Page 1 of 1

கந்தகமாய் அவன் காதல் 4 டீசர்

Posted: Wed Aug 25, 2021 12:53 pm
by Madhumathi Bharath
முகம் கோபத்தில் செந்நிறமாக மாறி இருக்க... பெற்றவர்களிடமும் கூட எதையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் காரை வேகமாக மருத்துவமனையில் நிறுத்தினாள். விஷ்வாவிற்கு நடந்த விபத்தினால் மகளின் மனநிலை மாறி இருக்கிறது என்று பெற்றவர்கள் நினைக்க உண்மை நிலவரம் அவள் மனம் மட்டுமே அறிந்த ஒன்று.

அங்கே அவள் போய் செய்ய வேண்டியது என்று எந்த வேலையும் அவளுக்கு இருக்கவில்லை. விஷ்வாவின் மருத்துவமனை செலவுகள் அனைத்தும் ஏற்கனவே யாரோ செலுத்தி இருந்தார்கள்.

விஷ்வாவை அறையின் வெளியில் இருந்தே கண்ணாடி வழியாக பார்த்தார்கள். தலையில் அடி பட்டு இருந்ததோடு , அவனது வலது கை தான் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக நர்ஸ் சொல்ல... அபிநய வர்ஷினிக்கு சுருக்கென்று வலித்தது.

செலவுகளை ஏற்றுக் கொண்டது யார் என்று விசாரித்ததற்கு விஷ்வாவின் மீது லாரி ஏற்றிய கம்பெனியின் முதலாளி என்று சொன்னார்கள். அந்த முதலாளியின் பழுப்பு நிற கண்கள் சொல்லாமலே அபிநய வர்ஷினியின் கண் முன்னே வந்து போனது.

டாக்டரிடம் விஷ்வாவின் நிலைமையைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக சென்றவள் பெற்றவர்களை அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டாள்.

“நான் போய் டாக்டரை பார்த்துட்டு வர்றேன். நீங்க இங்கேயே இருங்க... துணைக்கு ஆள் தேவைப்படலாம் இல்லையா?” வேகமாக டாக்டரைப் பார்க்க விரைய... லிப்ட்டின் உள்ளே அவளை எதிர்கொண்டான் ஆதிசேஷன்.

உள்ளே செல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி தயங்கி அவள் நிற்க.. அடுத்த நொடி உள்ளே இழுக்கப்பட்டு இருந்தாள்.

“சீ!... இடியட்.. மேனர்ஸ் இல்லை உனக்கு? இப்படியா ஒரு பொண்ணு கையைப் பிடிச்சு இழுப்ப”

“என்ன அதிசயம் டாலி... முதலில் அடிச்சுட்டு அப்புறம் பேசுறது தானே உனக்கு பழக்கம்? இன்னிக்கு என்ன இன்னும் பேசிக்கிட்டு இருக்கே?” என்றான் நக்கலாக.

“உன்னை அன்னிக்கு ஒரு அடியோட நிறுத்தி இருக்கக்கூடாது..”

“ரியலி!” என்றான் குரலில் அதிசயத்தைக் கூட்டி...