தாய்மையிலும் விஷமுண்டு 4

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

தாய்மையிலும் விஷமுண்டு 4

Post by Madhumathi Bharath »

மதுபாலன் வீட்டிற்கு வந்து தன் தாயிடம் மருத்துவமனையில் நடந்ததை எல்லாம் சொன்னவன், "இரண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்றாங்க, இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் எங்களுக்கு குழந்தை இருக்குமாம், இவளுக்கும் வயசு குறைவா இருக்குன்னு சொன்னாங்க" என்றான்.
அவனின் தாயோ மகன் சொன்னதைக் காதில் வாங்காமல், "அவங்க அப்படி தான் சொல்வாங்கடா நாம தான் சுதாரிப்பா இருக்கோனும், இவ வந்ததிலிருந்தே வீட்ல எதுவும் சரியா நடக்க மாட்டேங்குது, இனிமேலும் வெச்சிருந்தா சரிபடாது.
எப்படியாவது பதினைந்து நாளை கடத்துவோம், அந்த பொண்ணு பதினைந்து நாள் தான் இருப்பேன்னு சொன்னாள். அதன் பிறகு என்ன செய்யனுமோ செய்யலாம்" என்று தாய் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தான் மதுபாலன்.
மலர்விழி, "அத்தை எனக்கு குழந்தை இருக்கும்ன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க, இதை ஒரு முறை செஞ்சு பார்கலாம். அப்படியும் குழந்தை இல்லைனா நானே இந்த வீட்டிலிருந்து வெளியில் போகிறேன்" என்று அழுதவாறே சொன்னாள்.
மங்களம் மலர்விழியின் தலைமுடியை கொத்தாதப் பிடித்தவள், "எல்லாம் உன்னால தான், இன்னும் இந்தக் குடும்பத்துக்கு என்னவெல்லாம் பண்ணப்போறையோ?" என்று இரண்டு கண்ணத்திலும் அறைய, கதறி துடித்து அழுதாள்.

அப்போது அந்த குடும்பத்தின் மருமகன் ரத்தினம் வரவும், "வாங்க மாப்பிள்ளை" என்று முகம் முழுவதும் பல்லாக காண்பித்து வரவேற்றாள் மங்களம்.
மலர்விழி கூனிக்குருகி சமையலறைக்கு ஓடிப்போனாள். "கல்யாணம் எல்லாம் நல்லபடியாகப் பேசி முடுச்சுட்டீங்க சந்தோஷம், சீக்கரமா அதற்கான ஏற்பாட்டை பண்ணுங்க" என்றான் ரத்தினம்.
"எல்லாம் உங்களால் தான் மாப்பிள்ளை இன்னும் பதினைந்து நாள் போகட்டும்" என்றாள்.
"அத்தை இப்ப எல்லாம் வசதியான பொண்ணு கிடைக்கறதே பெரிய விஷயம், நாளைக்கடத்தாதீங்க" என்று தூபம் போட்டான்.
"நீங்க சொல்றது புரியுது மாப்பிள்ளை" என்று நடந்ததை எல்லாம் சொன்னாள் மங்களம். அதைக்கேட்டு கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்த ரத்தினம், "சரிங்க அத்தை ஏன் போலீஸ் பொண்ணுகிட்ட வம்புக்கு போகனும்" என்றான் தன்மையாக.
அதற்கு மேல் மருமகனுக்கு குறைவில்லாமல் விருந்து நடந்தது. காவ்யா கணவனைப் பார்ததும், "இந்த வீட்டுக்கு உங்களை மாதிரி நல்லது நடக்கனும்னு நினைக்கற மருமகன் கிடைக்தறதுக்கு நாங்க குடுத்து வெச்சிருக்தனும்.
இங்கயும் இருக்காளே ஒருத்தி குடும்பம் நாசமாப் போனாலும் பரவாயிலலை, தான் மட்டும் நல்லாயிருக்கனும்னு நினைக்கறவளைக் கட்டிட்டு வந்துட்டு, என் அண்ணன் படும் கஷ்டம் இருக்கே" என்று வராத கண்ணீரை வரவழைத்து பேசிக்கொண்டிருந்தாள்.
அந்த தீப்புண் காலோடு சமையல் செய்து, அந்த பாத்திரத்தை எல்லாம் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மலர்விழி.
மதுபாலன் அவன் ரூமில் படுக்கச் சென்றிருந்தான். அன்று இரவும் மருமகளை சமையலறையிலேயே படுக்க வைத்திருந்தாள் மங்களம்.
நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எழுந்து வந்த மதுபாலன், சமையலறையில் மனைவியைக் காணாமல், யோசனையோடு பின்பக்கம் சென்றான்.

அங்கே ரத்தினம் அவளிடம் வம்பு பன்னிக்கொண்டிருக்கவும், ஆத்திரம் அடைந்த மதுபாலன் போய் தங்கை கணவன் என்றும் பாராமல், ஒரு அறை விட்டான்.
ரத்தினம் அதிர்ந்து விழிக்க, மலர்விழி கணவனின் பின்னால் போய் மறைந்து கொண்டு கதறினாள். அவளை ஆறுதலாகப் பற்றிக்கொண்டவன், "தவறு உன் மேல் இல்லை என் மேல் தான்" என்ற வார்த்தையை மட்டும் உதிர்த்து விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.
அறையில் அவன் காலைக்கட்டிக் கொண்டு, "எனக்கு பயமா இருக்குங்க, எனக்கு வாழப்பிடிக்கவே இல்லை. நான் செத்து போய்ட்டால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருத்காது" என்று அழுதாள்.
அவள் தலையை ஆறுதலாக கோதியவன், வெறித்துப் பார்த்தபடி இருந்தான். இத்தனை நாள் எத்தனையோ விஷயத்தை பொருத்துப் போனவனுக்கு, தன் மனைவியின் இன்றைய நிலையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தன்னோட கோழைத் தனத்தால் மனைவி எந்த அளவு பாதிப்படைந்திருக்கால், என்பது எல்லாம் அவன் நினைவில் உயிரோட்டமாக வந்து கொண்டிருந்தன.
இருவருமே விடியும் வரை உறங்கவில்லை. விடிந்ததும் தன மனைவியை சமையல் அறைப்பக்கம் விடாமல், கால் புண்ணுக்கு மருந்தைப்போட்டு விட்டவன், "நீ இங்கயே இரு எதாவது கேட்டால் நான் பார்த்துக்கறேன்" என்றான் மதுபாலன்.
அவளுக்கு பயமாக இருந்தாலும் கணவனின் தெளிவான பேச்சில், கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள். மங்களம் சமையலறையில் மருமகளைக் காணாமல், "காலங்காத்தால எங்க போனா கொஞ்சமாவுது பொருப்பு இருக்கா? என்று சத்தம் போட்டுக்கொண்டே பின் பக்கம் திரும்பி குரல் கொடுத்தாள்.
"அம்மா அவ ரூம்ல படுத்திருக்கா கால் புண் வீங்கியிருக்கு, இன்னைக்கு காவ்யாவை சமைக்கச் சொல்லுங்க" என்றான்.
மகன் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள், "என்னடா பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு, அவளை எதுக்கு ரூமுக்குள்ள விட்ட" என்று கத்தினாள்.
"அம்மா நான் உங்க பேச்சை மீறமாட்டேன் இன்னொரு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க, நான் தாலி கட்றேன்" ஆனா அவ இனி இந்த வீட்டில் இருக்க மாட்டாள். நானே வேலை செய்யற இடத்திற்கு பக்கத்திலேயே, அவளை வீடு எடுத்து தங்க வெச்சுக்கறேன்" என்றான் அமைதியாக.
"அப்போ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு தனி குடித்தனம் போறேன்னு சொல்றையா?, இத்தனை நாள் பெத்து வளரத்துன அம்மாவை விட, நேத்து வந்த அந்த வசியக்காரி உனக்கு நல்லாத்தான் வசியம் பண்ணியிருக்கா" என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் அம்மாவை, எதுவும் பேசாமல் வெற்றுப் பார்வையோடு பார்த்துக்கொண்டிருந்தான் மதுபாலன்.
காவ்யாவும் துணைக்கு வந்துவிட்டாள். அவள் பின் வரும் ரத்தினத்தை பார்த்துக் கொண்டிருந்தான். எங்கே எதாவது சொல்லி விடுவானோ என்று பயந்தான் ரத்தினம்.
யார் என்ன பேசியும் மதுபாலன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வெளியில் வரலை. அதில் இன்னும் கோபத்துடன் மங்களம் பேச, அமைதியாக தன் அறைக்துச் சென்றவன், மனைவியை ரெடியாகச் சொல்லி அவளுக்குத் தேவையான உடைகளையும் பேக் பண்ணச் சொன்னான்.
அவள் பயந்து கொண்டே, "என்னை விட்றாதீங்க" என்று கெஞ்சினாள். இங்க எதுவும் பேசவேண்டாம் என்பது போல சைகை செய்தவன், அவளையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
" அம்மா இவளை விட்டுட்டு வந்துருவேன். உங்க கூடத்தான் காலம் முழுதும் இருப்பேன், கவலைப்படாம கல்யாணத்திற்க்கு ஏற்பாடு பண்ணுங்க" என்றான்.
அதில் குளிர்ந்து போன மங்களம், "சரிடா அவளை விட்டுட்டு நீ வந்துரு அவ கூட தங்கவெல்லாம் கூடாது" என்றாள்.
" சரிமா" என்றவன், மனைவியை அழைத்துக் கொண்டு சுகாசினி வீட்டுக்குச் சென்றான். காலையில் பெட்டியோடு வருபவளை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் கவிதா.
சுஹாசினிஅவர்களை வரவேற்றாள். அங்கிருந்த சேரில் வந்து தலையை தொங்க போட்டு அமர்ந்து கொண்டான் மதுபாலன். சுகாசினி சமையலறைக்கு போனவள், "அத்தை மதுபாலனும் மலர்விழியும் வந்திருக்காங்க, அவங்க முகமே சரியில்லை போய் பேசிட்டிருங்க, நான் காபி கொண்டு வரேன்" என்று அனுப்பி வைத்தாள்.
சாரதா வெளியில் வந்து, "வா தம்பி" என்றவர், பக்கத்திலிருந்த சேரில் அமர்ந்து கொண்டாள். கவிதாவும் வந்து அமர்ந்தாள். சுகாசினி காபி கொண்டு வந்து கொடுக்க, வாங்கிக் கொண்டான்.
"இந்த டெஸ்ட் டியூப் குழந்தை எல்லாம் வேண்டாம், எங்களுக்கு எப்போ குழந்தை பிறக்குதோ அப்போ பிறக்கட்டும், உங்களால் எனக்கு ஒரு உதவி வேண்டும். இவளை இரண்டு மூன்று நாளைக்கு உங்களோட தங்க வைக்க முடியுமா? அதற்குள் நான் ஒரு வீடு பார்த்துக்கிறேன்" என்றான் மதுபாலன் கலங்கிப் போன குரலில்.
" என்னாச்சு தம்பி?" என்றார் சாரதா. நடந்ததையெல்லாம் சொன்ன மதுபாலன், "இதுக்கு மேல நான் சும்மா இருந்தால் ஆம்பளையே இல்லை. நானும் சில வேலைகள் பண்ண வேண்டி இருக்கு, அதுக்கு உங்க உதவி எனக்கு தேவை" என்றான்.
கோபத்தில் இருந்த கவிதாவும் சுகாசினியும், "அவனை எப்படி சும்மா விட்டீங்க" என்று கொதித்து எழுந்தார்கள்.
"அந்த இடத்துல நான் என்ன பேசியிருந்தாலும், அந்த அவமானம் இவளுக்கு தான் வந்திருக்கும். அதனால அமைதியா வரவேண்டிய சூழ்நிலை எனக்கு, அதுக்காக அப்படியே விட்டுட மாட்டேன்" என்றான்.
" பரவால்ல தம்பி நீயாவது இவ்வளவு புரிஞ்சுகிட்டே, பாவம் இந்த வயசுல படக்கூடாத கஷ்டமெல்லாம் பட்டுட்டாள். இனிமேலாவது நல்ல வெச்சிரு, ஏன் அங்கேயும் இங்கேயே தங்கவேண்டும். எங்க வீட்டிலேயே மேலே இருக்கட்டும், யாருக்குத் தெரியப்போகுது, நீ ஒரு வீடு பார்த்துட்டு அப்புறம் கூட்டிட்டு போ" என்றார் சாரதா.
கையெடுத்துக் கும்பிட்டவன், "ரொம்ப நன்றிங்க அம்மா" என்றான். அதன்பிறகு கவிதாவும் சுகாசினியும் மதுபாலன் மூன்று பேர் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள்.
சாரதா மலர்விழியை அழைத்துக் கொண்டு மேலே சென்றார். தன் கணவன் தன்னை புரிந்து கொண்டதில்லை சந்தோசம் அடைந்தவள், அவனிடம் பேச முடியாமல் கூச்சம் தடுக்க, திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மேலே சென்றாள்.
அவளின் துடிப்பான பார்வையை உணர்ந்தவனுக்கு, சீக்கிரம் இந்த பிரச்சனையெல்லாம் முடிக்க வேண்டும், என்ற உத்வேகம் வந்தது.
அவர்களிடம் சொல்லிக் கொண்டு வேலைக்கு கிளம்பினான் மதுபாலன். அன்று தன்னோடு வேலை செய்பவர்களிடம், "இந்த பக்கத்தில் வீடு காலியாக இருந்தால் சொல்லுங்க" என்று சொல்லி வைத்தான்.
கடை முதலாளியிடமும் அட்வான்சாக பணம் கேட்டு வைத்தான். இதுவரை இப்படி எல்லாம் அவன் வாங்கியது இல்லை என்பதால், அவன் கேட்டதும் கொடுக்க சம்மதித்தார்.
மதுபாலன் வேலையை முடித்துக் கொண்டு, மாலை நேரங்களில் கடைக்குப் பக்கத்திலேயே வீடு இருக்கிறதா?, என்று சுற்றிப் பார்த்தான்.
அப்படி தேடி தேடி அலைந்து, ஒரே வாரத்தில் கடைக்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டை பிடித்துவிட்டான். அட்வான்ஸ் கொடுத்தவன், சுகாசினியையும் கவிதாவையும் வரவழைத்து வீட்டை காட்டியவன், "வீட்டிற்குத் தேவையான சாமான் எல்லாம் அவளுக்கு தெரியுமோ தெரியாதோ, நீங்கள் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று கேட்டான்.
அவர்களோ சந்தோச பெருக்கில், தனிக்குடித்தனத்திற்கு தேவையானதை எல்லாம் வாங்கி குவித்தார்கள். அதற்கெல்லாம் காசு கொடுத்த மதுபாலனிடம் வாங்க மறுத்து விட்டார்கள்.
" எங்க தங்கச்சிக்கு நாங்க செய்யறோம், பணத்தை பற்றிப் பிரச்சினை இல்லை, நீங்க அவள சந்தோஷமா வெச்சுக்கிட்டாலே போதும்" என்றார்கள் இருவரும்.
மதுபாலனுக்கோ இப்படியும் நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறது என்று, கண்ணீர் மல்க அவர்களை கையெடுத்துக் கும்பிட்டான்.
இவர்களே அந்த வீட்டில் எல்லாம் செட் செய்து வைத்தவர்கள், அடுத்த நாள் மலர்விழியோடு வந்து பாலை காய்ச்சினார்கள். மலர்விழி சந்தோஷத்துடன் வளையவந்தாள். அக்கா, அக்கா என்று அவர்கள் இருவரையும் நன்றியுடன் அணைத்துக்கொண்டாள்.
அங்கேயே சமைத்து சாப்பிட்டார்கள். சாரதா நான் வரலை நீங்களே பார்த்து பாலை காய்ச்சுங்கள் என்று சொல்லி விட, கவிதாவும் சுகாசினியும் தான் வந்திருந்தார்கள்.
எல்லாம் முடிந்து மதுபாலன் வேலைக்குச் சென்றுவிட, மலர்விழி அழைத்துக் கொண்டு கவிதாவும் சுகாசினியும் கடைவீதிக்கு சென்றார்கள்.
அவளுக்குத் தேவையான உடைகளை எல்லாம் பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்.மலர்விழி வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும், கதாவும் சுகாசினியும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
இந்த மாதிரி சந்தோஷத்தை எல்லாம் அனுபவித்திராதவள், இவர்களால் தான் தன் வாழ்க்கை இப்படி மாறியது என்று நினைத்து, அவர்களை கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழுதாள்.
" என்னாச்சு இப்ப நீ சந்தோசமாக இருக்க வேண்டிய நேரம் எதுக்கு அழறே, உன் மனசுக்கு எல்லாம் நல்லது நடக்கும் கவலைப்படாத, நாங்க இருக்கோம்" என்று தைரியம் அளித்து, தேவையானது எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு, அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள்.



Post Reply

Return to “தாய்மையிலும் விஷமுண்டு”