத்தில் தான் யாராக இருந்ததாக பையன் குறிப்பிட்டு இருந்தானோ அந்த நபரை)பற்றி அவரது உறவினர்களிடம் விசாரிக்கும் பொழுது அவருக்கு கிடைத்த தகவல்கள் அவரை ஆச்சரியப்பட வைத்தன.
அந்த நபர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் விட்டதாகவும் அதைப் பற்றி அவர்கள் யாருக்கும் வேறு எந்த தகவலும் தெரியவில்லை.அது மட்டுமில்லாமல் அந்த காலகட்டத்தில் இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையில் எல்லைப் பகுதிகளில் கைதிகளாக நிறைய மக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிந்ததால் ஒருவேளை இந்த நபரும் அப்படி கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதிய உறவினர்கள் அவரை தேடும் பணியை நிறுத்தி விட்டனர்.
அந்தப் பையன் இந்த முறை கிராமத்திற்கு வந்து தான் வளர்ந்த விதத்தையும்,தான் வாழ்ந்த முறையையும் ஒவ்வொன்றாக தெரிவிக்க அதை வேடிக்கைப் பார்ப்பதற்கு என்று கூட்டம் கூடத் தொடங்கியது.
திடீரென்று அந்தப் பையன் கிராமத்திற்குள் எங்கோ செல்லத் தொடங்கினான்.அங்கு இருந்த ஒரு நபரை சரியாக பெயரிட்டு அழைத்ததாக கிராமத்தினரும் ஒப்புக் கொண்டனர்.அந்த சிறுவன் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.
“நான் உங்கள் பக்கத்துக்கு வீட்டில் தான் குடி இருந்தேன்.ஒருநாள் நம் இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில் நீங்கள் என்னுடைய தலையில் கோடாரியால் அடித்தே கொன்று விட்டீர்கள்” என்று சொல்ல அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அந்த நபரின் முகம் வெளுத்துப் போகத் தொடங்கி இருக்கிறது.
“என் உடலை அவர் எங்கே புபுதைத்து இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்.”என்று அந்த சிறுவன் தொடர்ந்து பேச கூட்டத்துக்குள் ஒரே சலசலப்பு…
அந்த சிறுவன் குற்றம்சாட்டப்பட்ட கொலைகாரனையும் மற்றவர்களையும் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றான்.அங்கே கற்களால் நிரம்பி இருந்த ஒரு இடத்தை சுட்டிக்காட்டி இங்கே தான் என்னை புதைத்து இருக்கிறார் என்று அடையாளம் காட்டி இருக்கிறான்.
அதன்பிறகு சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் அனுப்பி அவர்கள அந்த இடத்தை தோண்ட வயது முதிர்ந்த ஒரு மனிதனின் எலும்புக்கூடு கிடைத்து இருக்கிறது.அவருடைய மண்டை ஒட்டு பகுதியில் கோடரியால் வேட்டப்பட்டதால் ஏற்பட்ட காயமும் இருந்து இருக்கிறது…சிறுவனின் தலைபகுதியில் இருந்ததைப் போலவே…
அதன்பிறகு மருத்துவர் லாஷ் அந்த வழக்கு குறித்தான தகவலை தன்னுடைய மேலிடத்தில் சமர்ப்பித்து கொலை செய்த அந்த நபருக்கு தகுந்த தண்டனையும் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.
மர்மம் தொடரும்…