தனியே தன்னந்தனியே

Post Reply
Jothiramar
Moderators
Posts: 2
Joined: Fri May 15, 2020 1:02 pm
Been thanked: 26 times

தனியே தன்னந்தனியே

Post by Jothiramar »

வீட்டில் அன்றிரவு தனியாக இருந்தேன். கதவு வேகமாக தட்டப்படும் சத்தம் கேட்டது...

அன்று காலையில் தான் அப்பா என்னையும் அம்மாவையும் அழைத்து முக்கியமான விசயம் பேச வேண்டும் என்று சொன்னார்.

அம்மா இன்னைக்கு பிராக்ட்டிகல் எக்ஸாம் இருக்கு நான் சீக்கிரமாக காலேஜிக்கு போகனும், என்று கிட்சனில் இருந்த தன் அம்மாவின் முன்பு கல்லூரி செல்வதற்கு தயாராகி வந்த மகள் மஹதியை பார்த்ததும்,

மஹதி இன்னும் பத்து நிமிசத்தில் டிபனும் லன்சும் ரெடியாகிடும் சாப்பிட்டு பாக்ஸ்ல எடுத்துட்டு போடா! என அடுப்பில் கடாயில் இருக்கும் குருமாவை கிளறிக் கொண்டே சொன்னவர்... மூன்று விசில் அடித்ததும் குக்கரை இறக்கி மேடையில் வைத்துக் கொண்டே மகளின் பதிலுக்காக காத்திருந்தார். 

ம்மா சாரி எனக்கு சாப்பிடக் கூட நேரம் இல்லை நான் இன்னைக்கு கேண்டினில் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு சிட்டாக பறந்தவள் அப்பா பரந்தாமனின் அழைப்பில் வாசல் படியில் காலை வைக்காமல் அதை அந்தரத்திலேயே தொங்க விட்டபடி நின்றாள் மஹதி.

டேடி ப்ளீஸ் இன்னைக்கு நான் சீக்கிரம் காலேஜிக்கு போகனும் என கெஞ்சலுடன் சொன்னவளை பார்த்த பரந்தாமன்... மீனாட்சி என குரல் கொடுக்க அவசர அவசமாக செய்த வேலையை போட்டுவிட்டு  ஓடிவந்தார்.

என்னங்க கூப்பிட்டிங்களா? என கண்களில் பயத்துடன் சேலை முந்தானையில் தன் ஈர கையை துடைத்துக் கொண்டே கேட்டார் மீனாட்சி.

பரந்தாமன் மிகவும் கண்டிப்பானவர்... காலையில் எழுந்தது முதல் அனைத்து வேலைகளையும் நேரப்படி கணக்கிட்டு தான் செய்வார்... எட்டு மணிக்கு டிபன் என்றால் சரியாக எட்டுமணிக்கெல்லாம் டைனிங் டேபிளில் தயாராக இருக்க வேண்டும் நிமிட நேர வித்தியாசமாக இருந்தால் கூட மனுசன் மீனாட்சியை ஒன்று கண்டபடி பேசியோ!! இல்லை அன்று முழுமைக்கும் வீட்டில் பச்சை தண்ணீர் கூட பருக மாட்டார்!! இன்னும் அதிகப்படியான கோபம் வந்தால் காட்டுமிராண்டித் தனமாக அடிக்கவும் செய்வார். அதனால் கணவன் மீது  இன்றளவும் மீனாட்சிக்கு மனதுக்குள் உண்டான பயத்துடனே தான் இருப்பார்... திருமணம் ஆகி இருபது வருடங்கள் ஆனபோதிலும் அவர் மீது உள்ள பயம் மட்டும் விலகியதே கிடையாது.

மஹதி இங்கே வா என பரந்தாமன் அழைக்க

அப்பாவின் அழைப்பில்... கையில் இருக்கும் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே திரும்பி வந்து அவர் முன்னால் வந்து நின்றாள்.

தன்னுடைய வாக்கிங்கை முடித்துவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்திருந்தார். மீனாட்சி காலை டிபன் முடிந்தவுடனே நாம ஊருக்கு போகனும் பேக்ல துணியை எடுத்து வைத்து பேக் பன்னிடு என சொல்லவும், சரிங்க என உடனே தலையை ஆட்டினார் மீனாட்சி.

அப்பா இன்னைக்கு எனக்கு பிராக்ட்டிக்கல் எக்ஸாம் இருக்கு அதுவும் மேஜர் சப்ஜெக்ட் நான் எப்படி உங்க கூட வர்றது என பயம் கலந்த குரலில் கேட்டதும், நான் இன்னும் என்னோட பேச்சை முடிக்கல மஹதி என கடுமையான குரலில் சொல்ல..

சாரி டேடி என தலையை குனிந்தவள் அப்பாவின் பேச்சை கவனிக்கலானாள்.

மஹதி நாங்க மதுரைக்கு போறோம் நாளைக்கு அங்கே நம்ம லஷ்மியை பெண் பார்க்க வராங்க... அண்ணன் உடனே வர சொல்லி இருக்கார்... நாளைக்கு பெண் பார்க்கும் விஷேசம் முடிஞ்சதும், அங்கேயிருந்து உடனே கிளம்பிடுவோம் இன்னைக்கு ஒரு நாள் பத்திரமா இருக்கனும் புரியுதா? என ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கேட்டு விட்டு மகள் மஹதியை பார்த்தார்.

அய்யோ ஜாலி!! அப்பா ஊருக்கு போறாரா இன்னைக்கு ஒரு நாள் நைட்!! நாம நம்ம விருப்பத்துக்கு இருக்கலாம் என மனதுக்குள் நினைத்தவள் வெளியே தன் அப்பாவிடம் சரி என தலையை ஆட்டினாள்.

அதன் பிறகு தன் அப்பா கொடுத்த!! வீட்டு சாவியை வாங்கி தன்னுடைய காலேஜ் பேக்கில் வைத்துக் கொண்டவள்... பெற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு கிளம்பினாள்.

இன்று அப்பா அம்மா வீட்டில் இல்லை என்றானதும் பிராக்டிக்கல் எக்ஸாம் முடிந்தவுடன் தோழிகளுடன் சினிமா ஹோட்டல் என ஊர் சுற்றி விட்டு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தாள் மஹதி.

அவள் வீட்டை அடையும் போது மணி பத்து ஆகியிருந்தது. மாற்று சாவியை கொண்டு வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவளுக்கு வெறிச்சோடி கிடந்த அமைதியான வீட்டை பார்த்ததும் தன் அம்மாவின் ஞாபகம் வந்தது.

தினமும் கல்லூரி விட்டு வந்ததும் ஹாயாக சோபாவில் அமர்ந்து அம்மா கொடுக்கும் காபியை அனுபவித்து ருசித்து ரசித்து குடித்து முடித்த பிறகே தன்னுடைய அறைக்கு சென்று முகம் கை கால் கழுவி கொண்டு கீழே வந்து அம்மாவுடன் அன்று முழுவதும் கல்லூரியில் நடந்த காலாட்டாக்களை சொல்லி தானும் சிரித்து அவரையும் சிரிக்க வைத்து மகிழ்வாள் இவையணைத்தும் தன் அப்பா வீடு வந்து சேரும் வரைக்கும் தான் அவர் வந்துவிட்டால் குண்டூசி விழும் சத்தம் கூட கேட்காது.. அந்த அளவிற்கு வீடு அமைதியை தத்தெடுத்துக் கொண்டு இருக்கும்... ஆனால் இன்று அம்மா மட்டுமாவது வீட்டில் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் மஹதியின் மனதில் தோன்றாமல் இல்லை... அமைதியான வீடு மஹதியின் மனதில் ஒரு வித பயத்தை உண்டு பன்னியது.

அதற்கேற்றார் போல திடிரென இடியிடிக்கும் ஒசையில், ஒரு நொடி பயந்தே விட்டாள் மஹதி... உடனே தன் மனதுக்குள் அர்ஜுனா அர்ஜுனா என சொல்லிக் கொண்டே தன்னுடைய அறைக்கு சென்றவள்... பிரஷப் ஆகி உடைமாற்றிக் கொண்டு விரிந்திருந்த கூந்தலை கிளிப்புக்குள் அடக்கியவள்... தன் பெட்டில் அமர்ந்து டிவி ரிமோட்டை கையில் எடுத்தவள் அதை ஆன் செய்துவிட்டு ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டே வந்தாள்.

திடிரென மழை வேறு பெய்ய ஆரம்பிக்கவும், மஹதிக்கு இந்த தனிமை ஒருவித பயத்தை கொடுத்தது. அப்பாவின் மிரட்டலின்றி சந்தோசமாக இந்த நாளை கழிக்கலாம் என எண்ணியிருந்தவள் இப்போது இந்த தனிமையையும் வெறுத்தாள்.... விடாது பெய்யும் மழையும் காதையே பிளக்கும் அளவிற்கு இருக்கும் இடியின் ஓசையும் மஹதியை பயமுறுத்தியது.... இன்று ஒரு நாள் இரவை எப்படியாவது கடந்துவிட வேண்டும் என யோசித்துக் கொண்டே இருந்தவளின் கையில் இருந்த ரிமோட் அதன் வேலையை செய்ய அப்போது செய்தி சேனலில் வந்த செய்தியை கேட்டதும் இதுவரை இருந்த தைரியம் காணாமல் போனது.

பட்டப்பகலில் தனியாக இருந்த இளம்பெண் மரணம் என்ற செய்தியே மஹதியின் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

அப்போது திடிரென கரண்ட்டும் கட்டாகிவிட மஹதியின் பயம் அதிகரித்தது. பயத்தில் அவளுடைய முகம் வியர்வையில் நனைய ஆரம்பித்தது. மொபைலில் இருந்த டார்ச்சை ஆன் செய்தவள் மெதுவாக கட்டிலில் இருந்து எழுந்து டீவியின் சுவிட்சை அனைத்து விட்டு மெதுவாக படியிறங்கி கீழே வரவும் வீட்டின் வாசல் கதவு படப்படவென தட்டும் சத்தமும் கேட்டு ஆவென கத்தியவள் கையிலிருந்த போனையும் கீழே தவறவிட... கீழே விழுந்த வேகத்தில் மொபைலும் தன் வேலையை நிறுத்தியது. 

மஹதியின் நெஞ்சு கூட்டில் லப் டப் என தன் இதயம் வேகமாக துடிக்கும் சத்தம் மழையின் இரைச்சலின் கூடவே சேர்ந்து ஒலித்து மஹதியை இம்சித்தது. இருட்டில் மஹதியின் கண்களுக்கு எதுவுமே தட்டுப்படவில்லை... தனக்குள் இருந்த பயத்தை ஓரமாக ஒதுக்கியவள் மெதுவாக சத்தமே இல்லாமல் இறங்கியவளின் கால் தடுமாறி படியில் இருந்து உருண்டாள்.

ஹேய் அப்புறம் என்னடி ஆச்சி இவ்வளவு சஸ்பென்ஸா இருக்கு... என மஹதியின் தோழி நித்யா அவளிடம் தன் கேள்வியை கேட்க?..

மற்றவளோ! ஏய் இதெல்லாம் நம்ம எக்ஸாம் முடிஞ்சவுடனே சினிமாவுக்கு போனோமே அன்னைக்கு நடந்துச்சா என அதிர்ச்சி விலகாமல் கேட்க...

மூன்றாமவளோ!! ஏய் முதல்ல உங்க கேள்வியை எல்லாம் ஓரங்கட்டி வைங்கடி அவள் மீதி கதையையும் சொல்லட்டும் என மற்றவர்களை தடுத்துவிட்டு மஹதியையே பார்க்க...

மஹதியோ! இதுவரைக்கும் வாயை திறக்காமல் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து... உங்களுக்கும் ஏதாவது கேள்வி கேட்கனும்னு இருந்தா கேட்டுடுங்கடி எல்லாருக்கும் சேர்த்தே நான் பதில் சொல்றேன் என்க..

வேணாம் மஹதி முதல்ல நீ அப்புறம் என்ன நடந்துச்சின்னு சொல்லுடி எனக்கு இப்போவே ரொம்ப திகிலா இருக்கு என சொன்னவர்களை பார்த்ததும்...

ஓகே அப்புறம் என்ன ஆச்சின்னு சொல்றேன் என்றவள் மறுபடியும் கதையை தொடர்ந்தாள்.

வீட்டில் அன்றிரவு தனியாக இருந்தேன். கதவு வேகமாக தட்டப்படும் சத்தம் கேட்டது...

கீழே விழுந்த வேகத்தில் காலில் அடிபட வலியில் அழுதவளுக்கு பயத்தில் நாக்கு வரண்டது போல ஆனது...

கதவு தட்டியபடியே இருக்க... வெளியே யாரோ!!! ஏதோ பெயரை சொல்லி அழைப்பது போலவே இருந்தாலும் மழையின் இரைச்சலில் சரியாக கேட்காததால் மேலும் மஹதியின் பயமும் அதிகரித்தது.

இருட்டில் கண் இப்போது பழகிவிட்டது போல இருக்க லேசாக பார்க்க முடியவும்... முதலில் கிட்சனுக்கு சென்று தண்ணீரை குடிச்சா தான் அடுத்து என்ன செய்றதுனு நம்மலால் யோசிக்க முடியும் என நினைத்தவள்... கிட்சனை தட்டு தடுமாறி அடைந்தாள்... கிட்சனில் பிரிட்ஜ் இருக்கும் இடத்தை உத்தேசமாக நினைத்து மெதுவான எட்டுக்களை வைத்து அதனை அடைந்தவள் பிரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக் என வாயில் ஊற்றி கொண்டவள் மெதுவாக தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.

ஐயோ கரண்ட் வேற இல்லையே அது இருந்தாலாவது கொஞ்சம் தைரியமாக இருக்கும் வீட்டுக்கு வெளியே யார் இருக்கிறாங்க... கதவை தட்டுறது யார்? யாராவது நம்மல பின்தொடர்ந்து வந்துருப்பாங்களா!!! ஒருவேளை திருடனா!! ச்சே திருடனா இருந்தால் கதவையா தட்டிக்கிட்டு இருப்பான்... என பலவாறாக யோசித்து சோர்ந்து போனவள் கையில் ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொள்ளலாம் என நினைத்து... கத்தியை தேடி அதை ஒருவாராக கையில் எடுத்தவள் அதனை இறுக பிடித்துக் கொண்டு வாசல் கதவை நெருங்கினாள்.

கதவு தட்டப்படும் சத்தம் மட்டும் நிற்பதாயில்லை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் கதவில் இருக்கும் சிறு கண்ணாடியின் வழியாக யார் நிற்கிறார்கள் என தெரிகிறதா என நினைத்து அதில் தன் கண்ணை பதித்து பார்த்தவளுக்கு... வெளியேயும் ஒரே இருட்டாக தெரிய அப்போது திடிரென வந்த மின்னல் வெளிச்சத்தில் தலையில் ஏதோ ஒரு துணியை போட்டு மறைத்திருந்ததை போல இருக்க பாதி முகம் கூட தெரியாத பட்சத்தில் மஹதியின் கால்கள் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது...

உள்ளம் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க காதை இருக மூடிக் கொண்டு கதவில் எல்லா தாழ்பாலும் போடப்பட்டு இருக்கிறதா என சொதித்தவளுக்கு... ஒருவேளை சாவியை போட்டு கதவை திறந்தா என்ன செய்றது என நினைத்தவளுக்கு அவளுடைய அம்மாவின் ஞாபகம் வந்தது.

மீனு என்ன பன்ற அதான் நாம டோரையும் லாக் பன்னிட்டோம் அப்புறம் இது என்ன பெரிசா அதுவும் இரும்பில் இருக்கு என கேட்டவளிடம், மஹதி உங்க அப்பா லேட்டா வர அன்னைக்கு தான் அம்மா இதை போட போடமாட்டேன்... இந்த பெரிய தாழ்ப்பாள் போட்டுட்டா சாவியை போட்டா கூட அப்பாவால கதவை திறக்க முடியாது... ஊருல உன் பாட்டி வீட்டுல இப்படி தான் முழு கதவையும் சேர்த்து இரும்பால ஆன தாழ்ப்பாள் இருக்கும் அதை அந்த இரும்பில் நுழைத்துவிட்டால் போதும் என்றிட... தலையை ஆட்டியபடி கதவை மூடுவதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மஹதி.

அன்று அம்மா சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வரவும் உடனே அதை செய்தால்... மஹதியால் அந்த இரும்பு தாழ்ப்பாளை தூக்கவே சிரமப்பட்டாள்... ஒருவாராக அதை கதவுக்கு பொருத்தியவள் அப்பாடா!!! என பெருமூச்சி விட்டுக் கொண்டு கதவுக்கு கீழேயே அமர்ந்துவிட்டாள்...

கதவு தட்டுவது கூட நின்றாலும் காதிலிருந்து கையை எடுக்காமல் கண்ணை மூடி இருந்தவளுக்கு பயத்தில் எப்படி தூங்கிப் போனாள் என்றே தெரியவில்லை அவளுக்கு... லேசாக நினைவு வர ஆரம்பிக்க தூக்கத்தில் இருந்து மெதுவாக கண்ணை திறந்தவளுக்கு தான் இருக்கும் இடத்தை பார்த்ததும் அதிர்ச்சியுடன் வேகமாக எழுந்தவள்... நன்றாக விடிந்துவிட்டது என தெரிந்ததும் பயம் விலகி மெல்ல கதவின் துளை வழியாக வெளியே பார்த்தாள் யாரும் இருக்குமாறு தெரியவில்லை இருந்தாலும் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல பயந்து ஹாலில் இருக்கும் சோபாவில் சென்று முழங்களை கட்டிக் அமர்ந்தாள்.

மறுபடியும் கதவு படப்படவென தட்டும் சத்தம் கேட்க... தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் கையில் கத்தியுடன் யாரது என கேட்க...

மஹதிம்மா கதவை திறடா என அம்மாவின் குரல் கேட்க வேகமாக கதவை திறந்தவள்... வெளியே நின்றிருந்த தன் அம்மாவை பார்த்ததும்... அம்மா என அழைத்துக் கொண்டே அவரை கட்டிக் கொண்டு அழுதவள் அம்மா அம்மா என்றாளே தவிர வேறு எதையும் சொல்லவில்லை...

மகளின் உடல் நடுங்குவதை உணர்ந்தவர் மஹதி ஒன்னும் இல்லடா அதான் அம்மாவும் அப்பாவும் வந்துட்டோமே!! என்க

அப்பா எங்கேம்மா!! என கேட்டவளிடம்,

உங்க அப்பா அவுட்டவுஸ்ல இன்னும் தூங்கிக்கிட்டு தான் இருக்கார் நான் தான் உனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு பயத்துல சீக்கிரமே எழுந்திரிச்சி வந்தேன் என்க...

என்னம்மா சொல்ற!! அப்பா அவுட்டவுஸ்லயா!! நீங்க எப்போ வந்தீங்க என அதிர்ச்சியுடன் கேட்டவளிடம்,

அதையேன் கேட்கிற திருச்சியை தாண்டி மதுரைக்கு போற வழியில் உங்க பெரியப்பா போன் பன்னி லஷ்மி யாரையோ விரும்புறதா சொல்லவும், உன் அப்பாவுக்கு ஒரே கோபம் அதனால் அவங்க அண்ணனிடம், எதுவுமே பேசாமல் வந்த வழியே திரும்பிட்டார் என் மகளை நைட் தனியா இருக்க வைக்க முடியாது அதனால் நாம வீட்டுக்கே போகலாம்னு சொல்லிட்டார்...

நானும் வழக்கம் போல தலையை ஆட்டிட்டேன் இங்கே வந்தப்போ ஒரே மழை காரை நிறுத்திட்டு வந்து கதவை தட்டினா நீ திறக்கவே இல்லை... எங்ககிட்ட இருந்த வீட்டு சாவியை போட்டு திறந்தாலும் கதவை திறக்க முடியலை... கரண்ட் வேற இல்லையா! நீ சீக்கிரமே தூங்கி இருப்பேனு நான் சொன்ன பிறகு தான்.. உன் அப்பா கதவை தட்டுறத நிறுத்தினார்... ரொம்ப நேரமா நாங்க கதவை தட்டினோம் அப்புறம் நாங்க அவுட்டவுஸ்ல போய் கதவை திறந்து உள்ளே போனோம்... நல்ல வேலை எங்க பேக்ல இருந்த டிரெஸ் எதுவும் நனையாததால் நாங்க ஈரமான உடையை மாற்றிவிட்டு வேறு டிரெஸ் போட்டுக்கிட்டோம் என சொல்லவும்...

மஹதிக்கோ!! நேற்று இரவு தனக்கு ஏற்பட்ட நிலையை என்னி அவளுக்கே சிரிப்பு வந்தது.

இதான்டி நடந்துச்சி!! என தன் தோழிகளிடம் சொல்லி முடிக்க... அவர்களோ மஹதியை பார்த்த பார்வையில் அங்கிருந்து வேகமாக ஓடினாள்.. அவளுடைய தோழிகளும் அடிப்பாவி நாங்க பயந்து போய் உட்கார்ந்திருந்தா!! ஒரு மொக்க கதையை சொல்லிட்டு ஓடுற இருடி வரோம் என சொல்லிக் கொண்டே!! கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு மஹதியை துரத்தினர்.



User avatar
admin
Site Admin
Posts: 131
Joined: Sun May 10, 2020 12:45 pm
Has thanked: 3 times
Been thanked: 1 time

Re: தனியே தன்னந்தனியே

Post by admin »

தனியா இருக்கும் பொழுது மனசு பெரும்பாலும் இப்படி தான் யோசிச்சு வைக்கும். :lol:


Madhumathi Bharath :)

Jothiramar
Moderators
Posts: 2
Joined: Fri May 15, 2020 1:02 pm
Been thanked: 26 times

Re: தனியே தன்னந்தனியே

Post by Jothiramar »

admin wrote:
Mon May 25, 2020 9:46 am
தனியா இருக்கும் பொழுது மனசு பெரும்பாலும் இப்படி தான் யோசிச்சு வைக்கும். :lol:
Ama sis 😁😁😁



User avatar
admin
Site Admin
Posts: 131
Joined: Sun May 10, 2020 12:45 pm
Has thanked: 3 times
Been thanked: 1 time

Re: தனியே தன்னந்தனியே

Post by admin »

veliye ellar munnadiyum gethu.. thaniye irukum poluthu namma ellarum raghava lawrance mathiri than yosippom :lol:


Madhumathi Bharath :)

Post Reply

Return to “Jothi Ramar”