Page 1 of 1

என்னுடைய எழுத்து

Posted: Sat Jul 04, 2020 6:23 pm
by Bhanurathy Thurairajasingam
என்னை என்னிடம் அடையாளம் காட்டியது என்னுடைய எழுத்து

எனக்காக ஒரு அங்கீகாரத்தை வழங்கியது என்னுடைய எழுத்து

என் சந்தோஷமான தருணங்களை எனக்குள்ளேயே பல தடவைகள்

எண்ணிப் பார்க்கவும் இரசித்துப் பார்க்கவும் வழி சமைத்தது

என்னுடைய எழுத்து என்கின்ற எனது தோழி தான்

என் சோகமான தருணங்களை எனக்குள்ளேயே பல தடவைகள்

எண்ணிப் பார்க்கவும் அழுது பார்க்கவும் வழி அமைத்துக் கொடுத்ததும்

என்னுடைய எழுத்து என்கின்ற எனது தோழி தான்

எனக்குள் நானே பேசிக் கொள்வதும் என்னுடைய எழுத்து மூலம் தான்

எனக்கானவர்களுடன் நான் பேசிக் கொள்வதும் எழுத்து மூலம் தான்

என்னுடைய எழுத்துக்கு நானே முதலாவது ரசிகை

என்னுடைய எழுத்துக்கு நானே முதலாவது வாசகி

என்னதிது என்று கேட்கத் தோன்றுகிறதா???

என்னுடைய எழுத்துக்களை நானே இரசிக்கவில்லை என்றால்...

எவர் தான் இரசிப்பார்கள் சொல்லுங்கள்...

என்னுடைய எழுத்துத் தான் எனது நம்பிக்கை

என்னுடைய எழுத்துத் தான் எனது அங்கீகாரம்

என்னுடைய எழுத்துத் தான் எனது இலட்சியம்

என்னுடைய எழுத்துத் தான் எனது தீராக்காதல்

என்னுடைய எழுத்துத் தான் எனது
கனவு

என்னுடைய எழுத்துத் தான் எனது வாழ்க்கை

என்னுடைய எழுத்துத் தான் நான் என்கின்ற எனது அடையாளம்...

                                      ✒பானுரதி✒