நோமென் னெஞ்சே!... நோமென் னெஞ்சே!...
Posted: Wed Jun 17, 2020 10:59 am
நொந்து கொள்!... நன்றாக நொந்து கொள்!...
வருந்துகிறாய்!...
புலம்புகிறாய்!...
அழுகிறாய்!...
தேம்புகிறாய்!...
அவனால் காயப்படுகிறாய்!...
துன்புறுகிறாய்!...
வலியில் தவிக்கிறாய்!...
ஆற்றாமையில் அல்லாடுகிறாய்!...
ஆற்றுப்படுத்த ஆளின்றி அரற்றுகிறாய்!...
இவ்வளவும் பட்ட போதிலும், புத்தி வரவில்லையே உனக்கு!...
மீண்டும் மீண்டும் அவனையே தேடித் தொலைக்கிறாயே!...
உன்னை வைத்துக் கொண்டு,
வேறு என்ன தான் செய்ய நான்?...
தன்னை தானே நொந்து கொள்வதைத் தவிர,
என் மடங்கெழு நெஞ்சே!...
நொந்து கொள்!... நன்றாக நொந்து கொள்!...