தாய்மையிலும் விஷமுண்டு 3

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

தாய்மையிலும் விஷமுண்டு 3

Post by Madhumathi Bharath »

காலையில் சுவற்றின் அருகில் நின்று கொண்டு, சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு..... பயந்து கொண்டே சுகாசினியை அழைத்தாள் மலர்விழி.... சுகாசினி அருகில் வந்து " என்ன மலர் ? "என்று கேட்கவும்....
"அக்கா இன்னைக்கு மருத்துவமனைக்கு போகலாம்..... என்று பேசிக்கொண்டார்கள் ....
எனக்கு பயமாக இருக்கு நீங்களும் துணைக்கு வருகிறீர்களா ? "என்று தயக்கத்துடன் கேட்கவும்....
சுகாசினிக்கு மலர் விழி பார்க்க பாவமாக இருந்தது.... "சரி வருகிறேன் மலர்" என்றாள் சுகாசினி.... "அக்கா நான் சொன்னேன்னு சொல்லாதீங்க.... என்னை திட்டு வாங்க "என்று சொல்லிவிட்டு....
சுகாசினி ஏதாவது நினைத்துக் கொள்வாலோ என்று பயந்தாள் மலர்விழி... அவளை வெகுளித்தனமும் பயமும் சுகாசினிக்கு அவளின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது..... "நீ கவலைப்படாம இரு மலர் நான் பார்த்துக்கொள்கிறேன், இப்படி தொட்டதற்கெல்லாம் பயந்தாள்.... நீ எப்படி வாழ முடியும், ? வெளியிலிருந்து நாங்க சப்போர்ட் தான் பண்ண முடியும்..... உள்ளுக்குள்ள நீ தான் தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும்... நீ இப்படி இருந்தா நாளைக்கு உனக்கு ஒரு குழந்தை இருந்தால்.... அதை எப்படி தைரியமாக வளர்ப்பாய்.... உனக்காக இல்லாட்டியும் உனக்கு பிறக்கப் போற குழந்தைக்காகவாவது... உன்னை நீ மாற்றிக்கொள்ளவேண்டும்... மலர்" என்று சொன்னாள் சுகாசினி....
அவள் சொல்வதை எல்லாம் மருண்ட விழிகளோடு தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்விழி.....

" சரி போய் ரெடியாகு நானும் உங்களோடு வந்து ஜாயின் பண்ணி கொள்கிறேன்.... " என்று சொல்லி விட்டு சென்றாள் சுகாசினி.... மலர்விழிக்கு சுகாசினி வரேன்னு சொன்னதும் நிம்மதியாக இருந்தது....
மலர்விழியும் மதுபாலனும் கிளம்பிக் கொண்டிருக்கும் பொழுது.... கவிதாவும் சுகாசினியும் வந்தார்கள்... மங்கலம் வந்தவர்களை பேருக்கு " வாங்க " என்று சொல்லிவிட்டு..... உள்ளே செல்ல பார்க்க, கவிதா " எங்க போறீங்க நில்லுங்க உங்ககிட்ட தான் பேசணும் " என்றாள்.... " சொல்லுங்க " என்றார் கடுப்புடன் மங்கலம்....
" உங்க மருமகளுக்கு துணையாக சுகாசினி அனுப்பி வைக்கிறேன்.... எனக்கு டாக்டர் என்ன சொன்னாங்க என்று தெரிந்துகொள்ள வேண்டும்.... உங்களுக்கு ஒன்னும் இதில் வருத்தம் இல்லையே " என்றாள் கவிதா....
' எனக்கு நீ வந்தது இப்படி கேள்வி கேட்பது என் வீட்டு பிரச்சனையில் மூக்கை நுழைப்பது.... எதுவும் பிடிக்கவில்லை தான்.... அதை உன்கிட்ட சொல்ல முடியுமா ' என்று மனதில் நினைத்துக் கொண்டு... வெளியில் " அதெல்லாம் ஒன்னுமில்லை தாராளமாக அனுப்பி வைங்க "என்றாள் மங்கலம்....
மலர்விழி மதுபாலன் சுகாசினி மூன்று பேரும் நகரத்தில் இருக்கும்.... தளிர்நடை குழந்தையின்மை சிகிச்சை மையத்திற்கு சென்றார்கள்....
அங்கே குழந்தையின்மைக்கு புகழ்பெற்ற டாக்டர் சரஸ்வதியிடம் பெயரை பதிவு பண்ணி விட்டு அமர்ந்திருந்தார்கள்..... இவர்களின் முறை வந்ததும் உள்ளே சென்றார்கள்.... டாக்டர் சரஸ்வதி அவர்களை புன்னகையுடன் வரவேற்றார்....
சுகாசினி தான் இவர்களுடைய பிரச்சனையை சொன்னாள்.... கேட்டுக்கொண்ட டாக்டர் " உங்களுக்குத் திருமணம் ஆகி எவ்வளவு நாளாச்சு ? " என்று மதுபாலனிடம் கேட்டார்.... மதுபாலன் " இரண்டு வருடம் ஆகிவிட்டது டாக்டர் " என்றான்.....
டாக்டர் " கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாமே " என்று கேட்டார்.... மதுபாலன் எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு..... முதலில் " நான் எழுதிக் கொடுக்கும் டெஸ்ட்களை இருவரும் செய்துவிட்டு வாருங்கள்..... " என்று சொல்லிவிட்டு பிளட் டெஸ்ட் , யூரின் டெஸ்டிலிருந்து அதற்குண்டான அனைத்து டெஸ்ட்டையும் எழுதிக் கொடுத்தார் டாக்டர் சரஸ்வதி....
வாங்கிக்கொண்டு வந்து எல்லா டெஸ்ட்டையும் செய்துவிட்டு.... ரிசல்ட்டுக்காக பார்த்துக்கொண்டிருந்தார்கள் ரிசல்ட் வந்ததும் மறுபடியும் டாக்டரை பார்க்க உள்ளே சென்றார்கள்.....டாக்டர் ரிசல்ட்டை பார்த்து விட்டு " உங்க மனைவிக்கு வயது கம்மியா தான் இருக்கு... இன்னும் கொஞ்ச நாளைக்கு வெயிட் பண்றீங்களான்னு.... நான் சொன்னதை யோசித்துப் பார்த்தீர்களா ? " என்று கேட்டார் டாக்டர்....
" இல்லை டாக்டர் இப்பவே பெற்றுக்கொள்கிறோம் " என்றான் மதுபாலன்.... " நீங்க டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதாக இருந்தால்.... அதற்கு மூன்று லட்சம் வரை செலவாகும்.... வெளிநாடுகளில் ஐவிஎஃப் சிகிச்சை முறைக்கு.... ஆகும் செலவு மருத்துவ காப்பீட்டில் இழப்பீடாகக் கிடைக்கும்..... இந்தியாவில் ஐவிஎஃப் சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் கிடையாது..... உங்க சொந்த செலவில் தான் பண்ணிக்கொள்ள வேண்டும் " என்றார் டாக்டர்.....
டாக்டர் சொல்வதற்கெல்லாம் சரியென்று தலையாட்டி கொண்டிருந்தான் மதுபாலன்.... மலர்விழி அமைதியாக அமர்ந்திருந்தாள்...." எதனால் இப்படி குழந்தை பிறப்பதில் லேட் ஆகிறது..... முன்ன காலத்தில் எல்லாம் இப்படி இல்லை.... இப்ப முக்கால் வாசி பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு..... " என்று கேட்டாள் சுகாசினி.....
"இன்றைய தலைமுறையினர் திருமண வயதை தள்ளிப் போடுவதால்.... வயது ஏற ஏற கருமுட்டை மற்றும் உயிர் அணுக்கள் உற்பத்தி குறைகிறது.... பொதுவாக உடல் உழைப்பற்ற வேலை உடல் பருமன்.... தவறான உணவு பழக்கம் மற்றும் அதீத செல்போன் உபயோகம்.... போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும்....
குறிப்பாக ஆண்களிடம் உள்ள மது புகை போதை பழக்கங்களும் முக்கியக் காரணமாகிறது.... பெண்களுக்கு பிசிஓடி கருக்குழாய் அடைப்பு.... கர்ப்பப்பை நீர்கட்டிகள் காரணமாகின்றன.... சமீபத்திய தரவின் படி ஆண் பெண் இருவரிடத்திலும் மன அழுத்தம் மிகப்பெரிய பங்கு வகிப்பதாக தெரிகிறது....
தொழில் ரீதியாக பார்த்தால் சமயல் வேலை செய்பவர்கள், வெப்பகலங்கள் மற்றும்.... கதிர்வீச்சு வெளிப்படக்கூடிய எக்ஸ்ரே எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள்..... வாகன ஓட்டுநர்கள் இவர்களுக்கெல்லாம் கருவுறாமை பிரச்சனை அதிகம் இருக்கு.....

மற்றொரு முக்கிய காரணம், மோசமான உணவுப் பழக்கம் உணவில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்.... கண்டிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள்... பீட்சா நூடுல்ஸ் பாக்கெட் உணவுகள் மற்றும் உலோக கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள்... போன்றவை உயிரணுக்கள் கரு முட்டை உற்பத்தியை பாதிக்கக்கூடியவை.... இதுதான் காரணம் " என்றார் டாக்டர்....
"குழந்தை இல்லாத தம்பதிகளில் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்... இன்றைய காலகட்டத்தில் கூட ஆண்களை யாரும் குறை சொல்வதில்லையே.... இது சரியா ? " டாக்டர் என்றாள் சுகாசினி....
" குழந்தையின்மை நாளே பொதுவாக நம் நாட்டில் பெண்களை தான் குறை கூறுவார்கள்.... அது தவறான செயல்,ஆண்களிடம் கூட தவறு இருக்கலாம்.... என்பதை இன்னும் நம்ம சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை.... இதே மேலை நாடுகள் என்றால் கப்புள்ஸ் ட்ரீட்மென்ட் என்றுதான் சொல்கிறார்கள்.... ஆண் பெண் இருபாலரையும் குறிப்பதாக.....
நம் நாட்டில் மட்டும்தான் பெண்களை மட்டும் குறிப்பதாக இருக்கிறது.... குழந்தையின்மை குறைபாடு என்று வருகிறபோது.... தம்பதிகளில் ஆண் பெண் இருவருமே பரிசோதிக்க வேண்டும்.... ஆணை பொறுத்தவரையில் உயிரணு எண்ணிக்கையை சோதிக்கவேண்டும்..... இருவருக்கும் பிரச்சினை இருக்கக்கூடும் எனும் போது.... பெண்ணை மட்டும் குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம் " என்றார் டாக்டர்...
: கருவுறாமை பிரச்சனைக்கு ஐவிஎஃப் சிகிச்சை மட்டுமே தீர்வா டாக்டர் ? "என்றாள் சுகாசினி....
" கண்டிப்பாக இல்லைமா ஒவ்வொருவருக்கும் கருவுறாமைக்கான சிகிச்சை மாறுபடும்.... மருத்துவர்கள் எடுக்கும் கடைசி ஆயுதம் தான் ஐவிஎஃப்..... பெண்ணிற்கு பிசிஓஎஸ் ஃபைப்ராய்டு கருக்குழாய் அடைப்பு இருக்கிறதா என்றும்..... ஆணுக்கு உயிரணு உற்பத்தி குறைபாடு இருக்கிறதா என்று..... சோதித்துப் பார்த்து அதற்கான தீர்வை அளித்து..... அதில் பயனில்லை எனும் போது தான்.... இறுதியாக ஐவிஎஃப் சிகிச்சை பரிந்துரைப்போம் மா " என்றார் டாக்டர்.....
" இதற்கு வயது வரம்பு ஏதாவது இருக்கிறதா டாக்டர் ? "என்றாள் சுகாசினி....

"எந்த வயதில் வேண்டுமானாலும் ஐவிஎஃப் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்... ஆனால் தன்னுடைய சொந்த உயிரணு கருமுட்டையில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், என்று பலர் விரும்புகிறார்கள்....
இத்தகைய விருப்பமுள்ளவர்கள் 40 வயதிற்கு முன் சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது " என்றார்.....
"திருமணத்திற்குப் பிறகு எத்தனை ஆண்டுகள் கழித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் டாக்டர் " என்றாள் சுகாசினி.... " எந்த பிரச்சினையும் இல்லாவிட்டாலும் திருமணம் முடிந்த உடனேயே ஆலோசனைக்கு செல்வது நல்லது.....
இருவரையும் உடனே பரிசோதனை செய்து பிரச்சனை இருக்கும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை ஆரம்பித்துவிட வேண்டும்.... எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாக சிகிச்சையை ஆரம்பிக்கிறோமோ அந்த அளவிற்கு நல்லது.... "
" ஐவிஎஃப் சிகிச்சை வெற்றிகரமானதா டாக்டர்....."
"விதையின் தரம் மற்றும் மண்ணின் தரமே ஒரு மரம் செழித்து வளர காரணமாகிறது.....
அதுபோல் தம்பதிகளின் உடல் அமைப்பை பொருத்து வெற்றி விகிதம் இருக்கும்.... ஐவிஎஃப் சிகிச்சையின் இரகசியம் எந்த அளவிற்கு காலதாமதம் இல்லாமல்..... முன்னதாக வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் இருக்கிறது..... தம்பதிகள் இருவரும் மருத்துவர்கள் சொல்லும் விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.....
எல்லோருடைய ஆலோசனைகளையும் கேட்டு, எல்லாவித சிகிச்சை முறைகளையும் முயற்சித்து விட்டு.... இறுதியில் விந்தணுக்கள் இல்லாத நிலையில்.... சிகிச்சைக்கு வரும் பட்சத்தில் வெற்றிக்கான வாய்ப்பு இல்லை என்றார் டாக்டர்....
ஐவிஎஃப் முறையில் சிசேரியன் பிரசவம் மட்டுமே சாத்தியமா டாக்டர்" என்றாள் சுவாசினி....
"அப்படி சொல்லமுடியாது சாதாரணமாக மற்ற கர்ப்பிணிப் பெண்களை போல் தான்..... இவர்ளுக்கும் பிரசவ நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை.... வைத்துதான் நார்மல் டெலிவரி சிசேரியன் என்பதை முடிவு செய்ய வேண்டும்....
ஆனால் ஐவிஎஃப் சிகிச்சை முறைக்கு வரும் பெண்கள்.... பெரும்பாலும் உடல் பருமன் அல்லது.... வேறு ஏதாவது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.... உடன் இருப்பதாலும் அடிப்படையில் இவர்களுடைய பிரசவத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.... என்ற காரணத்தினாலும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை பத்திரமாக.... வெளியே எடுப்பதும் பாதுகாப்பானது என்று காரணமாக இருக்கலாம்.... " என்றார் டாக்டர்.
" ஒரு முறையில் சிகிச்சை வெற்றி பெறுமா தோல்வியடைந்தால்.... மீண்டும் முயற்சிக்கலாமா டாக்டர் " என்று கேட்டாள் சுகாசினி....
" ஒரு முறையிலும் வெற்றி பெறும் அல்லது இரண்டு மூன்றாவது முறையில் கூட வெற்றியடைந்திருக்கிறது.... ஒரு முறை செய்துவிட்டு முயற்சியை கைவிட்டு விட வேண்டியதில்லை " என்றார்....
"ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைக்கு நோய்கள் வர வாய்ப்பிருக்கிறதா டாக்டர் " என்றாள் சுகாசினி...
"இயற்கையான ஒரு தம்பதிக்கு எப்படி குழந்தை பிறக்குமோ.... அப்படித்தான் டெஸ்ட் டியூப்பேபியும் இருக்கும்.... அவர்களுக்கு இருக்கும் மரபணு பிரச்சனை, அல்லது பரம்பரை தன்மையால் வரக்கூடிய குறைபாடுகள்.... வேண்டுமானால் வரலாம், இந்த சிகிச்சையால் எந்த பிரச்சினையும் ஏற்படாது....
அவரவர் மரபணுக்களே பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது..... பலருக்கும் ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைக்கு.... ஆட்டிசம் கோளாறு வருமா என்று சந்தேகம் இருக்கிறது..... இதுவும் தவறு ஆட்டிஸம் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு தம்பதிகளுக்கு இருந்தால்.... மட்டுமே அப்படி பிரசவம் நிகழும் " என்றார் டாக்டர்....
"ஐவிஎஃப் சிகிச்சை பாதுகாப்பானதா டாக்டர் "என்று கேட்டான் மதுபாலன்.....
"இப்போது சிகிச்சை மிகவும் எளிதாகிவிட்டது...பெட்ரெஸ்ட் அவசியமில்லை.... ஒருநாள்கூட மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை....

15 நாட்களில் முழு சிகிச்சையும் முடிந்துவிடும்... கருமுட்டையை எடுப்பதற்கும் எந்தவித அறுவை சிகிச்சையோ.... தையல் போட வேண்டிய அவசியமோ இல்லை.... ஊசி மூலம் எடுத்து விடலாம், அதற்கு பிறகு வழக்கம்போல அன்றாட வேலைகளை செய்யலாம்" என்றார்.....
" ஐவிஎஃப் காஸ்ட்லியான சிகிச்சை என்கிறார்களே அது உண்மையா " என்று கேட்டாள் சுகாசினி.....
"ஒரு உயிரை கர்ப்பப்பை இல்லாமல் பரிசோதனை கூடத்தில் வைத்து வளர்க்கும் போது.... கர்ப்பப்பைக்கு ஈடான தட்பவெட்பம் பிராணவாயு கிடைக்கும் வகையில்..... பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்....
அதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு..... லட்சக்கணக்கில் செலவாகும். தட்பவெட்பத்திலோ பிராணவாயுவிலோ சிறு மாறுபாடு இருந்தாலும் கூட.... கரு செத்துப் போய்விடும், அதற்கான மருந்துகள் எல்லாமே விலை அதிகமானவை..... எல்லோருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்க முடியாது....
ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ப்ப மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டியிருப்பதால்.... ஒவ்வொருவருக்கும் கட்டணம் மாறுபடும்.... என்று சொல்லிவிட்டு இன்னும் ஏதாவது கேட்க வேண்டியிருக்கா " என்று கேட்டுவிட்டு புன்னகைத்தார் டாக்டர் சரஸ்வதி....
சிரித்துக்கொண்டேன் "இதைப் பற்றி தெரிந்துகொள்ள தான் டாக்டர் கேட்டேன்.... நீங்க எனக்கு தெளிவான விளக்கம் கொடுத்து இருக்கீங்க.... ரொம்ப நன்றி டாக்டர்" என்றாள் சுகாசினி....
" பரவாயில்லை மா வீட்டில் கலந்து பேசிவிட்டு முடிவு செஞ்சுட்டு வாங்க" என்று அவர்களை அனுப்பி வைத்தார்.....
வெளியில் வந்ததும் டீ சாப்பிடலாம் என்று மதுபாலன் அருகில் இருக்கும் பேக்கரிக்கு அழைத்துச் சென்றான்.... டீ சாப்பிட்டுக் கொண்டே சுகாசினி " என்ன மதுபாலன் சிகிச்சை எடுக்கலாமா ? " என்று கேட்டாள்....
" கண்டிப்பா எடுத்துக்கலாம் இல்லை என்றால் எங்கம்மா இதை வைத்தே..... பெரிய பிரச்சனை பண்ணுவாங்க " என்றான் மதுபாலன்....
"மூன்று லட்சம் ஆகும்னு சொல்றாங்க கவிதா பாதி தரேன்னு சொல்லி இருக்கிறாள்.... உங்க வீட்டில மீதியை ரெடி பண்ண முடியுமா ? " என்று கேட்டாள் சுகாசினி....
" எங்க அம்மா கிட்ட கேட்டா தர மாட்டாங்க, நான் அவங்களுக்கு தெரியாம நான் வேலை செய்யும் இடத்தில்.... ஒரு லட்சம் ரூபாய் கேட்டு வாங்கிக்கலாம், மீதி பணத்திற்கு தான் எங்காவது வெளியில் கடன் வாங்கியாக வேண்டும் " என்றான் மதுபாலன்.....
" வேற எங்கேயும் கடன் வாங்க வேண்டாம் மீதி செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் " என்றாள் சுகாசினி.... மலர்விழிக்கு கண் கலங்கிவிட்டது, சுகாசினியின் கையை பிடித்துக்கொண்டு....
" அக்கா உங்களால தான் என் வாழ்க்கையை என்னால தக்கவைக்க முடிந்தது.... இந்த நன்றியை நான் எப்பவுமே மறக்க மாட்டேன் "என்று அழுதாள்....
" இதற்கெல்லாம் அழலாமா, நீ எனக்கு தங்கச்சி மாதிரி மாதிரி.... மாதிரி என்ன நீ எனக்கு தங்கச்சி தான்... என்னவா இருந்தாலும் என்கிட்ட உரிமையா கேளு.... நான் செய்கிறேன் உனக்கு, மதுபாலன் இனிமே இவளுக்கு ஒரு பிரச்சனைனா கண்டிப்பா நான் சும்மா இருக்க மாட்டேன்....
இந்த குழந்தை பிரச்சினையை தீர்த்து வைத்ததும்... அவளை நல்லமுறையில் பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு... இனிமேலாவது உங்க அம்மாட்ட எதிர்த்து சண்டை போட்டாவது அவளை காப்பாத்துங்க.... உங்கள நம்பி வந்தவளை இப்படி சித்திரவதை பண்ண விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே....
இது உங்களுக்கு நல்லா இருக்கா, சின்ன பொண்ணு உங்களுக்கு பாவமா இல்லையா.... இவ்வளவு நாள் போனது போகட்டும் இனிமேலாவது அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.... "என்றாள் சுகாசினி,
" இனி இப்படி எதுவும் நடக்காமல் பார்த்துகிறேன் மா.... எனக்கும் இவளை விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்வதில் எந்த உடன்பாடும் இல்லை.....
எங்கம்மா வலுக்கட்டாயப்படுத்தினதால எனக்கு வேற வழி தெரியலை" என்றான்...
"அவர்கள் பேச்சைக் கேட்டு தப்பானது கூட நீங்க செய்வீங்களா .... காலம் முழுவதும் உங்க கூட வர போறவ மனைவி.... ஆனால் அம்மா ஒரு எல்லை வரைதான் அதை புரிந்து கொள்ளுங்க " என்றாள்..... " சரி " என்று சொன்னவன், பில்லுக்கான பணத்தை கட்டிவிட்டு மூவரும் வீட்டை நோக்கி சென்றார்கள்.



Post Reply

Return to “தாய்மையிலும் விஷமுண்டு”