கம்பன் காணாத சீதையின் உள்ளம்
சிறு கற்பனை
அந்தோ செந்தணல் கொழுந்து விட்டெரிகிறதே நான் செய்திட்ட பாவம் தான் என்னவோ
எந்தன் கற்பது புனிதமானது என்பதைத் தீயில் இறங்கித் தானா நான் நிரூபிக்க
வேண்டும்
எந்தன் மைவிழிப் பார்வையதிலே யாவும் தெரிந்து கொள்ளும் பிராணநாதருக்கு என் விழியின் மொழி புரியவில்லையன்றோ
ஒரு வேளை இந்தப் பொல்லாத் தீயது என்னுடலைச் சுட்டு விட்டால் நான் கற்பில்லாதவள் ஆகி விடுவேனாமா
விவாகமதில் கரம் பற்றி என் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வேனென இவர் சொன்னது பொய் தானா?
மெய்யாக இருப்பின் இந்தக் கணமே என்னுடன் தானும் தீயில் இறங்கி இருக்க வேண்டாமோ?
ஓரிடத்திலே இருந்த என்னையே தீயில் இறங்க வேண்டும் என்ற இவர்கள் எங்கெல்லாமோ அலைந்தவரை ஏன் இறங்கச் சொல்லவில்லை...
பெண்கள் வாங்கி வந்த சாபமன்றோ இது
ஆயினும் என்னவரை என்னால் தூற்றிப் பேச முடியாமல் அவர் மேல் கொண்ட காதல் தடுக்கிறது...
பரம்பொருளே எந்தன் மீது விழுந்த களங்கத்தை நீயன்றோ இல்லாமல் போக்கி விட வேண்டும்
இந்தப் பேதையைக் காத்தருளி என்னவரின் சங்கடத்தைப் போக்கி அவருக்கு சந்தோஷம் கொடு...
✒பானுரதி✒