Srirangathu Ratchasi Kindle Ebook Link

Moderator: Madhumathi Bharath

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

Srirangathu Ratchasi Kindle Ebook Link

Post by Madhumathi Bharath »

அன்றைய நாள் அவர்கள் எல்லார் மீதும் அத்தனை கோபம் இருந்தும் தங்களுக்காக இதை செய்து இருக்கிறாளே... உள்ளம் நெகிழ்ந்தது ஜீவாவுக்கு.
“இதுக்கு தான் என் செல்லக்குட்டி வேணும்கிறது”
“எதுக்கு... நீங்க எவ்வளவு கழுவி ஊத்தினாலும் திரும்பி திரும்பி உங்களையே சுத்தி வர்றேனே.. அதுக்கா?”
“விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை” என்று தத்துவம் பேசி அவளது காயத்தை ஆற்ற முனைந்தான் ஜீவா.
“கடைசி வரைக்கும் ஆண்கள் குல திலகங்கள் இறங்கி வர மாட்டீங்க.. அதானே” இறங்கி வருவேனா என்று சண்டித்தனம் செய்தாள் அவள்.
“இறங்கினா அப்புறம் எங்க கெத்து என்னாகிறது?” என்றான் சன்ன சிரிப்புடன்
“அதெல்லாம் உங்க சொத்தா? பெண்களுக்கு அதெல்லாம் இருக்கக் கூடாதா?”
“இருக்கக் கூடாதுன்னு யார் சொன்னா? உங்க காலில் விழுறது எங்களுக்கு பிரச்சினை இல்லை... விழுவோம்... ஆனா தனியா... யாருக்கும் தெரியாம”
“அதானே... காலில் விழுறதுனு ஆகிடுச்சு.. அப்புறம் கூட்டம் இருந்தா உனக்கென்ன?”
“உங்களுக்குத் தேவை காலில் விழணும்... அது தனியா இருந்தா என்ன? கூட்டத்தில் விழுந்தா என்ன? உங்களோட நோக்கம் இவனை நான் அடக்கிட்டேன்னு ஊரில் இருக்கிற எல்லாரும் தெரிஞ்சுக்கணும்னு தானே?”
“உங்களைப் பார்த்து நாலு பேர் திருந்துவானோ அப்படின்னு தான் ஊரறிய செய்ய சொல்றது”
“எப்படி கேட்டாலும்... உன்கிட்டே அதுக்கு ஒரு பதில் இருக்கும்.. எல்லா கேள்விக்கும் உன்கிட்டே ஒரு பதில் ரெடியா இருக்கும் போலவே” தூண்டிலை வீசினான் அவன்.
“என்கிட்டே பதில் இல்லாத கேள்வியே கிடையாது” என்றாள் தலையை உயர்த்தி... தூண்டிலில் அவளே அறியாமல் சிக்கிக் கொண்டாள் மதுர வாணி.
“இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ... இதுக்கு தமிழ் அர்த்தம் என்ன?” என்றான் நமுட்டு சிரிப்புடன்.
“இறு... இறு... இறுக்கி...” வார்த்தைகள் வராமல் அவள் தடுமாற...
“ம்ம்ம்...” வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து அவன் உந்த... அந்த வார்த்தையை எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாறி... வெட்கத்தில் தத்தளித்தாள் மதுர வாணி.
“ஹையா... நான் தப்பிச்சுட்டேன்” என்று அவன் கைகளை உயரே உயர்த்தி கத்த.. வெட்கத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டவள் அவனை பொய்யாக முறைத்தாள்.
“என்ன தப்பிச்சே..”
“நீ வெட்கப் படுறியே.. அப்போ நீ பொண்ணுதான்னு கன்பர்ம் ஆகிடுச்சு”
“எதே... நில்லுடா... எருமை...” கையில் கிடைத்த பொருளைக் கொண்டு அவனை அடிப்பதற்கு ஓட... அவளிடம் சிக்காமல் அவன் ஆட்டம் காட்டினான்.

https://www.amazon.com/dp/B08WR7FG72?fb ... nJyMsGdlyc



Post Reply

Return to “Kindle EBook links”