Page 1 of 1

உழவன்

Posted: Sun Jul 05, 2020 10:53 am
by Bhanurathy Thurairajasingam
உச்சிப் பொழுதிலே
உருக்கும் வெயிலின்
உக்கிரத்தைச் சகித்து
உழவன் எனும்
உன்னதம் ஆனவன்
உரமெனத் தன்னையிட்டு
உதிரம்தனை வியர்வையாக்கி
உடலானது உழைத்தே
உக்கிப் போகும் வரை
உழுது மாய்ந்தாலன்றி
உலகமது என்னவாகுமோ...???
உலையதிலே அரிசி வேகுமோ
உண்ணுவதற்காக...???
உழவுக்கும் உழவனுக்கும்
உயிர்களின் தலை வணக்கம்

                               ✍பானுரதி✍