Page 1 of 1

புரியாத புதிரா காதல்?...

Posted: Thu Jun 04, 2020 10:50 am
by Kaayaampoo
puriyadha pudhira kadhal.jpg
காதல் வந்து விட்டால் உடலின்
ஒட்டு மொத்த பாகங்களும் செயலிழந்து விடுகிறதே!
கொள்ளை நோயா காதல்?

காதல் வந்த பின்
மூச்சுக் காற்றை களவாடிக் கொள்கிறதே!
புயலா காதல்?

காதல் வந்து விட்டால் கூடவே
பரிசாக கவிதையும் வந்து விடுகிறதே!
கலைக் கூடமா காதல்?

காதல் வந்த பின்
என்னையும் கவிதை எழுத வைத்து விட்டதே!
கலை ஆசிரியரா காதல்?

காதல் வந்து விட்டால் உடல், பொருள், ஆவி
அனைத்தும் அவனேயென்று மனம் ஆர்பரிக்கிறதே!
புரியாத புதிரா காதல்?...