சொல்லு பாப்பா....
என் பிறந்தநாளுக்கு பீச்கு வந்துட்டு நீ இங்கே தனியா உட்கார்ந்துட்டு என்ன பண்ணுற ??
ஏன்டா அப்பா கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன்.. ஒரு 20 நிமிஷத்துல வரேன்னு...
அப்பா உன்கிட்ட சொல்லலையா ??
அப்பா சொன்னாங்க... ஆனா தனியா உட்கார்ந்து என்ன பண்ணுறீங்க ???
தனியா உட்கார்ந்து எண்ஜோய் பண்ணிட்டு இருக்கேன்....
என்ன காமெடி பண்றியா ?? தனியா எப்படி என்ஜாய் பண்ண முடியும்??
ஏன் பண்ண முடியாது ??
லூஸா மா நீ???
ஹேய்ய்.... நிஜமா டீ... நீ இது வரைக்கும் அப்படி தனியா என்ஜாய் பண்ணுனது இல்லையா???
எண்ணடீ முறைக்கற?? நான் சீரியஸ்ஸா தான் பேசறேன்... சரி வா இங்கே உட்காரு... எப்படியும் உன்கிட்ட சில விஷயம் பேசணும் நினைச்சேன்... இப்போவே பேசலாம்... இது தான் கரேக்ட் ஆன நேரமும் கூட...
உனக்கு இன்னையோட 17 வயசு முடிஞ்சுருச்சு... காலேஜ் போக போற இன்னும் ஒரு மாசத்துல.. சோ அம்மா உன்கிட்ட சில விஷயம் எல்லாம் ஷார் பண்ணிக்க போறேன்...
***** சிறிது நேரம் அங்கு மௌனம் மட்டுமே நிலைத்தது******
மா சொல்லு மா... ஏதோ ஷார் பன்றேன்னு சொல்லிட்டு இப்படி சும்மாவே உட்கார்ந்து இருக்க...
என்ன மா கண்ணு கலங்கி இருக்கு?? நம்ம வீட்ல ஏதாவது பெரிய பிரச்சனையா ??
ஹா ஹா... அதெல்லாம் இல்ல டா.. சில விஷயங்களை நினைக்கும் போது கண்ணுல தண்ணி தானேவே தேங்கிடுது.. என்ன பண்ண??
அப்படிப்பட்ட விஷயத்தை ஏன் நினைக்கிற??
அதெல்லாம் நினைக்காமா அம்மானால இருக்கவே முடியாதே... அதுமட்டும் இல்லாம அந்த விஷயங்கள் எல்லாம் எப்போவும் தோனாது... இப்படி ஓடிக்கிட்டே இருக்க வாழ்க்கைல ஒரு குட்டி பிரேக் கிடைக்கும் போது ஆற அமர உட்கார்ந்து நினைச்சு பாத்து அந்த நினைவுகளை எல்லாம் ரசிக்கனும்.... நிறைய நினைவுகள் சந்தோஷத்தை தரும்.. சிலது வருத்தத்தையும் தரும்.. ஆனா நினைவுகள் ரொம்ப முக்கியம் ஒரு மனுஷனுக்கு...
இனி நீ உன் வாழ்க்கைல சந்திக்க போற மனிதர்கள்.. இல்ல இதுக்கும் முன்னாடி நீ சந்திச்ச மனிதர்கள்... உனக்கு நிறைய நினைவுகளை தருவாங்க... ஒரு சிலர் உன்னோட வாழ்க்கையில முக்கியமான கட்டத்துல உன் கூட இருந்து இருப்பாங்க... அதையெல்லாம் ஒரு 10 வருஷம் களிச்சு பார்த்தா இப்படி உன் கண்ணுலையும் தண்ணி தேங்கலாம்... கண்டிப்பா தேங்கும்... நீ நினைவுகளை சம்பாரிச்சு வெச்சு இருந்தா...
அப்படி நீங்க இப்போ யாரை நினைச்சு இவ்ளோ பீல் பண்றீங்க...
பீல் எல்லாம் இல்லடா... சில நியாபகம்... அதான்.. என்னையும் அறியாமல் கண்ணு வேர்த்துருச்சு...
அப்படி யாரு எங்கே அம்மாவையே அழ வெச்சது... சொல்லு மா நான் போய் நல்லா நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்.. எப்படி இதை சாதிச்சீங்கன்னு?? அப்பா திட்டியோ இல்ல உங்க அப்பா அம்மா திட்டியோ நீ கண்டுகிட்டதே இல்ல.. சொல்ல போன நீ கண்கலங்கி இன்னைக்கு தான் பார்க்கிறேன்... யார் அது சொல்லு கூப்பிட்டு நான் பாராட்டி நம்ம மெரினால சிலை வைக்கறேன்...
ஹா ஹா ஹா... இதை மட்டும் அவன் கிட்ட நீ சொன்னா அவ்ளோ தான்..
ஏன் திட்டுவாரா ??
ஹா ஹா ஹா.. இல்ல இல்ல.. உடனே வருவான் எப்போ சிலை வைக்கறீங்கன்னு...
என்னமா உண்ண கிண்டல் பண்ணுனா சப்போர்ட் பண்ண தானே வரணும்.. ஆமா யாரு அது உங்க பிரெண்டா ??
ம்ம்ம் மை மித்ரன்...
மித்ரன்னா ??
தமிழ் அகராதில போய் பாரு தெரியும்...
ஏன் நீ சொன்னா ?? சரி அதை விடு உன் கூட படிச்சவங்களா ??
அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற ??
இல்ல அப்பா கிட்ட சொல்லி அவரை தேட சொல்றேன்...
ஹா ஹா ஹா.. எதுக்கு??
நீ அவங்களை பார்த்தா சந்தோஷமாகிடுவ தானே??
அப்போ நான் இப்போ சந்தோஷமா இல்லையா லூசு??
இல்ல.. உன்னோட பொண்ணு பர்த்டேக்கு ஹோல் பேமிலியோட வந்துட்டு இப்படி நீ தனியா உட்கார்ந்து பீல் பண்ணிட்டு இருக்க.. சந்தோஷமா இருந்தா தாத்தா , பாட்டி, மாமா கிட்ட கூட பேசாம இப்படி இருப்பியா??
ஆனா எனக்கு இப்போ காண்ட் ஆகுது மா.. அப்படி என்ன ஸ்பெஷல் ?? எங்க எல்லாரையும் விட அவரு உனக்கு??
ம்ம்ம் என்ன ஸ்பெஷல்??? உங்க எல்லாருக்கும் என்ன ஏன் பிடிக்கும்??
இது என்ன கேள்வி?? நீ என்னோட அம்மா..
ஓஓ... அது மட்டும் தானா?? அப்போ அம்மான்னு இந்த இடத்துல யார் இருந்தாலும் இதே பாசம் தானா??
அது எப்படி ?? நீ என்னோட ஸ்வீட் மம்மி.. நீ தான் இந்த உலகத்துலையே பெஸ்ட்... சோ உண்ண எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ஓஓ.. சப்போஸ் நீ சொல்ற மாதிரி நான் பெஸ்ட்டா இல்லாம இருந்தா?? என்ன இந்த அளவுக்கு பிடிக்குமா ??
ம்ம் அப்படி எல்லாம் இல்லை..
அம்மு உண்மையை மட்டும் சொல்லணும்.. அம்மா மனசு எல்லாம் எதுக்கும் கஷ்டப்படாது.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே..
ஹா ஹா.. கொஞ்சம் கம்மியா தான் பிடிக்கும்..
ம்ம் இப்போ ஓகே.. உண்ண மாதிரி தான் நீ சொன்ன எல்லாரும்.. நான் அவங்களுக்கு நல்லவள்ளா இருக்கேன்.. என்ன பிடிக்குது.. ஓகே வா ??
ஆனா என்னோட மித்ரன் அப்படி இல்லை... என்னோட குறை நிறை ரெண்டையும் முழுசா தெரிஞ்சா ஒரே ஒரு ஜீவன் ... அதான்... எல்லாம் தெரிஞ்சும் என்கிட்ட ஒரே மாதிரி அன்பை காட்டுன ஜீவன்... அந்த புரிதல் வறது ரொம்ப கஷ்டம் டா.. சொல்ல போனா உங்க அப்பாவுக்கே தெரியாத என்னோட சில விஷயங்கள் அவனுக்கு தெரியும்... இது உங்க அப்பாவுக்கும் தெரியும்...
என் கூட நிறைய இடத்துல இருந்து இருக்கான்.. முக்கியமா நான் வாழ்க்கைல எங்கே எல்லாம் தடுக்கி வில வாய்ப்பு இருந்ததோ அங்கே எல்லாம் என்ன தெளிவா எனக்கே என்னை புரிய வெச்சு இருக்கான்...
அவன்கிட்ட நான் எதையுமே மறச்சது இல்ல.. அவன் கிட்ட மட்டும் தான் நான் என் மனசுல இருக்கறதை அப்படியே சொல்லுவேன்.. பேசுவேன்... எந்த தயக்கமும் இல்லாம.... அந்த அளவுக்கு என்ன புரிஞ்சு வெச்சு இருப்பான்..
வாழ்க்கைல நான் அவன் மூலமா தான் நிறைய கத்துக்கிட்டேன்... சாதாரண மனுஷங்களுக்கும் அவனுக்கும் நிறைய மாறுபாடு இருக்கும்.. அவன் எந்த ஒரு பிரச்சனையும் ஈசியா கையாளுவான்.. அதை எனக்கும் சொல்லி கொடுப்பான்.. புரியாத எத்தனையோ விஷயங்களை எனக்கு தெளிவா புரிய வெச்சு இருக்கான்...
என்ன மா ஏதாச்சும் புது படம் பாத்துட்டு வந்து கதை சொல்றியா ??
அடியே.. ஏன் இப்படி கேக்கற??
பின்ன இதுலாம் நம்பற மாதிரியா இருக்கு??
அம்மா பொய் சொல்லி இருக்கனா பாப்பா ??
இல்ல.. இருந்தாலும்...
புரியுது டா... இது எல்லார் வாழ்க்கையிலும் நடக்காது.. ஆனா இப்படி ஒரு உறவு எல்லார் வாழ்க்கையிலும் இருந்தா நல்லா இருக்கும்... ஆனா இப்படிப்பட்ட ஒரு உறவு அமையறது எல்லாம் 100 துல ஒரு 20 பெர்ஸன்ட் தான்...
சோ உன்னோட லைஃப்ல இந்த மாதிரி இது வரைக்கும் நீ எனக்கு தெரிஞ்சு யாரையும் சந்திச்சது இல்ல.. சப்போஸ் இனி இப்படி ஒருத்தரை பார்த்தா.........
புரிஞ்சுடுச்சு ... நானும் இப்படி உட்கார்ந்து கண்ணை கசக்கிட்டு இருப்பேன் அதானே...
அடியேய்...
ஹா ஹா ஹா.. நீ சொல்ற மாதிரி ஒரு பெர்ஸன் முதலில் இப்போலாம் இருக்காரா தெரில... ஆனா அப்படி ஒருத்தர் என்னோட வாழ்க்கைல வந்தா செம்மையா இருக்கும்...
அவர் உங்க பெஸ்ட் பிரெண்டா ??
இல்ல அதுக்கும் மேல...
அதுக்கும் மேல னா??
மை மித்ரன்...
அப்படினா பிரென்ட் தானே?? எங்களுக்கும் தமிழ் தெரியும்.. அப்போ சும்மா கேட்டேன்..
ஹா ஹா.. எங்க ரீலெக்ஷன் ஷிப் பேறு அது.. எல்லா ரீலேஷன் ஷிப்கும் பேரு கொடுக்கணும்னு அவசியம் இல்லை...
இது கூட அவன் கத்து கொடுத்தது தான்..
சரி போய் விளையாடு ... ரொம்ப மொக்க போட்டுட்டேன்..
அப்பா வந்துடீங்களா ?? அம்மா ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா இருக்காங்க..
ஹா ஹா.. என்ன மனசை சொரிஞ்சு விட்டுடியா??
அதெல்லாம் இல்ல... அவ சும்மா சொல்றா...
நான் அம்மாவை பாத்துக்கறேன்.. நீ போய் என்ஜாய் பண்ணு டா.. உண்ண எல்லாரும் எங்கேன்னு கேக்கறாங்க ...
சரிப்பா...
*** அவர் அருகில் வந்து அமர்ந்தவுடன் அவர் தோலில் தலை சாய்த்து இமைகளை மூடினால்*****
என்னமா ??
ஒன்றும் இல்லை என தலையசைக்க...
ரொம்ப மிஸ் பண்றியா ??
அப்படி எல்லாம் இல்லை ... ஏதோ இன்னைக்கு திடீர்னு அவன் நியாபகம்...
அதான் பாப்பாக்கும் சொன்னேன்... இனி அவ நம்ம கிட்ட கத்துகறதை விட இந்த உலகம் அவளுக்கு நிறைய கத்து கொடுக்கும்... அப்போ எல்லா நேரமும் நம்ம அவ கூட இருக்க முடியாது... அதனால தான் இந்த மாதிரி சில உறவுகள் மேலையும் நம்பிக்கை வைக்கலாம்.. இப்படியும் இன்னும் சில நல்ல நண்பர்கள் இருக்காங்கன்னு அவளுக்கு புரிய வெட்சா தானே அவ அவளோட வாழ்க்கைல வர உறவுகளை மனிதர்களை இனம் காண முடியும்....
ம்ம்ம் புரியுது மா.. நாளைக்கு போய் உன்னோட மித்துவை பாரேன்...
மெலிதான புன்னகை கீற்று மட்டுமே தன்னவளிடம் இருந்து பதிலாக கிடைத்தது... அந்த புன்னகையின் அர்த்தம் புரிந்தவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்....
a