வண்ணத்துப்பூச்சி!...
Posted: Mon Jun 22, 2020 7:48 pm
அக்காதலின் விளைவால்,
அதை கைச்சிறைக்குள் அடைக்க முயன்றதில்
காயப்பட்டதோ வண்ணத்துப்பூச்சி?...
என்னை விட்டு விலகி பறக்கிறதே!...
நல்ல வேளையாக,
என்னை விட்டு தூரப் பறக்க அது முயற்சிக்கவில்லை...
அதை மீண்டும் என் கைச்சிறைக்குள்ளே
அடைத்து விடத் துடிக்கும் ஒரு மனம்,
அதன் போக்கிற்கே விட்டு விடு என்று அரற்றும் மற்றொரு மனம்,
இந்த மனப்போராட்டத்தில் சிக்கிக் கொண்டு
என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் நான்!...
இறுதியில் மேலும் அதை துன்புறுத்தாமல்,
என் இரு கரம் நீட்டி காத்திருக்க எண்ணம் கொண்டேன்...
என் மனம் கவர் வண்ணத்துப்பூச்சி!...
தானே வந்தென் கரம் சேருமோ?...
இல்லை எட்டிப் பறந்தே என்னை துன்புறுத்துமோ?...
அல்லது நிரந்தரமாய் என்னை விட்டு நீங்கி விடுமோ?...