ஸ்ரீரங்கத்து ராட்சசி சில துளிகள்

Moderator: Madhumathi Bharath

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

ஸ்ரீரங்கத்து ராட்சசி சில துளிகள்

Post by Madhumathi Bharath »

“ஹே...அதான் சொன்னேனேடி ... ஹாஸ்பிடல்... மார்ச்சுவரி எல்லாம் போய்ட்டு வந்தேன்... அப்படியே வர்ற வழியில் வேனில் ஏறிட்டேன்... வீட்டுக்குப் போய் குளிச்சுட்டு தனியா வண்டியில் வர்றேன்னு சொன்னா... யாரும் கேட்கலை. அதான் உள்ளே வந்ததும் நேரா பாத்ரூம் போய் குளிச்சுட்டு வந்தேன்.”
“காரணம் எல்லாம் வாயில் வடை மாதிரி ரெடியா வச்சு இருப்பியே”
“சும்மா டீச்சரம்மா மாதிரி மிரட்டிகிட்டே இருக்காதேடி... கொஞ்சம் ரொமான்டிக்கா பேசேன்டி.”
“எனக்கு வாயில சுளுக்கு... போனை வை..”
“மாமா வேணும்னா வந்து சுளுக்கை எடுத்து விடவா?” விஷமம் தெறித்தது அவன் குரலில்.
“ஒண்ணும் தேவையில்லை... நீங்க உங்க அலுவலைப் பாருங்க...” என்றவள் சட்டென்று போனை வைத்து விட்டாள்.

****

“வாய் குறையுதா பாரு...”
“ஏன்? எதுக்கு குறையணும்? நானும் பார்க்கிறேன்... எல்லாரும் வாயைப் பத்தியே பேசுறீங்க? கல்யாணம் முடிவானா பொண்ணு வாயை குறைச்சுக்கணுமா? அப்படினா கல்யாணம் செஞ்சுக்க ஒரு ஊமை பெண்ணா பார்த்து இருக்க வேண்டியது தானே?
உங்களுக்கு அழகான பொண்ணு வேணும்... வீட்டை சுத்தம் செய்ய பொண்ணு வேணும், பாத்திரம் விலக்க, துணி துவைக்க, சமைக்க... உங்களோட தேவைகள் ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செய்ய ஒரு பொண்ணு வேணும். ஆனா அந்த பொண்ணுக்கு வாய் மட்டும் கம்மியா இருக்கணும். என்னா தெளிவுடா சாமி” என்று மூச்சு வாங்க... கொடி பிடிக்காத குறையாக முழங்கியவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டான் ஜீவா.
“அம்மா... தாயே ... ஆயிரம் கண்ணுடையாளே... அங்காள பரமேஸ்வரி... தெரியாம பேசிட்டேன்... மலை இறங்கிடும்மா” என்று கெஞ்ச... போனால் போகிறது என்ற பாவனையுடன் வேறு பேச்சிற்கு தாவினாள்.
*****

காலை நேரத்திலேயே ஜீவாவின் பாட்டி ரஞ்சிதத்தின் குரல் தெருமுனை வரை கேட்டது.
“இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. ஒழுங்கா இந்த கல்யாணத்தை நிறுத்துங்க. இந்த கல்யாண பேச்சை ஆரம்பிச்சதில் இருந்து எல்லாமே தப்பும் தவறுமா தான் நடக்குது. அந்த மது ஒரு ராசி கெட்டவ. நம்ம ஜீவா எப்படி இருந்தான்? இப்போ பையன் முகத்தில் களையே இல்லை. தங்கச்சி பொண்ணு வாழ்க்கையைப் பார்த்து உங்க பையன் வாழ்க்கையில் மண்ணு அள்ளி போடாதீங்க மாப்பிள்ளை”
வீட்டிற்குள் நுழைவதற்காக காலை தூக்கியவள் மின்சாரத்தால் தாக்கப்பட்டதைப் போல அப்படியே நின்று விட்டாள்.
‘என்ன சொல்றாங்க இவங்க... என்ன நடக்குது இங்கே... கல்யாணத்தை ஏன் நிறுத்தணும்? நான் என்ன செஞ்சேன்?’ அவளின் அனுமதியின்றி கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழியத் தொடங்கியது.

*****
“நீ எல்லாம் எதுக்கு மேன் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து என் உயிரை வாங்குற... ஒரு பிணத்தைக் கூட பத்திரமா பார்த்துக்க முடியலைன்னு சொல்றியே... வெட்கமா இல்லை உனக்கு”
“அதில்லை சார்...”
“கோ டு ஹெல் வித் யுவர் இடியாட்டிக் ரீசன்ஸ்” (go to hell with your idiotic reasons)
“....”
“உனக்கு இன்னும் ஒரு வாரம் டைம் அதுக்குள்ளே இந்த கேசில் நீ எதையாவது கிழிக்கணும். இல்லேன்னா இந்த கேசை நான் வேற ஒரு நல்ல... மூளை இருக்கிற ஆபிசரா பார்த்து கொடுத்துடுவேன்” என்ற மிரட்டலுடன் முடித்தவர் போனை பட்டென்று வைத்து விட்டார்.
“ஊப்ப்ப்ப்...” என்று பெருமூச்சை வெளியேற்றினான்.
“இவருக்கு சலாம் போட்டு... இவரோட வீட்டுக்கு காய்கறி வாங்கப் போறதில் இருந்து... கக்கூஸ் கழுவுற வேலை வரைக்கும் செஞ்சா இவருக்கு என்னை பிடிச்சு இருக்கும். நான் தான் அதுக்கெல்லாம் பெப்பே சொல்லிட்டேனே...பி ன்னே மனுஷன் காண்டாகாம என்ன செய்வார்”
தன்னுடைய ஸ்டேஷனுக்கு போனவன் நெட்டில் சில விவரங்களைத் தேடினான். அதில் அவன் தெரிந்து கொண்ட விவரங்கள் அவனது புருவத்தை உச்சிக்கு கொண்டு வந்தது.
*****
“அடியே பிசாசு.. நீ ஒண்ணும் நிஜமான ஜேம்ஸ்பாண்ட் இல்லைடி...”
“தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்”
“ஏய்! உன்னை கட்டிப் போட்டு வச்சு இருந்தப்போ மண்டையில் எதுவும் அடிச்சுட்டாங்களாடி”
“ஹே... என்னை என்ன லூசுன்னு சொல்றியா?”
“ஓ... அது பர்த் டிபெக்ட்(Birth Defect) இல்ல.. மறந்துட்டேன்.” என்று நமுட்டு சிரிப்புடன் சொல்ல... சில நொடிகள் கழித்தே அவன் பேசியதன் அர்த்தம் புரிய... பாய்ந்து அவனது கழுத்தை பிடித்தாள் மதுர வாணி.
“என்னடா சொன்ன?”
“ஏய்! விடுடி...”
“முடியாது... ஒழுங்கா சொன்னதை வாபஸ் வாங்குடா”

Kindle Link:
https://www.amazon.com/dp/B08WR7FG72



Post Reply

Return to “Kindle EBook links”