விவாகரத்து

Post Reply
Bhanurathy Thurairajasingam
Moderators
Posts: 14
Joined: Tue Jun 30, 2020 4:13 am
Been thanked: 1 time

விவாகரத்து

Post by Bhanurathy Thurairajasingam »

ஆணென்றும் பெண்ணென்றும் இரண்டு ஜாதிகளை மட்டும் பொதுவில் வைத்தான் இறைவன்

அவர்களிடையே கணவனென்றும் மனைவியென்றும் நல் உறவுகளை உருவாக்கினான் மனிதன்

புரிந்துணர்வாலும் விட்டுக்கொடுப்பினாலும் நம்பிக்கையினாலும் நங்கூரமாக விட்டு விலகாமல் இருந்த உறவுகள்

நவீனமெனும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகி சிறு சிறு விடயங்களுக்குமே சுக்குநூறாகியதென்ன

நம்பிக்கையற்ற வார்த்தைகளும் ஈகோ என்ற அரக்கனின் பிடிக்குள் நசுங்கிப் போனதன் விளைவுகளும்

பெற்ற குழந்தைகளின் மென்மையான மனதினைக் கூரிய ஆயுதமெனக் கிழிக்கக் காரணமாகி விட்டதேனோ

பேசித் தீர்க்க வேண்டிய விடயங்களைப் பேசாமலேயே வளர்த்து விருட்சமாகப் படரவிட்டதென்ன

சம்பிரதாயமாகவும் சட்டரீதியாகவும் சரி பாதியாக ஆக்கிக் கொண்ட உறவினை சந்தேகத்துக்குத் தூக்கிப் போட்டதேனோ

பெற்றவரும் உற்றவரும் மற்றவரும் அஸ்திவாரம் போட்டு ஆரம்பித்து வைத்த இல்லற வீட்டை

ஒரு நொடிக்குள் சிந்திக்காமல் மற்றவர் பேச்சுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாகி அடியோடு இடித்துப் போட்டதேனோ

இன்று புரியாது எதுவுமே… நாளை முதுமையில் யாருமற்ற அநாதையாக கண்ணீர் சிந்தும் போது….

சிந்திய கண்ணீரைத் துடைத்திடத் துணையவளி(னி)ன் கை இல்லாத போது உணருவார்கள்…

விவாகம் என்கின்ற ஆயிரம் காலத்து அரிய பயிரைக் துச்சமாக விவாகரத்து என வெட்டி வீழ்த்திய துர்பாக்கியந்தன்னை…

                                                    ✒பானுரதி✒



Post Reply

Return to “Bhanurathy Thurairajasingam”