
புளி…இதைப் பத்தி நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணுமா?வீட்டில் சமைக்கும் பெண்களுக்கும் சரி,சிறு வயதில் ரோட்டோரமாக புளியம்பழம் பறித்து திண்ணும் ஆண்களுக்கும் சரி நன்றாகவே தெரிந்து இருக்கும் இதைப் பற்றி.பார்த்தவுடனே நாக்கில் ஊற வைக்கும் அதன் புளிப்பு சுவைக்கு நம்மில் பெரும்பாலானோர் அடிமை…(அதில் முதல் அடிமை நான் தானுங்கோ)
இந்த மரத்தில் இல்லை,பூ,காய்,கனி,பட்டை,விதை ஆகியவை மருத்துவ பயன் நிறைந்தது.இதோட மருத்துவ பண்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.
தளிரை துவையல் அரைத்து சாப்பிட பித்தத்தை சமப்படுத்தி வயிற்று மந்தத்தை நீக்கும்.
பூவை அரைத்து கண்ணை சுற்றிப் பற்று போட கண்வலி,கண் சிகப்பு ஆகியவை தீரும்.
உப்பு,புளி இரண்டையும் சம அளவில் எடுத்து உள்நாக்கில் தடவி வர உள்நாக்கு சதை வளர்வது தடைபடும்.
புளியங்கொட்டை தோல்,கருவேலம்பட்டை தூள் சம அளவு எடுத்து உப்புடன் கலந்து பல் துலக்கி வர பல் கூச்சம்,பல் ஆட்டம்,சீல்,இரத்தம் வருதல் ஆகியவை தீரும்.
இலை சாறு 30 மி.லி கொதிக்க வைத்து காய்ச்சி பால் கலந்து சாப்பிட இரத்த பேதி,சீத பேதி நிற்கும்.
மருத்துவம் தொடரும்…