1940களின் பிற்பகுதியில் ரஷ்ய ஆய்வாளர்கள் ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து சில நாட்கள் அவர்கள் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்ற உத்தரவுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.அந்த அறையின் உள்ளே ஆக்சிஜன் செல்லும் அளவிற்கு ஒரு துளை மட்டுமே இருந்தது.எனவே அவர்களுக்கு அந்த அறையில் மூச்சு முட்டவில்லை.
அந்த அறையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.சில சிறிய அளவிலான மைக்ரோ போன்களும் பொருத்தப்பட்டு இருந்தது.அது மட்டும் இல்லாது புத்தகங்கள்,உணவு,தண்ணீர்,கழிப்பறை எல்லாமே அந்த அறைக்குள் இருந்தது.
இரண்டாம் உலகப் போரின்போது அரசின் எதிரிகள் என கருதப்பட்ட அரசியல் கைதிகள் தான் இந்த பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த நபர்கள் அந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் 30 நாட்கள் கழித்து அவர்களை விடுதலை செய்து விடுவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து அவர்களை அதற்கு ஒத்துக்கொள்ள வைத்திருந்தனர்.
முதல் ஐந்து நாட்களுக்கு எல்லாம் நன்றாக இருந்தது. முதல் நான்கு நாட்கள் அவர்கள் தங்களுடைய கடந்த காலத்தை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்.அதன் பிறகு தாங்கள் வாழ்வின் இருண்ட பக்கங்களைப் பற்றி பேசத் தொடங்கினார்கள்.
ஐந்து நாட்கள் கழித்து அவர்கள் அப்பொழுது இருக்கும் சூழ்நிலைகள் மற்றும் அந்த இடத்தில் தங்க நேர்ந்த சம்பவத்தைப் பற்றி அவர்கள் புகார் செய்ய ஆரம்பித்தனர், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதையும் கடுமையான சித்தம் கலங்கியது போலவும் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்களின் இந்த செயல்களை முதலில் ஆய்வாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அதற்கு காரணம் அவர்கள் தூங்காமல் இருக்க ஆக்சிஜன் உடன் சேர்த்து வேறு ஒரு வாயுவையும் அவர்களுக்கு அளித்து வந்தனர்.
ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவர்களில் ஒருவர் முதலில் கத்தினார். அவர் மீண்டும் மூன்று மணிநேரங்களுக்கு தொடர்ந்து கத்தினார்.ஆனால் அதன்பிறகு அவரால் பேசவே முடியாத அளவிற்கு அவரது குரல் புண்ணாகி விட்டது. அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மற்ற கைதிகள் யாரும் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கவேயில்லை.
அதன்பிறகு அங்கிருந்த இரண்டாவது நபரும் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்ளத் தொடங்கினார்.அறையில் பொருத்தப்பட்டு இருந்த மைக்ரோபோன்களை சேதாரப் படுத்தி விட்டார். எனவே உள்ளே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அங்கே இருந்த யாராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
14 ஆம் நாள் காலை, ஆராய்ச்சியாளர்கள் கைதிகளிடம் இருந்து எந்த விதமான சத்தமும் இல்லாதததால் அறையில் இருந்த ஸ்பீக்கர் மூலம் அவர்களுக்கு அதிகாரிகள் ஒரு தகவலை தெரிவித்தனர்.
“உங்கள் அறையில் இருக்கும் மைக்ரோபோன்கள் வேலை செய்யவில்லை.அவற்றை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு கருவியை பொறுத்துவதற்காக இப்பொழுது நாங்கள் கதவை திறக்கப் போகிறோம்.அப்படி திறக்கும் பொழுது நீங்கள் அனைவரும் கீழே படுத்து இருக்க வேண்டும்.கருவியை மாட்டி விட்டு வெளியில் நாங்கள் வரும் வரை உங்களில் யாரும் அசையக் கூடாது.மீறி அசைந்தால் எந்தவித அறிவிப்பும் இன்றி சுட்டுக் கொல்லப்படுவீர்கள்”என்று எச்சரித்து விட்டு கதவை திறந்தனர்.
பதினைந்தாம் நாள் நள்ளிரவில் அறை திறக்க முடிவு செய்யப்பட்டது.அறையில் இருந்த வாயுக்களை முழுதாக நீக்கி,வெறுமனே ஆக்சிஜன் மட்டும் வருமாறு செய்தபின் அறையில் இருந்து பல்வேறு விதமான குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
அந்தக் குரல்கள் மிகவும் கெஞ்சின.. “எங்களுக்கு இதற்கு முன்னர் அளித்த காற்றையே மீண்டும் சுவாசிக்கத் தாருங்கள்” என்று…
ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாது அறைக்குள் நுழைந்த சிப்பாய்கள் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் அலறத் தொடங்கினார்கள்.அங்கே இருந்த ஐந்து பேரில் நால்வர் உயிருடன் இருந்தார்கள்.
இறந்து போன ஒருவரின் உடல் வெட்டி கூறு போடப்பட்டு இருந்தது.உயிருடன் இருந்த நான்கு பேரின் முகமும்,தோலும் பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு மாறி இருந்தது.இறந்து போய் சில வருடங்கள் கழித்து பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஒருவரின் உடலும் அவர்களின் உடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருந்தது.
அதன்பிறகு மீண்டும் அந்த அறையை பூட்டி விட்டு அவர்கள் வெளியேறி விட்டனர்.அதன்பிறகு வந்த நாட்களில் மீதம் இருந்த நான்கு பேரும் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு தங்களைத் தானே காயப்படுத்திக் கொண்டார்கள்.சண்டை என்றால் சாதாரணமாக அல்ல…மனநிலை பிறழ்ந்து தானாகவே அடி வாங்கி சிரித்துக்கொண்டே ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்து இருக்கின்றனர்.அதில் ஒருவர் இறந்து போனார்.
மீதம் இருந்த மூவரை வேறு ஒரு நவீன மருத்துவ அறைக்கு மாற்றினார்கள்.அவர்களின் உடல் உறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் தொடங்கி இருந்ததால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்க வேண்டியே இதை செய்தார்கள்.
மயக்க மருந்து கொடுத்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள முயன்றது தோல்வியில் தான் முடிந்தது.அவர்களின் உடல் மயக்க மருந்துக்கு அடங்கவில்லை.அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்தால் அவர் இறந்து போனார்.
இரண்டாமவர் எனக்கு மயக்க மருந்து இல்லாமலே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று போராடவே வேறு வழியின்றி அதை செய்தனர்.அந்த இடத்தில் இருந்த நர்ஸ் மிகவும் பயந்து போய் விட்டார்.காரணம் ஆபரேஷன் நடக்கும் பொழுது அந்த மனிதரின் முகத்தில் கொஞ்சமும் வலி இல்லை…மாறாக நர்சை பார்த்து சிரித்த வண்ணம் இருந்து இருக்கிறார்.ஒரு இடத்தில் அவருக்கு கடுமையான மூச்சிறைப்பு ஏற்பட்ட பொழுது அவரே பேப்பரில் எழுதி இருக்கிறார். ‘என்னை வெட்டுங்கள்’ என்று.கடைசியில் அவரும் இறந்து போனார்.
மேலே கூறிய இரண்டு நபர்களும் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது சிரித்துக் கொண்டே இருந்தனர் என்பது முக்கியத் தகவல்.அவர்கள் மயக்க மருந்தை ஏற்கத் தயங்கியத்தின் காரணம், ஒருவேளை தூங்கி விட்டால் நிபந்தனையில் தோற்றுப் போய் தங்களை விடுதலை செய்யாமலே இருந்து விடுவார்களோ’என்ற அவர்களின் ஆழ்மனதின் பயமும் கூட காரணமாக இருக்கலாம்.என்று தெரிவிக்கப்பட்டது.
மீதி இருந்த அந்த ஒரு நபரை அந்த குழுவே துப்பாக்கியில் கொன்று விட்டது.காரணம் இப்படி ஒரு விஷயம் வெளியே வந்தால்,தங்களுக்கும்,தாங்கள் நாட்டுக்கும் ஆபத்து என்பதால் தான்….
இப்பொழுது சொல்லுங்கள் …உங்களில் யார் எல்லாம் இரவில் சரியாக தூங்காமல் இருக்குறீர்கள்?
மர்மங்கள் தொடரும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1