Page 1 of 1

கறுப்பழகி

Posted: Thu Jul 02, 2020 11:54 am
by Madhumathi Bharath
கருமையழகில் முத்துப்பல் மின்னும் சிரிப்பு

கன்னத்தோரத்து மச்சமோ கவி பாடும் வனப்பு

கயல் மீனொத்த விழிகளிலோ பிரகாசப் பொலிவு

கண்ணியமான பார்வை தனிலொரு தெளிவு

கறை படியாத வதனம் அதிலே ஒரு கனிவு

கமலமும் நாணும் முகமதிலே என்றும்
மலர்வு

கவிகளும் போற்றும் சிறப்பது கருமையின் சிறப்பு

கம்பன் கூட ஒரு நொடி
கண்ணிமைக்க மறக்கும் கறுப்பு...

கருமையில் இருக்கும் ஆழமான
கலையழகு போல் வேறெதிலுமில்லை...

                              ✒பானுரதி✒