Page 1 of 1

தாய்மை

Posted: Sat Jul 04, 2020 6:21 pm
by Bhanurathy Thurairajasingam
கருவில் சிசுவை சுமக்கும் இன்பமான அவளது வேதனையை அவளன்றி யார் அறியக் கூடும்

உடல் வலிகளைச் சுமந்தபடி சுமக்கின்றாள் தனது சிசுவை மட்டும் அல்ல...

தன் கணவனின் ஆண்மையைக் குறை கூறாமல் இருக்க வேண்டும் என்ற மனத் தாங்கலையும்

தன்னை மலடி என்றவர்களின் முன்னால் நிமிர்ந்து நடக்க வேண்டும் என்ற வைராக்கியத்தையும்

குழந்தை பெற்றால் தான் பெண்ணாகக் கருதுகின்ற சில உறவுகளது தூற்றல்களையும்

உள்ளேயிருந்து கொண்டு அவளுக்குச் சந்தோசம் கொடுக்கும் உயிர் கையில் வரும் வரையான ஏக்கத்தையும்

உயிரே போகின்ற பிரசவவலியைப் பற்றித் தெரிந்தாலும் அந்த வலியின் தீராத பயத்தையும்

எனத் தாய்மை அடைந்த பெண் சுமக்கின்ற வலிகளை வார்த்தைக்குள் அடக்கி விட முடியாது...

அதனால் தானோ என்னவோ தாய்மைக்கு நிகர் எதுவும் இந்த பூமியில் இன்னும் இல்லை போலும்...

                                          ✒பானுரதி✒