இரசனை

Post Reply
Bhanurathy Thurairajasingam
Moderators
Posts: 14
Joined: Tue Jun 30, 2020 4:13 am
Been thanked: 1 time

இரசனை

Post by Bhanurathy Thurairajasingam »

அழகான ஓவியம் அசலைப் போல  வரையத் தெரியவில்லையா?
       கவலைப் படாதீர்கள்

அற்புதமான இசை குயிலைப் போல
      பாடத் தெரியவில்லையா?
       கவலை கொள்ளாதீர்கள்

அதிசயமான நடனம் மயிலைப் போல
      ஆடத் தெரியவில்லையா?
       கவலை வேண்டாம்

அழகையும், அற்புதத்தையும், அதிசயத்தையும்  எண்ணம் போல

அதனை ரசிக்கும் ரசனை மிக்க மனம்
    இருந்தாலே போதும்

அற்புதமான கலைகளுக்கு மெருகே
அந்தக் கலைகளின் ரசிகர்கள் தான்

அருமையான கலைஞர்களின்
    திறமைகளில்

அடங்கி இருக்கும் உன்னத
     விடயங்களை

அசட்டையின்றி ரசிக்கக் கற்றுக்
      கொள்ளுங்கள்

அவர்களின் திறமைகளை மனம் விட்டு
       பாராட்டுங்கள்

அழுக்கான பொறாமை எண்ணத்தைத்
        தூக்கித் தூரப் போடுங்கள்

அழகிய கலைகளை ரசிக்கும் ரசனை
அதுவும் ஒரு வகையில் கலை உணர்வு
அதனையும் புரிந்து கொள்ளுங்கள்...

                               ✒பானுரதி✒



Post Reply

Return to “Bhanurathy Thurairajasingam”