பழைய வீடு

Post Reply
User avatar
Madhumathi Bharath
Site Admin
Posts: 124
Joined: Mon May 11, 2020 9:11 am
Location: Tamilnadu
Has thanked: 117 times
Been thanked: 31 times

பழைய வீடு

Post by Madhumathi Bharath »

எப்போதும் ஜன நடமாட்டம் இருந்த இடம் இன்று ஜனமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றது...

வெளியில் நின்று பார்க்கையில் படங்களில் வரும் பேய் வீடு போல மனதைத் திகிலடையச் செய்தது...

வெளி வாசலைத் திறந்து உள்ளே சென்ற என்னை மெல்லிய காற்று லேசாக வரவேற்றது...

முற்றத்து மாமரம் மட்டும் யார் துணையும் எனக்குத் தேவையில்லை என்பது போல அப்படியே நின்றது...

மாமரத்து இலையின் சருகுகளின் எண்ணிக்கையளவு சொல்லாமல் சொல்லியது...

நாம் திசைமாறி வாழ்வதைத் தேடி
ஓடி மீண்ட நாட்களின்
எண்ணிக்கை தனை...

சற்றே தலை திருப்பி முற்றம் தாண்டிப் பார்வையைப் திருப்பிய என் விழிகளை நீர்த் திரை மறைக்கத் தொடங்கியது...

தன்னந்தனியாகச் சோகமே உருவாகிப் பரிதாபத்துக்குரிய தோற்றத்துடன் நின்றது நான் குடியிருந்த கோவில்

ஜன்னலுக்குத் திரைச்சீலை போல சிலந்தி வலை பின்னிப் பிணைந்து கிடந்தது...

கதவே  இல்லாமல் வந்தோரை வாருங்கள் என்று வரவேற்றபடி இருந்தது தலை வாசல்...

அலமாரிகள் வைத்திருந்த இடத்தில் இப்போது கரையான் புற்று எழுப்பி நின்றிருந்தது...

பக்கத்து சுவர்கள் பெயர்ந்து போய் விட்டால் இப்போதே மண்ணைத் தொழுது விடுவேன் என்பது போல

இப்போது விழவோ நாளை விழவோ எனப் பயமுறுத்திக் கொண்டு இருந்தது...

வெளியே நின்று மீண்டுமொரு முறை திரும்பி பார்க்கிறேன்... புகை படிந்த ஓவியமென பழைய நினைவுகள்...

எத்தனை பெரும் இடத்தில் வாழ்வது பயணித்தாலும் சிறு வயதைத் தாங்கிய வீடது மட்டும் மறைந்து போகாது...

                                  ✒பானுரதி✒



Post Reply

Return to “Bhanurathy Thurairajasingam”