காதல் கருவறை 28

Post Reply
User avatar
admin
Site Admin
Posts: 131
Joined: Sun May 10, 2020 12:45 pm
Has thanked: 3 times
Been thanked: 1 time

காதல் கருவறை 28

Post by admin »

கரு 28:
தன் ஜன்னல் வழியே தெரிந்த இருளை வெறித்தவள் தன் வாழவும் அது போல வெளிச்சம் இல்லா நீண்ட இரவாக தோன்றியது, இருளுக்கு கூட ஒரு அமாவாசை தவிர நிலவின் வெளிச்சம் துணை வரும் இனி அவள் வாழ்வில் என்றுமே வெளிச்சம் இல்லா நிரந்தர அமாவாசை ஆகிப்போனது மெதுவாக கதவடைத்து வந்து படுத்தவளின் எண்ணங்கள் முழுதும் நிறைந்தவன் அவளின் மதன் மட்டுமே
கிராமவீடு அவள் ஒருத்திக்கு போதுமானதாய் இருந்தது சிதம்பரம் அய்யா ஏற்பாட்டின்படி அவளுடன் அவர் வீட்டு வேலையாட்கள் இருவர் கணவன் மனைவி இடுவரும் துணையாக இருந்து தேவையானதை செய்தனர் , அவளுக்கு அது எதுவுமே கண்ணில் படவில்லை தாயின் மறைவில் கூட அவளுக்கு வாழ்வின் மீது பற்று போகவில்லை ஆனால் அவள் மதனின் வார்த்தைகள் அவளை கொன்றுவிட்டது இந்த இரு வாரமும் பேருக்கு உண்டு அழுது துன்பத்தில் கறைந்தாள்
அதுவும் நாளை தினம் நினைத்தாலே அவள் உயிர் அடைத்தது நாளைக்கு விடியற்காலை அவனுக்கும் மித்திலாவுக்கும் திருமணம் எவ்வளவு கனவுகளோடு அவள் காத்திருந்த நாள், எப்படியும் எதிர்கொண்டு விடலாம் என்று நினைத்தவளுக்கு அது நெருங்க நெருங்க நிச்சயமாக எதிர்கொள்ள முடியவில்லை மனுபரதன் இவ்வளவு ஆழமாக அவளுள் பதிந்திருந்தான் என்பதை தாருண்யாவே ஒரு அதிர்ச்சியோடு உணர்ந்தாள்,அவன் செய்த துரோகத்தை விட அவன் மேல் உள்ள காதல் அதிகமாக தோன்றியது நினைத்து தன் மீதே ஆத்திரம் வந்தது
ஏதோ எண்ணமிட்டு கண்ணீர் விட்டு கொண்டிருந்தவளை வீட்டின் கதவு தட்டும் ஒலி எழுப்பியது வேலையாட்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்ததால் ஏதாவது கேட்க வந்திருப்பார்கள் என்று நினைத்து கதவை திறந்தவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது
கதவருகில் சாய்ந்து கை கட்டிக்கொண்டு அவளை பார்த்திருந்தான் மனுபரதன் “ என்னை பிரிந்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறாய் போல தன்யா” என்றும் போல் அந்த அழைப்பில் அவளின் முதுகு தண்டு சில்லிட்டது
அவனிடமும் சிறிது மாறுதல் தெரிந்தது கண்கள் உறக்கம் இல்லாமல் மேலும் கடினமாக தோன்றியது மனம் அவனை பார்த்ததும் தன்னால் துடிக்க தன் மீது கோபம் வந்தது அதை அவனிடம் காட்ட துவங்கினாள்
“உங்களை யார் இங்கே வர சொன்னது”
“நாளை எனக்கு கல்யாணம்” என்று அவளை பார்த்தான்
தன்னை மீறி கண்ணீர் வர நேரிலேயே நோகடிக்கவா இவ்வளவு தூரம் வந்தான்என்று மனம் வெதும்பியவள் “அதை நேரில் சொல்லி என் வாழ்த்து பெற வந்தீர்கள் போல வாழ்த்துக்கள் மனோ சார்”
“உன் வாழ்த்து எனக்கு அவசியம் வேண்டும் தன்யா, நீ உன் கண்ணால் கண்டு எங்களை வாழ்த்த வேண்டும் என்று மித்திலா ஆசைப்படுகிறாள் அவளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றதான் நான் வந்தேன்”
உயிரோடு கத்தி சொருகி வெளியே எடுக்கிறாயே என்று அவள் மனம் கதற “நான் ஏற்கனவே செதுபோனவள் மனுபரதன் அவளுக்கு இன்னும் என்னை கொல்ல என்ன ஆசை அதில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி
“என் மகிழ்ச்சி உன் வரவில் தான் தன்யா இருக்கிறது” என்றவனை புழுவை போல் பார்த்தவள்
“நான் எங்கும் வரவில்லை”
“நானும் உன் அனுமதி கேட்கவில்லை ஒழுங்காய் நீயாக வந்தால் கௌரவமாக கூட்டி செல்வேன் இல்லை என்றால் உன்னை வேறுமாதிரி அழைத்து செல்லவும் என்னால் முடியும் பார்கிறாயா?’ என்று முன்னேறியவனை
“என்னை ஏன் இவ்வளவு சித்திரவதை செய்கிறீர்கள்”
“ நீ என்னை செய்தது விடவா “
“நான் ஒன்றும் உங்கள் வாழ்க்கை அழிக்கவில்லையே”
“ வீண் பேச்சு எதற்கு தன்யா இன்று நீயாக வரவேண்டும் இல்லையென்றால் உன்னை அழைத்துச் செல்ல தயங்க மாட்டேன்”கண்டிப்பாக சொல்வதை செய்வது போல் இருந்தது அவன் தோற்றம்
வேறு வழியின்றி அவனுடன் கிளம்பியவள் மறந்தும் அவன் புறம் திரும்பவில்லை அவர்கள் நேராக மணடபம் வந்து அடையும் நேரம் விடிய துவங்கியது இதுவரை இருந்த தைரியம் மொத்தம் அவளுக்கு கரைந்துவிட்டது
“மதன் பிளீஸ் எனக்கு இதை காணும் சக்தி இல்லை என்னை விட்டுவிடுங்கள் நான் போகிறேன்” என்றவளை திரும்பி முறைத்தவன்
அவளை விடாமல் அவள் கையை பிடித்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மணமகள் அரை நோக்கி அழைத்து சென்றான் கதவை திறந்தது சந்தோஷி அங்கு குணா பெரியம்மா சரண் மனுபரதனின் தாய் என்று எல்லாரும் இருந்தார்கள்
“என்னடா தரு இப்படி மெலிஞ்சிட்ட கல்யாண களையே இல்லாத அளவா உன் அப்பா ஞாபகம் வந்துவிட்டது” என்று தன் வீல் சாரை தள்ளிக்கொண்டு வந்து பேசினார் பெரியம்மா
“நான் இந்த பரத் பேச்சை கேட்டிருக்கவே கூடாது அவன்தான் உன் தந்தை உயில் விஷயமாக சென்றிருக்கிறாய் அங்கு உன் தந்தை நினைவாக இருப்பதாக யாரும் தொந்திரவு செய்யவேண்டாம் என்றும் எல்லா வேலை முடிந்து கல்யாணதன்று காலை கூட்டி வருவதாக சொன்னான் இப்பொழுது நீ இப்படி வந்திருக்கிறாய் இனி உன் விஷயத்தில் அவன் பேச்சை கேட்கவே மாட்டேன் டா, சரி நீ வா இன்னும் சிறிது நேரத்தில் “ என்றபடி உள்ளே அழைத்தார்
மிகுந்த குழப்பத்தில் இருந்தவள் அவளையே பார்த்துக்கொண்டிருந்த மனுபரதனை குழப்பத்துடன் பார்த்தாள்”மித்திலா..” என்று ஆரம்பித்தவளை கண்களில் அடக்கியவன் “ஒரு நிமிஷம் அத்தை” என்றான்
‘பரத் அண்ணா உங்க ரொமான்ஸ் லாம் கல்யாணத்துக்கு அப்பறம் வெச்சிக்கங்க என்று கிண்டல் செய்த குணாவை பார்த்து சிரித்தவன்
“நான் இப்போது பேசவில்லை என்றால் உன் அண்ணி மறுபடியும் அழுது வடிவாள் பரவயில்லையா “ என்றதும் அவளே இவர்களுக்கு வழி விட்டாள்
குழப்பங்கள் முகம் முழுதும் இருந்தவளை காண அவனுக்கே இறக்கமாக இருந்தது “என்னை நம்பவில்லை இல்லையா மறுபடியும்?” என்றதும்
அதிர்ச்சியுடன் அவனை பார்க்க “அன்றும் இன்றும்.என்றும் இங்கே நீ மட்டும் தான் , இப்பொழுது எதுவும் சொல்லமுடியாது ஒன்று மட்டும் தேர்ந்துகொள் கானல் நீர் நீ அல்ல மித்திலா மட்டும் தான் கடைசி தடவையாக சொல்கிறேன் என் மீது நம்பிக்கை வைத்து வா, நீ என்னவள் ஆனதும் நான் எல்லாம் சொல்கிறேன்“ என்றதும் ஏதோ விடுபட்ட உணர்வு இனி அவன் பார்த்துக்கொள்வான் தன்னை தேடி அழைத்து வந்துவிட்டான் என்று தோன்ற ஒன்றும் சொல்லாமல் திரும்பிவிட்டாள் அவளுக்கே அவள் மேல் நம்பிக்கையில்லை ஏதாவது பேசி திருமணம் நிற்பதை அவள் விரும்பவில்லை அவன் எவ்வளவு முக்கியம் என்று அந்த இரு வார பிரிவு அவளுக்கு உணர்த்தியது
அதன் பிறகு எல்லாம் வேகமாக நடந்தது மணவரையில் அவளின் தாயின் படம் பார்த்ததும் கண்ணீர் வந்தது மதனின் செயல் என்று தெரிந்தது அவனை பார்க்க அவனும் அவளைதான் பார்த்தான் குழப்பங்கள் ஆயிரம் இருந்தாலும் தாலி கட்டும் சமயம் அவளின் அனுமதி வேண்ட கண் மூடி சம்மதித்தவளின் கண்ணீர் துடைத்தவன் அவளை தன் சொந்தமாக்கி கொண்டான்
சிதம்பரம் அவர் மனைவியுடன் வந்திருந்தார் “மனோ இல்லையெனில் உன் வாழ்வு எவ்வளவு துன்பத்தை அடைந்திருக்கும், நீ நன்றாக இருப்பாய், என் நண்பனும் அவன் மனைவியும் உன்னை காப்பாற்றுவார்கள், நீ தான் அவர் வாழ்க்கை உங்களுக்குள் சில குழப்பம் அதை நான் சீர் செய்கிறேன்” என்றும் சொன்னார்
எல்லாம் முடிந்து ஆரத்தி எடுத்து மாளிகைக்குள் நுழைந்த பின் அவள் அவனை பார்க்கவில்லை , சாயங்காலம் அவளை அழகாக அலங்கரித்து விட்டனர் சந்தோஷியும் குணாவும் கூடவே நிறைய கிண்டலும் கேலிகளும் அவளை அழைத்த பெரியம்மா அவளை திருஷ்டி வழித்து “என் கண்ணே பட்டிடும் டா, நாங்கள் எல்லாரும் இன்றிரவே நம் சொந்த ஊர் செல்கிறோம் நாளை மாலை பூஜை இருக்கு உன்னை பரத் கூட்டி வருவான் நீ பரத் அறைக்கு போ மா“ என்றவர் அவளிடம் சொல்லிக்கொண்டு எல்லாரையும் புறப்பட வைத்து கிளம்பினார்
யாருமில்லாத மாளிகையின் அமைதி அவளை பயமுறுத்தியது மெதுவாக அவன் அறைக்கு சென்றவள் அங்கிருந்த ஜன்னலின் வழி இரவை பார்த்தாள் நேற்றும் இன்றும் எவ்வளவு வித்தியாசம் என்று யோசித்தவளின் மனதை கலைத்தது அவனின் வருகை அவனின் காலடி சத்தம் அவள் இதயத்தை வேகமாக துடிக்க செய்தது மெதுவாக அவளின் இடை பற்றியவன் தன் புறம் இழுத்து அவள் கழுத்தில் இதழ் புதைத்தான்
முதலில் சிலிர்த்து விறைத்தது அவளின் உடல் மெதுவாக அவளை திருப்பியவன் “என்னுடன் வா” என்று அவளை அவன் வீட்டின் தோட்டத்தில் உள்ள வெள்ளை மண்டப்பதின் அருகில் கூட்டி சென்றான்
முதல் நாள் அதில் தான் நின்றிருந்த பொழுது சந்தோஷி அவளை திட்டியது நினைவில் வந்தது அவளை அங்கு கூட்டி சென்றவன் அவள் பின் புறமாக அவள் காதில் “சுமார் நான்கு வருடம் முன் இந்த இடம் வெறும் தோட்டம் தான் தன்யா நான் தான் இதை எழுப்பினேன் ஏன் தெரியுமா” என்றவனிடம் தெரியாது என்று தலையசைக்க
“நான்கு வருடம் முன்பு அதிகாலை வேளையில் அமைதியாய் நான் என் பிசினஸ் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது இதே போல் அந்த கடற்கரையில் உள்ள மண்டபத்தில் ஒரு வெள்ளை நிற தேவதை நான் பார்க்கும் முன் தோன்றி மறைந்தாள் அவள் முகம் தெரியவில்லை எனக்கு வரிவடிவம் மட்டும் பார்த்தேன் அவள் தான் என் காதலி, அவள் மீதுள்ள நேசம் அவளை நான் முதல் முதலில் பார்த்த இடத்தை இங்கு செப்பனிட செய்தது, அவள் யார் தெரியுமா” என்றதும் சட்டென்று உடல் விறைக்க கண்ணீருடன் “மித்திலா” என்றாள்
அவள் பின் கழுத்தில் இதழ் புதைத்தவன் இல்லை என்று தலையாட்டுவது அவளுக்கு தெரிந்தது மெதுவாக அவளை தன் புறம் திருப்பியவன் அவள் கண்களில் இதழ் புதைத்து
“நீதான்“ என்றான்


Madhumathi Bharath :)

Post Reply

Return to “காதல் கருவறை”