அ(இ)வளுக்கென 5
Posted: Tue Jun 09, 2020 8:02 pm
அ(இ)வளுக்கென - 5
மென்மொழிக்கு பதக்கம் பெற்றதில் மகிழ்ச்சி இருந்தாலும், அந்த பதக்கத்தை தருகையில் தூயவனின் கை அவள் மேல் பட்டதும், அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
வீடு வந்து சேர்ந்ததும் பதக்கத்தை பத்திரப்படுத்தி வைத்தாள், தூயவனின் கை பட்ட இடத்தில் நான்கு ஐந்து முறை சோப்பு போட்டு கழுவியிருந்தாள்.
"ஏய் மெனு! இன்னும் என்ன பாத்ரூம்ல பண்ற, வா வந்து காபி குடி!" என்று அவளின் தாய் கத்தி கொண்டிருந்தாள்.
குளியலறையில் இருந்து வெளியே வந்த மென்மொழி, இன்னமும் தன்னுடைய வலதுகையை தேய்த்து கொண்டிருந்தாள்.
"என்னாச்சு மென்மொழி கை செவந்து போய் இருக்கு, பூச்சி கீச்சி ஏதாச்சும் கடிச்சுடுச்சா?" என்று பதட்டத்துடன் அவளின் தாய் கேட்டார்.
"ஒன்னும் இல்லமா, அதெல்லாம் ஒன்னுமில்லை, லைட்டா அரிச்சுது அதனாலதான் சொரிஞ்சேன்" என்று சமாளித்தாள் மென்மொழி.
வீட்டில் இருந்தால், மறுபடி மறுபடி தேவையில்லாத ஞாபகங்கள் வரும் என தோன்றியதால், அவள் தோழி நிறைமதியை தொடர்பு கொண்டு, காபியை ஒரே மிடறாக மிழுங்கிவிட்டு நிறையின் வீட்டிற்கு கிளம்பினாள் மென்மொழி.
நிறைமதி அவள் வீட்டின் வரவேற்பறையின் சோஃபாவில் சம்மணம் இட்டு அமர்ந்து கொண்டு, ஒரு கிண்ணம் நிறைய உருளைக்கிழங்கு வறுவலை கொறித்து கொண்டே, டிவியில் கார் ரேஸில் தன் கவனத்தை செலுத்தியிருந்தாள். தன்னருகே வந்து மென்மொழி அமர்ந்ததை கூட அறியாமல், வாய் முழுவதும் வறுவலை அடைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் நிறைமதி.
சில நொடிகள் கழித்து வந்த விசும்பல் சத்தம் மட்டுமே, நிறைமதியை மென்மொழியின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
"ஏய் மெனு எப்ப வந்த? என்ன ஆச்சு? எதுக்கு அழற?" என்று நிறைமதி கேட்டதும், மென்மொழியின் அழுகை இன்னும் அதிகமாகியது.
"ஷ்ஷ்! இங்க உட்கார்ந்து அழுதா அம்மா என்ன ஏதுன்னு கேப்பாங்க, வா மொட்டை மாடிக்கு போகலாம்" என்று மென்மொழியை மொட்டை மாடிக்கு அழைத்து சென்றாள் நிறை.
"சொல்லு மெனு! என்னாச்சு ஸ்கூல்ல ப்ராப்ளமா? மறுபடியும் உன்ன கரஸ்பாண்டன்ட் தூயவன் திட்டினாரா? "
"திட்டல்லாம் இல்லை, என்ன பாராட்டி பதக்கம் தான் கொடுத்தாங்க. அந்த ஆர்கானிக் கார்டன் பாழாய் போனதால, நானும் என் மாணவர்களும் சேர்ந்து அதை சரி செஞ்சோம். அதுக்காக எனக்கும், என்னோட மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தி பரிசும் கொடுத்தாங்க" என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே சொன்னாள் மென்மொழி.
"பதக்கம் கொடுத்ததுக்கு யாராவது அழுவாங்களா, சந்தோஷமா சிரிச்சிட்டு தானே இருக்கணும். இப்போ உனக்கு என்னதான் பிரச்சினை?" என்று சற்று கோபமாகவே கேட்டாள் நிறைமதி.
"இல்ல நிறை, தூயவன் சார் அந்த பதக்கத்தை கொடுத்தபோது அவர் கை என் கையில பட்டுடுச்சு, என்னால அதை என்னமோ தாங்கிக்க முடியலை!"
"என்னடி லூசுத்தனமா பேசுற, நம்ம கோவிலுக்குப் போறோம் அங்க உள்ள அர்ச்சகர் கை நம்ம கை மேல படுது, கடைக்கி போறோம் கடையில் வேலை பாக்குறவங்களோட கை, நம்ம மேல படுத்து, அந்த மாதிரி இதையும் நினைச்சுட்டு போக வேண்டியதுதானே, நீ என்ன பைத்தியமா ஒண்ணுமே இல்லாத மேட்டர இவ்வளவு ஊதி பெருசாக்கிட்டு இருக்க".
"அர்ச்சகரும் கடையில் வேலை பாக்குறவங்களும், ஒரே நாளில் நம்மளை கடந்து போற ஆளுங்க. ஆனா தூயவன் சார் அப்படியா, தினமும் அவரை நான் சந்திக்கணும். அதுவுமில்லாம அவர் கை என் மேலே பட்டதும், அவர் சிலிர்த்தது எனக்கு நல்லாவே புரிஞ்சுது. இனிமே நான் வேலைக்கு போக போறது இல்லை".
"சுத்தம் இப்படித்தான் திடீர்னு ஒருநாள், டாக்டர் வேலைக்கு போக மாட்டேன்னு சொல்லி, டீச்சர் வேலைக்கு வந்த! இப்ப இதுவும் பண்ண மாட்டேன்னா, உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க. நீ என்கிட்ட எதையோ மறைக்கிறன்னு மட்டும் எனக்கு தெரியுது, ஒழுங்கு மரியாதையா என்னன்னு சொல்லிடு".
"என்னத்த சொல்ல சொல்ற? தூயவன் சாரை, தினமும் பார்க்கும் போது அவர் என் கூடவே காலம் முழுக்க வரமாட்டாரான்னு தோணுது. அவரோட நிர்வாகம், ஸ்கூல் பீஸ் வாங்காம பசங்கள படிக்க வைக்கிறது, பொண்ணுங்ககிட்ட அவர் நடந்துக்கிற விதம் இது எல்லாத்தையும் பார்த்து என் மனச நான் இழந்திட்டேன்னு சொல்றதா, இல்ல அதுக்கான தகுதி எனக்கு இல்லைன்னு என் மனசாட்சி குத்துதே அதை சொல்றதா? நான் என்ன பண்றது, முள் மேல இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்".
"ஏன் நீ அதுக்கு தகுதி இல்ல சொல்லு பாக்கலாம்?"
"அது எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியாம தான், இத்தனை நாள் மறைச்ச உண்மையை உன்கிட்ட சொல்ல போறேன். முன்னாடி வேலை பாத்த இடத்தில, ஒரு சீனியர் டாக்டர் என்கிட்ட தப்பா நடக்க முயற்சி செஞ்சான், அதுல பாதி அளவு வெற்றியும் அடைஞ்சுட்டான். நைட் ட்யூட்டி போன என்னை, யாருக்கும் தெரியாம மூக்குல க்ளோரோஃபாம் வெச்சு, வன்புணர்வு செய்ய முயற்சி செஞ்சான். நல்லவேளை என் நல்ல நேரம், அப்போ ஒரு ஆக்ஸிடெண்ட் ஆன எமர்ஜென்சி கேஸ் வந்ததுனால, ஜனங்க கிட்ட மாட்டிகிட்டு அடி வாங்கிட்டு போயிட்டான். ஆனால் அந்த பாதிப்பு மட்டும் என்ன விட்டு இன்னமும் போகல. அவன் நம்ம அப்பா வயசு தெரியுமா? அவன் மேல எவ்வளவு பெரிய மரியாதை வச்சிருந்தேன். இந்த சம்பவத்துக்கு அப்புறம் தான் என் டாக்டர் வேலையை விட்டேன்".
"சரி அப்புறம்!" என்று மிகச் சாதாரணமாக கேட்ட நிறைமதியை ஆச்சர்யமாக பார்த்தால் மென்மொழி.
"என்னடி நான் எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன ரொம்ப சாதாரணமா கேட்குற!"
"வேற எப்படி கேட்க சொல்ற? தினமும் பொண்ணுங்கள இடிக்கறதுக்குன்னே பஸ்ல வராங்க, எப்படா சான்ஸ் கிடைக்கும்னு பாக்குறாங்க, இதெல்லாம் சாதாரண விஷயம். பொண்ணுங்கள பொறந்தா, இதெல்லாம் நம்ம கூடவே வர பிரீ ஆஃபர். அப்படியே அந்த ஆளு உன்ன ஏதாவது பண்ணி இருந்தா கூட, உன் மேல எந்த தப்பும் கிடையாது. கற்பு மனசுல தான் இருக்கு, உடம்புல இல்லை. ஒரு சாதாரண பொண்ணான எனக்கு தெரிஞ்சது கூட, டாக்டருக்குப் படிச்ச உனக்கு தெரியலையே. நீயெல்லாம் என்னத்த சைக்காலஜி படிச்சியோ? இதுல தூயவன் கை பட்ட இடத்தை, நல்லா சொறிஞ்சு ரத்தம் வர அளவு தேய்ச்சு வெச்சிருக்க! மவளே நான் கீழ போய் காபி கொண்டு வரதுக்குள்ள, ஒழுங்கா நார்மலாய் உட்கார்ந்து இருக்கணும்" என்று மிரட்டி விட்டு சென்றாள் நிறைமதி.
அங்கே தோட்டத்தில் அமர்ந்திருந்த தூயவன், மென்மொழியையும், அவன் மனதிற்குள் ஐக்கியமாய் இருந்த யாமினியையும் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்தான். ஏதோ ஒரு ஒற்றுமை ரெண்டு பேருக்கும் இருக்கு அப்படின்னு யோசிச்சுகிட்டு இருந்த அவன் மூளைக்கு, சட்டென்று அந்த ஒற்றுமை பிடிபட்டது. ரெண்டு பேருமே பயங்கர அறிவாளியா இருந்தாலும், தொட்டாச்சிணிங்கி அதாவது பயந்தாங்கொள்ளியாக இருந்தார்கள்.
"யாழினி பெயருக்கேத்த மாதிரி, எவ்ளோ நல்ல பொண்ணு. அன்னைக்கு மட்டும் நான் ஒழுங்கா இருந்திருந்தா, இந்நேரம் அவ என்கூட இருந்திருப்பா. பாவம் அந்த கடைசி நொடியில், எவ்வளவு பயந்திருப்பா! என்ன எல்லாம் யோசிச்சு இருப்பா, என்னை பத்தி எப்படி எல்லாம் நினைச்சிருப்பா!" என்றெல்லாம் யோசிக்க யோசிக்க, தூயவனின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.
"நம்மள நம்பி வந்த யாழினியையே நம்மளால காப்பாத்த முடியல, இதுல இப்ப புதுசா இந்த மென்மொழி பின்னாடி இந்த மானங்கெட்ட மனசு அலைபாயுது" என்று தன் மனசாட்சியைக் கடிந்து கொண்டிருந்தான்.
"டேய் நீ என்ன வேணும்னேவா யாழினிக்கு துரோகம் பண்ண? அன்னிக்கு அந்த மாதிரி போய் அவ மாட்டிக்கணும்னு விதி. நீ போய் இருந்தா கூட, அன்னைக்கு அதே மாதிரி நடந்து இருக்க வாய்ப்பு உண்டு. எவ்வளவு நாள் இந்த குற்ற உணர்ச்சியோடு இருக்க போற? யாழினி நீ சந்தோஷமா இருக்கிறது பாக்கணும்னு தானே ஆசைப்படுவா! ஒழுங்கா அத மனசுல வெச்சு நடந்துக்கோ!" என அவன் மனசாட்சி வந்து சமாதானம் சொன்னது.
தூயவனுக்கும், மென்மொழிக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தாலும், அவர்களின் இறந்தகாலம் இருவரையும் நெருங்க விடாமல் சதி செய்தது. தூயவனின் இறந்தகாலம் தெரிந்த நிமலனும், இப்பொழுது மென்மொழியின் இறந்தகாலத்தை புரிந்துகொண்ட நிறைமதியும், இருவரையும் ஒன்று சேர்க்க புதிய திட்டம் தீட்டினார்கள்.
அதன்படி தூயவனுக்கு தெரியாமல், தூயவனின் கடந்தகாலத்தை மென்மொழியிடம் நிறைமதி சொல்லிவிட்டாள். அதேபோல் மென்மொழிக்கு தெரியாமல், மென்மொழியின் கடந்தகாலத்தை போய் தூயவனிடம் சொல்லிவிட்டான் நிமலன்.
மென்மொழியின் கதையை கேட்ட பிறகு, நிச்சயம் அவளை கல்யாணம் செய்து கொள்வது தான் யாழினிக்கு செய்யும் நீதி மற்றும் கடமை என்பதை புரிந்து கொண்ட தூயவன், உடனே மென்மொழியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டான்.
மென்மொழியோ வேறு ஒரு சிந்தனையில்
இருந்தாள். இதுவரை தனக்கு மட்டும் அழுதவள் அன்றிலிருந்து யாழினிக்கும் சேர்த்து அழுது தீர்த்தாள். இன்னார்க்கு இன்னாரென்று தேவன் அன்றே எழுதி வைப்பது இவர்கள் இருவருக்கும் புரியவில்லை. அந்த வார இறுதியில், தூயவன் அவரோடு மின் மொழிகள் பெண் பார்க்க வருவதாக கூறியிருந்தார் ஆனால் இந்த விஷயம் மென்மொழிக்கு, தற்போது தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவளுக்கு அந்த செய்தியை தெரியப்படுத்தவில்லை.
அந்த வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைக்காக மிகவும் ஆவலுடன் காத்திருந்தான் தூயவன். ஞாயிற்றுக்கிழமை விரைவிலேயே வர, மாலை நான்கு மணிக்கு மென்மொழியின் வீட்டை ஆர்வத்துடன் அடைந்தான் தூயவன்.
முதலில் வீட்டினுள் ஓடிவந்த மயூரனை ஆச்சரியத்துடன் பார்த்த மென்மொழி, அவன் பின்னாடி நிறைமதியும், நிமலனும் வருவதை பார்த்து குழப்பத்தோடு நிற்க, அதன் பின்னே வந்த தூயவனையும், அவனுடைய பெற்றோர்களையும் பார்த்து திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தாள்.
------- தொடரும் ------