ஹாய் மக்களே இன்னைக்கு நாம பார்க்கப் போகிற மூலிகை வெட்சி…இந்த மூலிகையோட பேர் உங்களுக்கு வித்தியாசமா இருக்கலாம்.ஆனா இது உங்க எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச மூலிகை தான்.பொதுவா அழகுக்காக வீட்டில் இந்த பூச்செடியை வச்சு இருப்போம்.எங்க ஊர் பக்கம் இதை இட்லிப்பூன்னு சொல்லுவாங்க.கொத்தா பந்து மாதிரி நிறைய பூக்கள் இருக்கிறதால அப்படி ஒரு பேர்…சரி வாங்க நாம மூலிகையோட பயன்களை பார்க்கலாம்.
நாற்பது கிராம் வேரை நசுக்கி ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி 125மி.லி ஆனதும் ஒரு நாளைக்கு மூன்று வேலை 30 மி.லி குடித்து வர குருதி கொதிப்பு ,விக்கல்,ரத்த வாந்தி,பித்த வாந்தி,குமட்டல்,பசியின்மை ஆகியவை தீரும்.
பூவை நீரிலிட்டு காய்ச்சி வடிக்கட்டிய பின் 200 மி.லி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வர காய்ச்சல் தீரும்.
வேர்பட்டையை அரைத்து நீரில் குழைத்து தடவி வர புண்கள் ஆறும்.
ஒரு கிராம் வேர்பட்டையை அரை கிராம் திப்பிலி சேர்த்து அரைத்து 300மி.லி அளவாக நாள் ஒன்றுக்கு ஐந்து வேளை கொடுத்து வர வயிற்றுப்போக்கு,சீதபேதி ஆகியவை தீரும்.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1