வில்வ மரம் பத்தி நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணும் இல்லை.ஏற்கனவே நீங்க கேள்விப்பட்டு இருப்பீங்க…பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்லயும் வில்வ மரம் இருக்கும்.சிவன் பூஜைல முக்கியமான ஒரு பொருளா இருக்கக்கூடிய அந்த அற்புத மூலிகையைப் பத்தி இன்னைக்கு பார்ப்போம்.
வில்வ மரம் பொதுவா மூணு கூட்டிலைகளை கொண்ட மாதிரி தான் இருக்கும்.அரிதாக எங்கேயாவது ஐந்து கூட்டிலைகளை இருக்கிற மரத்தை மகா வில்வம்னு சொல்லுவாங்க…இந்த மரத்தோட, இலை, பிஞ்சு, பலம், வேர்ப்பட்டை இந்த பகுதி எல்லாம் மருந்துக்கு உபயோகமாகும்.
தளிரை வதக்கி லேசான சூட்டில் ஒத்தடம் கொடுத்து வர கண்வலி,கண் சிவப்பு,அரிப்பு போன்றவை தீரும்.
ஒரு கைப்பிடி இலையுடன் ,சுக்கு,மிளகு,சீரகம் வகைக்கு இருபது கிராம் இடித்து நீரில் ஒரு லிட்டர் நீர், நூறு மி.லி ஆகும் வரை காய்ச்சி குடித்தால் எல்லா விதமான காய்ச்சலும் குணமாகும்.
இலையை காய வைத்து பொடி செய்து அரை ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட தலைவலி,மண்டை குடைச்சல்,தொண்டை கட்டு ஆகியவை தீரும்.
பிஞ்சை அரைத்து தயிரில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக்கடுப்பு,சீத பேதி ஆகியவை தீரும்.
பழத்தின் சதைப் பகுதியை உலர்த்தி பொடி செய்து அதில் ஒரு கிராம் சிறிது சர்க்கரை கலந்து 3 வேளை கொடுக்க பேதி,சீத பேதி,பசியின்மை ஆகியவை தீரும்.
மருத்துவம் தொடரும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1