Siragilla Devathai Tamil Novels 14

0
1661

ஹரிஹரனின் இதயம் ஸ்வரம் தவறி ஆட ஆரம்பித்தது. மனதுக்கு பிடித்த பெண் அவனும் அவளும் ஒற்றை கூரையின் கீழ். மழைச் சாரல் அள்ளித் தெளித்ததால் தேகம் எங்கும் மெல்லிய சிறு நடுக்கம். இங்கே வந்த சில நிமிடங்களில் அவள் கரத்தில் இருந்து அவளுடைய தம்பி கணேசன் துள்ளி ஓடி எதிர்புறம் சென்று மறைந்து விடஅங்கே தான் அவளுடைய பெற்றவர்கள் இருப்பதால் மேற்கொண்டு தானும் மழையில் நனைய விரும்பாமல் அங்கேயே தேங்கி விட்டாள் வெண்ணிலா.

 

தாமரை இலை நீர் போல அவள் முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாக அவள் முகத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் நீர் திவலைகள் தோன்றி இருக்க அவளை விட்டு கண்ணை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு போனான் ஹரிஹரன். மழை விடாது வெளுத்து வாங்கியது. இங்கிருந்து என்ன நடந்தாலும் எதிரில் இருப்பவரால் பார்க்க முடியாது என்ற அளவிற்கு மழை வானத்தை கிழித்துக் கொண்டு ஊற்றியது.

 

இப்பொழுது ஹரிஹரனின் கண்களுக்கு அவள் சின்னப் பெண் என்பது நினைவில் இல்லைஅது நாள் வரை அவன் மனதில் எடுத்த எந்த சபதமும் அவனின் நினைவில் இல்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் அவனின் மனம் கவர்ந்தவள் அவனின் கைக்கு அருகில் அழகுப் பதுமையாக இருக்கிறாள் என்பது மட்டுமே.அவளை அள்ளி அணைத்து முத்தங்களால் அவளை மூழ்கடிக்க சொல்லி  அவனின் மனம் உத்தரவிட ஆண் மனம் அந்த நினைவிலேயே கிறங்கிப் போனது.   

இது நாள் வரை மனதில் அவன் போட்டு இருந்த தளைகளை எல்லாம் கடக்க சொல்லி அந்த வயதுக்கே உண்டான உணர்வுகள் தூண்ட மெல்ல அடியெடுத்து அவளின் அருகில் சென்றான் ஹரிஹரன்.அவள் மீது இருந்த காதல் அவனை மேலும் உந்த தாபத்தோடு,மோகமும் சேர்ந்து அவனைப் பாடாய்ப் படுத்த அவளை அணுஅணுவாக ரசித்தவாறே மெல்ல அவளை நெருங்கினான்.

 

மழையில் நனைந்ததில் அவளது தாவணி முற்றிலும் ஈரமாகி அவனுடைய இளமை உணர்வுகளை உசுப்பேற்ற உடலில் உஷ்ண அலைப் பரவத் தொடங்கியது ஹரிஹரனுக்கு.

 

மழையில் கைகளை நனைத்து குழந்தையென விளையாடிக் கொண்டு இருந்த வெண்ணிலா தன்னுடைய பின்புறம் நின்று கொண்டு இருந்த ஹரிஹரனையோ அவனுடைய பார்வைகளையோ கொஞ்சமும் உணரவில்லை. அந்த இடத்தில் தான் மட்டும் தான் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவள் விளையாடிக் கொண்டு இருக்க பின்னிருந்து அவளை அணைத்தான் ஹரிஹரன்.

 

பயத்தில் அலறப் போனவளின் வாயை கையால் மூடினான் ஹரிஹரன். அவளின் பின்னங்கழுத்தில் தன்னுடைய சூடான இதழ்களை புதைத்தவன், “நிலா” என்று தாபமாக அவளுடைய பெயரை உச்சரித்தான்.

 

அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன் அவளின் கன்னத்தில் இருந்த நீர் திவலைகளாக ஆங்காங்கே இருந்த மழை நீரை பார்த்தான். நீர்த்துளிகள்  வெள்ளி போல மின்ன அவளுடைய கன்னத்தில் ஆழ்ந்த முத்தமொன்றை பதித்தான்.

 

அவனை விலக்க வேண்டி உயர்ந்த வெண்ணிலாவின் கரங்களை பற்றியவன் அவளை அருகே இழுத்து தாபத்துடன் அணைத்துக் கொண்டான். பெண்ணவளின் மென்மை அவனுடைய உணர்வுகளை தீண்ட அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அவளின் கூந்தலில் முகம் புதைத்து பெண்ணவளிடம் தன்னுடைய தேடலை தொடர்ந்தான்.

 

ஹரிஹரனின் மனநிலைக்கு அப்படியே நேர் எதிரில் இருந்தது வெண்ணிலாவின் மனநிலை. குரலை வைத்து அது ஹரிஹரன் என்று உணர்ந்து கொண்டாலும் அவனின் குரலில் வழிந்த தாபமும்அவனின் கரங்களின் செய்கைகளும் விவரம் அறியாத அந்த சின்ன பெண்ணிற்கு பயத்தையே கொடுத்தது. பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள் வெண்ணிலா.அவனை விலக்கி நிறுத்த வேண்டும் என்பது தெரிந்தாலும் அதிர்ச்சியில் அதை செய்யக் கூட முடியாமல் அதிர்ந்து போய் நின்று விட்டாள்.அவளின் அந்த எதிர்ப்பில்லாத தன்மை ஹரிஹரனுக்கு சாதகமாக போய் விட அவளுள் உருகி கரைந்து விடத் துடித்தான்.

 

அவளுடைய இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தத்தை பதித்தவன் அடுத்து அவளின் நெற்றியை நோக்கி தன்னுடைய படையெடுப்பை ஆரம்பிக்க வெண்ணிலா நடுங்கித் தான் போனாள். அவளின் கண் இமை மேலே முத்தமிட முயன்ற ஹரிஹரன்இமை திறந்து தன்னை பார்த்த வெண்ணிலாவின் பார்வையையும் அதில் தெரிந்த பயத்தையும் உணர்ந்தவன் அடுத்த நிமிடம் தீ சுட்டாற் போல அவளை விட்டு விலகி நின்று விட்டான். 

‘சே! என்ன காரியம் செய்து வைத்து விட்டேன். எதை செய்யக் கூடாது என்று இத்தனை நாளாக எனக்கு நானே கட்டுப்பாடு விதித்து வைத்து இருந்தேனோ அது அத்தனையும் இன்று ஒரே நாளில் பாழாக்கி விட்டேனே’ என்று உள்ளுக்குள் நொந்தவன் தன்னை சமாளித்துக் கொண்டு வெண்ணிலாவிடம் பேசத் தொடங்கினான்.

 

சாரி நிலா… நா… நான் வேணும்னே இப்படி நடந்துக்கல. தயவு செஞ்சு என்னை தப்பா மட்டும் நினைச்சுடாதே. இதை பத்தி நாம இப்போ பேச வேண்டாம். நாளைக்கு நான் ஊருக்கு போறேன். அதுக்கு முன்னாடி நான் வந்து உன்னை கண்டிப்பா பார்க்கிறேன். இப்போ நான் கிளம்பறேன். இதுக்கு மேல் நான் இங்கே இருப்பது சரியா இருக்காது” என்று அவளின் முகம் பார்க்காமல் குற்ற உணர்வோடு  சொன்னவன் அதற்கு மேலும் அங்கே நொடியும் தாமதிக்காமல் மழையில் நனைந்து கொண்டே அங்கிருந்து வெளியேறினான்.

 

கொட்டும் மழையை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் நனைந்த படியே அங்கிருந்து சென்ற ஹரிஹரனின் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் வெண்ணிலா. அதன்பிறகு நடந்த எதுவும் அவளின் மனதில் பதியவில்லை

 

உள்ளம் முழுக்க ஏதோ ஒரு வித பயம் அவளை ஆட்டுவித்தது. நான் ஏன் அவர் என்னை தொட்ட பொழுது அவரை தடுக்கவோதாக்கவோ இல்லை. குறைந்த பட்சமாக கத்தி ஊரைக் கூட்டக் கூட ஏன் முயற்சி செய்யவில்லை. என்ன தான் அவள் குழந்தை என்றாலும் ஹரிஹரன் அவளிடம் நடந்து கொண்ட முறை தவறு என்பதை அவளது மனது அவளுக்கு எடுத்து சொல்ல தவறவில்லை.

 

அப்படி இருந்தும் தன்னுடைய உள் மனதின் அலறலையும் மீறி ஏன் அவனுக்கு எதிராக தான் தன்னுடைய சுண்டு விரலை கூட அசைக்கவில்லை என்பது அவளுக்கு பயத்தை கொடுத்தது. மழை நின்ற பிறகு நடந்த எந்த விஷயமும் அவளின் உள்மனதில் பதியவில்லை. எப்போதடா வீட்டிற்கு போய் தனிமையில் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்று அவளது மனம் தவித்துக் கொண்டு இருந்தது.

 

திருவிழாக் கடைகளில் நிறைய வாங்கி சாப்பிட்டதால் பசி இல்லை என்று அவளுடைய தாயிடம் மறுத்து விட்டாள் வெண்ணிலா. மகள் சாப்பிடவில்லை என்று தெரிந்ததும் உணவு உண்ண அழைக்க அவளுடைய தந்தை வந்த போது தூங்குவது போல கண்ணை மூடி நடிக்கத் தொடங்கினாள். இருவரும் சென்ற பிறகு மெல்ல எழுந்து ஓசைபடாமல் கதவை மூடிவிட்டு படுத்துக் கொண்டாள்.

 

வெண்ணிலாவிற்கு கண்களில் சிறிதும் உறக்கம் இல்லை. என்ன தான் மனதளவில் இது நாள் வரை குழந்தையென இருந்து வந்தாலும் இன்றைய நிகழ்வு அவளுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. கன்னியின் மனதில் முதல் முதலாக தன்னுடைய தடத்தை பதித்து அவளின் மனதில் சலனத்தை விதைத்து விட்டான் ஹரிஹரன்.

 

அதுநாள் வரை ஹரிஹரனிடம் அவளுக்கு எந்தவொரு எண்ணமும் கிடையாது. ஆனால் இன்றைய நிகழ்வுக்கு பிறகு தன்னால் சாதாரணமாக அவனை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. ‘நாளை அவனை பார்க்காமல் தவிர்த்து விட்டால் என்ன?’ என்று அவளுடைய மனது அவளிடம் கேள்வி எழுப்ப என்ன முயன்றும் அவளால் அந்த முடிவை எடுக்க முடியவில்லை. ‘என்ன தான் சொல்கிறார் என்று பார்ப்போமே’ என்ற முடிவுக்கு வந்தவள் விடியலுக்காக காத்திருக்க தொடங்கினாள்.

 

தேவதை வருவாள்…

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here