வணக்கம் மக்கா… இன்று நாம் முதலில் சித்த மருத்துவத்தை பற்றி ஒரு சிறிய விளக்கத்தை காண்போம்.நாளையில் இருந்து தினம் ஒரு மூலிகையை காணலாம். உலகத்தில் எதற்குமே பயன்படாத செடி என்று எதுவுமே கிடையாது. எல்லா செடிகளுமே ஏதோ ஒரு விதத்தில் மக்களின் நோய் தீர்க்க உதவும்.இன்னும் சொல்ல போனால் மனிதர்களிடம் கூட சில வியாதிகளுக்கு மருந்து இருக்கிறது. நான் சொல்ல போவது அத்தனையும் மருத்துவ குறிப்புக்கள் மக்கா….சில விஷயங்கள் உங்களில் சிலருக்கு அருவருப்பை கொடுக்கலாம் ஆனால் அவை அனைத்தும் உயிர் காக்கும் சஞ்சீவினிகள் என்பதை மறக்க வேண்டாம். உங்களில் பலரின் பொதுவான கருத்து, “சித்தமருத்துவம்னா என்னன்னு எனக்கு தெரியாதா????? கலர் கலரா பாட்டில்ல அடைச்சுவச்சு லேகியம் விற்பாங்களே!!!….அது தானே…எங்களுக்கு தெரியாதா என்ன….”என்று நீங்கள் நினைத்தால் அது தவறு மக்கா…….. இன்றைக்கு நாம் வாங்கி உண்ணும் ஆங்கில மருந்துகள் எல்லாவற்றிக்கும் காலாவதி ஆகும் காலம் என்று குறிப்பிட்டு இருப்பார்கள்…..அவை எல்லாம் மிஞ்சி போனால் ஒரு இரண்டு ஆண்டு வரை தாக்கு பிடிக்கும்.ஆனால் நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்த இந்த மருந்துகள் தொள்ளாயிரம் ஆண்டுகள் வரை கூட கெடாது என்பது உங்களுக்கு தெரியுமா மக்கா…. சித்த மருத்துவத்தில் மருந்து செய்யும் முறைகளை வைத்து அவைகளை பிரித்து வைத்து உள்ளனர். குடிநீர், லேகியம், சூரணம், மாத்திரை, லேகியம்(இளகம்),தைலம், நெய்,மணப்பாகு, செந்தூரம் ,பற்பம்…….இப்படி நிறைய உண்டு. அதே போல ஒவ்வொரு மூலிகையும் சுத்தம் செய்ய ஒரு தனி முறை உள்ளது.வெறுமனே தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து மூலிகைகளை உபயோகப் படுத்த கூடாது…..அவற்றை சுத்தம் செய்யவும் தனி விதிமுறைகள் உண்டு…வெறுமனே தண்ணீரில் கழுவி ஒரு மருந்தை செய்துவிட்டு . “நோய் தீரவில்லையே…இதற்கு தான் நான் இந்த சித்த மருத்துவத்தை எல்லாம் பின்பற்றுவதே கிடையாது” என்று அங்கலாய்க்கும் நண்பர்கள் முதலில் அதை பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள் பிறகு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்…. சில மூலிகைகளை தண்ணீரில் கழுவினால் போதும் ஆனால் சில மூலிகைகளை பாலிலும்,சிலதை வெயிலில் உலர்த்தியும்,சிலதை தாய்ப்பாலில் ஊறவைத்தும்,சிலதை எலுமிச்சம் சாற்றில் ஊறவைத்தும்,இன்னும் சிலதை தோல் நீக்கியும் சுத்தம் செய்ய வேண்டும் சுத்தம் செய்யும் முறை என்பது ஒரு பெரிய பகுதி மக்கா அதை பற்றி நாம் விரிவாக இன்னொரு நாள் காணலாம்…இது வெறும் உதாரணம் மட்டுமே….இது மாதிரி ஆயிரம் முறை உண்டு….சுத்தம் செய்யும் முறை என்பது ஒவ்வொரு மூலிகைக்கும் ஏற்றவாறு மாறுபடும். இன்றைக்கு இது போதும் மக்கா….இனி ஒவ்வொரு நாளும் புது விதமான விளக்கங்கள் உங்களை தேடி வரும் காத்திருங்கள் மக்கா….
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1