Page 1 of 1

ஸ்ரீரங்கத்து ராட்சசி சில துளிகள்

Posted: Wed Feb 17, 2021 12:00 pm
by Madhumathi Bharath
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும் புரிஞ்சுதா?” என்றார் குரலில் கண்டிப்புடன்.
“முதல்ல அவன் என்ன செஞ்சான்னு தெரியுமா?”
“எடு விளக்கமாத்த.... இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகப் போகுது... இன்னமும் என்ன கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம அவன், இவன்னு பேசிக்கிட்டு இருக்கே...” என்று அவளை வறுத்து எடுத்த காமாட்சியின் குரலில் அனல் தெறித்தது.
“இன்னும் நிச்சயம் ஒண்ணும் நடந்து முடியலை... தெரியும் தானே... இதோ பாருங்கம்மா.. என்னை அடக்குற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க... இதுநாள் வரை நான் எப்படி இருந்தேனோ... அப்படித்தான் இப்பவும் இருப்பேன்...”
“எப்படி பேசுறா பாரு... ராட்சசி...கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கிறாளா பாரு... பொண்ணா நீ?”
“நான் எதுக்கு சும்மா இருக்கணும்?... நிச்சயம் நடந்தா நான் வாயைத் திறந்து பேசக் கூடாதா என்ன?..” சிலுப்பிக் கொண்டாள் மதுர வாணி.
“இப்படி பேசிப்பேசியே என்னை அரை உசுரு ஆக்கிடுவா போலவே...கர்த்தரே!”
“நீ துணைக்கு அல்லாவை கூட கூப்பிட்டுக்கோ எனக்கு பிரச்சினை இல்லை... எனக்கு இப்போ அந்த தடியனோட பேசி ஆகணும்”
“நிச்சயம் முடிஞ்ச பிறகு பேசிக்கோ”
“அதெல்லாம் முடியாது... நான் முதல்ல பேசணும்..அப்புறம் தான் நிச்சயம் எல்லாம்”
“பிடிவாதம் பிடிக்காதே வாணி...”

காத்திருங்கள்....